• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaazhkaiyin Varnajalam - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 3
காலையில் எழுந்தவுடன் வீட்டைவிட்டு வெளியே பாரதி அந்த வெயிலில் நன்றாக சுற்றிவிட்டு மதியம் சாப்பிட வந்தாள். பின்வாசல் வழியாக வீட்டின் உள்ளே நுழைந்த பாரதி,
“அடியே பிரபா அம்மா எங்கேடி!” என்று கேட்டவண்ணம் உள்ளே வந்தாள்..
“அம்மா மாவு ஆட்டுகிறார்கள் குட்டி! என்ன காலையில் இருந்து உன்னோட ஆட்டம் எப்படி போகிறது..?” என்று சிரிப்புடன் கேட்ட பிரபாவதி சமையலுக்கு காய்கறிகளை நறுக்க ஆரமித்தாள்.
“நான்கு பம்பரம் வென்றுவிட்டேன்! பாவம் சின்ன பசங்க என்னிடம் தோற்றுவிட்டனர்..” என்று கலகலவென்று சிரித்தாள் பாரதி..
“எங்கேடி இந்த சுதாவை இன்னும் காணவில்லை.. வாசுவும் அப்பொழுதே வந்துவிட்டான்..” என்று கேட்டாள் பிரபாவதி
“அவனா என்னை ஒருத்தன் கிண்டல் பண்ணியதற்கு அவனோட மண்டையை பிளந்துவிட்டான்..” என்று ரகசியம் போல கூறினாள் பாரதி
“ஏய் என்னடி இது விளையாட போகதே என்று சொன்னாலும் கேட்பதில்லை, இப்போ பாரு அவன் வம்பில் மாட்டிக் கொண்டான்.. அதுதான் வாசு அப்பவே வந்துவிட்டானா..?” என்று சமையல் அறைக்குள் சென்றாள் பிரபா
“பிரபா சுதாவுக்கு ஒன்னும் ஆகாது.. அவன் அடித்ததைப் பார்த்தவள் நான் மட்டுமே..” என்று பெருமையாகக் கூறினாள் பாரதி
“அடிபாவி இதில் அண்ணனும் தங்கையும் கூட்டாகச் சேர்ந்து இன்னொருத்தன் மண்டையைப் பிளந்தது அப்பாவிற்கு தெரிந்தது!” என்று அவள் வாயைத் திறக்கும் முன்னாடியே அவளின் பின்னோடு வந்த பாரதி அவளின் வாயில் பச்சை மிளகாயை வைத்து அழுத்த அதைத் தெரியாமல் கடித்த பிரபா
“ஸ்ஸ் ஆஆஆ!” என்று அலறியவள், காரம் தண்ணீரை எடுத்துக் குடித்தவள் சக்கரையை எடுத்து வாயில் போட்டாள்.. கண்களில் கண்ணீர் வழிய, பக்கத்தில் இருந்த விறகு கட்டையில் ஒன்றை எடுத்தவள்,
பாரதியை அடிக்க துரத்த, “ஏய் பாரதி ஓட்டாதே நில்லுடி! இல்ல என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது..” என்று கத்த, வெளியே இருந்து உள்ளே வந்த மீனாட்சி,
“ஏய் பிரபா வயசிற்கு ஏற்றது போல பேசிப்பழகு!” என்று மீனாட்சி பிரபாவை அதட்டல் போட பெரியவள் துரத்தியதால் கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி,
“நல்ல சொல்லுங்க அம்மா அவளுக்கு எத்தனை சொன்னாலும் அறிவே இல்லை..” என்று போட்டுக் கொடுக்க, அவளை முறைத்த பிரபா,
“அம்மா அவள்தான் என்னோட வாயில் மிளகாயை வைத்துவிட்டாள்.. காரம் உயிரே போகிறது..” என்று பிரபா கண்களில் கண்ணீருடன் சொல்ல,
“விடும்மா சின்னப்பெண் தெரியாமல் செய்திருப்பாள்.. அதுக்குப்போய் இப்படியா கண்ணை கசக்குவது..?” என்று மகளின் கண்ணீரைத் துடைத்து விட்டவர் உள்ளே செல்ல அவரின் பின்னோடு சென்றாள் பிரபா
கிணத்துமேட்டில் அமர்ந்திருந்த பாரதி, “அப்பாடி பிசாசிடம் இருந்து தப்பிக்க வைத்த அம்மாவிற்கு கோவில் கட்டிக் கும்பிடலாம்..” என்று தனது அடுத்த விளையாட்டுகளைப் பட்டியல் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தாள்
இவ்வாறு வீட்டில் எல்லாவிதமான சேட்டையும் செய்வது நம்ம பாரதியே! ஆனால் அவள் எதிலும் மாட்டவே மாட்டாள். ‘தவறே செய்தாலும் அதை மற்றவர்கள் கண்டு பிடிக்காத வண்ணம் செய்ய வேண்டும்’ என்பது அவளின் கொள்கைகளில் ஒன்று!
அவளை யாரும் கண்டிக்க மாட்டார்கள் வீட்டின் கடைக்குட்டி மேல் அண்ணன் அக்கா ஐவருக்கும் ரொம்ப செல்லம் அதிகம் அதானால் தானோ என்னமோ அவளுக்கு பயமே கிடையாது! ஒரு ஆண் போலவே வளர்க்கப்பட்டாள்! அவள் சொல்வதற்கு அக்கா, அண்ணன் அனைவரும் அடங்கிப் போவார்கள்!
அதேபோல சில வியங்களில் மட்டும் விளையாட்டாக பொய் சொல்லிவிட்டு அடுத்த நொடியே உண்மையையும் சொல்லிவிடுவாள்!
இப்படியே சிரித்த வண்ணம் நாட்கள் கடந்து செல்ல, அடுத்து பிரபாவிற்கு திருமணம் நடக்க அவளை வால்பாறையில் கட்டிக்கொடுத்தனர். வீட்டில் இருந்து பிரபா போக, ராதா வீட்டிற்குள் வந்தாள்.
கண்ணனுக்கு திருமணம் நடக்க அவளின் அண்ணியாக வந்தாள் ராதா..!
நாட்கள் கடந்து செல்ல பதிமூன்று வயதினை அடைந்த பாரதி, பத்து பசங்களுக்கு நடுவே ஒற்றைப் பெண்ணாக இருந்து கில்லிவிளையாடிக் கொண்டிருந்தாள்..
அதைப் பார்த்த சுதாவின் தோழன் ஒருவன், “டேய் சுதா அங்கே விளையாடுவது உன்னுடைய தங்கை பாரதிதானே..?” என்று கேட்டான்
அவன் காட்டிய திசையைப் பார்த்த சுதா, “ம்ம் ஆமாடா பாரதிதான்..” என்று சொல்லவே,
“டேய் உன்னுடைய தங்கை என்ன இப்படி கொஞ்சம் கூட பயமே இல்லாமல் பத்து பசங்கள் நடுவே விளையாடிக் கொண்டு இருக்கிறாள்.. அவளுடைய வயதைச் சேர்ந்த பெண் தான் என்னுடைய தங்கையும் அவள் என்ன இப்படியா இருக்கிறாள்..?” என்று ஒருமாதிரியாக கேட்டான்
“டேய் வார்த்தையை அளந்து பேசுடா.. யாருடைய தங்கையை என்ன பேசறா.. அடித்தால் ஒரு அடிக்கு தாங்க மாட்ட, என்னுடைய தங்கை எத்தனை பசங்களுக்கு நடுவில் இருந்தாலும் அவளது குணம் அப்படி கிடையாது.. இனிமேல் உன்னோட நட்பு எனக்கு வேண்டாம்..” என்ற சுதா பாரதி பக்கம் திரும்பி
“ஏய் பாரதி என்னடி விளையாட்டு முடிந்ததா..?” என்று குரல் கொடுத்தவன் பாரதியின் அருகில் செல்ல, அவளும் தனது நண்பர்களிடம் விடைப்பெற்று சுதாவுடன் கிளம்பினாள்
“என்ன சுதா ரொம்ப கோபமாக இருக்கிறாய்..? என்ன விஷயம் சொல்லு ஒரு கைப்பார்த்து விடலாம்! சொல்லு சுதா என்ன பிரச்சனை..?” என்று கேட்டாள் பாரதி
“எல்லாம் உன்னால் வந்ததுதான் பாரதி..” என்று கூறியவண்ணம் வந்தான் வாசு
“என்னால் என்னடா பிரச்சனை உங்களின் இருவருக்கும்..?” என்று புரியாமல் கேட்டாள்
“நீ எந்த நேரமும் பசங்களுடன் விளையாடுவதைப் பார்த்து எங்களின் நண்பர்கள் எல்லாம் எங்களை கேலி செய்கின்றனர்..” என்று வாசு உண்மையைக் கூற,
“இதுக்குதான் இப்படி மூஞ்சியை வைத்திருக்கிறீர்கள்..?” என்று அவளின் இரண்டு அண்ணன்களையும் பார்த்துக் கேட்டவள்
“இனிமேல் நான் பசங்களுடன் விளையாட மாட்டேன்..” என்று கூறியவள், அண்ணனின் முகம் பார்த்தவள்
“சரிடா வாங்க வீட்டிற்கு போகலாம்” என்று கூறியவள், “அதுதான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்கிறேன் இல்ல கொஞ்சம் சிரிங்கடா இஞ்சி தின்ன குரங்குகளா..” என்று அவள் கூற அவர்களின் முகத்தில் சிரிப்பு வந்தது, அவர்கள் வீட்டு நோக்கி சென்றனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
மறுநாள் காலையில் பாரதி மட்டும் பள்ளிக்கூடம் செல்ல தயாராக, வாசும், சுதாவும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரையும் ஒரு பார்வைப் பார்த்த சுந்தரம் தனது பெரிய மகனின் அறையை நோக்கிச் சென்றார்.
மகனின் அறையின் முன்னே சென்றவர், அறையின் கதவைத் தட்டி, “கண்ணா கொஞ்சம் வெளியே வாடா..” என்று அழைத்தார்
வெளியே வந்த கண்ணன், “என்னங்க அப்பா சொல்லுங்க என்ன விஷயம்..?” என்று கேட்டான் பெரியமகன்
“கண்ணா வாசுவுக்கும், சுதாவுக்கும் பள்ளிக்கூடத்தில் ஜனவரி பீஸ் கட்ட வேண்டுமாம் பத்து ரூபாய் இருந்தால் கொடுத்துவிடு! நான் சாயந்திரம் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு சம்பளம் வாங்கி உனக்குக் கொடுக்கிறேன்!” என்று தயக்கமாகவே கூறினார்
“நான் என்ன இன்னும் தனியாளாக இருக்கிறேனா..? எனக்கும் மனைவி குழந்தை என்று இருக்கின்றனர்.. அவர்களை நான் பார்க்க வேண்டாமா..?” என்று கேட்டான் பெரியமகன்
அவன் இல்லை என்று சொல்லி இருந்தாலும் பெற்றவர் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவன் சொன்ன பதிலில் ரொம்ப கோபம் அடைந்தவர்,
“அப்படியாப்பா நீ குடும்பஸ்தன் இல்ல பாரு மறந்தே போய்விட்டேன்!” என்று கூறியவர், “இன்னைக்கு வரைக்கும் நீயும் உன்னுடைய மனைவி மற்றும் குழந்தை மூவரும் சேர்ந்து சாப்பிடுவது என்னோட சொந்த உழைப்பில் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா..?” என்று மகனை நிற்க வைத்து கேள்விகேட்டவர்
“உன்னுடைய குடும்ப பாரத்தை என்னால் சுமக்க முடியாது! நீ என்ன பண்ணுகிறாய் என்றால் நாளைக்கே உன்னுடைய மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு தனிவீடு பார்த்துப் போய்விடு! ஏன் சொல்கிறேன் என்றால் இன்னும் மூன்று பேரை நான் கரைசேர்த்த வேண்டும் இல்லையா அதுக்குத்தான்” என்று கூறியவர் மகனின் முகத்தைப் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டார்.
தந்தை சொல்லிவிட்டு சென்ற செய்தி மனதில் இருக்க பக்கத்துவீடு காலியாக இருக்க ராதா கணவனின் அருகில் வந்தாள்!
“இந்தாங்க நீங்க கொடுத்த சம்பளம் நாளை நாம் அந்த வீட்டிற்கு குடிபோகலாம்! நம்மிடம் என்ன பணமா இல்லை..? நீங்கள் கொடுத்த பணத்தை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன்..” என்று கூறியவள் கணவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்
அங்கே நடந்த அனைத்தையும் பார்த்த மீனாட்சி, “நான் இந்த மாதிரி இருந்திருந்தால் நான் இந்நேரம் ஒரு வீடே கட்டி இருப்பேன்!” என்று கூறியவர் அறையின் உள்ளே செல்ல,
வெளியே சென்ற சுந்தரம், கையில் பணத்துடன் வந்தார்.. அப்பொழுது எல்லாம் பத்து ரூபாய் என்பது நூறு ரூபாய்க்கு சமம்!
தனது மகன் இருவரையும் பக்கத்தில் அழைத்தவர், “இந்த வாசு, சுதா இருவரும் கொண்டு போய் பீஸ் கட்டுங்க.. ஒருவாரம் சாப்பிடவில்லை என்றால் ஒன்றும் செத்துவிட மாட்டோம்..” என்று கூறினார்
அவரை நிமிர்ந்துப் பார்த்த மகன்கள் இருவரும், “அப்பா இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பீஸ் கட்டிதான் படிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை! நாங்கள் இருவரும் பள்ளிக்குப் போகவில்லை நாங்கள் உங்களுடன் வேலைக்கு வருகிறோம்..” என்று கூறிய அண்ணன்களைப் பார்த்து பாரதிக்கு பெருமையாக இருந்தது.
அதேபோல அண்ணன்களின் படிப்பு இன்றுடன் நின்றுவிட்டதே என்று மனதில் ஒருபக்கம் வலித்தது! ஆனாலும் இந்த நிலையில் தனது அண்ணன்கள் எடுத்த முடிவில் சந்தோசமே!
சிறுவயதில் தங்களின் வறுமை நிலையைப் புரிந்துக் கொண்ட மகன்கள் இருவரையும் கட்டியணைத்துக் கொண்டார். சமையல் அறைக்கு செல்ல திரும்பியவள் அறையின் உள்ளே இருந்துக் கேட்ட அண்ணியின் குரல் அவளை அங்கேயே அணியடித்துப் போல நிற்க வைத்தது!
“நான் சொன்ன மாதிரியே சொல்லிட்டீங்க!” என்று கேட்ட அண்ணியின் குரல் கேட்டு அதிர்ந்தவள் அண்ணியின் சுயரூபம் கண்டுக்கொண்டாள்.
“நீங்கள் அப்படி செய்யவும் இப்பொழுது நாம் வீட்டை விட்டு போக சரியாக இருக்கிறது! இங்கிருந்து சென்றதும் நாம் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட ஆரமித்தனர்” என்று கூற அண்ணிக்கு இப்படியும் ஒரு முகம் இருப்பதைக் கண்டுகொண்டாள்!
அதற்குமேல் யாரையும் எடைபோட கற்றுகொள்ள, யாருடனும் அளவாக பழகக் கற்றுக்கொண்டாள்!
அடுத்து வந்த நாட்களில் பாரதி மட்டும் பள்ளிக்கூடம் செல்ல, தந்தையுடன் வேலைக்கு செல்ல படிப்பில் முழுகவனம் செலுத்த வீட்டின் கஷ்டம் உணர்ந்து நடந்துக் கொள்ள ஆரமித்தாள்!
அவள் பெரிய மனுசி ஆனதும் அவளின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே தந்தையின் உடல்நிலை கண்டு தன்னுடைய தேவைகளை தானே சமாளிக்க கற்றுக்கொண்டாள். அண்ணன் கொடுக்கும் பணத்தை அளவுடன் குடும்பத் தேவைகளை செய்ய துவங்கினாள். பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திக் கொண்டாள்.
“ஏண்டா பள்ளிக்கூடம் போகவில்லை..?” என்று படுக்கையில் படுத்திருந்த சுந்தரம் தனது செல்ல மகளின் தலையை வருடிய வண்ணம் கேட்டார்..
“இன்னொரு தடவை நீங்க அவமானம் படக்கூடாது அப்பா..” என்று கூறியவள் தொடந்து,
“சுந்தரம் மகள் ஜனவரி கட்டணம் கட்ட முடியாமல் வகுப்பறைக்கு வெளியே நிற்கிறாள் என்று யாரும் சொல்லக்கூடாது” என்று கூறியவள்
“நீ படிக்க போகவில்லையா.. ஒருத்தன் தன்னுடைய குடும்பம் பெருசு என்று மனைவியின் பின்னே சென்றுவிட்டான்.. இன்னொருவன் உயிருடன் இருக்கிறானா..? இல்லையா என்றே தெரியவில்லை..” என்று வருத்தத்துடன் கூறியவர் மகளைப் பார்த்து,
“நீயும் உன்னுடைய அம்மாவும் வாசு இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுங்கள்.. அவன் ரொம்ப பாவம் கண்ணா தனியாக கஷ்டபடுகிறான். நீயும் அம்மாவும் இங்கே ரொம்ப கஷ்டம் படுகிறீர்கள்..” என்று கூறியவர் அப்பொழுது வீட்டிற்கும் நுழைந்த கண்ணனைப் பார்த்து
“வாப்பா கண்ணா பேத்தி எங்கே டா இருக்கிறாள்.. வந்திருக்கிறாளா..?! என்று கேட்டார்..
“அப்பா நீங்க பேசுவதை நான் கேட்டேன்.. நீங்க எங்களுடன் இருந்துவிடுங்கள். அம்மாவும் பாரதியும் வாசுவுடன் செல்லட்டும்..” என்று கூற
அவளின் பெரிய அண்ணனை நிமிர்ந்துப் பார்த்த பாரதி, “அப்பா உன்னுடன் இருந்தால் அவரின் சம்பாத்தியம் வைத்து இன்னும் இரண்டு அறைகள் கட்டிவிடலாம் என்று அண்ணி சொல்லிக் கொடுத்தார்களா..?” என்று கோபத்துடன் வெடுக்கென்று கேட்டாள்
அவளை விட பன்னிரண்டு வயது பெரியவன் அவளின் முன்னே தலைகுனிந்து நின்றான்..! தன்னால் கேட்க முடியாத ஒரு கேள்வியை தனது மகள் கேட்டுவிட அவரின் கண்களுக்கு அவரின் மகள் ஒரு மகனாகவே தெரிந்தாள்..
“நாங்கள் இங்கே இருக்கிறோம் எங்கள் இருவருக்கும் சாப்பாடு போடுவது எங்களுடைய அப்பாவின் கடமை! நீ அண்ணன் என்ற கடமையை செய்! நாங்கள் இருக்கும் இந்த வீட்டிற்கு வாடகை மட்டும் கொடு அது போதும்!” என்று கூறியவள் உள்ளே சென்று மறைய அறைக்குள் வந்த மகளைக் கட்டியணைத்து கண்ணீர் விட்டார் மீனாட்சி!
“அம்மா இதுக்கு எதுக்குமா கண்கலங்கறீங்க.. அப்பா இல்லாத காலத்திலும் நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் நான் இருக்கிறேன் அம்மா உங்களுக்கு இன்னொரு மகனாக!” என்று கூறியவள் அன்னையின் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்
நாளுக்கு நாள் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போக ரொம்ப கஷ்டம் அனுபவித்தனர். அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் அவள் அண்ணன் சுதா அவன் வேலை செய்த முதலாளி அடித்தார் என்று அவரை அடித்துவிட்டு ஓடிப்போனான்!
அதன்பிறகு அவனை அவர்கள் தேடாத இடமே இல்லை! அப்பாவும் படுத்துவிட, அவரின் உயிரைக் குடித்தது சுதாகர் பிரிவு!
வாசுதேவன் கருமத்தம்பட்டியில் ஆசாரி வேலை செய்துக்கொண்டு தனியாக இருந்தான்! ஒருநாள் விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் நொடியில் வீட்டின் நிலையை கணித்துவிட்டான்
“அம்மா தங்கையை அழைத்துக்கொண்டு என்னுடன் வந்துவிடுங்கள் நான் உங்களை பார்த்துக் கொள்கிறேன் அம்மா!” என்றவன் கூற வேலையை முடித்துவிட்டு வந்த சுந்தரம்
“தாரமாக அழைத்து போ வாசு பாவம் இருவரும் ரொம்ப கஷ்டம் படுகின்றனர்..” என்று கூறியவர்
“நான் பெரியவன் வீட்டில் இருக்கிறேன்! மாதத்திற்கு ஒருமுறை நானே வருகிறேன் என்னால் வரமுடியாத நிலையில் நீ இருவரையும் அழைத்து வா” என்று கூற தனது அண்ணனுடன் பதினைத்து வயதில் தனது தந்தையை விட்டு பிரிந்து சென்றாள் பாரதி
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
Super ...... Anna na yea ipdi irukanga .... konjam kuda akaraye ilama ..... chinna pullaiku irukara alavu kuda periyavanga luku ilama poiruchu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top