• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaazhkaiyin Varnajalam - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 5
பொள்ளாச்சியிலிருந்து கருமத்தம்பட்டிக்கு வந்த பாரதி ரொம்ப சந்தோசமாக இருந்தாள்.. அங்கே அவளைக் கட்டுப்பாடு விதிக்க யாருமே இல்லை என்றே சொல்லலாம்..
அவளின் பெரிய அக்காவிற்கு இரண்டு பசங்கள், இரண்டு பெண்கள்.. அவளின் சின்ன அக்காவிற்கு ஒரு பையன், ஒரு பொண்ணு என்று சின்ன பட்டாளமே இருந்தது!
காலையில் எழுந்ததும் அம்மாவிடம் சொல்லிவிட்டு பெரிய அக்கா பாக்கியம் வீட்டிற்கு சென்றால் அங்கே குழந்தைகளுடன் பெரிய போர்களமே நடக்கும்..
“அக்கா..” என்று அழைத்தவள் காலில் கொலுசுகள் சரசரக்க, வீட்டிற்குள் சென்றாள்
“வா பாரதி..” என்று அழைத்த பாக்கியம் பிள்ளைகளுக்கு காலை உணவு பண்ணிக்கொண்டு இருக்க, “எங்க அக்கா பசங்களை யாரையும் காணவில்லை..?” என்றவள் பிள்ளைகள் தங்கி இருக்கும் அறைக்குள் சென்று பார்க்க,
“டேய் சித்தி எழுந்திரிடா..” என்று தம்பியை எழுப்பினாள் சிவரதி
“டேய் பசங்களா..?” என்று பாரதி பிள்ளைகளை அழைக்க, “தித்தி பாலு எழு வா...” என்று கடைசி வாண்டு பாரதிக்கு கட்டளை இட,
“என்ன நித்திக்குட்டி எழுந்து விட்டது போல தெரிகிறது...?” என்று அவளின் கடைசி மகனை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல,
“சித்தி அம்மா கேட்ட நாங்க இன்னும் எழுந்திரிக்கவில்லை என்று சொல்லுங்க...” என்று சிவரதி, ராஜா, சூர்யா மூவரும் போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்க ஆரமித்தது..
“அக்கா நித்தி எழுந்துவிட்டான் பால் கேட்கிறான்..” என்று கூறியவள், “காலையில் என்ன சமையல்..?” என்று கேட்டுக் கொண்டே பாலை ஆத்தி நித்திக்கு கொடுத்தாள்
“சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா செல்லாம் என்று இருக்கிறேன்.. நீ மாவு பினைந்துவிடு, நான் குருமா வைத்து விடுகிறேன்..” என்று கூறியவர் பாரதியை மாவு பிசைய சொல்ல,
“கோதுமை மாவு எங்க அக்கா இருக்கிறது..?” என்று கேட்டுக் கொண்டே பிள்ளைகள் இருக்கும் அறைக்குள் சென்றவள், “ஏய் சிவரதி, ராஜா, சூர்யா ஆளுக்கு எத்தனை சப்பாத்தி சாப்பிடுவீங்க..?” என்று கேட்க,
“சித்தி இன்னைக்கு சப்பாத்தியா..?” என்று கேட்ட மூவரும், “ஆளுக்கு ஆறு சாப்பிடுவோம் சித்தி.. ஆனால் அம்மா எங்களுக்கு இரண்டு போதும் என்று தானே சொல்வாங்க..” என்று வருத்தமாகக் சிவரதி கூற,
“சித்தி எதுக்கு இருக்கேன்..? மாவு அதிகம் பினைந்துவிடுகிறேன்.. என்னை மாட்டிவிடாமல் நீங்கள் சாப்பிட வேண்டும்..” என்று கூறிய பாரதி சமையல் அறையை நோக்கிச் சென்றாள்..
அதற்குள் பக்கத்துக்கு வீட்டில் இருந்த செல்வி எதற்கோ பாக்கியாவை அழைக்க, “பாரதி நீ மாவு பினைந்துக் கொண்டிரும்மா.. இந்த செல்வி என்னைக் கூப்பிட்டால் என்ன என்று கேட்டு வருகிறேன்..அப்படியே இவனையும் பார்த்துக்கொண்டு இரும்மா..” என்று நித்திலனை தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்றவள்,
சப்பாத்தி, உருளைக்கிழங்கு குருமா வைக்கும் வரையில் வரவே இல்லை, ‘நல்ல அக்கா எப்படித்தான் இப்படி இருக்காளோ..? இந்த மச்சானும் எதுவும் கேட்பதே இல்லை..” என்று மனதில் நினைத்துக் கொண்டு வேலையை செய்து முடிக்க, மெதுவாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்த பிள்ளைகள்,
“சித்தி வாசனை சூப்பர்..” என்று கூறி ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துவைத்து சாப்பிட அமரும் வரையில் வெளியே சென்ற பாக்கியம் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க,
அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு சமையல் மேடையில் அமர்ந்த பிள்ளைகள், “சித்தி நீங்க சாப்படலையா..?” என்று கேட்ட சிவரதி,
“ஏய் ரதி அம்மாதான் சித்தியிடம் வேலையைக் கொடுத்துவிட்டு வெட்டியாக பேச போய்விட்டது.. சித்தி நமக்கு பசிக்கும் என்று சமையல் செய்திருக்காங்க..” என்று அவளின் அண்ணன் ராஜா கூற,
“அண்ணா சித்தி பாவம் இல்ல அவங்களுக்கும் பசிக்கும் இல்ல..” என்று கூறிய சூர்யா
“நாம் முதலில் அவர்களுக்கு கொடுப்போம்..” என்று கூறிவிட்டு பாரதிக்கும் தட்டை எடுத்து சப்பாத்தியைப் போட்டு குருமாவை ஊத்திக் கொடுக்க, நால்வரும் சேர்ந்து சாப்பிட ஆரமித்தனர்
முதலில் சாப்பிட்ட பாரதி பிள்ளைகளுக்கும் பரிமாற, அவர்களும் சாப்பிட்டு முடிக்கும் பொழுது வந்த பாக்கியம், “எல்லாம் செய்துவிட்டாயா..? பிள்ளைகள் எல்லாம் சாப்பிடாங்களா..?” என்று கேட்க,
“பார்த்தீங்களா அண்ணா சித்தியை வேலை செய்ய சொல்லிவிட்டு சென்றவர் சரியாக சாப்பிடு முடிக்கும் பொழுது வருகிறார்கள்..” என்று மெதுவாகக் கூறினாள் சிவரதி
“மூவரும் எத்தனை சப்பாத்தி சாப்டீங்க..?” என்று கேட்க, “அம்மா ஒன்றை சப்பாத்தி கூட சாப்பிடவே முடியவில்லை..” என்று சூர்யா வேகமாக சொல்ல
“எனக்கு தெரியும் எவ்வளவு செய்தாலும் நீங்க இரண்டு கூட சாப்பிட மாட்டிங்க என்று எனக்குத் தெரியும்..” என்று பாக்கியம் சொல்ல,
‘மூவரும் சேர்ந்து இருபது சப்பாத்தி முழுங்கியது என்று சொன்னால் என்னோட உடன்பிறப்பு என்னை நம்புமா..?” என்று மனதில் நினைத்தவள்,
‘இவள் ஆளுக்கு இரண்டு செய்துக் கொடுத்தால் அந்த பிள்ளைகள் என்ன பண்ணும் பாவம்.. பேருதான் பணக்கார வீட்டுப் பிள்ளைகள்.. ஆனால் சாப்பாடு இல்லாமல் அவர்கள் தவிப்பது யாருக்கு தெரியும்..’ என்று நினைத்தவள் அவர்களின் பேச்சில் கவனம் செலுத்த,
“பாவம் அம்மா சித்தி இத்தனை வேலை செய்துவிட்டு இன்னும் சாப்பிடவே இல்லை..” என்று மெகா சைஸில் ரீல் விட்டான்
“டேய் நான் இப்பொழுது தான் சாப்பிட்டேன்..” என்று கூறியவளை முறைத்தான் ராஜா
“நீங்க என்ன வேலைகாரியா..? இவங்க வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரங்க, நீங்க இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க சித்தி.. கண்டிப்பா இவங்க எதுவும் உங்களுக்கு செய்ய போவது கிடையாது அப்படி இருக்கும் பொழுதுதான் உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்று புரியும்..” என்று கூறினான் அந்த பத்து வயது சிறுவன்
ஆனால் அவன் சொன்னது உண்மையில் நடக்கும் என்பதை அவள் அறியவில்லை..
அதன்பிறகு சின்ன அக்கா வீட்டிற்கு செல்ல அங்கேயும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழையும் போது, “பாரதி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறாய்..?” என்று திட்டியபடியே வேலையை செய்தார்..
“என்னம்மா நம்ம அக்காங்க தானே அம்மா..?” என்று அக்காங்களுக்கு பரிந்து பேசவே, “இன்னைக்கு சொல்கிறேன் பாரதி நீ நினைப்பது போல உன்னோட அக்காங்க இருவரும் நல்லவள்கள் கிடையாது..” என்று சொல்ல,
“என்னங்க அம்மா நீங்க பெத்த பெண்ணையே நீங்க இப்படி சொல்றீங்க..?” என்று கேட்க, “நான் அவர்களைப் பற்றி தெரிந்தால் தான் சொல்கிறேன்.. நாம் ஒன்னும் சொத்து, சுகம் என்று இருக்கவில்லை என்றாலும்கூட நிம்மதி இருக்கிறது.. உன்னை அவர்கள் இருவரும் வேலைகாரியாக நடத்துகின்றனர்..” என்று கூறியவர் தொடர்ந்து,
“இல்லங்க அம்மா நாளைக்கு என்னுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் செய்ய மாட்டார்களா..?” என்று கேட்க,
“நான் இன்று சொல்வது உனக்கு கசக்கும் பாரதி, ஆனால் நான் சொல்வது எல்லாம் நடக்கும் போது நான் இருக்கிறேனோ இல்லையோ தெரியாது ஆனால் நான் சொன்ன சொற்கள் இருக்கும் அன்று நினைப்பாய் அம்மா எவ்வளவு சரியாக சொன்னார்கள் என்று நினைத்து கண்ணீர் விடும் நேரத்தில் யாரும் உன்னுடன் இருக்க மாட்டார்கள்..” என்று கூறினார்
ஆனால் அவர் சொல்வதும் ஒருநாள் நடக்கும் என்பதையும் பாரதி அறியவில்லை.. அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை அவள் எப்பொழுதும் போலவே சின்ன அக்கா பெரிய அக்கா அவர்களுடைய பிள்ளைகள் என்று சந்தோசமாக வலம் வந்தாள்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
தீபாவளி, பொங்கல் பிறந்தநாள் இவை மூன்றிற்கும் ஒரே நாளில் ஐந்து செட் புதுத்துணி அணிந்து வளம்வருபவள் இவள் ஒருத்தியாக மட்டமே இருப்பாள்..
இப்படி இருக்கும் நேரத்தில் தான் இவளுக்கு தோழியாக அறிமுகமானார் சிவரஞ்சனி.. அவரும் இவளைப் போலவே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்..
காலையில் கிணற்றில் தண்ணி எடுக்க சென்ற பாரதிக்கு கிணற்றில் தண்ணீர் சேந்த தெரியாது.. அதேபோல அவள் இப்படி வெளியே வந்து தண்ணியெடுத்து பழக்கமும் கிடையாது.. அது எல்லாம் பொள்ளாச்சியில் இருந்த பொழுது வழக்கமான ஒன்று இங்கே பெரிய அக்கா வீட்டில் எல்லா வசதியும் இருக்க, அவள் இவற்றை எல்லாம் கற்றுக் கொள்ளவும் இல்லை..
அன்று தண்ணீர் சேந்த ஆள் இல்லாமல் அப்படியே நின்றிருக்க அவள் தண்ணீர் எடுக்க வந்து அரைமணிநேரம் சென்றுவிட்டது ஆனால் அவள் ஒரு குடம் தண்ணீர் கூட சேந்தாமல் நிற்பதைப் பார்த்த சிவரஞ்சினி பாரதியின் அருகில் வந்தாள்..
“ஏன் இப்படியே நிக்கிறீங்க..?” என்று மெதுவாக பாரதியிடம் கேட்டாள் சிவரஞ்சனி,
“இல்ல எனக்கு தண்ணீர் சேந்த தெரியாது.. அதுதான் அப்படியே நிக்கிறேன்..” என்று சங்கடமாக பதில் கூறினாள் பாரதி..
“இதுக்கு இப்படி நின்றால் என்ன அர்த்தம்..? தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டால் சொல்ல போறாங்க..” என்று கூறிய ரஞ்சனி பாரதிக்கு தண்ணீர் சேந்திக் கொடுத்தாள்
“ரொம்ப நன்றி..” என்று கூறியவள், “உங்க பெயர்.” என்று கேட்க, “என்னோட பெயர் சிவரஞ்சனி” என்று கூறி புன்னகைத்தாள்
“என்னோட பெயர் பாரதி..” என்று கூறிய இருவரும் தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு நடக்க ஆரமித்தனர்..
“நீங்க ஊருக்கு புதுசா..?” என்று சிவரஞ்சனி கேட்க, “இல்லைங்க நாங்கள் இங்கு வந்து ஆறு மாதம் ஆகிறது.. நான் எங்க அக்கா வீட்டு கிணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்வேன்.. இன்று அங்கே யாரும் இல்லை என்பதால் இங்கு வரவேண்டியதாயிற்று” என்று பாரதி கூற
“அக்கா வீட்டு கிணற்றில் மட்டும் தான் தண்ணீர் செந்துவேன் என்று யாருக்காவது சத்தியம் செய்துக் கொடுத்துவிட்டீகளா பாரதி..” என்று குறும்பாகக் கேட்க முதலில் அவள் சொன்னது புரியாமல் முழித்த பாரதி,
“நீங்க சொல்வது புரியவில்லை சிவரஞ்சனி..” என்று சொல்ல, “இல்ல என்னிடம் தண்ணீர் சேந்த தெரியாது என்று சொன்னீங்களே.. அக்கா வீட்டில் மட்டும் நீங்கதானே தண்ணீர் சேந்த வேண்டும்..” என்று அவளை கேலிசெய்யும் வண்ணம் கூற அவளின் குறும்பை புரிந்து சிரித்த பாரதி
“எங்க அக்கா வீட்டில் தண்ணீர் செந்தவே தனியாக ஒரு ஆள் இருக்கிறான்.. குடத்தை மட்டும் கொடுத்துவிட்டால் போதும் அவனே தண்ணீரை சேந்திக் கொடுத்துவிடுவான்..” என்று பாரதி விளக்கம் கொடுக்க,
“இப்படி இருக்காதே பாரதி.. கொஞ்சம் வெளி உலகமும் தெரிந்துக்கொள்.. இங்கே யாரும் யாருக்கும் எதுவுமே அவசியம் இன்றி செய்ய மாட்டார்கள்.. என்னடா இப்போ சந்தித்த ஒருத்தி இப்படி சொல்றேன் என்று நினைக்காதீங்க.. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அப்படிதான் பாரதி..” என்று சிவரஞ்சனி சொல்ல சொல்ல பாரதிக்கு அவள் மேல் கோபம் வரவில்லை
அவளின் அக்கா பசங்களும் அதுதானே சொல்கின்றனர் என்று யோசிக்க, அதை தவறாக புரிந்துக் கொண்ட ரஞ்சனி, “பாரதி நான் வேண்டும் என்றே சொல்லவில்லை..” என்று வருத்தமாக சொன்னாள்
“ஐயோ ரஞ்சனி நான் உங்களை தவறாகவே நினைக்கவில்லை..” என்று கூறியவளைப் பார்த்து சிரித்த ரஞ்சனி,
“நீங்க இனிமேல் இங்கே வாங்க பாரதி.. நான் உங்களுக்கு சொல்லித் தருகிறேன்..” என்று சொன்னவள் அவள் வீடு நோக்கி நடக்க, பாரதியும் யோசனையுடன் வீடு நோக்கி நடந்தாள்
அவளின் வாழ்க்கையில் திருப்புமுனை இந்த சிவரஞ்சனி நட்பு.. அக்கா வீடு, அங்கே விட்டால் தன்னுடைய வீடு என்று இருப்பவள் அந்த பாசப்பறவைகள் கூட்டை விட்டு வெளியே வந்தது இந்த தோழியின் நட்பு மூலமாகத்தான்..
அவளுக்கு வெளி உலகத்தையின் இன்னொரு பக்கத்தை அறிமுகம் செய்தவள் இந்த ரஞ்சனி.. கோவிலுக்கு போகும் போதும், வரும் பொழுதும் மற்ற இடங்களுக்கு செல்லும் போதும் அப்படியே பார்த்து பழகியவர்கள் உயிர்தோழி என்ற நிலைக்கு பழகிவிட்டனர்..
செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை கோவிலும், காலை மாலை நேரத்தில் கிணத்தடியும், மற்ற நாட்களில் இவர்களாகவே ஒவ்வொரு காரணம் சொல்லி சந்திப்பை ஏற்படுத்திக்கொள்ள நட்பு இறுகியது..
இந்த நேரத்தில் பிரபாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்க, வீட்டில் வேலை செய்து முடியாமல் படுத்திருந்த பாரதியைப் பார்க்க வந்த ரஞ்சனி,
“இன்னைக்கு இத்தனை செய்யும் உன்னை யாரும் நினைக்க மாட்டாங்க பாரதி.. இதற்கு மேலும் நீ அக்கா அக்கா குழந்தை என்று உயிராக இருப்பதை நிறுத்து.. உனக்கு இவ்வளவு முடியவில்லையே யாராவது வந்து ஏதாவது கேட்டாங்களா..?” என்று பாரதியை மடியில் படுக்க வைத்துக் கொண்டு கஞ்சியை ஊட்டினாள் ரஞ்சனி..
வாசுதேவனும் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கடிதம் வர தந்தையைக் காண பொள்ளாச்சி சென்றிருந்தான்.. அவன் இருந்தால் பாரதியை இந்த நிலைக்கு விடவே மாட்டான் தங்கை மேல் அவ்வளவு பாசம் கடிந்து பேசகூட தெரியாத வெள்ளேந்தி மனிதன் வாசுதேவன்..
தன்னுடைய மகள் எழுந்திரிக்க முடியாமல் படுத்திருப்பதைப் பார்த்து கண்ணீர் வடித்தார் மீனாட்சி
“அம்மா நீங்க எதுக்கு அழுகிறீங்க.. நான் இவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன்..” என்று கூறியவள், பாரதியை மெல்ல எழுப்பி முகம் கழுவி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்..
அப்படி இருந்த நேரத்தில் தான் வேலைக்கு செல்ல ஆரமித்தாள் சிவரஞ்சனி.. முதல் போல இருவரும் ஒன்று சேர்ந்து சுத்தவிட்டாலும் அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது வீட்டிற்கு சென்று பார்த்து வரலாயினர்..
இவ்வாறு வேலைக்கு செல்லும் ஆசை மெல்ல மெல்ல பாரதியின் நெஞ்சில் வேருன்றியது..
பிரபா இரண்டு குழந்தையை வைத்து கஷ்டம் பட, இரண்டும் பெண் குழந்தை என்பதால் இரண்டில் ஒன்றை எடுத்து வளர்க்க ஆசைப்பட்டாள் பாரதி
அவளின் அண்ணன் ஊரில் இருந்து வந்ததும் அவனிடம் பேசிவிட்டு, “அக்கா இரண்டு குழந்தையில் ஒன்றை என்னிடம் கொடு அக்கா நான் வளர்த்துக் கொள்கிறேன்..” என்று கேட்டாள் பாரதி
முதலில் சம்மதிக்காத பிரபா, குடும்ப சூழ்நிலை இரண்டு குழந்தையில் ஒன்றை தங்கையிடம் கொடுத்தாள்.. “நிரஞ்சனா..” என்று பெயர் வைத்த பாரதி, அந்த குழந்தையை நல்ல நிலையில் வளர்க்க வேலைக்கு செல்ல நினைத்தாள் பாரதி
இப்படியே இரண்டு வருடங்கள் ஓடிவிட மெல்ல மெல்ல பாரதியை பெண்கேட்டு வந்து செல்ல இருந்தனர்.. பாரதி எப்பொழுதும் போலவே இருந்தாள்..
 




Kayal muthu

மண்டலாதிபதி
Joined
Feb 6, 2018
Messages
219
Reaction score
263
Location
Thanjavur city
hai sis,eppati bharthium pradhipanum meet pannuvargal ,,,work panna pora idam ore idama sis,,
unga matra storya vida intha story differenda irukku but rougha pora mathri feelaa irukku sis
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
enna sis hero& heroine uruku ulaitha uthamarkal rangeil irukanga............ ivarkal ulaipai udanpirapukale surantukirarkal:unsure::unsure::unsure:yatharthamana pathivu sis:):):):)
 




Priya tl

நாட்டாமை
Joined
Feb 6, 2018
Messages
92
Reaction score
94
Location
Tiruppur
Akka kaga Evlo hard work panranga...... akka ponna valakarakaga work poranga ... really the great bharathi ........pradeep & bharathi eppa meet pannuvanga :unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top