• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 95 81.9%
  • நன்று

    Votes: 21 18.1%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    116

Thuji

புதிய முகம்
Joined
Feb 7, 2018
Messages
16
Reaction score
22
Location
Uk
சூப்பர் எபி மோனி விறு விருப்போடு கதை நகர்ந்து செல்கிறது . செந்தமிழ், வீர் திருமணத்திற்கு waiting..... 'நாக்கு ஒரு இருமுனைக்கத்தி' very true words மோனி....
 




Kavitha06

புதிய முகம்
Joined
Jan 22, 2018
Messages
13
Reaction score
26
Location
Chennai
ஈர்ப்புவிசை

செந்தமிழ் வீரேந்திரனை பார்க்க அவனின் அலுவலகத்திற்கு போய் காத்திருக்க, ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கபெறவில்லை. அவன் அவளிடம் பேச விரும்பாமல் அவ்வாறு தவிர்க்க அவளும் மன்னிப்பு கேட்காமல் விடுவதாயில்லை என்று வம்படியாய் காத்திருந்தாள்.

அந்த சமயத்தில் அவள் எதிர்பாராத வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. வெளியே கைகடிகாரத்தை பார்த்து கொண்டு சலிப்போடு நின்றவளை "ஏ தமிழச்சி" என்று ரகு அழைக்க அவளும் ஆவலாய் தன் நண்பனை கண்டு களிப்புற்றாள்.

அவனும் அவளும் கிட்டதட்ட பள்ளியில் ஆறுவருட காலமாய் நண்பர்கள். ஆனால் தொடர்ச்சியாய் நண்பர்கள் என்று சொல்ல முடியாது. மோதிக் கொள்வதும் சேர்ந்து கொள்வதும் என அவர்களுக்கு இதே வேலைதான். அதுவும் போட்டியென்று வந்துவிட்டால் நட்பு எல்லாம் தூர எறிந்துவிட்டு வெற்றியை மட்டுமே இலக்காய் கொண்டிருக்க அவர்களின் பள்ளிக் காலம் பல அதிரடியான ஞாபகங்களை அவர்களுக்குள் தேக்கி வைத்திருந்தது.

ரகுவின் தந்தை போலிஸ் வேலையில் இருந்தபடியே மறித்து போக அவனும் ரொம்பவும் சிரமமப்பட்டு தன் தந்தையின் வேலையை பெற்றுவிட்டான். இப்போது இரண்டு வருட காலமாய் இன்ஸ்பெக்டராக இருக்கிறான். இந்த பிரிவின் காலத்தில்தான் இருவருமே அவர்களின் நட்பின் ஆழத்தை அதிகமாய் உணர்ந்து கொண்டனர்.

ரகு கம்பீரமான தோற்றத்தோடு போலீஸ் உடையில் நிற்க அவளோ அவனை தலை முதல் கால் வரை அளவெடுத்துவிட்டு "ஸ்மார்ட்டாதான்டா இருக்க... " என்றாள்.

தன் தோழி சொன்னதை கேட்டு பெருமிதத்தோடு காலரை தூக்கிவிட்டு கொண்டவனிடம் அவள் மேலும், "நான் உன்னை இங்க பார்ப்பேன்னு எதிர்பார்க்கவே இல்ல.. சென்னைக்கு வந்ததும் மெஸஜ் பன்றேன்னு சொன்னேன் ல... ஏன்டா பண்ணல" என்று அதிகரமாய் கேட்டாள்.

"சாரிடி, கொஞ்சம் முக்கியமான வேலையா வந்தேன்... இப்பவும் பிஸிதான்... வேலை முடிஞ்சதும் உன்னை நானே வந்து மீட் பண்ணலான்னு... பட் அதுக்குள்ள நீயே இங்க... ஆமாம் நீ ஏன் இங்க வந்த ?" என்று அவன் கேட்க

அப்போது தமிழ் தான் பத்திரிக்கையில் வீரேந்திரன் பத்தி தவறாய் போட்ட செய்தி குறித்து விவரிக்க அவனோ அதிர்ந்தபடி "அடிப்பாவி... அந்த தீயை பத்தி வைச்சது நீதானா ?" என்று கேட்க

"உனக்கு தெரியுமா ?" என்று கேட்டாள்.

"ம்ம்ம்... பத்திரிக்கையில நீயூஸ் வந்ததுதான் இங்க ஹாட் டாப்பிக்... பட் அப்படி ஒரு நல்ல காரியத்தை செஞ்ச புண்ணியவதி நீதான்னு இப்ப நீ சொல்லிதான்டி தெரியும்... மனிஷன் வேற இரண்டு நாளா செம காண்ட்ல இருக்காராம்... நான் வேற இந்த நேரத்தில இங்க வந்து மாட்டிக்கிட்டேன்... " என்றான். இதையெல்லாம் கேட்டுவிட்டு தமிழுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. அவள் மௌனமாய் நிற்க ரகு அவளிடம் "முதல்ல இங்கிருந்து கிளம்பிடு தெய்வமே... எரியிற நெருப்பில எண்ணெய்யை ஊத்திடாதே" என்றான்.

"நான் ஒண்ணும் பிரச்சனை பண்ண வரலடா... ஜஸ்ட் ஒரு ஸாரி கேட்டிட்டு போயிடலாம்..." என்று சொல்ல

"அதெல்லாம் இப்போதைக்கு ஒண்ணும் வேண்டாம்... ஆல்ரெடி வேறொரு டென்ஷன்ல இருக்காரு... அப்புறம் உன் பாடுதான் கஷ்டமாயிடும்" என்று அவன் நிலைமையை எடுத்துரைக்க தமிழ் என்ன செய்வது என்று யோசனைகுறியோடு நின்றாள்.

ரகு மேலும் "முதல்ல கிளம்பு தமிழ்... நீயும் நானும் பேசிக்கிறதை அந்த ஏசிபி பார்த்துட்டா... அப்புறம் நானும் காலி... கிளம்புமா தாயே" என்று கெஞ்சிக் கொண்டிருக்க

அவளும் சலிப்போடு "இப்போ கிளம்பிறேன்... பட் நான் சாரி கேட்டே தீருவேன்" என்றாள்.

ரகு நிம்மதிபெற்றவனாய் "சாரி கேட்கிறதை கூட சண்டை போடற மாதிரி சொல்ற... நீ கொஞ்ங் கூட மாறலடி... ஓகே ஓகே சரி அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... நீ உடனே புறப்படு" என்று அவளை விரட்ட போதே அவள் பார்வை வேறு புறம் திரும்ப, அவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.

தமிழ் புன்னகையோடு, "ரகு... நீ காலி..." என்றாள்.

ரகு புரியாமல் "ஏன்?" என்று கேட்க அவள் திரும்பி பார்க்க சொல்லி விழியசைவால் உரைக்க பின்புறம் வீரேந்திரன் நின்று கொண்டிருந்தான். அதுவும் தமிழும் ரகுவும் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தபடியே தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

ரகு அச்சப்பட்டு நிற்க அவள் துளியும் அச்சமின்றி "இப்போ என்ன பண்ண போற ரகு" என்று கேட்க "உன்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுவேன்" என்று சொல்ல அவள் கோபமாய் முறைத்து "நீயெல்லாம் ஒரு ப்ரண்ட்டா ?" என்று கேட்டாள்.

ரகு குரலை உயர்த்தி "ஏசி சாரை இப்போ பார்க்க முடியாது... நீங்க கிளம்புங்க" என்று சொல்லி வீரேந்திரனின் முன்னிலையில் நடிக்க தமிழ் மெலிதாக "வீட்டுக்கு வருவ இல்ல...அப்போ உன்னை பாத்துக்கிறன்டா" என்றாள்.

அப்போது வீரேந்திரனின் பார்வையின் பொருளை உணர்ந்து ரகு அவன் அருகில் சென்றான்.

வீரேந்திரன் ரகுவை சந்தேகமாய் பார்த்து செந்தமிழ் குறித்து கேள்வி எழுப்ப அவனும் சமார்த்தியமாய் சமாளித்து தப்பித்து கொண்டான். உண்மையிலேயே அப்போதைக்கு அவர்கள் இருவரும் நண்பர்கள் என்று வீரேந்திரன் அறிந்து கொண்டால் நிச்சயம் ரகு அவனிடம் சிக்கி சின்னாபின்னமாய் போய்விடுவான்.

ரகு வீரேந்திரன் இருவரும் உரையாடிக் கொண்டே வெளியே புறப்பட , ரகு ஒலிமறைவாய் தலையசைத்து அவளை போகச் சொன்னான். அவளும் பிடிவாதமாய் அவன் தன்னை என்ன செய்துவிடுவான் என்பது போல் அங்கேயே நின்றபடி இருந்தாள்.

அவளின் விழிகள் வீரேந்திரனையே குறி வைத்து பார்த்து கொண்டிருக்க, அவளை கடந்து போகும் வரை வீரேந்திரனின் கூர்மையான விழிகளுமே அவளிடமே லயித்திருந்தன. அந்த பார்வையில் ஏளனமும் கோபமும் வெளிப்பட்டாலும் உள்ளுக்குள் அவள் மீது அவனுக்குள் உண்டான ஈர்ப்புவிசையும் அதில் கலந்திருந்ததை தமிழ் உணர்ந்திருக்கவில்லை.

*****

பழிஉணர்வு



ெந்தமிழ் அன்று தன் தங்கை தேவியை பார்ப்பதற்காகவே பொழுதோடு வேலைகளை முடித்துவிட்டு வீட்டை அடைந்தாள். அவர்கள் இருவரும் வெகுநாட்கள் கழித்து இன்பகரமாய் அளவளாவி கொண்டிருக்க, அப்போது வீட்டிற்கு வந்த விக்ரமவர்மன் காரணத்தை சரியாய் உரைக்காமலே செந்தமிழின் மீது தன் சினத்தை காண்பித்து கொண்டிருந்தான்.

அவளை பேசவே விடாமல் அவர் வார்த்தைகளை அவள் மீது சரமாரியாய் வீசி கொண்டிருந்தார். அவளுக்கோ அவரின் சீற்றத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இப்போது அவரின் நிலைமை இன்னும் நெருக்கடியில் இருப்பதற்கு அவளின் பத்திரிக்கையும் அவளுமே காரணம் என கடிந்து கொண்டார். அவளின் சித்திக்கு இதையெல்லாம் பார்க்க பேரானந்தமாய் இருந்தது.

தமிழ் பொறுமையிழந்தவளாய் "உங்களுக்கு இப்ப என்னதான் பிரச்சனைப்பா ... நான் இந்த வீட்டில இருக்கிறது பிடிக்கலன்னு சொல்லுங்க... நான் போயிட்டே இருக்கேன்" என்றாள்.

விக்ரமவர்மனும் கோபத்தோடு, "ஆமாம் பிடிக்கல... ஆனா இப்படியே நீ போனேன்னு... அது எனக்குதான் கெட்ட பேர்... உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் போயிடு" என்று அவர் சொன்னதை கேட்ட நொடி அப்படியே மனமுடைந்து போய் நின்றாள்.

இதைவிடவும் அவளை வேறெந்த வார்த்தைகளும் காயப்படுத்த விடவே முடியாது. இப்படி ஒரு நிலையில் அவளை தாங்கவோ தேற்றவோ ஏன் பரிந்து பேசவும் அம்மாவும் இல்லை. அவளுக்கு பெரும் துணையாய் நின்ற தாத்தாவும் இல்லை என்று தனக்குத்தானே எண்ணி வேதனைப்பட்டாள்.

அந்த நொடி செந்தமிழின் மனோதிடமெல்லாம் ஆட்டம் கண்டுவிட வார்த்தை வராமல் மௌனமாய் நின்றவளிடம் "இத பாரு தமிழ்... இன்னும் ஒரு மாசத்தில உனக்கு கல்யாணம்... நான் எந்த மாப்பிள்ளையை பார்க்கிறேனோ மறுவார்த்தை பேசாம அவனைதான் நீ கட்டிக்கனும்..." என்றார்.

செந்தமிழ் பெருமூச்சுவிட்டபடி தன் விழிநீரை துடைத்தவள் தன் தந்தையை நோக்கி "முடிவு எடுத்திட்டீங்க இல்லப்பா... அதுப்படி பண்ணுங்க... எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைச்சாலும் சரி... இல்ல கருமாதியே பண்ணாலும் சரி... நான் அதுக்கு ஒத்துக்கிறேன்" என்றாள்.

விக்ரமவர்மன் அப்படியே அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போக செந்தமிழ் கோபத்தோடு தன் தாத்தாவின் படத்தின் முன்னிலையில் போய் நின்று "இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்க இல்ல தாத்தா... இவ்வளவு பிரச்சனைக்கும் நீங்கதான் காரணம்... நீங்க மட்டும்தான் காரணம்... அப்படி ஒரு உயிலை நீங்க எழுதி வைக்காம இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?!... ஏன் இப்படி பண்ணீங்க?!... " என்று ஆற்றாமையால் வேதனையுற்றவள் மீண்டும் நிமிர்ந்து "நான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க... இனிமே என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் அதுக்கு நீங்கதான் தாத்தா பொறுப்பு... சொல்லிட்டேன்" என்று அழுத்தமாய் தாத்தாவின் படத்திடம் சொல்லிவிட்டு கண்ணீரோடு அவள் அறைக்குள் சென்றுவிட தேவிக்கு அப்போது சகோதிரியை எப்படி சமாதானப்படுத்துவது என்ற வழி தெரியவில்லை.

விக்ரமவர்மனோ தமிழின் வார்த்தைகளை கேட்டு உடைந்துபோய் அமர்ந்து கொண்டார்.

ரவிவர்மன் அப்போதுதான் உள்ளே நுழைய, அவன் தாய் அவனை அழைத்து கொண்டு போய் நடந்த நிகழ்வுகளை சொல்லி ஆனந்தப்பட்டாள். அவனுக்கோ அவனின் திட்டம் ரொம்பவும் சரியாய் அரங்கேறி கொண்டிருப்பதை எண்ணி பெருத்த மகிழ்ச்சி.

செந்தமிழின் துணிச்சலை சாதகமாக்கி கொண்டு வீரேந்திரனை தாக்கினால் அது மகேந்திர பூபதியை கோபப்படுத்தும். அவர் தன் கோபத்தை விக்ரமவர்மனின் மீது காட்டுவார். அதை விக்ரமவர்மன் துணையின்றி நிற்கும் செந்தமிழின் மீது காட்ட அது அவளை நிலைகுலைய வைத்து விடும் என்று ரொம்பவும் கச்சிதமகவே காய்களை நகர்த்தி இருந்தான்.

சிறு வயதிலிருந்து ரவிவர்மனின் தாய் அவனுக்குள் தமிழின் மீது புகுத்திய பழிவுணர்வு இப்போது மலையென வளர்ந்து நின்றிருக்கிறது.

அந்த எண்ணத்தோடு ரவி தன் மனதிற்குள் 'இன்னும் முடியல தமிழ்... இன்னும் நீ பார்க்க வேண்டியது நிறைய இருக்கு... அதுக்குள்ள உடைஞ்சிட்டா எப்படி?' என்றான்.


(அடுத்து அத்தியாயத்தில் ...மீண்டும் அவள் வீரேந்திரனிடம் மன்னிப்பு கேட்க வர... அவள் வாழ்க்கையையே புரட்டி போடப் போகும் அந்த சம்பவம்....)

இந்த கதையின் தொடக்கத்திலேயே வாசகர்களாகிய உங்களின் ஆதரவும், குவிந்து வரும் கருத்துக்களும் என்னை மலைக்க வைக்கிறது. எந்தளவுக்கு ஊக்கத்தை நீங்கள் எனக்கு தந்திருக்கிறீர்கள் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. நன்றின்னு வெறும் வார்த்தையாக சொல்லாம கதையை மேலும் மேலும் சுவராஸ்யமாய் விரைவான பதிவுகளோடு உங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன்????

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
Nice update sis ?
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
சூப்பர் எபி மோனி விறு விருப்போடு கதை நகர்ந்து செல்கிறது . செந்தமிழ், வீர் திருமணத்திற்கு waiting..... 'நாக்கு ஒரு இருமுனைக்கத்தி' very true words மோனி....
Thanks thuji ma?
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
வீர் தன் கோபதை தமிழிடம் காட்டி வாங்கி கட்டி கொள்வதை, அடுத்த பதிவில் படிக்க ஆவலாக உள்ளேன்.
Unga ethirparpu nadakuthanu papom kayal
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top