• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தேடல்



விஷ்வா வீரேந்திரன் சொன்ன தகவல்களை கேட்டு அதிர்ச்சியில் அப்படியே சோபாவில் அமர்ந்தவன், சில நிமிடங்கள் சிலையாகவே கிடந்தான்.


நேற்று நடந்த விபத்தின் காரணத்தால் இந்த தகவல் அவனை ரொம்பவும் அச்சப்படுத்தியிருந்தது.

ஆதியின் தைரியத்தை பற்றி அவனுக்கு தெரியும். எதையும் சமாளிக்கும் இரும்பு மனிஷிதான். ஆனால் தான் அப்படி இல்லயே !

காலையில் இருந்து ஓயாமல் ஒலித்த அவளின் அலைபேசி அவளின் ஆபத்திற்கான எச்சரிக்கை மணியாக இருக்க கூடும் என்று அவன் அறிந்திருந்தானா என்ன ?

அந்த அழைப்பை ஏற்றி பேசிய பின்தான் அவள் அவசர அவசரமாய் புறப்பட்டு சென்றாள். எங்கே ஏது என்று கூட தெரிவிக்கவில்லை. தானும் அவளை கேட்கவில்லை. அப்படி அவளிடம் அவன் கேட்டும் பழக்கமில்லை.

மெல்ல அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் தன் கைப்பேசி எடுத்து அவன் பங்கிற்கு ஆதியின் அலைபேசிக்கு அழைத்து பார்த்தான்.

ஒரு முறையல்ல... பல முறை... திரும்ப திரும்ப ஒரே பதில்தான் ஒலித்தது.

'ஸ்விட்ச்ட் ஆஃப்'

எரிச்சலடைந்தவன் கோபத்தோடு அருகிலிருந்து பூஜாடியை தூக்கியெறிய அது நொறுங்கி போயிருந்தது.

அவன் செயலை கண்டு கருணாகரன் அதட்டலாய் "டே விஷ்வா... ? கோபத்தில கையில கிடைக்கிறத எல்லாம் தூக்கி போட்டிறது என்னடா பழக்கம் ... அந்தளவுக்கு இப்ப என்னாயிடுச்சு ?" என்று கேட்டார்.

அவன் சீற்றமாக எழுந்த நின்றபடி "என்னாயிடுச்சா ?உங்க ஆசை மருமகளை காணோமா... எங்க போனா... என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல... போஃன் பண்ணா... ஸ்விட்ச்ட் ஆஃப்..." அவன் வார்த்தைகளில் கோபத்தை கக்கினாலும் அவன் விழிகளில் நீர் துளிர்த்து வீழ்ந்தன.

அவன் தோள்களை கருணாகரன் தடவியபடி "பயப்படாதே விஷ்வா... ஆதி புத்திசாலியான பொண்ணு... அப்படி எந்த பிரச்சனையிலும் மாட்டிக்க மாட்டா.. வந்திருவாடா... நீ தைரியமா இரு" என்றார்.

சாரதா பதட்டத்தோடு "அதெப்படிங்க தைரியமா இருக்கிறது... விஷ்வா சொல்றதை பார்த்தா எனக்கும் ரொம்ப பயமா இருக்கு... செல்லம்மாவுக்கு வேற இந்த விஷயம் தெரிஞ்சா? " என்று கேட்ட மாத்திரத்தில் விஷ்வா விருட்டென நிமிர்ந்தான்.

"வேண்டாம்மா... செல்லம்மா ஆன்டிக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.. அவங்க ரொம்ப பயந்நதிடுவாங்க... அப்படியே அவங்க ஆதியை பத்தி விசாரிச்சா ஏதாவது சொல்லி சமாளிங்க... ஆதி அவளோட ப்ரண்டோட காஞ்சிபுரம்தான் கிளம்பினாலாம்... நானும் காஞ்சிபுரம் போய் என்ன ஏதுன்னு பார்த்துட்டு கால் பன்றேன்... நீங்க பயப்படாம இருங்க" என்றபடி எழுந்து கொண்டு புறப்பட தயாரானான்.

சாரதாவும் கருணாகரனும் மாறிமாறி பார்த்து கொண்டனர்.

கருணாகரன் யோசனைகுறியோடு "ஆதியை பத்தி எங்களுக்கு எந்த பயமும் இல்ல.. நாங்க தைரியமாதான் இருக்கோம்.. நீ எது செய்றதா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பண்ணு" என்றதும் விஷ்வாவின் முகத்திலிருந்த வருத்தமெல்லாம் மாறி மீண்டும் கோபமாய் உருவெடுத்தது.

பொறுமை என்ற வார்த்தைதான் அவன் அகராதியிலேயே கிடையாதே!

"இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு பண்ணுங்க... ஏன் ? உங்க மருமகளுக்கு பண்ண வேண்டியதுதானே... அந்த திமிரு பிடிச்சவளை என் தலையில கட்டி வைச்சாலும் வைச்சீங்க... தினமும் என்னை டென்ஷன்படுத்தியே உயிரை எடுக்கிறா..." என்று சீற்றத்தோடு சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.

கருணாகரன் தன் மனைவியிடம் "என்ன சாரதா ?!... நாம என்னவோ இவனை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரி இல்ல பேசிட்டு போறான்"

"அவன் பேசினது இப்போ ரொம்ப முக்கியமா... ஆதிக்கு என்னவோன்னு நானே பதட்டத்தில இருக்கேன்" என்றார்.

"எதுக்கு பதட்டம் ?!... ஆதிக்கு இதெல்லாம் புதிசில்ல... ஆதி எல்லா பிரச்சனையையும் சமாளிச்சிடுவா... எனக்கு இப்போ உன் மகனை நினைச்சாதான் கவலையா இருக்கு, இவன் கோபத்தாலும் அவசரத்தாலும் என்ன பண்ணுவான்னோ" என்று அவர் கவலையுற சாரதாவிற்கு இப்போது யாருக்காக வருத்தப்படுவதென்றே குழப்பம் உண்டானது.

****
மஹாபலிபுரம் சாலையோரத்தில் தமிழின் கார் துணையின்றி நின்றிருந்த தகவல் வந்தது.

அடுத்த கணமே வீரேந்திரன் அந்த இடத்திற்கு விரைந்திருந்தான்.

அந்த கார் சாலையின் ஒதுக்குபுறமாய் நின்றிருந்தது. அவன் சென்ற உடனே காரின் உள்ளே முழுவதும் ஆராயத் தொடங்கினான். உள்ளே அவன் பார்வைக்கு எந்த பொருளும் தென்படவில்லை.

எத்தனையோ வழக்குகளை வெகுசமார்த்தியமாய் கையாண்டவனுக்கு இன்று ஏனோ அவ்வாறு செயல்பட முடியவில்லை. காவலனாக அல்லது கணவனாக.... இரண்டுமாகவும் செயல்பட முடியாத இரட்டை நிலை.

அந்த காரை அலசி ஆராய்ந்தவனின் கண்களுக்கு எதுவும் புலப்படாமல் போக,
இறுதியாய் டேஷ் போர்ட்டை திறந்தவன் அதிலிருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்தான்.

அதனை பார்த்த நொடி தளர்ந்திருந்த அவன் உணர்வுகள் எல்லாம் கிளர்ந்து உயிர்பித்து கொண்டன.

அதற்கு காரணம் அந்த புத்தகம் அவளின் மனோதிடத்தையும் தைரியத்தையும் அவனுக்கு நினைவுகூர்ந்தது.

அந்த புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு 'எங்கடி இருக்க... என் தமிழச்சிசிசிசி ..?' என்று தவிப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் கேட்டு கொண்டான்.

அவனின் வெளித்தோற்றம் இறுகி இருந்தாலும் உள்ளுக்குள் அவளுக்காக கொஞ்சம் கொஞ்சமாய் மருகி கொண்டிருந்தான்.

இத்தனை நாளாய் தான்தான் அவளை ஆளுமை செய்து கொண்டிருந்தோம் என்ற எண்ணம் வெறும் மாயை என்று இப்போதுதான் புரிந்தது.

அவள்தான் தன்னை ஆளுமை செய்து கொண்டிருக்கிறாள். தன் எண்ணங்களை... தன் உணர்வுகளை... தன் காதலை... ஒட்டுமொத்தமாய் தன்னையே...

இதுநாள் வரை கடமைதான் முக்கியமென்று திரும்ப திரும்ப சொன்னதற்கு பிண்ணனியில், அவள் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்தவளாய் மாறிவிட்டதை ஏற்று கொள்ள மனமின்றி இருந்த அவனின் ஈகோவின் பங்களிப்பு...

இப்போது அந்த ஈகோவும் கர்வமும் சரிந்து போயிருந்தது. அவள் மீதான காதல் மட்டுமே மிச்சமாயிருந்தது.

கண்ணீரை வெளிக்கொணர அவன் கண்கள் காத்திருக்க அதற்கான வாய்ப்பை தராமல் சுதாரித்து கொண்டான்.

இப்படி எண்ணமிட்டபடி அவன் அந்த புத்தகத்தை புரட்ட, அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தன. அதனை அவசரமாய் கரத்தில் எடுத்து பிரித்தான்.

'உன் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கும் ஆபத்து.
அவங்க இரண்டு பேரையும் காப்பாத்த சொல்லி உன் குலதெய்வத்தை நல்லா வேண்டிக்கோ !

ஆனா உங்க குலதெய்வம்தான் கடலில் மூழ்கிடிச்சாமே.

எதை வைச்சி வேண்டிப்ப?'

என்று ஏதோ சூட்சமமாய் எழுதியிருப்பதை படித்தவன் ரொம்பவும் குழம்பி போனான்.

ஆதிக்கும் ரகுவிற்கும் ஏற்படுத்தப்பட்ட விபத்து தமிழை மிரட்டுவதற்காகவோ! இதில் குலதெய்வம் என்று எதை அர்த்தப்படுத்தி எழுதியிருந்தது என்பதை அவனால் விளங்கி கொள்ள முடியவில்லை.

அது தமிழுக்கு மட்டுமே புரிய கூடிய ரகசியமோ ? என்று சிந்தித்தவன், இதுதான் ரவி சொன்ன கடிதமாக இருக்கமுடியும் என்று தீர்மானித்தான்.

உடனடியாக அந்த புத்தகத்திலிருந்த மற்றொமொரு காகிதத்தையும் பிரிக்கலானான்.

அதிலிருந்த எழுத்துக்கள் வட்டமும் கோடுமாய் புரியாமல் இருக்க அது ரமணியம்மாள் உரைத்த கடிதம் என்பதை யூகித்தான்.

இதற்கான அர்த்தத்தை உடனே அறிந்து கொள்ள வேண்டும். கல்வெட்டியல் அறிந்த யாரையாவது அணுக வேண்டும் என எண்ணி ஸ்டேஷனுக்கு புறப்பட்டான்.

வானில் இருள் சூழ சூழ, வீரேந்திரனின் மனதிலும் மெல்ல மெல்ல இருள் படர தொடங்கியது.

இந்த நொடிவரை ஏதோ ஒரு சிறு நம்பிக்கை அவனுக்குள் ஓட்டிக் கொண்டிருந்தது.

அதற்கு காரணம் ஆதியும் தமிழும் பத்திரிக்கை துறையில் இருப்பவர்கள். இருவருமே தைரியத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் குறைந்தவர்கள் அல்ல. சவாலான காரியங்ளில் ஈடுபடுவது அவர்கள் வேலைகளில் நிச்சயம் பழக்கமான ஓன்றாக இருக்கும்.

ஆகையால் அவர்கள் அத்தனை சுலபமாய் தொலைந்திருப்பார்கள் அல்லது கடத்தப்பட்டிருப்பார்கள் என்று அவன் எண்ணவில்லை.

ஆனால் இப்போது அவளின் கார் தனியே நின்றதை பற்றி எண்ணியவனின் நம்பிக்கை மொத்தமாய் உடைந்து போக செய்திருந்தது.

இதற்கு மேல் காலதாமதம் செய்யாமல் அவர்களை தேடுவதற்கான பணியை தீவிரப்படுத்த எண்ணியவன், ஆதிபரமேஸ்வரி மற்றும் தமிழின் புகைபடங்களையும் எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தான்.

அவனின் சந்தேகமெல்லாம் தர்மாவின் பிண்ணனியிலிருந்து அந்த சிலைகளை கடத்தும் கும்பல் மீதுதான். அவர்கள்தாள் இதை செய்திருக்க முடியும். ஆனால் இப்போதுவரை அந்த கும்பலை பற்றிய எந்த வித தகவலும் காவல்துறையிடம் இல்லை.

அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் எப்படி சிலைகளை கடத்துகிறார்கள், அந்த சிலைகள் எந்த மார்க்கமாக வேற்றுநாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது இப்படியாக எந்த வித தகவலும் கிடைக்க பெறாமல் எல்லாமே மர்மமாகவே இருந்தது.

ஆனால் பல சிலைகள் காணாமல் போனதும் அதற்கு பிண்ணனியில் தர்மாவின் கைங்கரியம் இருக்கிறது என்பது மட்டுமே காவல்துறைக்கு கிடைத்த ஒரே ரகசிய தகவல். அப்பொழுதே இந்த வழக்கு அவன் பொறுப்பிற்கு வந்துவிட்டது.

தர்மாவை கையும் களவுமாய் பிடித்துவிடலாம் என்று காத்திருந்த சமயத்தில்தான் அவரும் மரணித்தார்.

ரொம்பவும் தாமதமாய் அந்த வழக்கில் அவன் நுழைந்தது போல் காட்டிக் கொண்டாலும் முன்னமே அவன் பல தகவல்களை ரகசியமாய் சேகரித்திருந்தான்.

தர்மாவின் மரணத்திற்கான விடையும் அந்த மர்ம கும்பல் பற்றிய விவரங்களை ஒரு சேர அறிய வேண்டுமெனில் மீண்டும் அவர்கள் ஏதேனும் ஒரு கடத்தலில் ஈடுபட வேண்டும். அப்போதே திட்டமிட்டு அவர்களின் கூட்டத்தை பிடிக்க இயலும் என்று எண்ணி அதற்காக காத்துகிடந்தான்.

இந்த எண்ணங்களோடு யோசனையில் ஆழ்ந்தவன், ஸ்டேஷனை வந்தடைந்தான்.

வேகமாய் தன் அறைக்குள் சென்று அந்த கல்வெட்டெழுத்துக்கள் பற்றி தெரிந்தவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு அந்த கடிதத்தின் அர்த்தத்தை கண்டிப்பிடிக்கும் முயற்சியில் முனைப்பாய் இறங்கினான்.

அவனின் முயற்சியின் பலனாக அந்த கடித்ததின் அர்த்தம் விளங்கிற்று.

'நாங்க தேடிற அந்த பொக்கிஷம் உன்கிட்டதான் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். அதை நீயே கொடுத்திட்டா உனக்கும், உன்னை சுற்றியிருக்கவங்களுக்கும் நல்லது.

அப்படி கொடுக்கலன்னா விளைவுகள் ரொம்ப விபரீதமா இருக்கும் செந்தமிழ்.

யோசிச்சி முடிவெடு'

வீரேந்திரனுக்கு இதனை தெரிந்து கொண்டதும் பதட்டம் அதிகரிக்க, தமிழ் எப்படி இதனை எதிர்கொண்டிருப்பாள் என்று யோசிக்கலானான்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தமிழிடம் ஏதோ பொக்கிஷம் இருக்கிறது. அந்த கடத்தல் கும்பலுக்கு அது தெரிந்து இருக்ககூடும். ஆனால் அது என்ன பொக்கிஷம்?

வீரேந்திரன் அவளின் அலுவலகத்தில் நடைபெற்ற திருட்டை பற்றி நினைவுகூர்ந்தவன், தன் மெயிலுக்கு வந்திருந்த அந்த சிசிடீவி காட்சிகளை பார்த்தான்.

அவள் கேபின் முழுக்க இருள் சூழ்ந்தபடி இருக்க இருளில் மறைந்தவாறு முகத்தை மூடியிருந்த மர்ம நபர் நுழைந்து அவள் மேஜை பொருட்களை ஆராய்வதையும், பிறகு டிராவின் பூட்டை உடைத்து அதிலிருந்த எதையோ எடுத்து தன் பேகில் நுழைத்துவிட்டு பின் ஒரு லெட்டரை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு புறப்படுவதையும் பார்த்தவன் நிச்சயம் அவன் எடுத்தது அந்த டைரியாகதான் இருக்க கூடும் என்று எண்ணி கொண்டான்.

அப்படி என்ன அந்த டைரி முக்கியத்துவம் வாய்ந்தது.

அதை எதற்காக தமிழ் தர்மாவின் அறையிலிருந்து எடுத்தாள்.

சுழலில் மாட்டிய உணர்வு...

எல்லாமே புதிர்களாய் இருக்க அந்த புதிர்களுக்கு விடையளிக்க தமிழால் மட்டுமே முடியும். ஆனால் இப்போது அவள் எங்கே என்ற கேள்விக்கே அவனிடம் விடையில்லை.

அந்த பொக்கிஷத்திற்காகதான் அவளை கடத்தியிருப்பார்கள் என்று கணித்தவன்
அதனை பற்றிய தகவல் நிச்சயம் தர்மாவின் வீட்டில் கிடைக்க பெறலாம் என அந்த இரவில் அங்கே புறப்பட்டு சென்றான்.

தர்மாவின் அறையில் இருந்த ஓவியங்களை மீண்டும் பார்வையிட்டான்.

அந்த கப்பல்கள், கோவில், இறைவியின் சிலை, அடுத்த ஓவியம் இல்லாத ஒரு பலகை...

இவையெல்லாம் தமிழின் முன்னோர்களின் வரலாறு என ரகு, தமிழ் சொன்னதாக உரைத்ததை இப்போது நினைவுபடுத்தி கொண்டான்.

அந்த காலியான பலகையில் என்ன ஓவியம் இருந்திருக்க கூடும்...

மற்ற மூன்று ஓவியங்களுக்கும் தொடர்புடையதாகவும்

அதே நேரத்தில் அந்த பொக்கிஷத்தை குறித்த ஏதோ ஒரு முக்கியமான தகவல்தான் அந்த கடைசி ஓவியமாக இருக்கும்..?

அந்த சமயத்தில்தான் அவனின் கைப்பேசி ஒலித்து அவன் எண்ணங்களை திசைதிருப்ப, அதனை எடுத்த போது அவன் அம்மாவின் அழைப்பு...

தமிழை காணோம் என்பதை பற்றிய விஷயம் தெரிந்திருக்குமா என்ற யோசனையோடு அழைப்பை ஏற்றான்.

அவர் குரல் நடுக்கத்தோடு "எங்க இருக்க வீர் ?" என்று கேள்வி எழுப்பினார்.

அம்மாவுக்கு தமிழை காணோம் என்கிற விஷயம் தெரிந்திருக்குமா என்று சந்தேகித்தவன், எதற்கும் விஷயத்தை தானே வெளிப்படுத்திவிடாமல் " நான் ஸ்டேஷன்லதான் இருக்கேன்... ஏன் கேட்கிறீங்க..." என்றான்.

"அதில்ல வீர்... வந்ததிலிருந்து உங்க அப்பா ஒண்ணும் சரியில்லை... அவர் பேசிறதெல்லாம் கேட்டு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு"

"என்ன சொன்னாரு ?"

"அவருக்கு தமிழ் மேல ஏதாச்சும் கோபமா தெரியலடா... அவ இனிமே இந்த வீட்டுக்கு மருமக இல்லன்னு சொல்றாரு... இனிமே அவ இந்த வீட்டு வாசப்படியே மிதிக்க கூடாதாம்" என்றார்.

ஏற்கனவே பிரச்சனைகள் தலைக்கு மேல் இருக்க இவற்றை எல்லாம் கேட்டு இன்னும் வெறுப்படைந்தவன் "அவருக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சும்மா... நீங்க டென்ஷனாகதீங்க" என்றான்.

"டே... என்னடா பேசிற ?!"

"நான் எதுவும் பேச விரும்பல... அவரும் தேவையில்லாம எதுவும் பேசிட்டிருக்க வேண்டாம்னு சொல்லுங்க... நான் போஃனை வைக்கிறேன்" என்று சொல்லும் போதே அருகில் அவன் தந்தையின் குரல் கேட்டது.

' உன் பிள்ளைகிட்ட நான் சொன்னதெல்லாம் சொல்லிட்டிருக்கியா... ஹ்ம்ம்... அவன் பொண்டாட்டிக்கு அந்த அரண்மனைதான் முக்கியமா... அவன் முக்கயமில்லையாம்... இதையும் சொல்லு ..." என்றார்.

அவன் கோபமாக தன் அம்மாவிடம் "மா... போஃனை ஸ்பீக்கர்ல போடுங்க" என்றான்.

"எதுக்கு வீர் ?" என்று சந்திரா கேட்க "சொல்றதை செய்யுங்கமா" என்றான் அதிகார தொனியில்.

அவன் சொன்னதை போலவே சந்திராவும் போஃனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டார்.

"அப்பா..." என்றழைக்க எதிர்புறத்தில் பதில் இல்லை. ஆனால் அவர் கேட்டு கொண்டிருப்பார் என்பதை அறிந்தவன் பேசத் தொடங்கினான்.

"நல்லா கேட்டுங்கோ... இந்த ஜென்மத்தில தமிழ்தான் எனக்கு மனைவி உங்களுக்கு மருமக... அதை யாராலயும் இனி மாத்தவும் முடியாது... மறுக்கவும் முடியாது"

எதிர்புறத்தில் மகேந்திரனின் குரல் கம்பீரமாய் ஒலித்தது.

"நான் எதையும் மாத்தனும்னோ மறைக்கனும்னோ நினைக்கல வீர்... எனக்கு வேண்டியதெல்லாம் அந்த அரண்மனை... அவ்வளவேதான்"

"அந்த அரண்மனையை அவ ரொம்ப நேசிக்கிறா... அதை விட்டுடுங்க..."

"முடியாது... அந்த அரண்மனையை டெமாலிஷ் பண்ணதான் போறேன்"

"நெவர்... அந்த அரண்மனையில இருந்து ஒரு செங்கலை கூட யாரும் பெயர்த்தெடுக்க விடமாட்டேன்... சொல்லிட்டேன்" என்று தீர்க்கமாய் சொல்லி அவர் பதிலுக்கு காத்திராமல் அடுத்த கணமே அழைப்பை துண்டித்துவிட்டான்.

அந்த சம்பாஷணை முடிந்ததும் வீரேந்திரனுக்கு மின்னல் போல ஒரு எண்ணம் தோன்றி மறைய,
அந்த கடைசி ஓவியம் என்னவாக இருக்கும் என்பதை அப்போது யூகித்தான்.

************
இருள் சூழ்ந்த அறை



அந்த அறை முழுக்கவும் இருள் கவ்வி கொண்டிருந்தது.



சற்று முன்பு நிகழ்ந்தது என்ன ? எப்படி தப்பித்து இந்த அறைக்குள் வந்தோம். ஆதி தனக்குத்தானே கேட்டு குழம்பி கொண்டாள்.



அதே நேரம் நடந்தவை எல்லாம் தமிழின் சாமர்த்தியத்தால் நிகழ்ந்தது என்பதும் அவளுக்கு புரிந்தது.



அந்த அறையின் இருள் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்க்க முடியாதளவில் அடர்ந்திருந்தது. ஆதலால் அந்த இரு தோழிகளும் தங்கள் கரங்களை இறுக்கி கோர்த்து கொண்டனர்.


மேலும் அந்த அறைக்குள் காலடி சத்தங்களும் கூச்சல்களும் கேட்டு அவர்களை கொஞ்சம் திகிலூட்டி கொண்டிருந்தன.

அப்போது அந்த அறையின் மேலிருந்த சிறு துவாரத்தின் வழியே ஏதோ ஒரு ஒளி நுழைந்து அந்த இடத்தை நிரப்ப, அந்த இரு தோழிகளின் மனதிலும் நம்பிக்கையின் ஒளி படர்ந்தது.

அது ஏதோ ஒளி அல்ல. வான்மதியோனின் ஒளி... அன்று நிலவின் வருகை மட்டும் இல்லாமல் போயிருந்தால் அவர்கள் மொத்தமாய் இருளுக்குள் மூழ்கிகிடக்க வேண்டியதுதான்.

அந்த அறைக்குள் காற்றில்லை. போதாக் குறைக்கு அந்த அறை முழுக்கவும் அசுத்தமாயிருக்க, ஆதிக்கு தும்மல் வந்து 'ஹச்' என்று தும்மிவிட்டாள்.

தமிழ் அவசரமாய் தன் கரத்தால் ஆதியின் வாயை பொத்திவிட்டு, உடனடியாக அடுத்த தும்மலை அவள் வெளிவிட்டாள்.

பிறகு இருவருமாக சேர்ந்தே தொடர்ந்து 'ஹச் ஹச் ஹச்' என்று தும்மிவிட, ஒரு குரல் ஈனஸ்வரத்தில் கேட்டது.

"எங்கடி இருக்கீங்க..?"

அடுத்து அதிகாரமாய் ஒரு குரல் "நல்லா தேடுங்கடா" என்றும்

பின்பு இன்னொரு குரல் மிரட்டல் தொனியில் "எங்கிருந்தாலும் விட மாட்டோம்... நீங்க தப்பிக்க முடியாது!"

இந்த குரல்களுக்கெல்லாம் பதிலுரையாய் "முடிஞ்சா பிடிச்சி பாருங்கடா" என்று தமிழ் சவாலாய் உரைக்க, ஆதி உடனே தன் தோழியின் கரத்தில் சுருக்கென கிள்ளிவிட்டாள்.

வாடி என் தமிழச்சி... முடிவை நோக்கிய பயணம்...

உங்களின் கருத்துதான் என்னுடைய பலமான ஊக்கம்... அதுவல்லாது என் எழுத்துபிழைகளையும் பொறுத்தமைக்கு ரொம்பவும் நன்றி...

இப்படியே தொடர் ஊக்கத்தை தந்து கொண்டிருக்கவும்...

விரைவில்... நான் அவள் இல்லை பயணத்தை ஆரம்பிப்போம்.

மறவாமல் லைக் பட்டனை அழுத்திவிடுங்கள்.

Thank you my dear friends
 




Sivaranjani

மண்டலாதிபதி
Joined
Jan 30, 2018
Messages
143
Reaction score
137
Location
Kanchipuram
Wowwwwwwww,soooo interesting, nakathai kadichittu padikkurathu pola iruku....romba viruviruppa pokuthu.....,kadamai,kaathal,thairiyam ,guts ithellaam romba azhaka ethu enga thevayo athu antha idathula perfecta kuduthirukeenga.....super thrillerrrr,waiting for next ud....
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
wow superrrrrr
tamillllllllll yethukku ivllo sounddddd aadhi vera killitaa
vaaraan un maavhvhaaaaaaan unai rendu podaaaa
 




Deepivijay

மண்டலாதிபதி
Joined
Jan 29, 2018
Messages
452
Reaction score
976
Location
India
Veer thannoda maayaila irunthu veliya varathu:love:tamil oda aalumai(y)(y)kaadal la ego karvam elathaiyum vittutu Tamil venumnu veer nenakirathu:whistle:ippo than veer a innum pidikuthu moni mam:giggle:thnq fr the epi:giggle:nd rendu heroine um enna panranga....marmangal thodaruthu:oops::oops:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top