• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaazhkaiyin Varnajalam - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 4
ஒரு வருடம் தனது தாய், தந்தை, அக்கா, மாமா அவர்களின் குழந்தை என்று இருந்தான் பிரதீபன். அதே ஊரில் அவனது அக்கா, மாமா அவர்களின் குழந்தை மூவரும் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள்
ஒருநாள் அவனின் அம்மா சாப்பாடு செய்யவில்லை என்று அக்காவின் வீட்டிற்கு செல்ல, “என்னுடைய புருஷன் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் அனைவருக்கும் நான் தண்டச்சோறு போட முடியாது..” என்று அவனின் அக்கா சொல்ல,
“நான் இல்லை என்றால் நீ இன்னும் கல்யாணம் ஆகாமல் தான் இருப்பாய்.. அது தெரியுமா உனக்கு..? எதுக்கு இப்படி காட்டிலும் மேட்டிலும் கஷ்டம் படுகிறோம் என்று புரியாத வயதில் கஷ்டம் பட்டு அந்த பணத்தில் தான் அப்பா உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்..” என்று சொன்னவன் வெளியே செல்ல திரும்ப,
வாசலில் நின்ற அவனின் மாமா கணபதி, “வா பிரதீபா வந்து சாப்பிடு..” என்று அழைக்க, “இன்னும் இவள் கையால் சாப்பிடுவேன் என்று நினைச்சீங்களா..?” என்று கேட்டவன்,
“இதே சோறு நான் உங்கள் மூவரையும் என்னுடைய வீட்டில் உக்காரவைத்து சம்பாரித்துப் போட்டேன் அதை மட்டும் மறந்திராதீங்க..” என்று மாமானிடம் கூறியவன் பட்டினியாக வேலைக்கு சென்றான்
அவனின் அக்கா, மாமா இருவரின் முகமும் பேய் அறைந்தது போல ஆனது..! அதைக் காரணமாக வைத்தே வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என்று பள்ளிபாளையம் என்ற இடத்திற்கு தன்னுடைய குடும்பத்துடன் குடிபெயர்ந்தான்
அக்கா, மாமா அவர்களின் குழந்தை மூவரும் தனியாக வீடெடுத்து மொடகுறிச்சியில் தங்கிவிட்டனர். அவனின் அண்ணன் ஊர்சுற்றும் வேலையை சரியாக செய்ய மூவருக்கும் சேர்த்து சம்பாரிக்க அவன் தனது இடத்தை மாறிக்கொண்டான். அங்கிருந்து காலை ஈரோடு செல்பவன் இரவில் தான் வீட்டிற்கு வருவான்.
இவ்வாறு பன்னிரண்டு வயதில் ராட்டை சுற்றும் வேலைக்கு பள்ளிபாளையத்திலிருந்து ஈரோடு செல்வான்
இந்த நாட்கள் இன்னும் வசந்தம் வீசியது அவனின் வாழ்வில்..! காலையில் ஏழுமணிக்கு பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப்பிற்கு வருவான்..
அங்கே அவனுடன் வேலை செய்யும் ராகவனும் வந்து விடுவான். அவனும் பிரதீபன் வயதைச் சேர்ந்தவனே.. இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றனர்..
பஸ் வந்துவிட இருவரும் சேர்ந்து பஸ்ஸில் ஏறி, பின்னாடி இருந்த சீட்டில் அமர்ந்தனர்.
“டேய் பிரதீபா இன்னைக்கு வேலை இல்லை என்றால் நாம் இருவரும் என்ன செய்வது..?” என்று கேட்டான் ராகவன்
அவனின் முகத்தைப் பார்த்த பிரதீபன், “வேலை இல்லை என்றால் நாமிருவரும் படத்திற்கு போகலாம்..” என்று அவன் சொல்ல
“எந்த படத்திற்கு போகலாம்..?” என்று கேட்டான் ராகவன்
“நான் பாடும் பாடல் படத்திற்கு போகலாம்..” என்று பிரதீபன் சொல்ல, “சரிடா வேலை இருந்தால் வேலையை செய்வோம்.. இல்லை என்றால் இருவரும் படத்திற்கு போவோம்..” என்று ராகவன் கூறினான்
அதன்பிறகு பேசாமல் வந்த ராகவனைப் பார்த்த பிரதீபன், “என்னடா பிரச்சனை..?” என்று மெதுவாக அவன் நண்பனிடம் கேட்டான்
“அதுவா நாம் வேலை செய்யும் முதலாளி மகள்கள் தான் டா பிரச்சனை..” என்று ராகவன் அலுப்புடன் கூற,
“உனக்கு அவர்களுடன் என்னடா பிரச்சனை..?” என்று கேட்டான்
“பின்ன என்னடா வேலை செய்யும் பொழுது அந்த அடங்காபிடாரி ரஞ்சனி வந்து ராட்டையின் நூலை அத்துவிட்டு போய் விடுகிறது.. அடுத்து இருக்கும் ராச்சசி மஞ்சரி வந்து எடைக்கு தொங்க விட்டிற்கு இரும்புக் குண்டை கலட்டி விட்டுவிடுகிறது..” என்று விடாமல் புலம்பிய ராகவன்
“நேற்று நான் நகர்ந்தால் என்னுடைய காலில் அடிபடவில்லை.. அதுவே அடிபட்டிருந்தால் என்ன ஆகிருக்கும்..?” என்று பொரிந்து தள்ளினான் ராகவன்
“ஓ அதுக இரண்டும் இந்த வேலை எல்லாம் செய்யுதா..? நீ முதலாளியம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே ராகவா..?” என்றுக் கேட்க,
“அவர்கள் நான் சொல்வதை நம்புவதே இல்லை..” என்று சோகமாகக் கூறினான்
நண்பனின் முகம் பார்த்த பிரதீபன், ‘அவர்களுக்கு இன்று இருக்கிறது..’ என்று நினைத்தவன் மனதில் ஒரு திட்டம் தீட்டினான்
அதற்குள் ஈரோடு வந்துவிட பஸ் நிலையத்தில் இறகியவர்கள் சாலைகளைக் கடந்து, அவர்கள் வேலை செய்யும் இடத்தை அடைந்தனர்..
வழக்கம் போலவே எல்லோரும் அவரவர் இடங்களில் நின்று வேலை செய்ய தொடங்கினர்.. வெள்ளை நூலை சாயம் இட்டு, அந்த நூல்கள் அமைத்தும் ஒரு பெரிய மாலை போல வட்ட வடிவத்தில் மொத்தமாக சுற்றப்பட்டு இருக்கும். அந்த நூல்கட்டை எடுத்து ராட்டையில் போட்டு அந்த நூலை சிக்கு எடுத்து நூல் சுற்றும் இரும்பு கோனில் சுற்றுவது தான் இவர்களின் வேலை அது தான் வெட்டி நெய்ய முதலில் செய்யும் வேலை..!
பிரதீபன் அவனது இடத்தில் நின்று வேலையைப் பார்த்துக் கொண்டே அந்த முதலாளி பெண்ணையும் கவனிக்க, அவன் சொன்னது போலவே அந்தப்பெண் அதுவிட்டு திரும்ப அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தாள் அவளின் அன்னை காமாட்சி! ரஞ்சனி பயத்தில் அப்படியே நின்றாள்
“நான் சொல்லும் பொழுது நீங்கள் நம்பாமல் இருந்தீர்கள்..?” என்று பிரதீபன் பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,
“இந்த கழுதை இப்படி செய்யும் என்று யார்க்கு தெரியும்..?” என்று கூறி மகளை பிரம்பெடுத்து விளாசிவிட்டார்
அதைப் பார்த்த ராகவன், “எப்படிடா..?” என்று புரியாமல் கேட்டான்
“நீ காலையில் சொன்னவுடன் யோசித்தேன்.. இன்று நீ என்பதால் அவர்களை நீ ஒன்றும் செய்யவில்லை.. அதுவே உன்னுடைய இடத்தில் வேற யாராவது இருந்தால், அதன் மூலம் அந்த பெண்ணும் பாதிக்கப்படுவாள்.. அதுவே அடி விழுந்தால் கொஞ்சம் நெஞ்சில் பயம் இருக்கும்..” என்று கூறியவன் தான் செய்த வேலையைச் சொன்னான்
அந்த ரஞ்சனி உள்ளே வந்த மறுநிமிடமே நான் முதலாளி அம்மாவின் வீட்டிருக்கு சென்றுவிட்டேன்.. அவர்களிடம் சென்று, “அக்கா ரஞ்சனி ராட்டையின் சுற்றும் நூலை அத்துவிடுகிறாள்..” என்று சொல்ல,
சமையல் அறையில் இருந்து வந்த காமாட்சி, “ரஞ்சனி அது போல செய்ய மாட்டாளே பிரதீபா..” என்று மகளுக்கு பரிந்து பேச,
“நீங்களே வந்து பாருங்கள் நான் சொல்வது உண்மையா? பொய்யா? என்பது உங்களுக்கே புரியும்..” என்று காமாட்சி அழைத்து வரவும்,
ரஞ்சனி விளையாட்டு போக்கில் பிரதீபன் ராட்டையில் இருக்கும் நூலையும் அத்துவிட, அதை பார்த்துவிட்ட காமாட்சி மகளை அடி பின்னி எடுத்துவிட்டார்
“இதுதான் நடந்தது ராகவா..” என்று கூறியவன் தனது வேலையை செய்ய தொடங்கினான்
எப்பொழுதும் போல அன்றும் வேலைக்கு வந்த இருவரும் அங்கே இருந்த புதியவர்கள் இருவரைப் பார்த்து,“டேய் இன்னைக்கு புதுசாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்கள் போல தெரிகிறது..” என்று ராகவன் சொல்ல,
“அவர்களும் நம்ம வயதைச் சேர்ந்தவர்கள் போல தெரிகிறது..” என்று கூறிய பிரதீபன் அவனுடைய இடத்திற்கு சென்று அவனுடைய வேலையைத் தொடங்க, ராகவனும் அவனது வேலையைப் பார்த்தான்
“டேய் ராமு இந்த ராட்டையின் நூல் அந்து போகிறது..” என்று முரளி பக்கத்தில் இருந்த ஒருவனிடம் சொல்ல, “அதை சரியாக முடிச்சுப் போட்டு விடு!” என்று கூறிய ராமு தன்னுடைய வேலையைச் செய்ய அதை சரியாக போடத் தெரியாமல் விழித்தான்
அவர்களின் உரையாடலை அருகில் இருந்துக் கேட்டுக் கொண்டிருந்த பிரதீபன், அவன் விழிப்பதைப் பார்த்து அவனுக்கு கற்றுக் கொடுக்க, அவன் மெல்ல புன்னகைத்தான்.
“நீங்க வேலைக்கு புதுசா..?” என்று அந்த புதியவனைப் பார்த்துக் கேட்டான் பிரதீபன்.
“ஆமாம் எங்கள் வீட்டில் கொஞ்சம் கஷ்டம்! அதனால் நான் வேலைக்கு வரும் நிலை வந்துவிட்டது..” என்று கூறியவன் பக்கத்தில் இருந்த ராமுவைக் கைகாட்டி, “இவன் என்னுடைய நண்பன் ராமு..” என்று அறிமுகம் செய்ய அவனும் புன்னகை செய்தான்..
“உங்க பெயர் சொல்லவே இல்ல..?” என்று அந்த புதிய நண்பனைப் பார்த்துக் கேட்டான் பிரதீபன்
“என்னுடைய பெயர் முரளி..” என்று கூறியவன், “உங்களின் பெயர்..?” என்று கேட்டான்
“பிரதீபன்..” என்று தன்னுடைய பெயர்க் கூறிய பிரதீபன், “இவன் என்னுடைய நண்பன் ராகவன்..” என்று அவனின் நண்பனையும் அறிமுகம் செய்ய அனைவரும் மெல்ல மெல்ல ஊர் பெயர், இருக்கும் இடம் அவர்களின் ரசனை என்று பேச்சு அப்படியே திசை மாறியது!
இப்படி நான்கு பெயரும் ஒரே நாளில் உயிர் நண்பர்கள் என்ற நிலையை அடைந்துவிட்டனர்..
அழகாக நாட்கள் நகர, இவர்களின் ஆட்டம் பாட்டம் அதிகம் ஆகியது.. இதில் பிரதீபன் சேட்டை இன்னும் அதிகம்! எந்த படத்தைப் பார்த்தாலும் அந்த படத்தின் கதாநாயகி என்று கற்பனை செய்துக்கொண்டு அவன் செய்யும் சேட்டை அளவே கிடையாது..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஒரு நாள் இப்படித்தான் மதியம் நால்வரும் அமர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, “டேய் பிரதீபா உனக்கு என்ன பாட்டு பிடிக்கும் சொல்லு..” என்று ராமு ஆர்வமாகக் கேட்க,
“எனக்கு செந்தூர பூவே செந்தூர பூவே என்ற பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..” என்று கூறியவன் அங்கே இருந்த ஊஞ்சலைப் பார்த்து,
“டேய் அந்த பாட்டில் ஸ்ரீதேவி ஊஞ்சல் ஆடுவாள்.. நானும் ஆடனும்..” என்று சொல்ல
“டேய் இங்கே எங்கே ஊஞ்சல் இருக்கிறது..?” என்று கேட்டான் முரளி
“நம்ம முதலாளி பொண்ணுங்க விளையாடுவதற்கு தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி விட்டிருக்காங்க, வாங்க அங்கே போகலாம்..” என்று மூவரையும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான் பிரதீபன்
அங்கே மாமரத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்த பிரதீபன், “நீங்க மூவரும் என்னை ஆட்டி விடுங்க..” என்று சொல்லிவிட்டு அமர்ந்தான்..
அந்த இடத்தை சுற்றிலும் நெல் பயிரிட வயலில் தண்ணீர் பாத்திகட்டி விடப்பட்டிருந்தது.. மதியநேரம் என்பதால் மெதுவாகக் காற்று விசியது.. மூவரும் சேர்ந்து ஊஞ்சலை ஆட்டிவிட,
“இன்னும் வேகமாக ஆட்டுங்கடா..” என்று கூறிய பிரதீபன் ஊஞ்சல் கயிறைப் பிடித்துக் கொள்ள,
“நல்ல பிடித்துக்கொள் பிரதீபா..” என்று கூறிய ராகவன் வேகமாக ஊஞ்சலை ஆட்ட, “இன்னும் வேகமாக ஆட்டுங்க..” என்று கூறியவன் ஒற்றைக் கையை விட்டுவிட்டு பாடல் பாட,
பக்கத்தில் இருந்த முரளியும், ராமுவும், “இன்னைக்கு என்ன நடக்க போகுதோ தெரியலடா..” என்று கூறி ஊஞ்சலை ஆட்ட,
“செந்தூர பூவே செந்தூர பூவே
சில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே
என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூர பூவே செந்தூர பூவே..” என்று பாடியவன், “ஐயோ டேய் என்னைக் காப்பாத்துங்கடா..” என்று கத்த ஆட்டிய ஊஞ்சல் வெறும் ஊஞ்சலாக இருக்க,
“டேய் முரளி எங்கடா பிரதீபன் சத்தம் மட்டும் வருது ஆளைக்காணோம்..?” என்று யோசனையுடன் கேட்டான் ராகவன்
“அதுதானே எங்கடா அவன்..?” என்று ராமுவிடம் கேட்க, அவனும் பக்கத்தில் இல்லை,
“இவன் எங்கே போனனான்..?” என்று இருவரும், நிமிர்ந்துப் பார்க்க, வயலில் இறங்கி ஓடிக்கொண்டிருந்தான் ராமு
“டேய் ராமு பிரதீபன் எங்கடா..? நீ எங்க போகிறாய்..?” என்று கேட்ட வண்ணம் அவனைப் பின்தொடர்ந்து ஓட, பறந்து வந்து விழுந்தான் பிரதீபன்,
“ஐயோ அம்மாஆஆஆஆஆ...” என்ற அலறல் அவர்கள் நின்ற இடத்தில் கேட்டது
வயலில் இருந்த சேறு முழிக்க பிரதீபன் உச்சி முதல் பாதம் வரையில் இருக்க, அவனை அந்த கோலத்தில் பார்த்த நண்பர்கள் மூவரும்,
“இது உனக்கு தேவையா..?” என்று முரளி கடிந்துக் கொள்ள, “அடி ரொம்ப பலமா..?” என்று அவனை வந்து தூக்கினான் ராமு
“வேகமாக ஆட்டு ஆட்டு என்று இப்படி சேற்றில் வந்து விழுந்திருக்க..” என்று திட்டிய ராகவன் முதலாளியம்மாவை அழைக்க ஓடினான்..
மெல்ல மெல்ல அவனைத் தூக்கிக்கொண்டு மரத்தின் நிழலுக்கு வந்தனர். ராகவன் ஓடிச்சென்று முதலாளி அம்மாவை அழைத்து வர, அவர்கள் வந்து,
“டேய் வயலில் ஓடுகிறேன் என்று இப்படியா போய் வயலில் விழுவ..?” என்று கேட்க, மற்ற மூவருக்கும் கூட சிரிப்பு வந்தது ஆனால் அவர்கள் நடந்ததைச் சொல்லவில்லை..
“அடியே ரஞ்சனி மோட்டாரை போட்டுவிடு..” என்று மகளுக்கு கட்டளை இட்ட காமாட்சி,
“நீ போய் குளித்துவிட்டு வா.. டேய் இவனை அழைத்துப் போங்க..” என்று மற்ற மூவருக்கும் சொன்னவர் வீட்டின் உள்ளே செல்ல,
“என்ன பாட்டு அது..? செந்தூர பூவே வா.. இப்பத்தான் நீ சேற்றில் பூத்த செந்தூர பூப்போல இருக்க..” என்று ராமு கூற கோபமாக முறைத்தான் பிரதீபன்..
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல மூஞ்சியைப் பாரு..?” என்று திட்டியபடியே மோட்டர் தொட்டியின் பக்கம் அழைத்து வந்தவர்கள் அவனைத் தொட்டிக்குள் இறக்கிவிட்டனர்..
அவன் குளித்துவிட்டு வருவதற்குள், அவனின் நண்பர்கள் அவனைக் கேலி செய்து சிரிக்க, அவர்களின் முகத்தில் வந்த புன்னகை அவனுக்கு ஒரு பாடத்தையும் கற்பித்தது..
‘தன்னை நேசிப்பவர்கள் சிரிக்க நாம் எந்த வலியையும் தாங்கலாம்..’ என்று நினைத்தவன் மெல்ல சிரிக்க, “டேய் ரொம்ப வலிக்குதா..?” என்று மூவரும் கேட்க,
‘இல்லை’ என்று தலை அசைத்த பிரதீபன், அன்று வேலைக்கு விடுமுறை கொடுத்து அனுப்ப மூவரும் சேர்ந்து அவனை வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தனர்
அவனை அந்த நிலையில் பார்த்த கண்ணாத்தாள், “இவனுக்கு என்னப்பா ஆச்சு..?” என்று கேட்டு கண்ணீர் வடித்தார் பிரதீபன் அன்னை
“ஒன்னும் இல்லம்மா வயலில் தடுமாறி விழுந்துவிட்டான்..” என்று கூறியவர்கள் தங்களின் வீட்டை நோக்கி செல்ல, ஒரு வாரம் வீட்டில் இருந்தான்
அதன்பிறகு இவ்வாறு நடக்கும் ஆனால் அதில் உண்மை மட்டும் சொல்லவே மாட்டார்கள்.. இந்த நிலையில் அந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு சென்று அதே வேலையை செய்ய அங்கேயும் நண்பர்கள் கூட்டம் அதிகமாகியது. இப்படியே இரண்டு வருடம் சென்றது.
இவன் பண்ணும் சேட்டைக்கும், அடிக்கும் கூத்தும் அவனை சுற்றி இருப்பவர்களுக்கு பிடிக்கும் அவனை பிடிக்காத ஆள் என்று யாரும் இல்லை ஆனால் அவனின் இன்னொரு முகம் யாருக்கும் தெரியாது.
பாசம் என்றாலும் அவனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது அதேபோல, கோபம் வந்தாலும் அவனை கட்டுபடுத்த முடியாது..
அது அவனை சீண்டுபவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.. “சாது மிரண்டால் காடு கொள்ளாது..” என்ற பழமொழி அவனுக்காக எழுதப்பட்டது..
 




Laksha24

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
160
Reaction score
256
Location
CHENNAI
நல்ல நண்பர்கள். வாழக்கையை எதார்த்தமாக காட்டும் விதம் நன்றாக உள்ளது. இன்னும் பெரிய அப்டேட்டா போடுங்க சிஸ்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
‘தன்னை நேசிப்பவர்கள் சிரிக்க நாம் எந்த வலியையும் தாங்கலாம்.
arumaiyana varigal sis. prathiban ulaika piranthavan pola......... senthoorapoove arumai. nice epi sis(y)(y)(y)
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
Semmmaaaaa ............ frds na ipditha irukanum ....... frd santhosam iruka etha venalum seiyalam
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,446
Reaction score
8,836
Location
Chennai
சூப்பர் ஆட்டம் பாட்டம் ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top