• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 105 92.1%
  • நன்று

    Votes: 10 8.8%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    114

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
காதலை உணர்ந்த தருணம்

ஸ்வேதா அவர்கள் அருகில் வந்து நிற்க வீரேந்திரனின் முகம் களையிழந்து போனது. அவள் மீண்டும் தவறாக எண்ணிக் கொண்டாளோ என நினைத்துவிட்டு அவளிடம் நிலைமையை புரிய வைக்க யத்தனிப்பதற்குள் அவளே முந்தி கொண்டு, "வாட் அ ரோமான்டிக் சீன்... வீர்..." என்று சொல்லி மீண்டும் கை தட்ட இருவருமே அதிர்ந்தனர்.

வீரேந்திரன் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கிவிடலாம் இருக்க ஸ்வேதாவின் கரங்களை பிடித்து, "ஸ்வேதா வா... வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றான்.

அவள் வெறுப்பாய் அவன் கையை உதறி, "எனக்கு இங்க இப்பவே பேசனும் வீர்... உனக்கு இப்ப டைம் இருக்கா பேசிறதுக்கு இல்ல... என்னை பார்த்ததும் பிஸியாயிட்டியா....?!" என்று குத்தலாக கேட்க, தமிழ் அவர்கள் இருவருக்கிடையில் தான் நிற்பது சரியில்லை என்று எண்ணிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல பார்க்க,

ஸ்வேதா குரல் கொடுத்து "எங்கே அதுக்குள்ள, வெயிட் பண்ணுங்க" என்றாள்.

தமிழ் சங்கடத்தில் சிக்கி கொண்டோமோ என தவித்திருக்க, ஸ்வேதா அவளை நோக்கி, "எனக்கு ஒரே ஒரு விஷயம் தெரியனும் ?" என்றாள்.

வீர் இவள் ஏதேனும் ஏடாகூடாமாய் கேட்க போகிறாளோ என்று எண்ணியபடி ஸ்வேதாவை வலுகட்டயாமாக கை பிடித்து இழுத்து "நீ வாய முடிட்டு முதல்ல என் கூட வா" என்றான்.

ஸ்வேதா அவள் கரத்தை அவன் பிடியிலிருந்து விலக்கி கொள்ள முடியாமல் தவித்தபடி, "விடு வீர்... இப்பவும் பேசலன்னா என் லைஃப்பே மொத்தமா ஸ்பாயிலாயிடும்" என்று சொல்ல

"நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசிட்டிருக்க ஸ்வேதா..." என்றான் வீர்.

"நான் தப்பா புரிஞ்சிகிட்டு பேசிட்டிருக்கேனா... சரி அப்படியே இருக்கட்டும்... நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்... அப்போ அதை தெளிவு படுத்து வேண்டியது உன் கடமை இல்லயா ?!" என்று கேட்க

அவனுக்கோ அவளுக்கு புரிய வைக்க இயலாதென வெறுப்போடு அவள் கரத்தை உதறிவிட்டு நடப்பது நடக்கட்டும் என கையை கட்டி கொண்டு நிற்க, ஸ்வேதா அவனை நோக்கி "இவளுக்கும் உனக்கும் என்ன ரிலேஷன்ஷிப் வீர்" என்று கேட்டாள். அந்த கேள்வி தமிழை ஆழமாய் காயப்படுத்த தேவையில்லாமல் அவர்கள் விஷயத்தில் தலையிட விரும்பாமல் அப்போதைக்கு அமைதி காத்தாள்.

வீரேந்திரன் அவளை நோக்கி "நீ நினைக்கிற மாறி எங்களுக்குள்ள எந்தவொரு ரிலேஷன்ஷிப்பும் இல்ல... இன்னும் கேட்டா அவ பெயர் கூட எனக்கு சரியா தெரியாது..." என்று சொல்லும் போதே

ஸ்வேதா அவனை பார்த்து ஏளனமாய் புன்னகையித்துவிட்டு "என்ன சொன்ன வீர்?... பேர் கூட தெரியாதா ?!... நீ எங்கயோ போயிட்ட... அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல மீட்டிங்... இன்னைக்கு ஜாகிங் பிளேஸ்ல மீட்டிங்... ஆனா பேர் கூட தெரியாது... உன் பிரண்ட்ஸ்லாம் சொல்லும் போது கூட நம்ப முடியல... இப்ப நம்பிறேன்... நீ கண்டிப்பா காலேஜ் டேஸ்ல பிளே பாயாதான் இருந்திருப்ப" என்று சொல்ல வீரேந்திரன் கோபத்தோடு "போதும் நிறுத்து ஸ்வேதா... " என்றான் அதட்டலாக.

ஸ்வேதா அவனை நோக்கி "என்னை நிறுத்தி என்ன பண்ணப் போற வீர்...? அதான் அந்த மேகஸின்ல உன்னை பத்தி வந்து... ஊரே பேசிட்டிருக்கே... நான் கூட அது உண்மையோ பொய்யான்னு சந்தேகம் பட்டேன்... பட் அதெல்லாம் நூறு சதவீதம் உண்மைதான்" என்று சொல்லும் போது வீரேந்திரனின் பார்வை எரிச்சலோடு தமிழின் புறம் திரும்ப, அப்போது அவள் செய்த தவறின் விளைவுகளை எண்ணி அதிர்ந்து நின்றாள்.

ஸ்வேதா மீண்டும் அவனை நோக்கி "உனக்கு அவளைதான் பிடிச்சிருக்குன்னா... என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச வீர்... பேசாம நீ அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே" என்றுரைக்க

தமிழின் பொறுமையெல்லாம் அந்த நொடி கறைந்து போனது. அப்போது அவள் அளவில்லாத சினத்தோடு "வாட் நான்ஸன்ஸ்... என்ன பேசிறோம்னு கொஞ்சம் யோசிச்சி பேசுங்க மிஸ்.ஸ்வேதா... இல்ல நான் தெரியாமதான் கேட்கிறென்... ஒரு ஆணும் பெண்ணும் பேசிட்டிருந்தா அது தப்பான ரிலேஷன்ஷிப்பாதான் இருக்கனும்னு ஏன் இப்படி அறிவுக்கெட்டதனமா கற்பனை பண்ணிக்கிறீங்க... நான் ஒரு ஜர்னலிஸ்ட்... அவர் ஒரு போலீஸ்...அதான் எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் ரைட்... மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரியான எதுவும் எங்களுக்குள்ள இல்ல... முக்கியமான விஷயம் என்னன்னா... அவரை பத்தி மேகஸின்ல தப்பு தப்பா எழுதின ஆள் நான்தான்... பட் நான் அதை தப்புன்னு புரிஞ்சிகிட்டு சாரி கேட்கலாம்னுதான் வந்தேன்... அவரை மீட் பண்ணேன்... இன்னும் கேட்டா அவர் என்கிட்ட பேச கூட விருப்பப்படல... நான்தான் வலுகட்டாயமா வந்து அவர்கிட்ட சாரி கேட்கிறதுக்காக பேசினேன்... இப்ப புரிஞ்சிதா உங்களுக்கு... தேவையில்லாம இப்படி வார்த்தையை விடாதீங்க" என்று படபடவென அவள் பொறிந்து தள்ள ஸ்வேதா குற்றவுணர்வில் பதில் பேச முடியாமல் மௌனமாய் நின்றாள்.

தமிழ் மேலும் வீரேந்திரனை நோக்கி "ஸாரி ஏசிபி சார்... என்னால உங்களுக்கு நிறைய பிரச்சனை... தெரிஞ்சோ தெரியாமலோ எல்லாத்துக்கும் நானே காரணமாயிட்டேன்... இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்னா இனிமே நாம இரண்டு பேரும் மீட் பண்ணிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்... இதுவே நம்ம லாஸ்ட் மீட்டிங்கா இருக்கட்டும்... குட் பை" என்று சொல்லிவிட்டு அவள் அவர்களை விடுத்து விலகி சென்றுவிட, அவனின் பார்வை அவளுடனே சென்று கொண்டிருந்தது.

ஸ்வேதா மெல்ல வீரேந்திரன் அருகில் வந்து நின்றபடி, "சாரி வீர்... நான் அவசரப்பட்டு பெரிய தப்பு செஞ்சிட்டேன்" என்று சொல்ல அவன் அவள் புறம் திரும்பி "யூ ஆர் ரைட் ... பெரிய தப்புதான்... பட் அது இன்னும் பெரிசாகாம இப்பவே நாம அந்த தப்பை திருத்திக்குவோம்" என்றான்.

ஸ்வேதாவும் தலையசைத்தபடி "இனிமே இந்த மாதிரி தப்பு" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் குறுக்கிட்டு "நான் தப்புன்னு சொன்னது நீ என்னை சந்தேகபட்டதை இல்ல... நமக்கு முடிவாயிருக்கிற கல்யாணத்தை பத்தி... இப்ப நாம அந்த தப்பை திருத்திக்கலன்னா... அப்புறம் நாம வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... ஏதோ கோபத்தில சொல்றேன்னு நினைக்க வேண்டாம்... நம்ம இரண்டு பேர் நல்லதுக்காகவும்தான் சொல்றேன்... என்னை விட பெட்டரான ஒருத்தனா... உன்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவனா... நீ நல்லா புரிஞ்சிக்கிட்டவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ..." என்று சொல்ல ஸ்வேதா அதிர்ந்தபடி "வீர்" என்றான். ஆனால் அவன் நிதானமாக "பெட்டர் வீ கேன்ஸல் திஸ் மேரேஜ்" என்றான்.

ஸ்வேதா அவனை நோக்கி "பட் வீர் நம்ம கல்யாணத்துக்கு இன்னும் பத்துநாள்தான் இருக்கு" என்றாள்.

வீரேந்திரன் அலட்சிய புன்னகையோடு "பத்துநாள்தான் இருக்கா ?... அது உனக்கு இப்பதான் தெரிஞ்சிதா ? நீ அவசரப்பட்டு வார்த்தையா விட்டியே, அப்ப தெரியலியா ஸ்வேதா ?" என்று கேட்க அவள் தலைகவிழ்ந்தபடி பதில் இல்லாமல் நிற்க

வீரேந்திரன் பொறுமையோடு "லிஸன்... பத்துநாளுக்காக பார்த்தா அதுக்கப்புறம் வாழ்க்கை பூரா கஷ்டபட வேண்டி வரும்... இப்ப ஏத்துகிறதுக்கு கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும்... அப்புறமா இந்த முடிவில இருக்கிற நல்லது... உனக்கே புரியும்" என்று அவன் சொன்ன நொடி ஸ்வேதாவிற்கு அவனை சமாதானபடுத்த முடியும் என்ற நம்பிக்கையற்று போனது. ஏனெனில் அவன் பேச்சில் அத்தனை தெளிவும் தீர்க்கமும் வெளிப்பட்டது.

அவன் வார்த்தைகளை மீறி எதுவும் பேசமுடியாமல் அவள் மனசோர்வோடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள்.

ஆனால் வீரேந்திரனோ அந்த இடத்தை விட்டு செல்ல முடியாமல் ஏதோ புரியாத தவிப்போடு கடலலைகளின் மீது பார்வையை பதித்தபடி நின்றிருந்தான்.

முந்தியடித்து கொண்டு மேலெழும்பி வந்த கடல் அலைகள் கரையை தொட்டதும் நுரையாய் காணாமல் தொலைந்து போவதை பார்க்க, வீரேந்திரனுக்கு தமிழின் மீதான வெறுப்பும் கோபமும் கூட அவ்விதமே கரைந்து காணாமல் போய்விட்டதோ என தோன்றியது.

சற்று நேரம் முன்பு... பார்க்க கூட விருப்பப்படவில்லை என நிராகரித்தவளை, இப்போது அவனின் மனம் பார்க்க ஏங்கியது. தினமும் பரபரவென சுழலும் அவனின் நேரத்தை அன்று தமிழ் களவாடி கொண்டு சென்றுவிட்டாள்.

இதுவே நம்முடைய கடைசி சந்திப்பு என்று அவள் முடிவாய் சொல்லிவிட்டு போக, முதல்முறையாய் அவனின் காதலை அவனே உணர்ந்த தருணம் அது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
காதல் புயல்

வீரேந்திரனை சந்தித்துவிட்டு வீட்டிற்கு வந்த தமிழின் மனதிலும் லேசான சஞ்சலம் தொற்றி கொண்டிருந்தது. அத்தகைய நிலையிலிருந்து விடுபடுவதன் வழியை தேடிக் கொண்டிருந்தவளிடம், விக்ரமவர்மன் பல மாப்பிள்ளை புகைபடங்களை நீட்ட, தமிழ் அவற்றை கையில் கூட வாங்கி கொள்ள முற்படவில்லை.

அவள் அவரை நோக்கி "அன்னைக்கு சொன்னதுதான்ப்பா இன்னைக்கும்... உங்க விருப்பம் போல யாரை மாப்பிள்ளை பார்த்தாலும் எனக்கு ஒகேதான்... ஜஸ்ட் கோஹெட்" என்று சொல்லிவிட, அந்த வார்த்தையில் அவள் சுட்டிகாட்டிய விருப்பமின்மையை உணராமல், விக்ரமவர்மன் ஒருவாறு மகளின் சம்மதத்தை பெற்றுவிட்டதாக நிம்மதியடைந்தார்.

இங்கே நிலைமை இப்படி இருக்க வீரேந்திரனின் வீட்டில் பெரும் கலவரமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கே ஸ்வேதா மற்றும் வீரேந்திரன் குடும்பத்துக்கு இடையில் வீசிய புயலும் சூறாவளியும் வீரேந்திரனையும் அவனின் முடிவையும் அசைத்து கூட பார்க்க முடியவில்லை.

எல்லோருமே மனதளவில் ஏற்று கொள்ள சிரமமான விஷயம்தான் என்றாலும் வீரேந்திரன் எல்லோருக்குமே தன் நிலைபாட்டை பொறுமையாய் விளக்கிவிட்டான். இதனால் திருமண ஏற்பாடுகள் ஸ்தம்பித்து போயிருக்க, அதிகமாய் இதனால் காயப்பட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதும் மகேந்திர பூபதிதான். ஊரையே கூட்டி திருவிழா போல். ஏன் ? அதற்கும் மேலாக ஆடம்பரத்தின் உச்சத்தில் திருமணத்தை மேற்கொள்ள தீட்டிய திட்டம் எல்லாம் மகனின் பிடிவாதத்தால் சிதைந்து போனது. செலவான பணம் ஒரு பக்கம் என்றால் திருமண அழைப்பிதழ்களை ஊருக்கெல்லாம் வழங்கி பெருமையாய் பறைசாற்றி வரவேற்ற இந்த நேரத்தில் திருமணம் நடவாமல் போனால் பெரும் தலைகுனிவு.

மகேந்திரன் மகனை எப்பாடுப்பட்டாவது சம்மதிக்க வைத்துவிடலாம் என அவனை அருகில் அமர வைத்து பெரிய சொற்பொழிவையே நிகழ்த்தி முடித்திருக்க வீரேந்திரன் அப்போதும் அசராமல், "என் கல்யாணத்துல அடங்கியிருக்கிற உங்க கௌரவத்தை மட்டும் பார்க்கிறீங்க... அதில அடங்கியிருக்கிற என் வாழ்க்கை... அது உங்களுக்கு முக்கியமா இல்லயா டேட்" என்று அழுத்தமாய் கேட்க

அவனின் தாய் சந்திரா மகனை நெருங்கி, "கல்யாண விஷயத்திலாயாச்சும் அப்பா சொல் பேச்சை கேளு வீர்" என்று உரைக்க

அவன் சலிப்பான முகத்தோடு தன் தாயின் புறம் திரும்பி "அப்பா சொல் பேச்சை கேட்டதினாலதான் ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்... ஆனா என்னாச்சு... அவளுக்கு பெயரளவில் கூட என் மேல நம்பிக்கை இல்லையே... வாழ்க்கை பூராவும் நான் நல்லவன் உத்தமன்னு அவகிட்ட ப்ரூஃப் பண்ணிக்கிட்டே இருக்கனுமா... அப்படி ஒரு வாழ்கையை வாழறதுக்கு கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டு போறேன்?" என்று முடிவாய் உரைத்தான்

அவன் சொன்னதை கேட்டு சந்திரா அதிர்ச்சியடைய மகேந்திர பூபதிக்கோ கோபம் பொங்கி கொண்டு வர "இதெல்லாத்துக்கும் அந்த விக்ரமவர்மனோட பொண்ணுதான் காரணம்... " என்றார்.

வீரேந்திரன் தந்தையை நோக்கி புரியாமல் "யாரை சொல்றீங்க ?" என்று கேட்க

மகேந்திரன் அவனை நோக்கி "உன்னை பத்தி தப்புதப்பா எழுதினாலே அவதான்... நான் இதை சும்மா விடப் போறதில்ல... அந்த விக்ரமனை ஒரு வழி பண்ணிடிறேன்" என்றார்.

வீரேந்திரன் தன் தந்தையிடம் "கரெக்ட் டேட்... எல்லாத்துக்கும் அவதான் காரணம்... அவ மட்டும்தான் காரணம்...இப்ப நடந்திட்டிருக்கிற குழப்பத்துக்கும் அவதான் காரணம்..." என்று சொல்லி நிறுத்த இதனை கேட்டு அவனின் தந்தையின் சீற்றம் இன்னும் அதிகரித்தது.

வீரேந்திரன் தன் தந்தையை நோக்கி "அவ செஞ்ச தப்பை அவளே சரி செய்யட்டும்.... எதுக்காக நீங்க போப் அனாவசியமா உங்க கௌரவத்தை விட்டு கொடுக்கனும்" என்றான்.

மகேந்திரன் குழப்பத்தோடு "இப்ப நீ என்ன சொல்ல வர்ற வீர்" என்று கேட்டார்.

வீரேந்திரன் அவரிடம் "அவளையே எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்க.. அதுவும் எந்த நாள்ல எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிங்களோ... அதே நாள்ல" என்றான்.

சந்திரா அதிர்ந்தபடி "டே வீர்... அந்த பொண்ணு ஏதோ தப்பு செஞ்சிடுச்சுதான்... ஆனா அதுக்காக போய் இப்படி ஒரு முடிவா ?" என்று கேட்டார்.

ஆனால் மகனின் யோசனை மகேந்திரனுக்கு அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வென்று தோன்றிற்று. அவர் மனைவியை நோக்கி "நீ அமைதியா இரு சந்திரா... வீர் சொல்றதுதான் சரி" என்றார்.

சந்திராவிற்கோ அதிர்ச்சி தாங்கவில்லை. எப்போதும் தந்தையும் மகனும் எந்தவொரு முடிவிலும் ஒத்துபோகாதவர்களாய் இருக்க, இந்த முடிவில் இருவருமே ஒற்றுமையாய் ஆமோதித்தது பெருத்த ஆச்சர்யமாய் இருந்தது.

மகேந்திரனுக்கோ அந்த ஒற்றை முடிவால் மகனின் திருமணத்தோடு சேர்த்து அந்த அரண்மனையையும் சொந்தமாக்கிவிட முடியும் எனும் போது அதை செய்வதில் ஒன்றும் தவறில்லை என்று அவர் கணிக்க அதே சமயத்தில் இக்கட்டில் இருக்கும் விக்ரமவர்மனை சம்மதிக்க வைப்பதும் சுலபம்தான் என எண்ணிக் கொண்டார்.

தந்தையின் சம்மதம் வீரேந்திரனை களிப்படைய செய்ய அவன் தன் மனதிற்குள் 'வாடி என் தமிழச்சி... நீ ஏசிபியாதானே என்னை பார்த்திருக்க... வீரேந்திரனா பார்த்ததில்லையே... இனிமே பார்ப்ப' என்று மனதில் நீங்காமல் நின்றுவிட்ட அவளை பற்றி எண்ணிக் கொண்டான்.

தமிழோ அந்த நேரத்தில் அதீத வேகத்தோடும் சக்தியோடும் அவளை தாக்க வரப் போகும் அந்த காதல் புயல் குறித்த தகவலை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் கிடந்தாள்.

அந்த விசலமான அரண்மனையை சுற்றி பார்க்கவே கண்கள் கோடி வேண்டும். பழமையை பறைசாற்றும் இருக்கைகளும், கம்பீரமாய் நின்று கொண்டிருக்கும் தூண்களின் அணிவகுப்புகளும், சுவற்றில் வண்ணமயமாய் தீட்டபட்ட கலைநுட்பமான ஓவியங்களும், அலங்கார பொருட்களும் நடுவே பூக்கள் நிரப்பப்பட்ட பெரிய வட்டமயமான கிண்ணங்களும் சற்று தலையை நிமிர்த்தி பார்த்தால் உயரத்தில் ஜொலித்து கொண்டிருக்கும் அலங்கார விளக்குகளும் என அந்த இடம் நூற்றாண்டுகள் கடந்து பின்னோக்கி செல்ல வைக்க அப்போது ஆஜானபாகுவாய் முகத்தில் ராஜகளையோடு ஒருவர் நடந்து வந்தார்.

அவர் கையை கெட்டியாய் பிடித்து கொண்டு துருதுருவிழிகளோடு பார்த்தபடி குட்டி தேவதையாய் செந்தமிழ் தன் மழலை மாறாத குரலோடு "போங்க தாத்தா... எனக்கு இங்க இருக்கதான் பிடிச்சிருக்கு" என்றாள் அழுத்தமான பிடிவாதத்தோடு.

"தாத்தா சொல்றதை கேட்க மாட்ட" என்று அவர் மிரட்டலாய் கேட்க

அவளோ கொஞ்சமும் பயமில்லாமல் "கேட்க மாட்டேன்" என்று விலகி போய் கைகளை கட்டி கொண்டு திரும்பி கொள்ள அவளின் அந்த சிறுபிள்ளைத்தனமான கோபத்தை ரசித்தபடி "என் தமிழச்சிக்கு கோபம் மூக்கு மேல வருதே..." என்று அவளின் அருகில் சென்று மூக்கை கிள்ள, அவளோ "நான் எங்கயும் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன்" என்று திட்டவட்டமாய் கைகளை அசைத்து அபிநயமாய் உரைத்தாள்.

"என் அழகு தமிழச்சி" என்று கூறி அவளை தன் வலுவான கரங்களால் தூக்கி கொண்டவர் இருக்கையில் அமர்ந்து மடியில் அமர்த்தி கொண்டபடி "உங்க அப்பனுக்கு நம்ம அரண்மனையை கட்டிகாப்பத்திற அளவுக்கு திராணி இல்லையே... நான் என்ன செய்ய.. சொத்தை எல்லாம் வித்திட்டு மதராஸ் போய்தான் பிழைப்பு நடத்தனுமா... தாத்தாவுக்கும் உங்க அப்பன்கிட்ட மல்லுகட்ட முடியலமா... அரண்மனையாவது நம்ம குடும்ப கௌரவத்திற்காகன்னு சொல்லி காப்பாத்தி வைச்சிருக்கேன்...இனிமே நீ பெரியவளான பிறகுதான் நீ இங்க வரனும்... நான் உன் கல்யாணத்தை இங்க நடத்தி அதை கண்குளிர பார்க்கனும்" என்று தன் மனவேதனையை சொல்லி புலம்பி கொண்டிருந்தவரிடம் தமிழ் கேள்வி குறியோடு "என் கல்யாணமா... அப்படின்னா ?" என்று கேட்க

சிம்மவர்மன் கம்பீர சிரிப்பு ஒலியோடு "என் தமிழச்சியோட கல்யாணம் இந்த ஊரே அசந்து போறளவுக்கு திருவிழா மாதிரி நடக்கும்... நம்ம அரண்மனை எல்லாம் பூவால தோரணம் கட்டியிருக்கும்... வான வேடிக்கை எல்லாம் நடக்கும்... அப்போ என் தமிழச்சியை கட்டிக்க ராஜா மாதிரி ஒரு ஒருத்தன் வருவான்" என்றார்.

"ராஜா மாதிரின்னா... அவன் எப்படி இருப்பான் ?"

"உயரமா கம்பீரமா ஊரே அவனை பார்த்து மரியாதை கொடுக்கும்.. "

"உயரமான்னா ?... உங்களை விடவா தாத்தா"

"உயரமான்னா... உடம்பில மட்டும் இல்ல... மனசிலயும்... அவன் இந்த தாத்தாவை போல உன் தங்கமா வைச்சு தாங்குவான்... பாரு" என்று சொல்ல அவளின் விழிகள் ஆசையோடு அகல விரிந்தது.

அவள் எதிர்பார்ப்போடு "அவன் எப்ப வருவான் ?" என்று கேட்க

"நீ பெரியவளா ஆனதும்"

"நான் எப்போ பெரியவளாவேன்... ?"

"நீ தாத்தா மாதிரி உசரமா வளரும் போது..."

அவளோ அவரின் பதிலை கேட்டு பொறுமையிழந்தவளாய் "உம்ஹும்... எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணி வையுங்க தாத்தா... நான் என் கல்யாணத்தை பார்க்கனும்!" என்று அவள் அடம்பிடிக்க அப்போது அவர் அவள் மென்மையான காதை திருகியபடி

"அதுக்குள்ள என்னடி அவசரம்... எல்லாம் காலகாலத்தில நடக்கும்" என்றார்.

தமிழ் கோபத்தோடு "நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வர்ற வைக்கும் நான் உங்ககிட்ட பேச மாட்டேன்... போங்க தாத்தா" என்று அவள் சினத்தோடு சிம்மவர்மனின் மடியில் இருந்து திமிரி கொண்டு எழுந்து ஓட, பேத்தியின் அறியாமையை கண்டு அவர் கலகலவென சிரித்தார். அப்போது அந்த சிரிப்பு ஒலி கம்பீரமாய் அந்த இடம் முழுவதும் எதிரொலிக்க அவள் காதில் இப்போதும் அவரின் சிரிப்பின் ஒலி பலமாய் கேட்டு கொண்டிருந்தது. கூடவே அவள் கைப்பேசியும் ரீங்காரமிட குழப்பமான மனநிலையோடு அவள் கனவுகலைந்து விழித்தெழுந்தாள்.

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
 




Last edited:

Pavithra

நாட்டாமை
Joined
Jan 30, 2018
Messages
30
Reaction score
70
Location
Chennai
:love::love:kalakall UDD awesome:love::love::love:
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Meendum kanavaa??? But azhagana kanavu. Sweet memories. Hero form kku vanthachu???. Wonderful update sister. Intha sisterkaga next update seekarama podunga.????
 




Madhini jayakumar

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
46
Reaction score
79
Location
Chennai
Hi monisha
Intresting ud ma...veer ninaitha padi kalyana pennaiye maatritane killadi policekar than. ..tamizhachi ippave kalyana kanavu kaana arambichitala. .. appo adutha epi innum intrestinga irukum. ..waiting ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top