• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vaazhkaiyin Varnajalam - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 6
பிரதீபன், முரளி, ராகவன் மூவரும் வேறொரு தரிபட்டறையில் சேர்ந்தனர்.. எங்கே ராமு என்று தானே கேட்கிறீங்க..? ராமு ஒரு விபத்தில் இறந்துவிட, அவனது நினைவுகளை மறக்க, வேறொரு தரிபட்டறைக்கு மூவரும் சென்றனர்..
பிரதீபன் அவனுடைய பதினாறு வயதின் தொடக்கம் அவனுக்கு கடவுள் கொடுத்த ஒரு வரம் என்று சொல்லலாம்! அவன் வேலை செய்ய சென்ற இடத்தில் துளசி என்ற ஒருவரை சந்தித்தான்..
அவனது வாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம் அவரின் சந்திப்பு... இந்த துளசி யார் என்று யோசிக்கிறீங்க..?!
அன்றைய விடியல் யாருக்கு அழகாக விடிந்ததோ இல்லையோ பிரதீபன் வாழ்க்கையில் ஒரு நல்ல உதயம்..!
அன்று மூவரும் சேர்ந்து வேறொரு தரிபட்டறைக்கு செல்ல வழிமுழுதும் பிரதீபனுக்கு நல்ல உபதேசம் நடந்தது.. அவனோ எப்பொழுதும் போல நண்பர்கள் சொல்வதை அந்த காதில் வாங்கி இந்த காதில் விடு என்ற லெவலில் இருந்தான்..
அவர்கள் வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் என்ற நிலையில் மூவரும் காலை நேரத்தில் சாலையில் நடக்கும் போக்குவரத்து பார்த்து ரசித்த வண்ணம் நடந்துக் கொண்டிருந்தான் பிரதீபன்
இருப்பக்க தார் தார் சாலையில் காலை நேரம் எல்லோரும் ஏதோவொரு வேலைக்கு செல்ல, அவர்களைப் பார்த்த வண்ணம் நடந்து வர பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டு சாலையில் நடக்கும் சின்ன விபத்துகள் அதில் ஏற்படும் சின்ன காயங்கள் என்று மற்றவரின் அனைத்து விதமான அசைவுகளையும் கண்காணித்தபடியே வந்தான் பிரதீபன்..
“டேய் பிரதீபா அங்கேயும் போய் உன்னோட வழக்கமான சேட்டையை ஆரமித்து விடாதே..” என்று ராகவன் சொல்லிக் கொண்டு வர,
“இந்த பெண்ணிற்கு இந்த உடை நல்ல இல்ல இவள் சேலை கட்டினால் அம்மன் சிலை போல இருப்பாள்..” என்று அவனை கடந்து சென்ற பெண்ணைப் பார்த்துக் கூறினான்
“டேய் நாம் என்ன சொல்லிட்டு வரோம்! இவன் என்ன சொல்கிறான் பாரு..?” என்று தலையில் அடித்துக் கொண்டான் முரளி
“டேய் முரளி நான் தப்பான கண்ணோட்டத்தில் அந்த பெண்ணைப் பார்க்கவில்லை.. அவள் அணிந்திருக்கும் பாவாடை தாவணியை விடவும் அவளுக்கு சேலை தான் அழகாக இருக்கும்.. அதை தான் சொன்னேன்..” என்று பிரதீபன் சொல்ல
“அது அவளை திருமணம் செய்பவன் முடிவு பண்ணனும்..” என்று பல்லைக் கடித்தான் ராகவன்
“அடலூசுகளா.. ஒரு தையல் காரன் என்ன நினைப்பான்..?” என்று நண்பர்களிடம் கேள்வி கேட்க, “என்ன நினைப்பான் என்று நீயே சொல்லு..?” என்று கடுப்புடன் கூறினான் ராகவன்
“ஒரு பெண்ணிற்கு ஒரு ஜாக்கெட் தைக்கிறான் என்றால் அந்த பெண்ணிற்கு எப்படி தைத்தால் நல்ல இருக்கும்..? அந்த பெண்ணின் முகம், நிறம், ஆகியவற்றிற்கு தன்னுடைய ஜாக்கெட் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிப்பான்.. அதேபோல நானும் அந்த பெண்ணின் முகத்தின் அழகிற்கு அந்த பெண்ணிற்கு பாவாடை தாவணியை விடவும் சேலைதான் அந்த பெண்ணிற்கு அழகாக இருக்கும்..” என்று சொல்ல நண்பர்கள் இருவரும் அவனது விளக்கம் கேட்டு அசந்து போய் நின்றனர்..
சிலநொடிக்கு முன்னே பார்த்த ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் அவளின் அழகு சுடர் விடும் என்று நொடியில் கணித்த பிரதீபனைப் பார்த்து அசந்து விட்டனர்..
இப்படியே பேசிக்கொண்டே தரிபட்டறைக்கு வந்து மூவரும் சேர்ந்தனர்.. அவர்கள் தரிபட்டறைக்குள் நுழைந்ததும் முதலில் பிரதீபன் கண்டது துளசியைத்தான்..
“நீங்கள் மூவரும் தான் வேலைக்கு கேட்டு வந்ததா..?” என்று கேட்டாள் துளசி..
“ஆமாம் அக்கா.. முதலாளி இல்லைங்களா..” என்று கேட்டான் பிரதீபன்..
“முதலாளி வெளியே போயிருக்கிறார் தம்பி.. நீங்கள் வேலையை பாருங்கள்..” என்று சொன்னவள் தார் ஓட்டச் சென்றாள்..
மூவரும் அவள் காட்டிய இடத்தில் ஆளுக்கு இரண்டு தரிகளாக பிரித்துக்கொண்டு ஓட்ட ஆரமிக்க, டேப்ரேக்கார்டில் பாடல்கள் ஒளித்த வண்ணம் இருந்தது..
அந்த பாடல்கள் அனைத்தும் பிரதீபனுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.. அவன் அந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே வேகமாக வேலை செய்ய இவனைக் கண்காணித்த வண்ணம் வேலை செய்தனர் முரளியும், ராகவனும்..
ஆனால் போன முதல் வாரம் வரை அங்கே இருந்த யாரிடமும் பிரதீபன் பேசவே இல்லை.. அதை பார்த்த துளசி, “டேய் தம்பி உன்னோட பெயர் என்ன..?” என்று கேட்டாள்
“என்னோட பெயர் பிரதீபன் அக்கா..” என்று சொன்னவன் அவனின் வேலையை பார்க்க ஆரமித்தான்
“உன்னோட ஊர் எது பிரதீபா..?” என்று மெதுவாக பேச்சுக் கொடுத்தாள் துளசி
“சொந்த ஊர் ஈரோடு தான் அக்கா..” என்று சொல்ல, “நீ இப்பொழுது எங்கே இருக்கிறாய்..?” என்று கேட்டாள் அவள்
“நான் பள்ளிபாளையத்தில் இருக்கிறேன் அக்கா..” என்று தன்னிடைய விவரம் சொன்னவன், வேலையிலும் கவனம் செலுத்தினான்
“உன்னுடன் பிறந்தவங்க..?” என்று அவள் கேட்க, “அக்கா, அண்ணன், நான் வீட்டில் கடைசி பையன்..” என்று சொல்ல,
முரளி ராகவனிடம், “டேய் இங்கே பேசுவது பிரதீபன் தானா..? என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை..” என்று சொல்ல,
“எனக்கும் அதுதான் ஒன்றுமே புரியலை முரளி..” என்று சொன்னவன் வேலையில் கவனம் செலுத்த இரண்டாவது வார சம்பளமும் வாங்கிவிட்டான்..
மூன்றாவது வாரத்தின் தொடக்கத்தில் அவனது சேட்டைகள் கொஞ்ச கொஞ்சமாக வெளிவர ஆரமித்தது..
அன்றும் அது போலவே அவனுக்கு பிடித்த பாடல்,
“செம்மறியாடே செம்மறியாடே செய்வது சரியாய சொல்
செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலமா சொல்..” என்று பாடல் வரிகள் பாட, அந்த நேரம் தார்குச்சிகள் தீர்ந்துவிட, அதையேடுக்க உழவன் மகனில் ராதிகா அந்த பாடலில் ஓடுவது போலவே ஓடியவனைப் பார்த்த முரளியும், ராகவனும் தலையில் அடித்துக் கொண்டார்கள்
அவன் தரிபட்டறைக்குள் நுழைந்தது முதலிருந்து பிரதீபனைப் பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது! வேலையைக் கூட ரசித்து செய்ய சிலரால் மட்டுமே முடியும்.. அப்படி விருப்பத்துடன் செய்தால், வேலையில் இருக்கும் சோர்வு தெரியாது..
அவன் தார்குச்சியை எடுத்துவிட்டு திரும்ப துளசி நன்றாகவே சிரித்துவிட்டாள்.. அவள் சிரிப்பதைப் பார்த்த பிரதீபன், “நீங்க எதுக்கு அக்கா சிரிக்கிறீங்க..” என்று முகத்தில் அரும்பிய சிரிப்புடன் கேட்டான் பிரதீபன்
“உன்னைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. இந்த வயதில் எதைப்பற்றியும் கவலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..” என்று கேட்டாள் துளசி
“கவலைப்படுவதால் மட்டும் கவலை வந்து நமக்கு சோறு போடுமா அக்கா..?” என்று எதிர்கேள்வி கேட்ட பிரதீபனைப் பார்த்து திகைத்தாள் துளசி
“அப்போ உனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லையா..?” என்று சிரிப்புடன் கேட்டாள் துளசி
“இல்லையே இப்போதைக்கு எனக்கு இந்த பாட்டை மறுபடியும் இன்னொரு முறை கேட்டால் மட்டும் போதும்.. இப்போதைக்கு என்னோட தேவை இதுதான்..” என்று சொல்ல அந்த பாட்டும் முடிந்திருந்தது..
“ஒருவருக்கு தேவை வருவதால் மட்டுமே நாளை பற்றிய சிந்தனை வருகிறது, அந்த சிந்தனை வலுபெற்று கவலையாக மாறுகிறது.. இந்த நொடியை மட்டுமே நேசித்துப் பாருங்கள் அதன் சுவையே தனி!” என்று சொன்னவன் தன்னுடைய வேலையில் ஈடுபட்டான்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“டேய் பிரதீபா.. அந்த படத்தில் ராதிகா கூட இந்த லெவலில் ஓட்டியிக்க மாட்டாங்க..” என்று சொன்ன முரளி சிரித்து விட்டு, “இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாயோ..” என்று சொல்லிவிட்டு சென்றான்
இப்படி சின்ன சின்ன விஷயத்தில் அவனின் அணுகுமுறை வேறுபாடாகவே தெரிந்தது.. அது மற்றவர்களை மிகவும் ஈர்த்தது.. முதலாளி முதல் கொண்டு அவனுடன் பேசிப்பழகும் பொழுதும், ஒருவருக்கு ஏற்றது போல நடப்பது அனைவரையும் அவனின் பக்கம் ஈர்த்தது..
இப்படி இவனின் சேட்டைகளைப் பார்த்து துளசிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.. வீட்டில் உள்ள அனைவருக்கும் அவனைப் பற்றிய விவரங்களை சொல்லி வைத்திருந்தாள்..
அவனைப் பார்க்காமலே அவளின் குடும்பத்தில் அவனையும் ஒரு நபராக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவனை துளசியின் குடுமபத்திற்கு மிகவும் பிடித்துவிட்டது..
அவளின் வீட்டில் எது செய்தாலும், என்ன வாங்கினாலும் அவனுக்கும் சேர்த்து வாங்கிவிடுவார் துளசியின் அப்பா.. இப்படி இவர்களின் பாசம் படிப்படியாக வளர்ந்தது..
நான்காவது வாரம், காலையில் கையில் கதை புக்குடன் வந்த துளசியிடம், “அக்கா நீங்க கதை எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்க..? நானும் நல்ல படிப்பேன்..” என்று சொல்ல
“இந்த கதையை படி..” என்று அவனிடம் ஒரு சின்ன கதை புத்தகத்தை நீட்டினாள்
அவனும் வேலையைப் பார்த்துக்கொண்டே அந்த கதையை படித்து முடித்துவிட்டு, அந்த கதாநாயகன் சொல்லும் வரிகளை மனதில் கொண்டுவந்து கற்பனை செய்துப் பார்த்தான்..
“இந்த கதையில் வரும் கதாநாயகன் எப்படி இருக்கிறான்..?” என்று சாப்பிடும் போது கேட்க, “ம்ம் அவனுக்கு என்ன அழகாக இருந்தான்..” என்று எங்கோ பார்த்துக்கொண்டே கூறினான்
“என்னடா கதை பிடிக்கலையா..?” என்று துளசி ஒருவிதமான குரலில் கேட்க, “பிடித்தா..? இல்லையா..? என்பது முக்கியமானது கிடையாது அக்கா.. நாம் நினைப்பது போல எதுவும் நடப்பது இல்லை என்ற ஒரு ஆழமான கருத்தை முன் வைக்கிறது இந்த கதை..” என்று சொல்ல,
“யாரும் இல்லாமல் ஒரு அர்த்தம் அற்ற வாழ்க்கை வாழ்வது ஒரு வாழ்க்கையா அக்கா..?” என்று அவன் கேட்க, அவனின் கேள்வியில் மறுபடியும் திகைத்தாள் துளசி
“ஏன் இப்படி சொல்கிறாய்..?” என்று மறுபடியும் கேட்க,
“எனக்கு நான் மட்டும் போதும் என்று தனிமையில் கடைசி வரையில் வாழும்போது அந்த வாழ்க்கை கதைக்கு சரியாக இருக்கலாம்.. ஆனால் நிஜம் வேறு அக்கா.. எப்பொழுது மற்றவர்களை சுற்றி தனது வாழ்க்கையை அமைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமாக இருக்கும்..” என்று சொல்ல அவனின் விளக்கம் கேட்டு சிரித்த துளசி,
“இன்னும் வாழ்க்கைக்கு என்ன என்ன வர்ணம் பூச போகிறாயோ..” என்று கேட்டு விட்டு சாப்பிட ஆரமித்தாள் துளசி..
“அது எனக்கு எத்தனை வர்ணத்தைப் பூசுகிறதோ அத்தனை வர்ணமும் வரும்.. இன்னும் எத்தனை வர்ணம் இருக்கிறதோ அத்தனை வர்ணமும் பூசுவேன்.. என்னோட எண்ணங்கள் பொருத்து வர்ணங்கள் மாறும்..” என்று விளையாட்டு போல விளக்கம் கொடுத்துவிட்டு எழுந்து சென்றான் பிரதீபன்
அதன் பிறகு நாட்கள் அழகாக நகர்ந்தது, “அக்கா இந்தாங்க இது நான் உங்களுக்கு வாங்கிட்டு வந்தேன்..” என்று பிறந்தநாள் அன்று துளசிக்கு புதிய சேலை எடுத்துத்தந்தான்..
அந்த சேலையைப் பார்த்த துளசி, பிரதீபனைப் பார்த்து கண்கலங்கி விட்டாள்.. அவளின் கண்களுக்கு அவளின் அண்ணனின் பாசம் அவன் ரூபத்தில் தெரிந்தது..
“டேய் என்னுடைய அண்ணா தான் எனக்கு இப்படி எல்லாம் செய்வான்.. இப்போ எனக்கு இன்னொரு தம்பியும் இருக்கிறான் என்று சந்தோசமாக இருக்கிறது..” என்று சொல்ல, அவனும்
“எனக்கு அக்கா இருக்கிறாள் ஆனால் நான் உங்களின் ரூபத்தில் என்னோட மணிமேகலை அக்காவைப் பார்க்கிறேன்.. அக்கா உன்னை எங்கே கல்யாணம் பண்ணிக்கொடுத்தாலும், என்னை மறக்க கூடாது..” என்று பிரதீபன் பாசத்துடன் சொல்ல,
“நீ மாப்பிள்ளை பார்த்து ஓகே என்று சொன்னால் நான் அவரைக் கட்டிக் கொள்கிறேன் போதும்மா..” என்று கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையும் மலர சந்தோசமாகக் கூறினாள் துளசி..
அவனுடைய எட்டு வயதில் இருந்து அவன் எந்த அக்காவின் பாசத்தை தன்னுடைய அக்காவிடம் கூட தேடினானோ அந்த மணிமேகலை இப்பொழுது துளசியின் ரூபத்தில் அவனுக்கு பரிசாக வழங்கினார் கடவுள்..!
இதுதான் வாழ்க்கையின் வர்ணஜாலம் என்று சொல்வதா..? நாம் பார்க்க நினைத்து முடியாமல் போனவர்களில் பலர் இன்னும் இந்த பூமியில் இருக்கின்றனர்.. ஆனால் அவர்களின் உருவம் மட்டும் வேறு..
அவனுடைய எட்டு வயதில் இருந்து தேடிய பாசம் அவனுடைய பதினாறு வயதில் நிறைவடைந்தது இந்த துளசியால்..!
நாள்கள் யாருக்காகவும் நிற்காமல் ஓடியது.. அடுத்த வருடத்தில் துளசிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்க பிரதீபன் உடல்நிலையும் ரொம்பவே மோசம் ஆனது.. !
அவனுக்கு அந்த மணிமேகலை போல இந்த துளசி அக்காவும் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ..?! என்ற பயம் வந்தது!
அப்பொழுது இந்த விஷயம் ராகவன் மூலமாக துளசிக்கு தெரிந்து துளசி, “பிரதீபனைப் பார்க்க நான் நாளை வருகிறேன் என்று சொல்லு..” என்று ராகவனிடம் சொல்லி அனுப்பினார்
மறுநாள் காலையில் துளசி பிரதீபன் வீட்டிற்கு வர, அவளுடன் வந்தார் அன்பரசு..
“டேய் இவர்தான் நான் திருமணம் செய்துக் கொள்ள போகிறவர்..” என்று கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த பிரதீபனிடம் கூறினாள் துளசி..
அன்பரசு நேராக கயிற்றுக்கட்டிலில் வந்து அமர்ந்தவர், பிரதீபனின் பார்வை தன்மேல் நிலைப்பதைப் பார்த்து, “நான் உன்னிடம் ஒன்று மட்டும் சொல்கிறேன்.. உன்னோட அக்கா துளசியைப் பார்க்க நீ எப்பொழுது வேண்டுமாலும் என்னுடைய வீட்டிற்கு வரலாம்.. உன்னுடைய நட்பை நான் எப்பொழுதும் தடை செய்ய மாட்டேன்..” என்று அன்பரசி அவனிடம் சொல்ல,
அதன்பிறகு அவனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு மெல்ல மெல்ல சரியாகி, துளசியின் திருமணத்திற்கு வந்தான்.. அவன் முன்னிலையில் தான் துளசிக்கு திருமணம் நடந்தது..!
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis:):):):):)
எனக்கு நான் மட்டும் போதும் என்று தனிமையில் கடைசி வரையில் வாழும்போது அந்த வாழ்க்கை கதைக்கு சரியாக இருக்கலாம்.. ஆனால் நிஜம் வேறு அக்கா.. எப்பொழுது மற்றவர்களை சுற்றி தனது வாழ்க்கையை அமைத்துப் பாருங்கள் வாழ்க்கை அர்த்தமாக இருக்கும்..
arumaiyana varigal sis(y)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top