Vaadi en thamizhachi - 38 (climax)

Monisha

Author
Author
#1
உலக புத்தக தின வாழ்த்துக்களோடு இன்றைய அத்தியாயம்...


சுமை சுகமானது

நாட்கள் கடந்து மாதங்களாக மாறியிருக்க வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் தீவிரமாய் இறங்கியிருந்தான். உமேஷ் தர்மாவை கொலை செய்த குற்றத்தை ஏற்று கொண்டாலும் சிலை கடத்தல் நெட்வொர்க் பற்றிய முழுமையான தகவல் அவனிடமே இல்லை.

அதுவும் இல்லாமல் தர்மாவின் கொலை வழக்கு எப்போது சிலைக்கடத்தல் மற்றும் பொக்கிஷங்களை கடத்தும் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து வீரேந்திரனுக்கு பெருமளவிலான இடையூறுகளும் வர ஆரம்பித்தன.

உயர்மட்ட அரசியல்வாதிகள் அவனை அந்த வழக்கின் விசாரணை அதிகாரி என்ற பதவியிவிருந்து நீக்க யத்தனிக்க, அந்த நேரத்தில் தமிழச்சி மற்றும் பாரதி பத்திரிக்கை இதனை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்தது.

அந்த வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மக்களால் அதிகம் பகிரப்பட, வீரேந்திரனின் தடை நீங்கி அவனே அதன் விசாரணை அதிகாரியாய் தொடர்ந்தான்.

மக்களின் சக்திக்கு முன் அரசியல் சக்திகளும் அடிப்பணியவே நேரிட்டன.

அவன் மீண்டும் அந்த வழக்கில் முழு மூச்சோடு செயல்பட தொடங்கினான்.

அந்த குற்றத்தின் பிண்ணனியில் இருக்கும் அந்த பெரிய நெட்வொர்க் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பிடிக்குள் சிக்க தொடங்கியது.

இதற்கு பிண்ணனியில் அறநிலைத்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவர இன்னும் பரவலாய் இந்த வழக்கு பேசப்பட்டது.

வீரேந்திரன் குற்றவாளிகளை பிடிப்பதில் மட்டும் தீவிரம் காட்டாமல் தொலைந்து போன சிலைகளையும் பொக்கிஷங்களை மீட்பதிலும் அதிதீவிரமாய் இருந்தான்.

செய்தி தாள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் அவனை பற்றிய பாராட்டுரைகள் ஓயாமல் ஒலிக்க தொடங்கின.

இவற்றை எல்லாம் கண்ட மகேந்திர பூபதி பூரித்து போயிருந்தார்.

இருப்பினும் தன் மகனை அழைத்து பாராட்ட மனம்வராமல் தன் ஈகோவை கெட்டியாய் பிடித்து கொண்டிருந்தார்.

கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாய் மகனுடன் பேச்சு வார்த்தையே இல்லை.

அதற்கு காரணம் வீரேந்திரன் தன் மனைவிதான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறியது.

எந்த தந்தைக்குதான் கோபத்தை வரவழைக்காது ?அதுதான் அவரின் ஈகோவை அதிகமாய் வேரூன்றி வளரச் செய்திருந்தது. ஆனால் அது அவர் பக்கத்திலான நியாயம் மட்டுமே!

கட்டிய மனைவியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் தந்தையிடம் எத்தனையோ விதமாய் சமாதானம் பேசி பார்த்தவன் இறுதியாய் முடியாமல் மனைவியோடு தானும் வெளியேறிவிட்டான்.

இத்தகைய நிலையில் மகேந்திர பூபதி அரண்மனையை இடித்துவிட்டு பெரியளவிலான பிரொஜக்ட்டை அங்கே கொண்டுவர எண்ணியிருந்தார்.

அதுவும் இயலாமல் போக அடிப்பட்ட சிங்கம் போல அவ்வப்போது தன் மனைவியிடம் மட்டும் கர்ஜித்து கொண்டிருந்தார்.

இன்றும் தொலைக்காட்சியில் மகனின் முகத்தை பார்த்து அவருக்குள் இருந்த ஏக்கத்தையும் வேதனையையும் மனைவியிடம் காட்டிக் கொண்டிருந்தார்.

"உன் மகனுக்கு நேத்து வந்தவதான் முக்கியம்... நம்மல பத்தி கொஞ்சங் கூட அக்கறையே இல்லை" என்று உரைக்க மேஜை மீது உணவு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த சந்திரா இறுகிய முகத்தோடு அவர் முன்பு வந்து நின்றார்.

"உங்களுக்கு மட்டும் அவனை பத்தி கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? மருமக மகனைவிட அந்த அரண்மனைதான் ரொம்ப முக்கியமா ..?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஆமான்டி... அவனுக்கு அவன் பிடிவாதம்னா... எனக்கு என் பிடிவாதம்... நான் அந்த அரண்மனையை இடிக்காம விடமாட்டேன்" என்றார்.

சந்திராவிற்கு தன் கணவன் இத்தனைக்கு பிறகும் அந்த அரண்மனை விஷயத்தில் இறங்கி வராமல் உச்சாணி கொம்பிலேயே நிற்கிறாரே என வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

என்ன செய்வது? அதுதான் மகேந்திரனின் குணம்.. அதுதான் வீரேந்திரனின் குணமும் கூட...

வீரேந்திரனும் அவ்வாறே தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் அரண்மனையில் தன் மனைவியோடு தங்கியிருந்தான்.

அவர்கள் அங்கே இருக்கும் வரை தன் தந்தை அரண்மனையை தகர்க்க முயற்சிக்கமாட்டார் என்பதே அவன் எண்ணம்.

இந்த கோபத்தை எல்லாம் மகேந்திரபூபதி விக்ரமவர்மனிடம் திருப்பியிருந்தார். அவரின் தொழில் முதற்கொண்டு எல்லாவற்றையும் முடக்கி தன் பணத்தை உடனடியாய் திருப்பி தரும்படி பணித்திருந்தார்.

விக்ரமவர்மன் ரொம்பவும் மனம் நொந்திருந்திருக்க தமிழ்தான் இவை எல்லாவற்றிற்றுக்கும் காரணம் என்ற கோபம் அவருக்கு!

இந்த சமயத்தில் விஜயா தேவியை தமிழுக்கு துணையாக அரண்மனைக்கு அனுப்பியிருப்பது அறிந்து அவர் அதீத சீற்றமானார்.

"யாரை கேட்டு நீ தேவியை அனுப்பின...?" என்றார்.

"இல்லை தமிழ்தான் அவ்வளவு பெரிய அரண்மனையில தனியா கஷ்டமாயிருக்குன்னு" என்று அவர் தயங்கி சொல்லும் போதே இடைமறித்தவர்

"அவ அந்த அரண்மனை தான் முக்கியம்னு நம்ம எல்லோரையும் தூக்கி எரிஞ்சிட்டு போயிட்டா ?...அப்புறம் என்ன ?!"

"அப்படி எல்லாம் இல்லங்க... தமிழ் அப்படி எல்லாம் யோசிக்க மாட்டா"

அவர் முகத்தில் வெறுப்பு கலந்த ஒரு புன்னகை இழையோடியது.

"என்ன விஜயா? நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன்... உன் பிள்ளையும்... நீயும்... அவளை தலையில தூக்கி வைச்சி ஆடிறீங்க... இனிமே என்னால எந்த பிரோஜனமும் இல்லன்னு... அவ பக்கம் சாயிறீங்களாக்கும்" என்றான்.

விஜயாவிற்கு அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. சொத்திற்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்பட்ட போதெல்லாம் இப்படி ஒரு பழி சுமத்தப்படவில்லையே !

ஆனால் இன்று அவர் மனம் திருந்தியிருந்த நிலையில் அந்த வார்த்தை அவரை ரொம்பவும் காயப்படுத்தியிருக்க அப்படியே மௌனகதியில் நின்றார்.

ரவி தந்தை சொன்னதெல்லாம் கேட்டபடியே பின்னோடு வந்தவன் "ஏன் இப்படி எல்லாம் பேசிறீங்கப்பா?... நானும் அம்மாவும் சொத்து பணம்னு ஒரு காலத்தில யோசிச்சிருக்கோம்... ஆனா அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு அக்கா எங்களுக்கு புரிய வைச்சிட்டா... எவ்வளவோ நாங்க அக்காவுக்கு எதிரா செஞ்சிருக்கும்... அதெல்லாம் தெரிஞ்சும்... அக்கா எங்களை விட்டு கொடுக்கல.. அப்பதான் பணம் காசைவிட உறவு பெரிசுன்னு புரிஞ்சுது... இப்ப கூட அக்கா அந்த அரண்மனைக்காக இவ்வளவு தூரம் நிற்கிறான்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காது" என்று பொறுமையாய் விளக்க, அவனின் பேச்சும் அதில் வெளிப்பட்ட முதிர்ச்சியும் விக்ரமவர்மனுக்கு புதிராகவே இருந்தது.

இருந்தும் விக்ரமவர்மனுக்கு அவரின் மனக்குமறல் அடங்கவில்லை.

அவர் தன் மகனை நோக்கி "உனக்கு நம்ம நிலைமை புரியுதா இல்லையா... தமிழ் கையெழுத்து போடலன்னா நம்ம எல்லோரும் நடுத்தெருவுல நிற்கனும்" என்றார்.

ரவி சிறிதும் யோசிக்காமல் "அக்கா நம்மல அப்படி விட்டிற மாட்டாப்பா... இந்த பிரச்சனையை அக்கா சரி பண்ணிடுவா... நீங்க பாருங்க" என்று தீர்க்கமாய் சொல்லிவிட்டு அவன் அதற்கு மேல் தன் தந்தையிடம் அந்த விஷயம் குறித்து விவாதிக்காமல் அகன்றான்.

விக்ரமவர்மனுக்கு தமிழுக்கும் இடையிலான உறவில் ஆரம்பித்திலிருந்தே பெரும் இடைவெளி இருந்தது.

அந்த இடைவெளியை அவரின் தந்தை சிம்மவர்மன்தான் நிரப்பியிருந்தார். ஆனால் அவர் மரணத்திற்கு பின் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்படாமலே இருந்தது.

இன்றளவிலும் அது அப்படியே இருக்க, பிரச்சனைகள் ஓய்ந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை.
*********
சிம்மவாசல் அரண்மனையை விட்டு வெகுதொலைவு வந்த அந்த கார், ஒரு கோவிலின் முன்புற வாசலில் வந்து நின்றது.

தமிழ் தனக்கே உரிய கம்பீரத்தோடு இறங்க தேவியும் அவளோடு இறங்கினாள்.

தேவி வண்ண
தவாணியில் மின்னிக் கொண்டிருக்க, தமிழோ எப்போதும் போலான அவளின் உடையிலும் நடையிலும் மாற்றங்கள் இல்லை. ஜீன்ஸ் பேன்டும் நீல நிற டாப்ஸும் அதே மார்டன் தமிழச்சிதான்.

அக்கா தங்கை இருவருக்கும் மலைக்கும் மடுவுக்கான வித்தயாசம். இருவரும் வேறு வேறு பாணியான உடையமைப்பில் இருக்க, தேவி உள்ளே செல்வதற்கு முன் பூக்கடையின் வாசலில் நின்றபடி "அக்கா இரு... பூ வாங்கிட்டு வர்றேன்" என்றாள்.

"நீ வாங்கிக்கோ தேவி"

"அப்படியெல்லாம் சொல்ல கூடாது... " என்றவளை தமிழ் முறைத்து பார்த்தாள். தான் விரும்பாதவற்றை தன் மீது தினிக்காதே என்பது போன்ற பார்வை.

அவளுக்கு திருமணத்திற்கு பின்பு வேறொரு பிம்பமாய் தன்னை மாற்றிக் கொள்ள இன்றளவும் அவள் மனம் ஏற்கவில்லை. முன்பு எப்படி இருந்தாலோ அப்படியே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவே எண்ணினாள்.

தமிழ் அக்காவின் பார்வை புரிந்தவளாய் திரும்பி "ஒரு மொழம் கொடுங்கக்கா" என்று சொல்லும் போதே "இல்ல இரண்டு மொழமா கொடுத்திருங்க" என்றது ஒரு ஆண்மை நிரம்பிய குரல்.

திரும்பி பார்த்தவளுக்கு ரகு நிற்பது புரிய சட்டென்று உதட்டில் தவழ வந்த புன்னகை வெளிவராமல் உள்ளேயே சென்று ஒளிந்து கொண்டது.

முகத்தை திருப்பிக் கொண்டு அந்த பெண்ணிடம் மீண்டும் "ஒரு மொழம் கொடுங்கக்கா போதும்" என்று சொல்ல அவன் பின்னோடு நின்றபடி "உன் லாங் ஹேருக்கு பத்துமா? !" என்று கேட்டு புருவத்தை உயர்த்தி அவன் உதிர்த்த புன்னகை அவள் இதயத்தோடு சென்று ஒட்டிக் கொள்ள, அவள் இன்னும் சிலநொடிகள் இங்கிருந்தால் தான் அவனிடம் முற்றிலுமாய் தொலைந்தே போவோம் என எண்ணியவள் தன் தமக்கையை தேடினாள்.

அவள் அங்கு இல்லை.

கோவிலுக்குள் சென்றிருப்பாள் என எண்ணி உள்ளே சென்றுவிட அந்த பூக்காரப் பெண்ணோ பூ வாங்கிவிட்டு செல்ல சொல்லி கதற, அவள் திரும்பவேயில்லை.

அந்த பெண் தனக்கு நடக்க இருந்த வியாபாரத்தை கெடுத்துவிட்டான் என எண்ணி ரகுவை பார்த்து வசைமாறி பொழிந்தாள்.

தேவி சென்ற திசையிலேயே நிலைகுத்தி பார்த்து கொண்டிருந்தவன் அந்த பெண்ணின் பாராட்டு மழைகளை காது கொடுத்தும் கேட்கவில்லை.

இப்படி ஒரு தேவதை தனக்கு உரிமையாவாளா என்ற ஏக்கம் ஆனந்தம் தவிப்பு என எல்லா உணர்வுகளும் அவனுக்குள் பின்னிப் பிணைந்திருக்க இறுதியாய் அவனை பார்த்து அந்த பூ விற்கும் பெண் முறைப்போடு "காலங்காத்தால பொழப்பை கெடுக்க வந்துட்டானுங்க.. உன்னை மாதிரி பொம்பள புள்ளகிட்ட வம்பு பன்றவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுக்கனும்" என்று சொல்லவும் அவனுக்காக பரிந்து கொண்டு வந்தாள் அவன் உயிர் தோழி.

"நானும் பார்த்திட்டிருக்கேன்.. நீங்க ரொம்ப ஓவரா பேசிட்டிருக்கீங்க... அவன் யாருன்னு தெரியாமாம்மா... மஹாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்" என்றுரைக்க அந்த பெண் முதற்கொண்டு அந்த காட்சியை நேரம் போகாமல் பார்த்திருந்த அனைவரும் வாயடைத்து போயினர்.

இப்போது ரகு சுதாரித்தபடி தன் தோழியின் கரத்தை பற்றி ஓரமாய் அழைத்து வந்தவன் "இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம என் டீடைல்ஸ் எல்லாம் அந்த அம்மாகிட்ட கொடுத்திட்டிருக்க" என்றான்.

"டே அந்த லேடி ஓவரா பேசுது... உன்னையே போலீஸ்ட்ட பிடிச்சி கொடுத்திருவன்னு சொல்லுது... அதான் உன் பவர் என்னன்னு சொன்னேன்." என்று அவள் இறுக்கத்தோடு பதிலுரைத்தாலும் அதிலுள்ள குறும்புதனத்தை அவன் அறிந்து கொண்டான்.
 

Monisha

Author
Author
#2
"ஒரு ஆணியும் நீ புடுங்க வேண்டாம்... அதே ஸ்டேஷ்னலதான் உன் புருஷனும் இருக்காரு... எவனாவது போய் ஏடாகூடாம போட்டுக் கொடுத்திட்டான்னா... அப்புறம் அந்த மனிஷன் என்னை வகுந்திருவாரு வகுந்து" என்று அச்சத்தோடு உரைக்க தமிழ் புன்னகை ததும்ப "டே இன்னுமாடா அவரை பார்த்து நீ பயந்திட்டிருக்க" என்றாள்.

"ஏன் உனக்கு பயம் இல்லை?"

"இருக்க்க்கு... ஆனா இல்லை" என்றாள். அவளால் இன்றும் யூகிக்க முடியவில்லை. அவன் எப்போது எந்த ரூபத்திற்கு மாறுவான் என்று!

"அம்மா தாயே விடு... உன் புருஷன்கிட்ட ஏதேதோ பொய் சொல்லிட்டு வர்றதுக்குள்ள மண்டை காஞ்சிட்டேன்... இதுல நீ வேற"

"பொய் சொன்னியா ?!... டே அந்த மனிஷன் கண்டுபிடிச்சிருவாரேடா"

"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... நான் முதல்ல போய் எப்படியாவது தேவிகிட்ட பேசி கன்வின்ஸ் பன்னிடிறேன்"

"நீ செய்ற சேட்டைக்கெல்லாம் நான் பலி ஆடா ? அவதான் ஹாஸ்பெட்டில்லையே உன்கிட்ட அவ லவ்வை சொன்னா இல்ல.. அப்பவே ஒத்துக்காம பெரிய புடுங்கியாட்டும் ஸ்டேட்டஸ் தகுதி அது இதுன்னு பேசிட்டு... இப்ப வந்து என் உயிரை எடுக்கிற"

"நீ என் ப்ரண்டுடி... என் காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணாம வேற யாரு ஹெல்ப் பண்ணுவா" என்றதும் அவனை முறைத்தவள் "நல்ல பொழப்பு... போய் எப்படியாவது பேசி அவளை கன்வின்ஸ் பண்ணு" என்றதும் ரகு ஆர்வமாய் உள்ளே செல்ல எண்ணியவன் மீண்டும் பின்னோடு வந்து அவனை வார்த்தையாலயே வறுத்தெடுத்த பூக்கார பெண்ணிடம் "இரண்டு மொழம் பூ கொடுங்க" என்று கேட்டு வாங்கி கொண்டான்.

அந்த பெண்ணும் அவன் போலீஸ்காரனா என்று சந்தேகத்தோடே கொஞ்சம் அதிகமாகவே பூவை கத்தரித்து கொடுத்தாள்.

உள்ளே சென்றவன் அந்த கோவிலுக்குள் இப்படியும் அப்படியுமாய் சுற்றி வந்தான். அவன் பார்வை அவளை தேட, அவளும் தன் தமக்கையை தேடி சுற்றி வந்தாள்.

அவளை கண்டறிந்த ரகு "தேவி" என்றழைக்க அவன் எங்கே என்று ஆவலோடு தேடிய அந்த துருதுருப்பான விழிகளை கண்டு களிப்புற்றவன் இன்னும் சில நொடிகள் அவள் தேடலை ரசித்த பின், அவள் கண்முன்னே பிரசன்னமானான்.

அவனை பார்த்ததுமே மனம் காதலை ஊற்றெடுத்தாலும், தன் காதலை அவனிடம் உரைத்த போது அவன் தட்டுகழித்ததை எண்ணிய போது இன்னும் வலித்தது அவளுக்கு.

காதல் என்பது எத்தனை சுகமோ அத்தனை சுமை. இருவராய் அதை சுமக்கும் போது சுகம்.

ஒற்றையாய் சுமப்பவர்களுக்கு அது மனதையும் உயிரையும் கனக்க செய்யும் சுமை.

அந்த சுமையால் மனம் கனத்து அவன் முகத்தை பாராமல் நின்றிருந்தாள்.

அவனுக்கு அவளின் நியாயமான கோபம் புரிந்தது. அவள் காதலை சொன்ன போது ஸ்டேட்டஸ் அது இது என்று அவளை சமாளித்து பார்த்தான்.

ஆனால் அவள் அந்த காரணத்தை ஏற்காத போது உன்னை அத்தகைய உறவுமுறையோடு பார்க்க இயலவில்லை என்று திட்டவட்டமாய் மறுத்துவிட்டான்.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

வீரேந்திரனின் எச்சரிக்கையும் இன்னொரு புறம் ரவியின் மீதான தவறான பார்வை.

ரவி மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட போதும் அவனால் அதை நம்ப முடியவில்லை. தேவியை தான் காதலித்து அந்த உறவுமுறை தன் தோழியின் வாழ்க்கைக்கு பிரச்சனையாய் முடிந்துவிடுமோ என்ற ஒரே எண்ணம் மட்டும்தான்.

அதனாலயே தனக்கு விருப்பம் இருந்தும் தேவியை நிராகரித்தான்.

ஆனால் தமிழ் தன் நண்பனிடம் பேசி அவன் அர்த்தமற்ற பயத்தை போக்கியதில்லாமல் தேவி அவன் மீது கொண்ட காதலையும் தெளிவாய் புரிய வைத்திருந்தாள்.

தேவி முன் நின்ற ரகு "நான் அப்படி பேசி உன் மனசை கஷ்டபடுத்திருக்க கூடாது" என்று அவளை சமாதானப்படுத்த முயல அவள் அவன் புறம் பார்வையை திருப்பினாள்.

"பரவாயில்லை... என்னால புரிஞ்சிக்க முடியாது... நீங்க உங்களுக்கு பிடிச்சி பொண்ணா பார்த்து கல்யாணப் பண்ணிக்கங்க" என்றதும் அதிர்ச்சியடைந்தவன் "என்ன? பட்டுன்னு இப்படி சொல்லிட்டு..." என்றான்.

"எப்படி சொல்லிட்டேன்? "

"வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி"

"நீங்கதான் என்னை அந்த மாதிரி பார்க்கலயே... அப்போ எந்த பொண்ணை பார்த்தா அந்த மாதிரி ப்ஃலிங்ஸ் வருதோ அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க"

"புரிஞ்சிக்கோ தேவி... உன்னை நான் அப்படி பார்க்கலங்கிறது உண்மை... அதே நேரத்தில உன்னை அப்படி பார்க்கவே முடியாதுன்னு சொல்லலயே"

இந்த வார்த்தைகளை கேட்டு தேவியின் மனம் இன்புற்று மீண்டும் காதல் கனவில் மிதந்திருக்க அவனே தொடர்ந்தான்.

"உன்கிட்ட நான் அப்படி சொன்னனே அது உன்னை நிராகரிக்க இல்லை... வேற காரணம்..." என்றுரைத்தவனை கேள்வியாய் பார்த்தாள்.

" உன் அண்ணன் உங்க அம்மான்னு யாருக்குமே தமிழை பிடிக்காது... அதுவும் இல்லாம எங்க நட்பை கலங்கப்படுத்தி பேசினவங்க... நாளைக்கே நான் உன்னை காதலிச்சி அதெல்லாம் தமிழோட வாழ்க்கையில பிரச்சனையா மாறிட்டா... அந்த பயம்தான்...

ஆனா தமிழ் எனக்கு புரிய வைச்சா... உங்க அண்ணனும் உங்க அம்மாவும் ரொம்பவும் மாறிட்டாங்கன்னு... அப்புறம் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கிறன்னு" என்று ரகு சொல்ல, தேவி பொறுமையாய் கேட்டாள்.

அவன் அவனுடைய ஆசை கனவுகளை பற்றி சிந்திக்காமல் தன் தோழியின் வாழ்க்கையை பற்றி சிந்தித்திருக்கிறான் என எனும் போது இத்தகைய நட்பை பெற்ற தன் தமக்கை உண்மையிலயே புண்ணியம் செய்திருக்கிறாள் என்று தோன்றியது.

இவற்றை எல்லாம் தாண்டி ரகுவின் மீதான மரியாதை அதிகரித்து அவன் இன்னும் அவளுக்குள் போற்றுதலுக்குரிய இடத்தை பெற்றுவிட்டான்.

அவள் சமாதனமானதற்கு சான்றாய் அவள் உதடுகள் புன்னகையை உதிர்க்க ரகு தன் கரத்திலிருந்த மல்லிகை பூவை அவளிடம் நீட்டினான்.

அவன் வித்தியாசமாய் பார்த்தபடி "எல்லோரும் யூஸ்வலா ரோஸ்தானே கொடுப்பாங்க" என்று கேட்க

தமிழ் அவர்கள் அருகாமையில் வந்தபடி "அவன் நிறைய பேருக்கு ரோஸ் கொடுத்திட்டான்... ஒண்ணும் வொர்க் அவுட் ஆகல... அதான் உனக்கு டிஃப்ரண்ட்டா மல்லிப்பூ கொடுத்துப் பார்க்கிறான்.." என்றவள் தன் நண்பனின் புறம் திரும்பி "கரெக்ட்தானே ரகு" என்று குறும்புத்தனமாய் புன்னகையித்தாள்.

அவன் கோபமாய் திரும்பி "ஒய் திஸ் கொலைவெறி ?!" என்று பரிதாபமாய் பார்த்தான்.

"ரொம்ப பீஃல் பன்னாதடா... அல்ரெடி உன் கதை எல்லாம் என் தங்கச்சிக்கிட்ட எப்பவோ சொல்லிட்டேன்" என்றதும் ரகு தேவியின் புறம் திரும்பி "உங்க அக்கா என்னை பத்தி சொல்றதை எல்லாம் நம்பாதே... வேணும்டே என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவா"

"அடப்பாவி... நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றேனா.. இருடி இரு...நீ பொய் சொல்லிட்டு இங்க வந்த மேட்டரை என் வீட்டுக்கார்கிட்ட வத்தி வைக்கிறேன்"

"வத்தி வையேன்... எனக்கென்ன பயமா ?"

"பயமான்னா கேட்கிற.. இரு... இப்பவே நான் கால் பன்றேன் ??? "

தேவி புரியாமல் பார்த்திருக்க, ரகு ஏளமாய் "பன்னு" என்று தன் தோழியிடம் தைரியமாக உரைத்தான்.

அவனுக்கு தெரியும்.

அவள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள் என்று !

ஆனால் தமிழ் நிறுத்தாமல் "ஓ அவ்வளவு தைரியமா ?" என்று தன் கைப்பேசியை எடுத்தவள் உண்மையிலேயே அவனுக்கு அழைக்க முற்பட்டு கொண்டிருந்தாள்.

தேவிக்கோ அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை பார்த்து சிரிப்பு தாங்கவில்லை. இருவருக்கும் தடலாடியாய் பத்து வயது குறைந்துவிட்டதோ என்று தோன்றியது.

அந்த சமயம் தமிழ் தன் கணவனுக்கு அழைக்கும் முயற்சியை கைவிட்டவள் "டே ரகு... ஏசிபி" என்றாள்.

"என்ன ? போஃன் பண்ணலயா... உனக்கே பேச பயமா இருக்கா? !"

"ரகு ... வீர் வந்திருக்காரு"

"இப்படி எல்லாம் சொன்னா நாங்க பயந்திருவோமா?! போடி"

"அட எருமை... திரும்பி பாரு" என்று அவள் பதட்டத்தோடு கூறவும் திரும்பி பார்த்தவனுக்கு பூகம்பமே வந்தது போல் ஓர் அதிர்ச்சி.

பூகம்பம் வரவில்லை. வீரேந்திரன்தான் வந்து கொண்டிருந்தான். காக்கி பேண்டூம் நீல நிற ஷர்ட்டுமாய் கம்பீரமாய் வந்து கொண்டிருக்க ரகு தமிழிடம் "இப்ப என்னடி பன்றது ? " என்றான்.

"என்னை கேட்டா? போய் ஒளிஞ்சிக்கோ... அவரு உள்ளேதான் வராரு... நீ அப்படியே வெளியே போயிடு" என்றதும் தன் கரத்தில் இருந்த பூவை தேவியில் கையில் கொடுத்தவன், அடுத்த கணமே சென்று ஒரு தூணின் பின்புறம் மறைந்து கொள்ள தேவி தன் தமக்கையிடம் "ட்யூட்டி டைம்ல மாமா ஏன் இங்க வர்றாரூ ?" என்று கேட்க

"என்னை டென்ஷன் படுத்ததான்"

"நீ ஏன் டென்ஷனாகனும்... ரகு ஏன் மாமாவை பார்த்து ஒளிஞ்சிக்கனும்"
என்று தேவி கேட்டு கொண்டிருக்கும் போதே வீரேந்திரனின் பார்வை அவர்களை கவனித்துவிட்டது.

தன்னை நோக்கி வரும் கணவனை கவனித்தபடி தன் தங்கையின் காதோரம் "தெய்வமே ! வீட்டுக்கு போய் உனக்கு எல்லாத்துக்கும் விளக்கம் தர்றேன்... உங்க மாமா முன்னாடி எதையும் உளறி வைக்காதே" என்றாள்.

வீரேந்திரன் அவர்களை நெருங்கினான். எதிர்பாராமல் மனைவியை பார்த்த பூரிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவளோ பயத்தில் வராத புன்னகையை இயந்திரத்தனமாய் வரவழைத்தாள்.

"நீ காலையில என்கிட்ட கோவிலுக்கு போகப் போறேன் சொல்லவே இல்லயே"

"அது திடீர்னு தோணுச்சு... அதான் நானும் தேவியும்... நீங்க என்ன ?ட்யூட்டி டைம்ல கோவிலுக்கு வந்திருக்கீங்க"

"ஒரு விசாரணைக்காகதான்..."

"என்ன விசாரணை?"

"அது ஒண்ணும் இல்லை... இந்த கோவில் அறங்காவலரை விசாரிக்கலாம்னு இங்க வர்ற சொன்னேன்..." என்றவன் தன் மனைவியின் காதோடு ரகசியமாய் "இந்த கோவிலில் கூட எதோ ஒரு ஐம்பொன் சிலையை மாத்திருக்காங்கன்னு தகவல்" என்றான்.

அவள் அதிர்ச்சியோடு "அப்படியா ?!" என்று கேட்க அவனும் தலையசைத்தான்.

உடனடியாக தன் கைகடிகாரத்தை பார்த்தவன் "நீங்க சாமி கும்பிட்டீங்களா ?!" என்று கேட்க தேவி "இல்ல மாமா" என்றாள்.

"சரிமா.. நீங்க சாமி கும்பிட்டு கிளம்புங்க.. நான் கொஞ்சம் வேலையா வந்திருக்கேன்" என்றபடி தமிழை பார்க்க அவளும் இயல்பாய் தன் இமைகளை அசைக்க அவனும் தன் காந்த புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து செல்ல ரகுவும் அவசரமாய் அகன்றுவிட்டான்.

தேவி ரகு கொடுத்த பூவை தன் தலையில் சூடிக் கொண்டு ஏக்கமாய் வாசலை பார்த்தாள்.

பார்த்து ரசிக்க அவனில்லை என்ற தவிப்பு!
 

Monisha

Author
Author
#3
தமிழ் தன் தங்கையின் மன எண்ணத்தை கணித்தபடி "என்ன தேவி.. ? ப்லீங்ஸா .. எங்க போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்தபடி தன் தங்கையின் தோளை அணைத்து பிடித்தாள்.

"சே !அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவளை காட்டி கொடுத்தது .

அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.

அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்து கொண்டான்.

கோவிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.

******
இன்பகரமான தருணம்
அன்று இரவு அரண்மனைக்கு வெளியே இருந்த தாமரை மண்டபத்தில் தமிழ் கடற்கரையை ரசித்தபடி அமர்ந்திருக்க அங்கே இருள் படர்ந்திருந்தது.


இருப்பினும் முழுமையான இருள் சூழாமல் அரண்மனையின் வெளிச்சம் அங்கே வீசிக் கொண்டிருக்க, தமிழ் அந்த மண்டபத்தின் படிக்கெட்டுகளில் கால்களை தொங்கவிட்டு கொண்டு கன்னத்தில் கரத்தை தாங்கி கொண்டு ஒர் அழகிய பெண்ணோவியமாய் அமர்ந்திருந்தாள்.

"நீ இங்கதான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேடிறது" என்றபடி வீரேந்திரன் வர அப்போதே அசைந்தாள்.

"வந்துட்டீங்களா ?"

"வந்துட்டீங்களாவா... நான் வந்து எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியுமா... போஃனையும் ரூம்ல வைச்சிருக்க... இந்த அரண்மனை முழுக்க நானும் தேவியும் தேடி தேடி களைச்சிட்டோம்" என்றான்.

"அய்யோ! சாரி வீர்... சும்மா நடந்து வந்தேனா. என்னவோ அப்படியே அமைதியாய் உட்கார்ந்திருக்கனும்னு தோணுச்சு... அதான் இங்கே" என்று தயங்கியபடி சொல்லவும்

"சரி விடு... இங்க வா... நான் உன்கிட்ட ஒண்ணு காண்பிக்கனும்" என்று வீரேந்திரன் தமிழின் தோள்களை அணைத்தபடி அங்கயே அமர வைத்தவன் தன் கையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை நீட்டினான்.

அவள் பிரித்து பார்க்க அதில் ஆடம்பரமான கீரிடத்தின் ஓவியம் இருக்க தமிழ் வீரேந்திரனை வியப்பாய் பார்த்தாள்.

"அந்த தர்மாவை சும்மா சொல்ல கூடாது... ரொம்ப திறமைசாலிதான்" என்று மெச்சியவள் அந்த ஒவியத்தை உன்னிப்பாய் கவனித்தாள். அது பார்க்க ஒரு கோவில் வட்டவடிவ கோபுரம் போல காட்சியளித்தது.

"அந்த கீரிடம் இப்படிதான் இருக்குமா? " என்று வீரேந்திரன் கேட்க "ம்ம்ம்... கிட்டதட்ட" என்றாள்.

பிறகு வீரேந்திரன் அவள் கரத்தை பற்றி "சரி இங்க இருட்டா இருக்கு... உள்ளே போலாமே" என்றழைத்தான்.

"போலாம்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லனும்"

"என்ன ?"

"அது வந்து ... நம்ம தேவி இல்லை... அவ ரகுவை லவ் பன்றா ?" என்று தயங்கி தயங்கி சொல்ல, அவன் எந்தவித உணர்ச்சிகளற்று "அப்புறம்" என்றான்.

"என்ன ? இவ்வளவு சாதாரணமா அப்புறம்னு சொல்றீங்க"

"ப்ச்... தெரிஞ்ச விஷயம்தானே... ரகு அடிப்பட்டு ஹாஸ்பெட்டில இருக்கும் போதே நான் இதை யூகிச்சேன்..."

"அப்படின்னா இன்னைக்கு ரகு கோவிலுக்கு வந்ததும் தெரியுமா?!"

"இன்னைக்கு கோவிலுக்கு வந்தானா? என்கிட்ட உடம்பு சரியில்லைனு பெர்ஃமிஷன் கேட்டான்" என்று அவன் கூற, தானே உளறிவிட்டோமா என தமிழ் பதட்டமானாள்.

எப்போதும் அவன் கண்டுபிடித்துவிடுவான் என்ற எண்ணத்தில் உளறிவிட்டாள். அவனோ அவசரமாய் தன் கைப்பேசியை எடுத்து ரகுவிடம் பேச அழைதத்தான்.

தமிழ் தன் கணவனின் கரத்தை பிடித்து தடுத்தபடி "ப்ளீஸ் வேண்டாம்... நான்தான் அவனை கோவிலுக்கு வர்ற சொன்னேன்... வேணும்ன்னா என்னை திட்டுங்க" என்றவளை அவன் கூர்மையாய் பார்த்தான்.

எந்நிலையிலும் நண்பனை விட்டுகொடுத்திராத அவளின் உறுதியை கண்டவன் அவள் கையை உதறிவிட்டு கைப்பேசியை எடுத்து உள்ளே வைத்தான்.

மேலே பேசாமல் கடலை பார்த்தபடி நின்றவனின் கரத்தை பற்றி கொண்டவள் "ப்ளீஸ் கோபம் வேண்டாம்" என்று சற்று இறங்கி பேசியவளை ஆச்சர்யமாய் பார்த்தான்.

வார்த்தைக்கு வார்த்தை சண்டை போடுபவள் இப்போதெல்லாம் எந்த பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து உடனே இணக்கமாகிவிடுகிறாள்.

அவனாலும் அதற்கு மேல் பிடிவாதமாய் தன் கோபத்தை பிடித்திருக்க முடியவில்லை.

அதே நேரத்தில் சட்டென்று சமாதானமும் ஆக முடியவில்லை.

அவள் அவன் கரத்தை பிடித்திருக்க அவள் முகத்தை பார்த்தான்.

விழிகளை எடுக்க முடியாமல் கட்டியிழுக்கும் ஈர்ப்பு!

சிலாகிக்க வைக்கும் ஒரு உணர்வு!

புரியாத அவள் கரத்தை தானும் அழுத்ததாய் பிடித்து கொண்டான்.

அப்போது அவள் மெலிதாய் "வீர்" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்று கேட்டு அவளை நோக்கினான்.

அவன் கோபமெல்லாம் கண்காணாத தூரம் போயிருந்தது.

தமிழ் அவன் விழிகளை பார்த்தபடி "நாம எத்தனை நாளைக்கு இங்யே இருக்க முடியும்... நம்ம வீட்டுக்கு போலாமே" என்று அவள் சொன்னதும் மீண்டும் சினம் கொண்டவனாய்

"எதுக்கு... அவமானப்படவா? " என்று கேட்டு எரிச்சலானான்.

"அப்படி எல்லாம் ஆகாது வீர்... அனேகமா மாமாவோட கோபம் இப்போ குறைஞ்சிருக்கும்" அமர்த்தலாகவே உரைத்தாள்.

"சேன்ஸே இல்ல... எங்க அப்பாவோட கோபம் அவ்வளவு சீக்கிரம் மாறாது... ஐ நோ ஹிம் வெரி வெல்"

"புரிஞ்சிக்கோங்க வீர்... அப்பா மகன்கிட்ட கோபத்தை காட்டலாம்... வீம்பு பிடிக்கலாம்... ஆனா" என்று சொல்லாமல் தயங்கி நிறுத்தியவளை பார்த்து "ஆனா...என்ன?" என்று வினவ

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் "ஆனா..... அவங்க பேரன் பேத்திகிட்ட அப்படி கோபப்பட முடியாதே... நிச்சயம் கோபப்படவும் மாட்டாங்க" என்றதும் வீரேந்திரன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளை பார்த்தான்.

அவளின் அழகின் காரணம் இப்போது புரிந்தது. தாய்மையின் பூரிப்பு!

அவளை அவன் ஆரத்தழுவிக் கொள்ள, பெண்ணவள் அவனுக்குள் கரைந்து போனாள்.

கடலலைகளின் ஓயாத சத்தம் அவர்களின் செவிக்கு எட்டவில்லை.

நிசப்தமாய் அவனுக்குள் அவளும் அவளுக்குள் அவனும் திளைத்திருக்க, தமிழின் விழியோரம் நீர் கசிந்து நின்றது.

அவன் அவளை இறுகி அணைத்தபடியே "ஐ லவ் யூ டி என் தமிழச்சிசிசி" என்று சொல்லி அவள் செவிமடல்களை கூசச் செய்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி தன் கரத்தால் அவள் கன்னத்தை தழுவ, அவளின் தேஜஸ் நிரம்பிய புன்னகையில் அவன் மிச்சமின்றி தொலைந்தே போனான்.

அவனின் உணர்வுகளின் ஆழத்தை விவரிக்க வார்த்தைகளுக்கு வீரியம் இல்லையே!

அவன் சொல்லாததை அவன் விழிகள் மௌனமாய் எடுத்துரைக்க, அவன் உதடுகளோ பேசாமலே பேசிக் கொண்டிருந்தது. முத்தத்தின் வழியே...

இருவருமே ரொம்பவும் பொறுமையாய அந்த இன்பகரமான தருணத்தை ரசித்து அனுபவித்திருந்தனர்.

சட்டென்று தன்னிலை அடைந்தவன் "எனக்கு ஒரு குட்டி தமிழச்சி வேணும்டி... உன்னை மாதிரியே" என்றான்.

அத்தனை நேரம் மௌனமாய் இருந்தவள் "நோ வே.. எனக்கு உங்களை மாதிரியே வேணும்... இதே போல ஷார்ப் ஐஸ்... நுனிமூக்கில கோபம்...எதையும் அஸால்ட்டா ஹேன்ட்ல் பன்ற தைரியம்... இன்னும் இன்னும் சொல்லிட்டே போலாம்" என்றாள்.

"இதெல்லாம் என் தமிழச்சிகிட்டயும் இருக்கே"

"இந்த கதையெல்லாம் வேண்டாம்...
எனக்கு குட்டி வீர்தான் வேணும்... "


"உம்ஹும்... எனக்கு தமிழச்சிதான் வேணும்" என்றான் பிடிவாதமாக.

"நோ... வீர்தான்"

"அதெல்லாம் இல்ல... தமிழச்சிதான்"

அவள் தீர்க்கமாய் பார்த்து "இதுநாள்வரைக்கும் நீங்க நினைச்சதை எல்லாம் பிடிவாதம் பிடிச்சி நடத்திருக்கலாம்... ஆனா இந்த தடவை முடியாது வீர்"

"ஓ... அப்படியா ! சரி பார்க்கலாமா ?" சவலாய் அவன் புருவத்தை ஏற்ற

"பார்க்கலாமே" என்றாள்.

தமிழ் ஈன்றெடுத்த குழந்தை அவள் எதிர்பார்ப்பின்படி அவளின் பிரச்சனைக்களுக்கு தீர்வாய் அமைந்தது.

மகேந்திர பூபதி அவர் குடும்ப வாரிசுக்காக அரண்மனையை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டார். மருமகள் மீது சிறு வருத்தம் இருந்தலும் அதுவும் நாளடைவில் மறைந்து போனது.

வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை எல்லாம் கைது செய்தததோடு, கடத்தி வைக்கப்பட்டிருந்த பல அரிய வகையான சிலைகளையும் பொக்கிஷங்களையும் மீட்டெடுத்தான்.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு...

to be continued....

Hi friends,

முடிஞ்சிடுச்சான்னு கேட்கிறீங்க இல்ல...

இன்னும் ஒரு Special episode இருக்கு. கோபப்படாம இன்னும் ஒரு அத்தியாயம் வரை இந்த தமிழச்சியை பொறுத்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாசகர்களின் கருத்தையும் நான் தவறாமல் படித்துவிடுவேன். என்னை ஊக்குவித்து எழுத வைத்து உத்வேகம் தருவது உங்களின் கருத்து மட்டுமே.

Thanks for all your great great great support,
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top