Latest Episode Vannam theda vaarayo 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

Author
Author
Joined
Jan 20, 2020
Messages
245
Reaction score
360
Points
63
Location
Location searching...
சிறகடித்து பறக்க
வேண்டும் என்ற ஆசையை
மண்ணுள் புதைத்துவிட்டு

கூண்டினிலே இருந்து
யாருக்கும் இரையாகமல்
தன்னை காத்துக்கொள்கிறது.....

கதிரவன் தன் காதலியை காணும் நோக்கில் காதலுடன் காத்து கொண்டு இருக்க ,,ஆனால் மதியோ தன் காதலனுடன் விளையாடும் நோக்கில் கண்ணாமூச்சி ஆடும் ஆசையில் விடியலுக்காக காத்து கொண்டு இருந்தது....

அங்கு இயற்கை விளையாடி கொண்டு இருக்க,,,இங்கு அவளது கனவுகளை எல்லாம் கலைக்கும் விதமாக அந்த அலாரம் அடித்தது... அலாரம் சத்தத்தை கேட்டு வேகமாக எழுந்து அமர்ந்தாள் அந்த வீட்டின் அடிமை .

விடியற்காலை நான்கு மணி அளவிலே எழுந்து ,காலை கடன் அனைத்தையும் முடித்து விட்டு வந்தவள்,,தன் படுக்கையை சரி செய்து ,விட்டில் உள்ளோர் அனைவருக்கும் டீ போட்டு வைத்து விட்டு .. அவளுக்கு மட்டும் ஒரு கப்பில் டீ ஊத்தி கொண்டு தனது அறைக்கு சென்றவள் பால்கனியில் நின்று கொண்டு இயற்கை ஆடும் ஆட்டத்தை பார்த்து கொண்டே டீ குடிக்க தொடங்கினாள் அவள்...

டீ குடித்து முடித்தவுடன் ,கப்பை சமையலறையில் வைத்து விட்டு ,,ஒரு கையில் ஒரு வாலி தண்ணியும் மறு கையில் வெளக்கமாறு மற்றும் கோலமாவும் எடுத்து கொண்டு வெளியே வந்தவள் ,வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து அந்த வீட்டை அழகு படுத்தும் விதமாக கோலத்தை போட்டு கொண்டு இருந்த நேரம்,,

"நந்தினி நந்தினி எங்க இருக்க நீ? இன்னும் எனக்கு டீ கொண்டு வரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க" என்று கத்திகொண்டே அறையில் இருந்து வெளியே வந்தார் கங்கா .

"இதோ வரேன் அத்தை "என்ற குரலில் நடுக்கம் தெரிந்தது. வேகமாக கோலத்தை போட்டவள் அதே வேகத்துடன் சமையலறைக்குள் சென்று கங்காவிற்க்கு டீ எடுத்து சென்று கொடுத்தாள்.

"ஒரு வேலையாது ஒழுங்கா செய்றியா நீ , எதுக்கெடுத்தாலும் என்ன கத்த வைக்கிறதே உனக்கு ஒரு வேலையா போச்சி" என்று திட்டிக்கொண்டே அந்த டீயை குடித்தார் .

"சாரி அத்தை ...!! இந்த ஒரு தடவை என்ன மன்னிச்சிடுங்க . நாளையில் இருந்து கரட்கா டீ கொண்டு வந்து கொடுத்தறேன்" என்று பயத்துடனே கூறினாள்.

"சரி போய் தொல என் கண் முன்னாடி நின்னுட்டு இருக்காத,,சீக்கிரமா சமைக்கிற வேலைய போய் பாரு, பசங்க எல்லாரும் எந்திருச்சிரு வாங்க" என்று கங்கா சொல்ல "சரி" என்று கூறிவிட்டு நந்தினி வேகமாக சென்று சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கங்காவின் கணவர் சிவசங்கரன் எழுந்து வந்து சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாள் வாசிக்க தொடங்கினார்.அவர் வந்ததை பார்த்த நந்தினி உடனே அவருக்கு டீ சூடு பண்ணி எடுத்துட்டு வந்து அவரிடம் நீட்டினாள்.

அவரும் அவளிடம் இருந்து அந்த கப்பை வாங்கிக்கொண்டு "குட் மார்னிங் அம்மு "என்று இன்முகத்துடன் சொல்ல

அதற்கு அவள் தன் கண்களால் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருப்பதை கவனித்த பெரியவர் , "உங்க அத்தை குளிக்க பொய்டா டா அம்மு" என்று சொல்லவும் தான் நந்தினிக்கு உயிரே வந்தது.

"குட் மார்னிங் மாமா,, நான் ஒரு நிமிஷத்துல பயந்து பொய்டேன் மாமா ,எங்க அத்தை இத கேட்டுட்டாங்களோ என்று..."

"நீ இப்படி இருக்கிறதுனால தான் அவ உன்ன இப்படி பாடா படுத்துறா .என்னோட அம்மு எப்ப தான் ஜான்சிராணி மாதிரி ஆக போறாளோ" என்று விட்டத்தை பார்த்து கூறி கொண்டு இருக்க "அவ கனவுல கூட ஜான்சிராணி ஆக மாட்ட மாமா" என்று கூறிய படியே கவிபாரதியும் சுஜித்ராவும் வந்தனர்.

"ஹே ! என்னங்கடா இது ரெண்டு பேரும் இன்னைக்கு சீக்கிரமா எந்துரிச்சுடிங்க போல .அப்போ இன்னைக்கு மழை தான் வர போகுது பா" என்று கூறிக்கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தான் கங்காவின் இரண்டாம் புதல்வன் ஜீவபிரக்காஷ் .

"ஹே ஜீவா ரொம்ப பேசாத சரியா ,, எங்கள தூங்க விடாம தான் காலையிலையே வந்து தண்ணி ஊத்தி எழுப்பி விட்டுறியே அது இல்லன்னா பாட்டு சத்தம்மா போட்டு தூங்க விடாம பண்றது ,,உனக்கு இத தவிர வேற வேலையே இல்லையா " என்று சுஜித்ரா சிறு கோபத்துடன் கேட்டாள்.

"அட என் அத்த பெத்த ரத்தினமே !!எனக்கு லீவ்ல என்ன பண்றதுன்னே தெரியலையா , சும்மா இருக்க போர் அடிக்குது. அதான் இந்த ஒரு நல்ல வேலைய பாக்குறேன். இதுவும் ஒரு சோஷியல் செர்விஸ் மா "என்று அவள் தோள்களில் கை போட்டு கொண்டு சொல்ல

"இதுல என்ன சோஷியல் செர்விஸ் இருக்கு" என்று குழந்தை போல் கேள்வி கேட்ட நந்தினியை பார்த்து ஜீவா வாய்விட்டு சிரிக்க சுஜி தான் தன் அக்காவை பார்த்து கோபமாக முறைத்து வைத்தாள்.

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமா நீ என்னனா சிரிக்கிற அவ என்னனா என்ன பார்த்து முறைக்கிறா . நான் எதாவது கேட்க கூடாதா கேள்விய கேட்டுட்டேனா என்ன" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க...

அவளை பார்த்த சிவசங்கரனிற்கு 'இவ இப்படி வெள்ளந்தியா இருக்காளே' என்று மனதில் தோன்ற சிறு பயமும் சேர்த்து தொற்றிக்கொண்டது அவருக்கு.

"அட என்ன அம்மு நீ இப்படி இருக்க...நீ கஷ்ட பட்டு அவுங்கள டெய்லியும் எழுப்பி விடுற .. அது மட்டுமா எல்லா வேலையும் நீ தான் பாத்துக்கிற ..அதான் உனக்கு வேலைய குறைக்கலாம்னு தான் பண்ணேன் அம்மு" என்று சிறு பிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல ..

"சரி அப்பு" என்றாள் ஜீவாவின் அம்மு.

"அட என்ன அக்கா நீ இப்படி இருக்க "என்று தலையில் அடித்து கொண்டாள் சுஜி.

இதை அனைத்திற்கும் வெறும் சிரிப்பை மட்டுமே கொடுத்து கொண்டு இருந்தாள் கவி.

"காலைலயே இங்க என்ன மீட்டிங் உங்களுக்கு "என்று நந்துவை பார்த்து கேள்வி கேட்டபடியே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் அந்த வீட்டின் மூத்த வாரிசான சூர்யா‌.

"அண்ணா சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம் "என்று ஜீவா பதில் சொல்ல அதற்கு சூரியாவோ " உங்க யாருக்கும் எந்த வேலையும் இல்லையா" என்று சிறு கோபத்துடன் கேட்க

"மாமாக்கு டீ கொடுக்க வந்தேன் அத்தான். அப்போ தான் இவுங்க எல்லாரும் இங்க வந்தாங்க அதான் பிரஷ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன்" என்றாள் நந்து.

"சரி" என்று மட்டும் அவளை பார்த்து பதில் கூறிவிட்டு மற்றவர்களிடம் ஒரு பார்வையை செலுத்த அடுத்த நொடி அந்த இடமே காலியாக இருந்தது.

இதை அனைத்தையும் கங்கா அவள் அறையில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார்.‌ அவளுக்கு தன் வளர்ப்பை நினைத்து அத்தனை பெருமையாக இருந்தது.

நந்தினி வேக வேகமாக சமையல் செய்ய ஆரம்பித்தாள் அனைவருக்கும்...

சிவசங்கரனின் தங்கை மகள் தான் நந்தினி,கவிபாரதி மற்றும் சுஜித்ரா. தங்கையும் அவளது கணவரும் ஒரு விபத்தில் இறந்து விட ,, இவர்கள் மூவரையும் தான் பார்த்து கொள்வதாக கூறி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கங்காவிற்கு இரண்டு புதல்வர்கள்.மூத்த பையன் சூர்யா..அன்னை சொல் பேச்சு தவறாத பையன். அன்னையின் சொல்லே வேத வாக்காக கொண்டவன். இதனால பிற்காலத்தில் இவன் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க போகிறான். ஒரு கம்பெனியில் ஆர்கிடெக்டாக வேலை பார்க்கிறான்.

இரண்டாவது பையன் ஜீவபிரக்காஷ் .தன் அன்னையின் குணத்தை எதிர்த்து நிற்பவன்.+2 முடித்துவிட்டு வீட்டில் சோஷியல் செர்விஸ் செய்கிறேன் என்ற பெயரில் வீட்டை அலங்கோலம் பண்ணி கொண்டு இருப்பவன்.

வயதில் சிறியவனாக இருந்தாலும் நந்தினிக்கு தந்தையாக விளங்குகிறான். அதே போல் நந்தினியும் ஜீவாவிற்கு அன்னையாக இருந்து வருகிறாள். நந்தினிக்காக துணை நிற்கும் முதல் ஜீவன் இவன் தான்.

கவிபாரதி மற்றும் சுஜித்ரா இருவரும் இரட்டையர்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள்.ஒரே வயிற்றில் சில நிமிடங்கள் கடந்து பிறந்தாலும் ,இவர்களது குணம் வெவ்வேறு ‌.சுஜித்ரா எதையும் சாதற்னமாக எடுத்து கொள்ளும் பெண்.வம்பிலுப்பதில் முதல் இடமே தரலாம் என்ற அளவிற்கு அடுத்தவர்களை வம்பிலுப்பாள் .

ஆனால் இவளுக்கு எதிர்மறை தான் கவிபாரதி .குணத்தில் தன் அக்கா நந்தினியை உரித்து வைத்து இருக்கிறாள். நந்தினியை விட ஒரு படி மேல் இவள் . அழுகையும் சிரிப்பும் மட்டுமே இவளது பதிலாக விளங்கும்.இவள் அதிகமாக யாரிடமும் நட்பு வைத்து கொள்ள மாட்டாள்.அவளுக்கு எல்லாமே அவளது குடும்பம் தான்.

கங்கா ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டே நந்தினி செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் அவளை திட்டிக்கொண்டே இருந்தார்.

இதை கண்டு ஜீவாவிற்கு கோபம் வர..,, வேகமாக தன் அறையை விட்டு வெளியே வந்து நந்தினியிடம் சென்று நின்று கொண்டு சிறு சிறு வேலைகளை செய்தான் .அதை பார்த்த கங்காவிற்கு கோபம் சுர் என்று ஏறியது...

"டேய் ஜீவா ..!!! உனக்கு சமையலறைல என்ன வேலை ..பொண்ணுங்க தான் சமையலறைல இருக்கனும் . மொதல்ல அங்க இருந்து வெளிய வா" என்று சிறு கோபத்துடன் சொல்ல...

அதற்கு ஜீவாவோ" இல்ல மா !நம்ம வீட்டில இருக்கிற எல்லா பெண்களும் சமையலறைக்குள் வர மாதிரி எனக்கு தெரியலயே ...நீங்க சொல்றதெல்லாம் அந்த காலம் ,இப்போ எல்லாமே இங்க சரி சமம் தான். ஆண் பிள்ளைகள் சமைக்க கூடாதுன்னு இங்க சொல்ல யாருக்கும் உரிமை இல்லையோ அதே போல தான் பெண் பிள்ளைகள் தான் சமைக்கனும் சொல்லவும் உரிமை இல்லை .அதே மாதிரி பெண் பிள்ளைகள் மட்டும் தான் சமைக்க வேண்டும் சொல்ற இந்த சமுதாயத்தை நான் எதிர்க்கிறேன் மா" என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல அங்கு அவன் சொன்ன பதில்க்கு கங்காவிடம் இருந்து வெறும் முறைப்பே பதிலாக இருந்தது.

இங்கே இனி இருந்தால் நந்தினி தனக்கு வகுப்பு எடுப்பால் என்று தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

சூர்யா ,கவி மற்றும் சுஜி கிளம்பி அவர் அவர்களது அறையில் இருந்து வெளியே வந்தனர்.

அவர்கள் மூவருக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்து விட்டு, லஞ்ச் பாக்ஸில் பேக் பண்ணி டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள் நந்தினி ‌.

பின்னர்,, அனைவரும் டைனிங் டேபிளில் வந்து அமர , ஜீவா மட்டும் சோஃபாவில் அமர்ந்து கொண்டு டிவி பார்க்க ஆரம்பித்தான்.

"ஜீவா வந்து சாப்பிடு" என்று சிவசங்கரன் கூற.,

"இல்ல பா எனக்கு இப்போ பசிக்கல நான் அப்புறமா சாப்பிட்டுகிறேன் " என்று கூறி விட்டு டிவியை பார்க்க தொடங்கினான் ஜீவா.

சிவசங்கரனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ஏதோ புரிந்ததாக
அமைதி காத்தார்.

பின்னர் அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலுக்கு வந்தனர்.

"சரி மா எனக்கு ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் "என்று தன் அன்னையிடம் கூறிவிட்டு சூர்யா தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். சூர்யா சென்று சில நிமிடங்களில் கவியும் சுஜிவும் பள்ளிக்கு கிளம்பினர்.

கங்காவும் சிவசங்கரனும் அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர்.

நந்தினி சமையலறையை சுத்தம் செய்து விட்டு ,, அவளது அறைக்கு சென்று , சிறிது நேரத்தில் தயாராகி அறையை விட்டு வெளியே வந்தாள் .

நேராக பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தன் தந்தை அன்னையின் புகைப்படத்திற்கு முன் நின்று கும்பிட்டு விட்டு நேராக சமையலறைக்கு சென்றாள்.

தனக்கு ஒரு டிஃபன் பாக்ஸில் பேக் பண்ணிட்டு தன் பையினை எடுத்து கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க ,,"நில்லு அம்மு" என்று ஜீவாவின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

"சொல்லு அப்பு ! ஹாஸ்பிடல்க்கு வேற டைம் ஆகுது" என்று அம்மு கூற..,,

"சாப்பிட்டு போ அம்மு சாப்பிடாம போகாத டா "என்று அக்கறையுடன் சொல்ல

"இல்ல அப்பு எனக்கு பசிக்கல நான் ஹாஸ்பிடல் கேன்டீன்ல எதாவது வாங்கி சாப்பிட்டுக்கிறேன் "

"ஏன் அம்மு என்கிட்டயே பொய் சொல்ற ..எப்போ இருந்து என்கிட்ட பொய் சொல்ல ஆரம்பிச்ச "என்று சிறு கோபத்துடன் சொல்ல

"அ....அத்....அது வந்து நான் பொய்லாம் சொல்லல அப்பு"

" சரி அம்மு நான் உன்ன நம்புறேன் "என்று கூறிவிட்டு அவளை அழைத்து கொண்டு டைனிங் டேபிள்ற்கு சென்று அவளை அமர வைத்தவன்,, ஒரு தட்டில் மூன்று இட்லியை எடுத்து வைத்து விட்டு அவளிடம் திரும்ப அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

ஜீவா அவளுக்கு ஒரு வாய் இட்லியை எடுத்து ஊட்ட ,, அதற்கு அவளும் அவனுக்கு ஒரு வாய் ஊட்ட ஆரம்பித்தாள்.

இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

"சரி வா அம்மு நானே உன்ன கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டறேன் "என்க அவளுக்கு ஒரு நிமிடம் அவள் உடலில் நடுக்கம் ஏற்பட்டது.இதை கவனிக்காத அவன் வா போகலாம் என்றிட

"இல்ல.....இல்ல.... வேணாம் ஜீவா நானே போய்கிக்றேன் "என்றாள் வேகமாக .

"இல்ல வேணாம் அம்மு நானே உன்ன கூப்பிட்டு போறேன் "என்று பைக் கீயை எடுத்து கொண்டு வெளியே வந்து,, வண்டியை எடுத்துக்கொண்டு நின்றிட .. அவள் இன்னும் வெளியே வரவில்லை என்று தெரிந்து" அம்மு அம்மு வெளிய வா உனக்கு டைம் ஆச்சுன்னு சொன்னல "என்று கத்த இதோ வந்துட்டேன் என்று கூறிவிட்டு வெளியே வந்து வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

நந்தினி சிறு பயத்துடனே அவனுடன் சென்றாள்.

"ஹே அம்மு .! ஹாஸ்பிடல் வந்து ஐஞ்சு நிமிஷம் ஆச்சு"

ஒஅப்போது தான் சுயநினைவிற்கு வந்தவள் வேகமாக இறங்கி அவனுக்கு பாய் சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் உள்ளே சென்று விட்டாள்.

தேடல் தொடரும்...
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
8,282
Reaction score
20,756
Points
113
Location
India
Yenthan inga ganga ipdi irukkalo? Athan pavam ella velaiyum nandhu thana panra? Apram ennavam avaluku
 
banumathi jayaraman

Well-known member
Joined
Jan 17, 2018
Messages
28,742
Reaction score
68,749
Points
113
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அஷ்வதி செந்தில் டியர்
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top