• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaadi en thamizhachi - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the epi?

  • மிகநன்று

    Votes: 84 90.3%
  • நன்று

    Votes: 9 9.7%
  • முன்னேற்றம் தேவை

    Votes: 0 0.0%

  • Total voters
    93

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
தண்டனை


வீரேந்திரன் அத்தனை கோபத்தோடு வேகமாய் தமிழ் இருந்த அறை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

தமிழோ தேவியும் விக்ரமனும் சொல்லும் எதையும் கேட்கவும் விருப்பப்படவில்லை.

அவள் எதற்காகவும் யாருக்காகவும் துளியளவும் இறங்கி வரவும் தயாராக இல்லை. விக்ரமவர்மனுக்கு அவளை சம்மதிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையற்று போனது.

அப்போது அந்த அறையின் வாசலில் வந்து நின்ற வீரேந்திரனை மூவருமே கவனிக்க தவறினர்.

விக்ரமன் கடைசி முயற்சியாய் அவளிடம் இறங்கியபடி, "இந்த கல்யாணம் நடக்கலன்னா எல்லார் முன்னாடியும் நான் தலைகுனிஞ்சி நிற்க வேண்டியிருக்கும்... உனக்கு அதை பத்தி எல்லாம் கொஞ்சங் கூட கவலை இல்லையா?!" என்று கேட்கவும் அவள், "உங்களுக்கே என் மேல அக்கறையில்லன்னும் போது எனக்கும் மட்டும் என்ன... ?! எனக்கும் எதைபத்தியும் கவலை இல்லை" என்று அவர் முகத்தை கூட ஏறிட்டு பார்க்காமல் அலட்சியமாய் பதிலளித்தாள்.

தேவி தன் அக்காவின் அருகில் வந்து "கொஞ்சம் யோசிச்சி பாருக்கா... இவ்வளவு தூரம் வந்துட்ட பிறகு" என்று தயக்கத்தோடு கேட்க

"என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதே தேவி... நான் இங்கே வந்ததே இந்த கல்யாணத்தை நிறுத்திறதுக்குதான்" என்று தமிழ் அழுத்தமாய் சொல்லிவிட்டு திரும்பும் போது வீரேந்திரனை பார்த்துவிட, அவளின் விழிகள் அவனின் முகத்தில் வெளிப்பட்ட கோபத்தையும் சேர்த்தே உள்வாங்கி கொண்டது.

அப்படி அவள் யாரை பார்த்து அதிர்ச்சியுறுகிறாள் என்பதை அறிந்து கொள்ள விக்ரமவர்மனும் தேவியும் தங்கள் பார்வையை திருப்ப, அங்கே கம்பீரத்தோடு நின்றிருந்த வீரேந்திரனை பார்த்து இருவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

தமிழின் பிடிவாதமும் கோபமும் அவனை பார்த்த நொடி அதிகரித்தாலும், அதனை அவனிடம் வெளிப்படுத்த லேசான அச்சமும் ஏற்பட்டது.

வீரேந்திரன் விக்ரமவர்மனை நோக்கி, "நான் தமிழ்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் அங்கிள்" என்றான். தமிழ் இடைமறித்து "எதுக்கு பேசனும் ?... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றாள்.

வீரேந்திரனின் விழிகள் கோபமாய் அவளை பார்க்க, தேவியும் விக்ரமனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி கொண்டனர்.

அப்போது விக்ரமவர்மன் தயக்கத்தோடு வீரேந்திரனை நோக்கி, "இல்ல மாப்பிள்ளை... அவ" என்று ஏதோ சொல்ல யத்தனிக்க அவன் தெளிவான பார்வையோடு, "கோபமா இருக்கா... அதானே அங்கிள்... நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னதும் தமிழ் எரிச்சலோடு, "என்ன நீங்க பார்த்துக்க போறீங்க ?!" என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் விக்ரமனை பார்க்க, அவர் தேவியை பார்த்து கண்ணசைக்க இருவரும் வெளியேறினர்.

அவர்கள் வெளியேறுவதையே பார்த்ததும் எரிச்சலோடு அவள் முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு என்ன பேசப் போகிறானோ என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்க, அப்போது அந்த அறையில் ஒருவித அமைதி ஆட்கொண்டது.

அவள் யோசனைகுறியோடு ஏன் அவன் எதுவும் பேசவில்லை என்று திரும்பியவள் அதிர்ச்சியடைந்தாள். அவன் கதவை அடைத்துவிட்டு வர அவள் மனதில் துளிர்விட்ட அச்சத்தை மறைத்தபடி "இப்ப எதுக்கு டோரை க்ளோஸ் பண்ணீங்க..." என்று அறை கதவை திறக்க முன்னேறியவளை வழிமறித்து நின்றவன், "நீ பேசிறது ஊருக்கெல்லாம் கேட்கனுமா... அதான் கதவை மூடினேன்" என்றான்.

அவள் அவனை முறைத்தபடி "கேட்கட்டும் ஏசிபி சார்... எல்லாருக்கும் கேட்கட்டும்... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னு எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே ?!" என்றாள்.

அவனின் கோபம் அதிகரிக்க, "உன் மனசில என்ன நினைச்சிட்டிருக்க... ஏற்கனவே என்னை பத்தி தப்புதப்பா எழுதி அவமானப்படுத்தின... இப்ப ஊரையே கூட்டி வைச்சி இந்த கல்யாணம் வேணான்னு சொல்லி என்னை மறுபடியும் அவமானப்படுத்தலாம்னா பார்க்கிறியா...?!" என்று கேட்க

"உங்களை அவமானப்படுத்தனுங்கிறது என் மோட்டிவ் இல்ல... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்ல... அவ்வளவுதான்"

"என்ன விளையாடிறியா?... இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னா சொன்ன... யார் என்ன பண்ண முடியும் ?"

"என்னவாச்சும் பண்ணுங்க... ஐ டோன்ட் கேர்... ஆனா எனக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது... அவ்வளவுதான்"

அவனின் கோபம் அவளின் அலட்சியமான வார்த்தைகளால் எல்லையை மீறி கொண்டு போக குரலை உயர்த்தி "நீ நினைச்ச மாறியெல்லாம் செய்ய முடியாது... உனக்கு விருப்பமில்லைன்னா என்கிட்ட சென்னையிலேயே சொல்லிருக்கனும்... அதை விட்டுவிட்டு இங்க வந்து நின்னுகிட்டு வேண்டாங்கிற" என்று சீறினான்.

அவள் இறங்கியபடி "முதல்ல ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க... எனக்கு இன்னைக்கு காலையிலதான் கல்யாணம்ங்கிற விஷயமே தெரியும்... அதுவும் நீயூஸ் பேப்பர்ல பார்த்துதான் நானே தெரிஞ்சிக்கிட்டேன்" என்று அவள் சொன்னதும் அவர்களுக்கிடையில் நிகழ்ந்த அனல் தெறிக்கும் விவாதம் சற்று தணிய, யோசனையோடு நின்றவன் மீண்டும் அவளை நோக்கி "நீ சொல்றது கொஞ்சம் கூட நம்பிற மாதிரி இல்லையே... வீட்டில கல்யாண ஏற்பாடு பண்றது கூடவா உனக்கு தெரியாதா ?!" என்று சந்தேகமான பார்வையோடு கேட்டான்.

"எனக்கு உண்மையிலேயே தெரியாது... நான் இரண்டு நாளா ஊர்ல இல்ல... என்கிட்டயும் யாரும் இதை பத்தி சொல்லல" என்றாள்.

"ஊர்ல இல்லாம மேடம் எங்க போனீங்க ?" என்று புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, போலீஸ் புத்தி அவனை அவ்விதம் கேட்க வைக்க அவளுக்கு ஆர்க்கியாலஜிஸ்ட் வீட்டிற்கு சென்றதெல்லாம் அந்த ஒரு நொடி கண்முன்னே தோன்றி திகிலூட்டியது.

அவன் தான் செய்ததை கண்டுபிடித்துவிடுவானோ என்ற அச்சம் தொற்றி கொள்ள அத்தனை நேரம் அவன் முகத்தை பார்த்து பேசி கொண்டிருந்தவள் லேசான தடுமாற்றத்தோடு நின்றாள்.

வீரேந்திரனின் பார்வை அவளை ஊடுருவியபடி "பொய் சொல்றியா ?" என்று கேட்டான்.

இவனிடம் தானே சிக்கி கொள்ள போகிறோமோ என சுதாரித்து கொண்டவள் "நான் பொய்யெல்லாம் சொல்லல" என்றாள்.

"அப்ப எங்க போயிருந்த ?!"

தன்னை கேள்வி கேட்க 'அவன் யார் ?' என்ற எண்ணம் எழ "நான் எங்கயோ போனேன்... அதெல்லாம் உங்ககிட்ட நான் எதுக்கு சொல்லனும்... நீங்க என்கிட்ட கேட்கிறதுக்கு உங்களுக்கு உரிமையையும் இல்ல... எனக்கு உங்ககிட்ட சொல்றதுக்கு விருப்பமும் இல்ல" என்று அவள் உரைக்க எதையோ மறைக்கிறாள் என்பதை அவன் போலீஸ் மூளை குறித்து கொண்டது. இன்னொரு புறம் அவள் சொன்னதை எண்ணியவன் மனதிற்குள் 'உரிமை இல்லையாமே... இருக்கட்டும்... கூடிய சீக்கிரம் அந்த உரிமை வரும்... அப்போ உன்னை பார்த்துக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டான்.

இவன் தன்னை பற்றிதான் ஏதோ ஏடாகூடாமாய் சிந்திக்கிறான் என்பதை யூகித்தவள் வாழ்க்கை முழுவதும் இவனிடம் மட்டும் போய் சிக்கி கொள்ளவே கூடாது என்று தீர்க்கமாய் எண்ணி கொண்டாள்.

வீரேந்திரன் அவள் முகத்தில் ஏதாவது மாறுதல் தெரிகிறதா என யோசித்தவன் அவளிடம் பொறுமையாக "இவ்வளவு ஏற்பாடுகள் பண்ண பிறகு இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது தமிழ்... ஸோ இதை நீ அக்செப்ட் பண்ணிக்கதான் வேணும்" என்று முடிவாய் சொல்லிவிட்டு வெளியேற போக., அவள் தன்னிலையில் இருந்து இறங்கிவராமல் "முடியவே முடியாது... நான் இந்த கல்யாணத்தை நிறுத்ததான் போறேன்... என்னை யாராலும் தடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டு நின்று கொண்டாள்.

அவள் சொன்னதை கேட்டு போகாமல் நின்றவனுக்கு கோபமும் எரிச்சலும் அளவு கடந்து போக வேகமாய் அவளை நோக்கி "என்னடி ஓவரா பண்ணிட்டிருக்க... இந்த கல்யாணம் நின்னா எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா? " என்றான்.

அவன் அப்படி பேசியதும் மிரட்சியோடு நின்றவள் ஒருவாறு சுதாரித்துவிட்டு அவனை நேர்கொண்டு பார்த்தபடி "எனக்கு எதை பத்தியும் கவலை இல்லை... இந்த கல்யாணம் மட்டும் நடந்தா என் வாழ்க்கையே லாஸாயிடுமே... அதை யார் திருப்பி தருவா?" என்றாள்.

அந்த வார்த்தை வீரேந்திரனின் மனதை அழுத்தமாய் காயப்படுத்தவும் அவமானப்படுத்தவும் செய்தது. அவளின் பிடிவாதம் அவனின் திடமான மனதையும் அசைத்து பார்த்திட மூச்சை இழுத்துவிட்டபிடி "இப்ப என்ன... உனக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தனும்... போ... போய் நிறுத்திக்கோ... எல்லாரையும் கூப்பிட்டு நிக்க வைச்சி நீயே மைக் போட்டு சொல்லிடு... எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பமில்லைன்னு... போ" என்று மிரட்டலாய் அந்த இடம் அதிர கத்தினான்.

அவள் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க மீண்டும் அவன் குரலை உயர்த்தி "இன்னும் ஏன் நிற்கிற... போய் சொல்லு" என்றான்.

அவளும் தீர்க்கமாக "கண்டிப்பா நான் சொல்லத்தான் போறேன்... நீங்க இப்படியெல்லாம் கத்திறதினால நான் பயந்திருவன்னு மட்டும் நினைக்காதீங்க... இப்பவே போய் எல்லார்கிட்டயும் சொல்றேன் " என்று சொல்லிவிட்டு முன்னேறி செல்லப் போனவளிடம் "இந்த ஊருக்குள்ள நான் வந்ததில் இருந்து ஒரு பேர்தான் திரும்ப திரும்ப என் காதில கேட்டுகிட்டே இருந்தது... " என்று சொல்ல அவன் இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் உளறுகிறான் என்று யோசனையோடு நின்றாள்.

அவன் மேலும் "யாரோ உங்க தாத்தாவாமே... அவரை பத்திதான் பெருமையா பேசிட்டிருந்தாங்க" என்று அவன் சொல்ல அவள் அவன் புறம் திரும்பி "எங்க தாத்தா யாரோ இல்ல... சிம்மவர்மன்... கேள்விப்பட்டதில்லையா நீங்க... இந்த சிம்மவாசலை உருவாக்கின ராஜசிம்மன்ங்கிற மன்னர் குலம் வழிவந்த குடும்பம்... எங்க தாத்தா எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார் தெரியுமா உங்களுக்கு... ஓலை சுவடிகளா இருந்த தமிழ் இலக்கியங்கள் அழிஞ்சி போயிடாமா இருக்க அதை எல்லாம் புத்தகங்களா மாற்றியிருக்காரு... இந்த ஊருக்கே தன்னோட பல சொத்துக்களை தானமா கொடுத்திருக்கிறார்... அவரை பத்தி கேள்விபடாதவங்க யாருமே இந்த ஊர்ல இருக்க முடியாது... ஏன் தமிழ் நாட்டிலயே" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் மின்னிக் கொண்டிருந்த கர்வத்தையும் திமிரையும் உற்று கவனித்தவன் அவளை நோக்கி "அப்போ உங்க தாத்தா ரொம்ப பிரபலமானவர்தான் போல... பட் எனக்குதான் சரியா தெரியல" என்றான்.

தமிழ் இறுக்கமான பார்வையோடு "அவரை பத்தி தெரிஞ்சிக்காதது உங்களோட தப்பு" என்றாள்.

"ஆனா உனக்கு தெரியும் இல்ல, இந்த ஊர்ல... ஏன் தமிழ் நாட்டிலயே உங்க தாத்தாவோட பெருமை புகழ் எல்லாத்தையும் பத்தி?" என்று கேட்க அவளோ குழப்பமானாள்.

இவன் சுற்றி வளைத்து தன்னை மாட்டிவிட யத்தனிக்கிறானோ என்று எண்ணும் போதே "உங்க தாத்தாவோட பேரும் புகழும் இந்த ஊர் முழுக்க கொடி கட்டி பறக்குது... நீ இப்ப என்ன பன்ன போற தெரியுமா... அவரோட பேரு உங்க குடும்பத்தோட வரலாறு பெருமை கௌரவம் எல்லாத்தையும் ஒண்ணுமே இல்லாம தவிடு பொடியாக்க போற..." என்றான்.

அவன் எங்கே சுற்றி எங்கே வருகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள் அவனை கோபமாய் முறைத்தபடி "நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா... எங்க தாத்தாவோட பேரையும் எங்க குடும்பத்தோட கௌரவத்தையும் கெடுத்ததாகிடுமா... புல் ஷிட்... பைத்தியகாரத்ததனமா பேசாதீங்க" என்றாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவனும் குரலை உயர்த்தியபடி "பின்ன ஆகாதா ?... இங்க உன்னோட கல்யாணம் நின்னுபோச்சுன்னா அது உனக்கும் எனக்குமான பிரச்சனை மட்டும் இல்ல... நம்ம இரண்டு பேர் குடும்ப கௌரவம் சம்பந்தபட்டது... என் குடும்பத்தை விட... உங்க குடும்பத்துக்குதான் அதிக அவமானம்...ஏன்னா நீ நிக்கிறது உங்க ஊர்ல... உங்க அரண்மனையில... நீ எது செஞ்சாலும் சிம்மவர்மனோட பேத்தியாதான் எல்லார் கண்ணுக்கும் தெரிவ... உங்க குடும்ப வரலாறை பத்தி உயர்வா பேசிறவங்க... நீ இப்படி பண்ணா நாளைக்கே சிம்மவர்மனோட பேத்தி திமிரு அகம்பாவமும் பிடிச்சவன்னு பேசுவாங்க... நீ இப்படி செய்றது உன் குடும்பத்தையும் உன்னையும் நீயே அவமானப்படுத்திக்கிற மாதிரி..." என்றான்.

"போதும் நிறுத்துங்க... எந்த தப்பையும் செய்யாத நான் ஏன் அவமானப்படனும்"

"அதனால்தான் சொல்றேன்... இந்த கல்யாணம் மட்டும் நடந்தா பிரச்சனை நமக்குள்ள பெர்ஸன்லா இருக்கும்... நீ இதை நிறுத்தினும்னு நினைச்சேன்னு... நம்ம இரண்டு பேரும் குடும்ப கௌரவத்தோட சேர்த்து எல்லாமே பாதிக்கப்படும்... அதுவும் இல்லாம நீயூஸ் பேப்பர் வரைக்கும் வந்திருச்சு... இனிமே இந்த கல்யாணம் நின்னாலும் நடந்தாலும் இரண்டும் ஒண்ணுதான்... நீ எங்க வெளிய போனாலும் என் பொண்டாட்டியாதான்.. எல்லோரும் உன்னை பார்ப்பாங்க" என்றான்.

அவள் கோபமாக அவனை முறைக்க "முறைக்காதே... அதுதான் நடக்கும்... அதேதான் என் நிலைமையும்..." என்றான்.

"என் பலவீனம் தெரிஞ்சி வைச்சுகிட்டு என்னை கார்னர் பன்றீங்க ஏசிபி சார்" என்று அவள் வருத்தத்தோடு சொல்ல அவன் கைகட்டி நின்றபடி "நான் கார்னர் பண்ணல... டெசிஷன் இஸ் நவ் யுவர்ஸ்" என்றான்.

தன்னை சுற்றி இப்படி ஒரு சிக்கல் பின்னப்பட்டிருக்கிறதா என யோசித்தவள் தன் தாத்தாவின் கௌரவத்தையும் விட தன் வீம்பு முக்கியமில்லை என்று எண்ணினாள்.

இருந்தும் அவனுடனான திருமணத்தை ஏற்று கொள்ள மனமில்லாமல் அவனை நோக்கி "யாரை கேட்டு எனக்கு உங்களுக்கும் கல்யாணம் முடிவு பண்ணீங்க... இப்போ அதனால்தான் எனக்கு தேவையில்லாத பிரச்சனை" என்று கேட்கவும் அவன் அலட்சியமான பார்வையோடு "பிரச்சனையை உண்டு பண்ணது நான் இல்ல தமிழ் நீதான்... பத்திரிக்கையில என்னை பத்தி விசாரிக்காம எழுதினது இல்லாம என் பின்னாடியே வந்து மன்னிப்பு கேட்கிறேன்னு பிரச்சனையை இன்னும் பெரிசாக்கிட்ட... உன்னாலதான் ஸ்வேதா என்னை சந்தேகப்பட்டா... உன்னாலதான் என் கல்யாணமும் நடக்காம போச்சு..." என்று சொல்லிக் கொண்டிருக்க அவள் இடைபுகுந்து "நிறுத்துங்க போதும்... சும்மா உன்னாலதான் உன்னாலதான்... என்னையே பின்பாயின்ட் பண்ணாதீங்க.. ஸ்வேதா உங்களை சந்தேகப்பட்டதுக்கு நான் காரணம் இல்ல" என்றாள்.

"பின்ன வேற யார் காரணமாம்... நீதான்... மேகஸின்ல என்னை பத்தி நீ தப்பா எழுதினதினாலதான் அவ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டா... யூ ஆர் ரெஸ்பான்ஸிபிள்..." என்றான்.

"நோ ஐம் நாட்..." என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

அவனும் அதே கோபத்தோடு "நீ கத்தி உன் தப்பை சரி கட்டிடலாம்னு மட்டும் பார்க்காதே" என்று அவன் அழுத்தமாக உரைக்க

அவள் தவிப்போடு "அய்யோ!!... திரும்பியும் முதலில் இருந்து அந்த பிரச்சனையை ஆரம்பிக்காதீங்க... நான்தான் மறுப்பு செய்தி கொடுத்திட்டேன் இல்ல... அது இன்னைக்கு மேகஸின்ல பப்ளிஷும் ஆகிடுச்சு... இதுக்கு மேல நான் என்னதான் பண்றது ?!" என்று கேட்டாள்.

"நீ மறுப்பு செய்தி கொடுத்தா எல்லோரும் நம்பிடுவாங்களா... நிச்சயமா மாட்டாங்க... நான் என் பவரை யூஸ் பண்ணிதான் போட வைச்சேன்னு நினைப்பாங்க"
என்றான். அவன் மீண்டும் மீண்டும் தன்னையே குற்றாவாளியாய் நிற்க வைக்கிறானே என்று அவள் அவதியுற,

அவன் கூர்மையாய் நோக்கியபடி "பட் நீ கொஞ்சம் இறங்கி வந்தா உன் தப்பை சரி செய்ய முடியும் தமிழ்" என்றான்.

அவள் அவனை புருவங்கள் முடிச்சிட பார்க்க, அவன் அவளை உற்று நோக்கியபடி"எழுதின நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா... அப்ப எல்லாரும் நம்புவாங்க இல்ல... அதுக்கப்புறம் என்னை யார் தப்பா பேச முடியும்... ஸோ உன் தப்பை திருத்திக்க பாரு... இப்போதைக்கு இதுதான் ஒரே வழி" என்றான்.

"இது தப்பை திருத்திக்கிறதுக்கான வழியா எனக்கு தெரியல... இது என் தப்புக்கான தண்டனை மாதிரிதான் தெரியுது... " என்றாள்.

அவன் அவள் சொல்வதை கேட்டு தோள்களை குலுக்கியபடி "நீ எப்படி எடுத்துக்கிட்டாலும்... ஐ டோன்ட் கேர்... உங்க குடும்ப கௌரவமும் சரி... நீ உடைச்சி என் கௌரவமும் சரி... இரண்டுமே இந்த கல்யாணம் நடக்கிறதிலதான் இருக்கு" என்றான்.

அவனுக்கு தன் மனவுணர்வுகளை பற்றி துளிகூட அக்கறையில்லையோ என்று அவள் எண்ணி கொள்ள வேதனையோடு அவனின் பார்வையிலிருந்து திரும்பி நின்று கொண்டாள்.

அவள் தன் தாத்தாவின் கௌரவத்தை பற்றி எண்ணி இந்த திருமணத்திற்கு சம்மதிக்க அவள் முன்னமே தயாராகிவிட்ட நிலையில் அவன் ஏதாவதொரு சந்தர்பத்தில் இந்த திருமணத்தில் விருப்பம் என சொல்லிவிட மாட்டானா என்று எண்ணியே இத்தனை நேரம் அவனிடம் போராடி பார்த்தாள். ஆனால் அவனோ தண்டனையாகவே இந்த உறவை தன் மீது திணிக்க நினைக்கிறான் என்ற எண்ணம் அவளை அழுத்தமாய் காயப்படுத்தியிருந்தது.

வீரேந்திரனின் நிலைமையும் அதேதான். அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை என அவன் முகத்துக்கு நேராய் சொல்லிவிட, அந்த நிராகரிப்பை ஏற்று கொள்ள முடியாமல் அவளை தன்னுடைய உறவாக்கி கொள்ள வேண்டுமே என்ற மனப்போராட்டத்தில் அவளை கட்டாயத்திற்குள் தள்ளினான் என்பதே உண்மை. இப்படி இருவருமே ஒரே நிலைபாட்டில் இருந்தாலும் அதனை வெளிகாட்டிக் கொள்ள முடியாமல் மீண்டும் மீண்டும் அவர்கள் எதிர் எதிராய் நிற்கும் சூழ்நிலையே உருவாகியது.

இவ்வாறாக சில நிமிடங்கள் மௌனமாய் யோசனையில் இருந்த அவர்கள் இருவரும் ஆழ்ந்துவிட அவள் அந்த அறையின் மௌனத்தை கலைத்து வேதனை கலந்த குரலோடு "எனக்கு இந்த தண்டனை தேவைதான் ஏசிபி சார்... உங்களை பத்தி விசாரிக்காம எழுதினது... என்னோட முதல் தப்பு... அதைவிட பெரிய தப்பு... உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்க வந்தது... " என்று உரைக்க இப்போதும் அவள் தன்னை திருமணம் செய்து கொள்வதை தண்டனையாய் கருதிகிறாளா என்ற வேதனையுற அதனை காட்டிக் கொள்ள விரும்பாமல் "அப்போ உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம்... அப்படிதானே" என்றான்.

அவன் தன் வலியை ஒரு பொருட்டாக கூட மதியாமல் அவனுக்கு தேவையானதை மட்டுமே எடுத்து கொள்கிறானே என்று தமிழுக்கு கோபம் எழுந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் மௌனமாகவே நின்றாள்.

அவளின் அமைதி வீரேந்திரனுக்கு அவளின் சம்மதத்தை புரிய வைத்துவிட, அவன் முகத்தில் வெற்றி புன்னகையை மலர்ந்தது. அந்த புன்னகை அவளுக்குள் வெறுப்பை விதைத்திட அவனை பார்க்க கூட விருப்பப்படாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மேலே பேசாமல் அவனும் அந்த அறையை விட்டு வெளியேறிவன் வாசல் வரை போய் நின்று "ஏ தமிழச்சி இந்த பேன்ட் சட்டை எல்லாம் கழட்டி போட்டுட்டு நல்லா புடவையாய் மாத்திக்கோ" என்று கொஞ்சம் அதிகார தொனியில் உரைத்துவிட்டு விரைவாய் வெளியேறிவிட அவளுக்கு அவன் சொன்னதை கேட்டு எரிச்சல் மிகுந்தது.

'கல்யாணத்துக்கு சம்மதிச்சி அஞ்சு செகண்ட கூட ஆகல... அதுக்குள்ள அதிகாரம் பண்றான்..' என்று தனக்குத்தானே சொல்லி கொள்ள அவளுக்குள் கோபம் வெறுப்பு அழுகை என எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து ஆட்கொண்டு அவளை திணறடித்தது.

படுக்கையின் மீது இயலாமையோடு சரிந்தவள் தவிப்போடு 'ரகு அப்பவே சொன்னா... போகாதன்னு... நான் கேட்டேனா... எனக்கு வேணும்... இன்னும் வேணும்... இதுக்கு மேலயும் வேணும்... தாத்தாதாதாதா... இப்ப மட்டும் நீங்க கண் முன்னாடி வந்தீங்க... உங்களை... உன்னை கட்டிக்க போறவன் ராஜா மாறி வருவான்னு சொன்னிங்க... ராட்சஸன் மாறி வந்திருக்கான்... என்னை இரிடேட் பன்றான் தாத்தா... உயரமா கம்பீரமா வருவான்... அதென்னவோ... அப்படிதான் இருக்கான்... ஆனா என்ன சொன்னிங்க... உன்னை தங்கமா வைச்சு தாங்குவான்... மன்னாங்கட்டி... அவன் என்னை தகரமா கூட மதிக்கமாட்டிறான்... ஹீ ஹேவ் நோ ரெஸ்பெக்ட் டூ மை ப்ஃலீங்ஸ்... போச்சு... என் வாழ்க்கையே போச்சு... எல்லாம் முடிஞ்சிடுச்சு... ப்ஃனிஷ்...' என்று தனக்குத்தானே புலம்பியபடி படுத்திருந்தாள்.

அப்போது தேவி கதவை மெல்ல திறந்து அச்சத்தோடு எட்டி பார்த்து மெலிதாக "மாமாவை பார்த்தா அப்படி எல்லாம் தெரியிலக்கா ?" என்று சொல்ல தமிழ் அவள் புறம் திரும்பி முறைத்துவிட்டு தலையணையை தூக்கி அவளை பார்த்து எறிந்துவிட்டு "என் பக்கத்தில மட்டும் வந்திராதாடி... உன்னை கொன்னுடுவேன்... மாமாவாம் மாமா... யாருடி மாமா உனக்கு" என்று கேட்க தேவி குறும்புத்தனமான புன்னகையோடு "அதான் அக்கா உயரமா கம்பீரமான்னு சொன்னியே... அவர்தான் ராஜ வீரேந்திர பூபதி... ராஜா மாதிரிதான்..
எனக்கு தோணுது" என்று சொல்ல அவளின் கோபம் அதிகரித்தது.

"தோணுமுடி தோணும்... உனக்கு நேத்து வந்தவங்க எல்லாம் என்னை விட ரொம்ப முக்கியமா போயிட்டாங்க இல்ல? !!" என்றாள்.

தேவி மெல்ல மெல்ல நெருங்கி "அய்யோ அப்படி எல்லாம் இல்லக்கா... நீ தப்பா புரிஞ்சிட்டிருக்க... எனக்கு எப்பவுமே நீ மட்டும்தான் முக்கியம்... வேற யாரும் முக்கியமில்ல... ப்ளீஸ் தப்பா எடுத்துக்காம நீ இந்த புடவையை மட்டும் கட்டிக்கிட்டு வந்திரேன்... எல்லோரும் வெளிய கூப்பிடிறாங்க" என்று தான் கையில் மறைத்து வைத்திருந்த அழகான ரோஸ் நிற புடவையை நீட்ட தமிழின் கோபம் எல்லையை மீறியது.

படுக்கையிலிருந்து இறங்கி தங்கையை நோக்கி ஓடி வர அவள் தப்பித்து கொள்ள முடியாமல் சுவற்றோரம் அமர்ந்து கொண்டு அச்சத்தோடு "ப்ளீஸ்க்கா அடிக்காதே" என்று தலையை கவிழ்ந்து கொண்டாள்.

தமிழ் அவளை அடிக்காமல் அப்படியே நின்றபடி "ஏன்டி இப்படி எல்லாரும் சேர்ந்து என்னை டார்ச்சர் பன்றீங்க... உங்க எல்லாருக்கும் அப்படி நான் என்னதான்டி பண்ணனேன் " என்று சொல்லிவிட்டு வேதனையோடு அமைதியாகிட தேவி மெல்ல தலையை நிமிர்த்தி பார்த்தாள்.

தமிழ் அவளை முறைத்தபடி "உன்னை யாரும் அடிக்கல... எழுந்திறி" என்றாள்.

தேவி தயக்கத்தோடு எழுந்து "புடவை" என்று நீட்ட அதனை தமிழ் எரிச்சலோடு வாங்கி கொண்டு "கட்டி தொலையறேன்... ஆனா.. இதெப்படிறி கட்டிறது... அம்மான்னு யாராச்சும் இருந்திருந்தா... இதெல்லாம் கட்டி பழகியிருக்கலாம்... எனக்குதான் அந்த கொடுப்பனையே இல்லையே" என்றாள்.

தேவி புன்னகையோடு "நான் இருக்க நீ ஏன்க்கா கவலை படற... " என்றாள்.

"உனக்கு கட்ட தெரியுமா ?!"

"உம்ஹும்... நான் பியூட்டிஷ்யன்ஸை வரவைச்சிருக்கேன்... எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க" என்றதும் தமிழ் அவளை உற்று நோக்கியபடி "எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டீங்க... ஆனா என்கிட்ட மட்டும் சொல்ல மறந்திட்டீங்க அப்படிதானே" என்று கேட்கவும் தேவி மனதில் 'இதென்னடா வம்பா போச்சு... வேதாளம் திரும்பியும் முருங்ஙை மரம் ஏறுதே' என்று எண்ணிகொண்டபடி "அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாமே... நீ போய் பிரெஷ்ஷாகிட்டு வா... நான் போய் பியூட்டிஷியன்ஸை கூப்பிடிறனே" என்று நழுவி கொண்டாள்.

தமிழ் சலிப்போடு வேறு வழியில்லாமல் அந்த நிலைமையும் சூழ்நிலையையும் விருப்பமில்லாமல் போனாலும் ஏற்று கொள்ள தயாரானாள்.

உங்கள் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படி கருத்து தெரிவிக்க முடியாமல் போனாலும் மேலே Voting poll நீங்கள் சொல்ல நினைத்ததை ஒரு க்ளிக் செய்துவிடலாம். முக்கியமாய் பிடித்திருந்தால் லைக் பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள்.
 




Sharmila Natarajan

நாட்டாமை
Joined
Feb 15, 2018
Messages
43
Reaction score
135
Location
Washington DC
Monisha,

This is the first time I am reading your story. Good going. "Senthamizh" is admirable; so is Veer! Both are strong characters. And, thanks for frequent updates. Keep them coming :)

Best wishes,
Sharmila
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Monisha,

This is the first time I am reading your story. Good going. "Senthamizh" is admirable; so is Veer! Both are strong characters. And, thanks for frequent updates. Keep them coming :)

Best wishes,
Sharmila
Thanks sharmila and keep commenting
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi akka
Hero sir supera thamizhachiyoda thatha pera solli marriageku ok solla vachachu. Super.
தேவி புன்னகையோடு "நான் இருக்க நீ ஏன்க்கா கவலை படற... " என்றாள்.

"உனக்கு கட்ட தெரியுமா ?!"

"உம்ஹும்... நான் பியூட்டிஷ்யன்ஸை வரவைச்சிருக்கேன்... எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க" என்றதும் தமிழ் அவளை உற்று நோக்கியபடி "எல்லாம் ஏற்


Devi naan koda unakku sari katta theriyumnnu nenachu yemanthutten. And enga thamizhachiya nee eppidi vethalam nu sollalam????. Nice update akka. Waiting for next update.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top