• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 37 (pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
VET 37

வாசகர்களே
சில முக்கியமான அத்தியாயங்கள் எழுதும் போது நேரம் நீட்டித்து விடுகிறதே தவிர நான் தங்கள் யாரையும் காக்க எண்ணவில்லை.


உங்கள் கருத்திற்கு நன்றி...

மறவாமல் இந்த பதிவிற்கும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றியுடன்
மோனிஷா
 




Last edited by a moderator:

Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

"ஆமாம் வீர்... அந்த கீரிடத்தில பல நாட்டு விலைமதிப்பான ரத்தினங்கள் பதிச்சிருக்கு... அந்த கீரிடத்தோட அந்த ராஜகம்பீரமான சிலை பார்க்க அத்தனை தேஜஸா இருக்குமாம்... அது அந்த கோவில் கல்வெட்டிலயும் பொறிக்கப்பட்டிருந்துச்சுன்னு தர்மாவோட டைரியை வைச்சி தெரிஞ்சிக்கிட்டேன்...

அதுவும் அம்மனோட அந்த கீரிடத்தில இருந்து வர ஒளி அந்த கடலையே பிரகாசிக்க செய்யும்னு வர கப்பல்களுக்கு வழிகாட்டின்னும் போட்டிருந்துச்சு... ஆனா அதுக்கு அர்த்தம்... அது வெறும் கோவிலா மட்டும் இல்லை...

கலங்கரை விளக்கம் மாதிரி பெரிய கடல் பாறை மேல உயரமான கோபுரமா கட்டப்பட்டதுதான்... அந்த கோவில் உச்சி கோபுரத்தில விறகுகள் எல்லாம் அடுக்கி ஜோதி ஏத்தி வைச்சிருக்க, அதோட பிரகாசம்தான சிம்மவாசலுக்குள் நுழையற கப்பலுக்கு வழிகாட்டியா இருந்துச்சு...

அதுவும் இல்லாம அந்த கீரிடத்தை பார்த்தாலே அந்த அம்மன் சிலை எத்தனை பெரிசா இருக்கும்னு நமக்கு புரியும்... ஆனா அதை தரிசக்கிற பாக்கியம் எல்லாம் நமக்கில்ல தமிழச்சினு எங்க தாத்தா சொல்லி வருத்தப்படுவாரு.."

"ஏன் ? அந்த கோவிலுக்கு என்னாச்சு ?!"

"அந்த கோவில் நாளடைவில கடல்நீர் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சிடுச்சு... அப்போ அந்த கோவிலை காப்பாற்ற ஏதோ ஏதோ செஞ்சி தடுப்பரணெல்லாம் அமைச்சி கோவிலை காப்பாத்த முயற்சி பண்ணாங்க... ஆனா ஒண்ணும் யூஸ் இல்ல... ஒரு பெரிய பேரலையில கோவிலோட கோபுரம் சிதிலமடைஞ்சிடுச்சு... சிலையும் கடலுக்குள்ள மூழ்கிடிச்சாம்... அந்த கோவிலோட ஞாபகமா மிச்சமிருக்கிறது அந்த கீரிடம் மட்டும்தான்... எவ்வளவு கஷ்டநஷ்டத்திலயும் ராஜசிம்மன் வாரிசுகள் அந்த கீரிடத்தை ரொம்ப பத்திரமா பாதுகாக்க வைச்சிருந்தாங்க... " என்றாள்.

அவள் சொல்லி முடித்ததை கேட்டுவிட்டு வீரேந்திரன் மௌனமாயிருக்க தமிழே மேலும் தொடர்ந்தாள்.

"அதுக்கப்புறமும் அந்த மாதிரியான சிலை அமைக்க முயற்சி எல்லாம் நடந்துச்சு.. இராஜஇராஜேஸ்வரி அம்மனுக்கு நகரத்தில ஒரு கோவில் அமைச்சாங்க... ஆனா அந்த சிலை அந்த கீரிடத்தோட பொருந்தி போகவே இல்ல... அதனாலயே தாத்தா எப்பவும் என்கிட்ட கடலை காண்பிச்சி இங்கதான் நம்ம குலதெய்வம் இருக்குன்னு சொல்லுவாரு"

அவன் யோசனைகுறியோடு எழுந்து நின்றவன் "சரி ... அந்த கீரிடத்தை எங்க வைச்சிருக்க ?!" என்று கேட்க தமிழ் யோசனையில் ஆழ்ந்தவள் பின் அவனை நிமிர்ந்து பார்த்து"என் ரூம்லதான் வைச்சிருக்கேன்" என்றாள்.

"உன் ரூம்லன்னா... நீ நிறைய கோவில் போட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிருக்க... அங்கதானே !"

அவள் புருவங்கள் சுருங்க வியப்பின் உச்சிக்கே சென்றாள்.

இதுவரை யாருமே கண்டறியாத விஷயம் இவனுக்கு மட்டும் எப்படி புலப்பட்டிருக்கும் என அவள் யோசித்திருக்க வீரேந்திரன் அப்போது அவளின் அருகாமையில் நின்றிருந்தான்.

அவன் அவளிடம் "எனக்கு எப்படி தெரியும்னுதானே யோசிக்கிறியா" என்று கேட்க அவள் வியப்பில் இரூந்து மீளாதவளாய் தலையை மட்டும் பொம்மை போல அசைத்தாள்.

அவளுக்கு மட்டுமான மெலிதான குரலில் "நான் அந்த போட்டோஸ் எல்லாம் உடைக்கும் போது நீ கோபப்படாம பயந்தியே... உன் கண்ணில எதையோ மறைக்கிற தவிப்பு... நான் அன்னைக்கு அதை கவனிச்சேன் தமிழச்சி" என்றதும் அவள் அதிர்ந்து அவனை நோக்க "அதுக்குள்ள ஷாக்காயிட்டா எப்படி ?! நான் முழுசா சொல்லி முடிச்சிரேன்" என்றான் காந்தமான புன்னகையோடு!

அவள் விழிகளோ பதட்டத்தை நிரப்ப, அப்போதுதான் அவள் தவிப்பு புரியாமல் அவன் அவளை நெருங்கி தன் விரல்களால் வருட, அவனின் இன்னொரு கரம் அவளின் இடையை வளைக்க முயல அவனை தடுக்க முடியாமல் விழிகளை மூடிக் கொண்டு, இன்னும் அவன் எதையெல்லாம் கவனித்திருப்பான் என்று யோசித்திருக்க அவன் சன்னமான குரலில் அவள் காதோரமாய் நெருங்கி "பாரதியாரோட கண்ணில சென்ஸார் டிவைஸ் வைச்சிருக்க இல்ல... என்ன மூளைடி உனக்கு ?!" என்று அவன் சொல்லிமுடிக்க அவள் அவசரமாய் விழிகளை திறந்தாள்.

அவன் மேலும் "அந்த டிவைஸை கவனிச்ச பிறகுதான் கெஸ் பண்ணேன்...ஸம்திங் இஸ் தேர்...அதுல இருந்து சிக்னல் நேரா இருக்கிற அதோட இன்னொரு டிவைஸ் கூட கான்டெக்ட் பண்ணும் போது அலார்ம் அடிக்கும்... ஆர் எல்ஸ் உன் போஃன்ல அலர்ட் டோன் வரும்.... கரெக்டா"

அவள் குழப்பமாய் "வீர்... இதெல்லாம் நீங்க எப்போ பார்த்தீங்க... ஏன் என்கிட்ட கேட்கல ?" என்றவளை கூர்ந்து நோக்கியவன் "நீ கேட்டா சொல்லிடுவியா... அதான் அன்னைக்கு அந்த போட்டோஸை உடைச்சி பார்த்தேன்... முதல்ல நீ பயந்துட்டு... அப்புறமா நீ உடையுங்கன்னு தைரியமா சொன்னதும் திரும்பியும் என் கெஸ் தப்போன்னு தோணுச்சு... அதான் அந்த விஷயத்தை பத்தி பேச முடியல !"

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஆனா இப்போ என் பயமும் கவலையும் அந்த உமேஷ்கிட்ட நான் இதை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்... "

"ஸென்ஸார் டிவைஸ் பத்தியுமா ?!" பதட்டத்தோடு கேட்டான்.

"இல்ல அதை பத்தி சொல்லல"

"அப்படின்னா நிச்சயம் அந்த பொக்கிஷத்துக்கு ஒரு ஆபத்தும் வராது....... ஆனா இதை பத்தி உங்க வீட்டில இருக்கிறவங்க யாருக்காவது"

"தெரியாது வீர்... இது வரைக்கும் சொல்லல"

"ஏன் ?"

" எங்க அப்பா எக்கச்சக்கமா கடன் வாங்கி வைச்சிருக்காரு... இதை பார்த்தா அவர் என்ன யோசிப்பாரோ... அதுவும் இல்லாம ரவிக்கும் சித்திக்கும் எங்க பாரம்பரியமான நகைகள் மேலே கண்ணு.. இந்த கீரிடத்தை பார்த்தா சும்மா விடுவாங்களா... தேவியோ சின்ன பொண்ணு... நான் யார்கிட்டன்னு இதேல்லாம் ஷேர் பண்ணிக்க முடியும்" என்றவளை வீரேந்திரன் வியப்புகுறியோடு பார்த்தான்.

அவளின் தைரியம் புத்திசாலித்தனம் சமயோசிதம் வீரம் மற்றும் அவள் குடும்பத்தின் மீதும், நட்பின் மீதும், காதலின் மீதும், தாய்மொழியின் மீதும், தன் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட பற்றுதல் என அவள் அவனை ஒட்டுமொத்தமாய் வியப்பில் ஆழ்த்திவிட்டாள்.

இப்படியும் ஒரு பெண் அனைத்து சிறந்த
குணங்களும் ஒரு சேர இருக்க முடியுமா
என்று திகைப்புற்றவனிடம் "என்ன வீர் ? என்ன யோசிக்கிறீங்க" என்று கேட்டவளின் கரத்தை அழுந்த பற்றி தன்னருகில் இழுத்து அணைத்து கொண்டான்.

"சொல்றதை கேளுங்க வீர்... டைமாயிடுச்சு தூங்கி ரெஸ்ட் எடுங்க... நாளைக்கும் அப்புறம் ஏதாவது வேலை வந்திரும் பரபரன்னு ஓடிடுவீங்க" என்று அக்கறையோடு உரைக்க

"நான் படுத்தா மட்டும் நீ என்னை தூங்க விட்டிருவியா... "

"என்னது ? நான் உங்களை தூங்க விடமாட்டிறனா"

"பின்ன... நீதான் தினைக்கும் ஏதாவது கனவு கண்டுட்டு என் காதில வந்து கத்தி... எழுப்பி விட்டிர... தெரியுமா ?!"

அவள் யோசித்துவிட்டு முடிவாய் "அப்படின்னா நான் பக்கத்துல ரூம்ல போய் படுத்துக்கிறேன்... நீங்க நிம்மதியா தூங்குங்க" என்றதும் அவன் சினத்தோடு

"நீ மட்டும் இந்த ரூம் வாசலை தாண்டிப் பாரேன்.. கொன்றுவேன்"

"சரி இப்ப நான் என்னதான் பண்ணட்டும்" எரிச்சல் உணர்வோடு கேட்க

"அதென்ன ? ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட வந்து கெஞ்சனுமா... எனக்கு என்ன வேணும்னு மேடமுக்கு தெரியாதோ ?!" என்றதும் அவள் யோசனையோடு நின்றாள்.

வீரேந்திரன் அவள் காதோடு நெருக்கமாய் வந்து கிசுகிசுத்தான்"அந்த மிஸ்ஸான கிஸ்ஸிங் சீனை ரீப்பிளே பண்ணுவோமா ?!" என்று சொல்லவும் அவள் பதறியபடி

"என்னது ?... உம்ஹும் முடியவே முடியாது..." என்று விலக யத்தனித்தவளை அவன் இன்னும் இறுக்கமாய் அணைத்து கொண்டான்.

"ஒரு கிஸ்... அதுக்கு ஏன்டி இவ்வளவு டென்ஷன்"

"நீங்க இப்படி டவர் மாதிரி வளர்ந்து நின்னுக்கிட்டு என்னை இப்படி டார்ச்சர் பன்றீங்களே... அக்யூஸ்டுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா... எல்லாரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவீங்களா?!"படபடவென பொறிந்து தள்ளினாள்.

அவன் கோபமாக "உனக்கு வாய் அடங்கவே அடங்காதா... நீ இப்படிதான் அந்த கடத்தல் கும்பல்கிட்டயும் எகத்தாளமா பேசியிருப்ப... அதனாலதான் உன்னை ரூம்ல வைச்சி பாம் வைச்சானுங்க போல" என்று சொல்லி சிரிக்க அவள் கோபமானாள்.

"ஹெலோ... பாம் அவனுங்க எனக்காகவோ அரண்மனைக்காகவோ வைக்கல... உங்களை டார்கெட் பண்ணதான் வைச்சாங்க... இது தெரியாம நீங்க என்னை கலாய்க்கிறிங்களாக்கும்"

"சும்மா சொல்லாதே.. என்னை டார்கெட் பண்ணியிருந்தா... அவன் என்னைத்தானே கடத்திட்டு போகனும்"

"சிங்கத்தை கூண்டில அடைக்க யாராவது நேரா அதை கடத்துவாங்களா ?! அதோட இரையை வைச்சா அது தானே கூண்டுக்குள்ள வந்திர போகுது"

அவன் வாய்விட்டு சிரித்தபடி "அப்போ நீதான் என்னோடஇரை... இல்ல"

"நான் ஒரு எக்ஸேம்பிளுக்கு சொன்னேன்" என்று அழுத்தி சொல்ல

"ஆனா நீ சொன்னது சிட்டுவேஷனுக்கு... எக்ஸேக்டா பொருந்தி போச்சு"
என்றான்.

அவனே அவள் முகத்தை நிமிர்த்தி "வளவளன்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே..." என்று உரைக்க

"ஏன் இப்படி நீங்க அடம்பிடிக்கிறீங்க வீர்"

"நீயும்தான் அடம்பிடிக்கிற"

"விழுந்தா அடியும் வலியும் எனக்குதானே"

"விழமாட்டடி.. என்னை நம்பு"

"அது சரி... இப்போ உங்க போஃன் எங்க"

"அது சார்ஜ் இல்லாம ஸ்விட்ச்ட் ஆஃப்... போதுமா ?!"

"நிஜமாவா?!"

"அடியே தமிழச்சி... இதுக்கு மேல எனக்கு பொறுமையில்லை" என்று உரைத்தவன் தன் கரத்தால் அவளின் இடையில் தன் கரத்தை அழுத்தமாய் பதித்தான்.

அதற்கு மேல் அவனை சமாதானம் செய்ய கடினம் என எண்ணியவள்
வேறுவழியின்றி மிரட்சியோடு அவனை கெட்டியாய் தாங்கி கொண்டு அவன் இதழ்களை நெருங்க, அவன் ரசனையோடு அவளையே ஏக்கத்தோடு பார்த்திருந்தான்.

அவளை ஆழமாய் ஊடுருவி பார்த்தவனுக்கு அவள் நெருங்கும் வரையிலான பொறுமையில்லை. அவன் தன்வசம் இழந்தான் என்றே சொல்ல வேண்டும்.

அவளின் இதழின் அமுதை சுவைக்க காத்திருக்க முடியாமல் அவள் எம்பி நிற்கும் போதே தன் ஒற்றை கரத்தால் அவள் இடையை வளைத்து தூக்கி கொள்ள அந்தரத்தில் நின்றது அவள் கால்கள்.

அவள் "வீர்" என்று சத்தமிட அவனோ அடுத்த நொடியே அவள் இதழ்களை சிறையெடுத்து கொண்டான்.

அவளை தேடிய ஒவ்வொரு கணமும் அவள் மீதான காதல் அவனுக்குள் தீயாய் பரவிகிடக்க, அவளின் இதழ்களின் ஈரத்தால் குளிர்வித்திட எண்ணினானோ ?!

அவள் மெல்லிய இடையை வன்மையாகவே பற்றியபடி, அவளின் தாமரை இதழ்களில் இணைந்து சில நொடிகள் அப்படியே ஆழ்ந்துகிடந்தான்.

காற்றுக்கும் வழிவிடாமல் அவனோடு இறுக்கமாய் உறவாடி கொண்டிருந்த அவள் தேகத்தை விலக்கிவிட மனமில்லாமல், அவளை தூக்கிகிடந்தவன் அந்த முத்தத்தை நீட்டித்து கொணடிருக்க, அவனின் முத்தத்தில் பாய்ந்த மின்னல்கீற்றில் அவள் மொத்தமாய் செயலிழந்தாள்.

ஒரு நிலையில் அவன் உணர்வுகள் தன் எல்லையை கோட்டை கடந்துவிட, அவளை அப்படியே தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினான்.

அவனின் ஒவ்வொரு அணுவிலும் அவளே நிலைபெற்றிருக்க, இனி கண நேரமும் தன்னைவிட்டு அவள் பிரியும் வாய்ப்பை அவன் தருவானா ? உணர்வுகளை கடந்து உயிரோட்டமாய் அவளோடு கலந்துவிட்டான்.

வாசகர்களே
சில முக்கியமான அத்தியாயங்கள் எழுதும் போது நேரம் நீட்டித்து விடுகிறதே தவிர நான் தங்கள் யாரையும் காக்க எண்ணவில்லை.

உங்கள் கருத்திற்கு நன்றி...

மறவாமல் இந்த பதிவிற்கும் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றியுடன்

மோனிஷா
நன்றி மோனி மேடம்....
Sry sry
நல்ல பிள்ளையாக அடுத்த அத்தியாயம் எப்ப வரும்
தமிழையும் வீரையும் ஒன்று சேர்ந்து வெட்டுங்கள்
தேவியின் காதல் என்னாச்சு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top