• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் சகோதர சகோதரிகளே... வாரத்திற்கு இரண்டு பதிவு தர முயற்சி செய்தேன்... ஆனாலும் என்னால் குடுக்க முடியவில்லை...சாரி... இன்றே தர முடியாமல் சென்றிருக்கும் என் மீது செம காண்டில் இருக்கும் என் இனிய தோழிகளை எண்ணியே இன்று வந்தேன்... அடுத்த பதிவை படித்து கருத்தை வழக்கம் போல் பகிர்ந்து கொள்ளுங்கள்... நான் என் வைவா வை முடித்து தெம்போடு உங்களிடம் பேச வருகிறேன்... நன்றி.. நன்றியோ நன்றி...

வராக நதி - 10

ருத்ராவை ஆற்றில் பார்த்ததும் தோன்றிய அதே உணர்வில் திடுக்கிட்டு விழித்த கார்முகிலன்... பின்பு அது கனவு என்பதை தான் தன் அறையில் இருப்பதை அறிந்த பின்பே உணர்ந்தான். பின்பு தலையை உலுக்கி... இன்னும் அவங்க வீட்டுல இருந்து போன் வரலையே னு நினைச்சிட்டு தூங்குனா இப்படி தான் ஆகும் என்று மனதில் நினைத்து போனில் மணிபார்க்க அது அதிகாலை மூன்று மணி என்றது.

ஏதோ தோன்றவும் மெயிலை தேடிப் பார்த்தான் முகிலன். அதில் இரவு ருத்ரா தான் வேலைக்கு சேர்வதாகவும் அதற்கான விதிமுறையை அனுப்பி வைக்குமாறும் கேட்டிருந்தாள். அதை அனுப்பிய கையோடு அவளது பயோடேட்டாவையும் அனுப்புமாறு கேட்டு மெயில் அனுப்பியவன்... விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

அடுத்த நாள் காலை ருத்ராவிற்கு வழக்கம் போல் சூர்ய நமஸ்காரத்தில் தான் விடிந்தது. ஒரே வித்தியாசமாக வராக நதிக்கு சென்று குளிக்க பெற்றோர்களால் தடை விதிக்கப்பட்டது நேற்று நடந்த விபத்தால்.

ஆகையால் இருவரும் அவர்களது அறையில் உள்ள குளியலறையில் குளித்துவிட்டு வந்தனர்.
பின்பு முத்ரா...


“அக்கா நான் நேற்று கிளாஸ்க்கு போகலை... இன்றும் போகலைன்னா இன்னும் ஒரு வாரத்துல வர எக்ஸாம் எழுத விட மாட்டாங்க... ப்ராக்டிகல் முடிஞ்சிருச்சி.. அடுத்த வாரத்துக்கு அப்புறம் நான் பியுடிசியன் (beautician) யு க்நொவ்...? (u know...?)”

என்று பெருமை பேசிச்சென்றாள்.

அவள் சென்றதும் தான் நேற்று அவள் அனுப்பிய மெயில் நியாபகம் வந்தது.

நேற்று மதியமே தாய் தன்னிடம் கார்டு தந்துவிட்டு... கீழே நடந்த அனைத்தையும் கூறியதும் அவளுக்கு தந்தை தன்னுடன் பேசவில்லை என்பதே மிகுந்த மன உளைச்சலை தந்தது...

“நாளை நாம போய் அப்பாகிட்ட பேசணும்”

என்று முடிவு செய்தாள்.

அதன்பின் அவள் கார்டை பார்க்க... அதில் கார்முகிலன் என்று தங்க நிறத்தில் மின்னியது. மேலும் அவனது போன்நம்பர் மற்றும் மெயில் ஐடி இரண்டும் இருக்க.. போன் செய்வதா...? இல்லை மெயில் அனுப்புவதா...? என்று குழம்பி ஒரு வழியாக மெயில் அனுப்பியிருந்தாள்.

கணினி முன் அமர்ந்தவள்... கார்முகிலன் கேட்ட விவரத்தை, விதிமுறைகளை படித்து முடித்த பின் அனுப்ப ஆரம்பித்தாள்.

கோவையில்.. அபி கன்ஸ்ட்ரக்ஷன் MD அறையில்..

கார்முகிலன் அங்கிருந்த டிசைன்களை பார்வையிட்டு கொண்டிருந்தான்... இந்திய அளவில் மிகப்பெரிய ப்ராஜெக்ட் இது... பல கம்பெனிகளுடன் போட்டி போட வேண்டியதும் இருக்கும்... அதற்காக தான் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறான்.

ஆனால் எதுவும் அவனுக்கு திருப்தியாக இல்லை... டிசைன்கள் நன்றாக இருந்தாலும்.. இவை இந்திய அளவிலான போட்டியை தாங்குமா என்பது சந்தேகமே...

ஏனெனில்...

பிரபலமான ஆப்பிள் கம்பெனி இந்தியாவில் நன்றாக காலூன்ற நினைக்கிறது... அதனால் இங்கு ஒரு அலுவலகம் கட்ட பிரியப்பட... ஐம்பது ஏக்கர் நிலமும் தயாராக ஆந்திராவில் உள்ளது... எனவே இந்திய அளவிலான அனைத்து டிசைன்களையும் வரவேற்கிறதாகவும் அதில் நன்றாக உள்ள கட்டிடத்திற்கு தாங்கள் இந்த ப்ரொஜெக்டை தருவதாகவும் கூறியிருந்தது.

அதற்கான கெடுவும் இன்னும் பதினைந்து நாட்களில் முடிவடைகிறது. இந்த ப்ராஜெக்ட் கைக்கு கிடைத்த கம்பெனி கண்டிப்பாக இந்திய அளவில் புகழ் பெற்றுவிடும்.

இதை பார்க்கும் போதே ருத்ராவை பண்ண சொன்னால் என்ன என்று தோன்ற... உடனே மெயில் செக் செய்தான்.

அப்போது தான் தனது பயோடேட்டாவை அனுப்பிவிட்டு கணினியை அணைத்த ருத்ரா... தன் போன் அடிக்கவும்... அதை எடுத்து பார்த்தாள்.

எதோ தெரியாத எண்ணில் இருந்து வந்தது... ட்ருகாலரில் யார் என்று பார்க்க.. கார்முகிலன் என்று இருக்கவே அதை எடுத்து உடனடியாக காதுக்கு கொடுத்தாள்.

இவள் ஹலோ சொல்லும் முன்பே... அவன் பேச ஆரம்பித்தான்..

“ஹலோ ருத்ரா... கார்முகிலன் ஹியர்...”

என்றவன் பின்பு தான் போன் செய்த நோக்கத்தை கூறினான். மேலும்

“இன்னும் பதினைந்து நாள் தான் டைம் இருக்கு அதுக்கு முன்னாடி எனக்கு அனுப்பு டிசைன... ரொம்ப முக்கியம் இந்த ப்ராஜெக்ட்... புதுமையா ஏதாவது யோசிச்சு பண்ணு... அதுக்கான டீடெய்ல்ஸ் இப்போ வரும்”

என்று கூறி முடித்தான்.

“இவள் ஓகே சார்...”

என்று சொன்னதும் கால் கட் ஆகியது.

ருத்ராவோ... உடனே வேலையா என்று யோசித்தாலும்... வீட்டில் சும்மா இருக்குறதுக்கு இதை பண்ணுனா நேரமாவது போகும் என்று மனதை தேற்றி... அவன் அனுப்பிய விவரத்தை பார்த்து... இந்த கட்டிடத்தை எவ்வாறு பண்ணலாம் என்று அவளது கற்பனை வளத்தை தூண்ட சென்றாள்.

ஆனாலும் மனதின் ஓரம்... ஏன் இதை குறித்து விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன் எதுவும் தன்னிடம் கூறவில்லை என்று தோன்றாமல் இல்லை. அதை ஒதுக்கி தன் மூளை சொல்வதை பேப்பரில் வரைய ஆரம்பித்தாள் ருத்ரா.

சில மணி நேரம் கழித்து... அவளுக்கு தந்தையின் குரல் கேட்டது... அப்போது தான் அவளிற்கு... தான் தந்தையிடம் பேச வேண்டும் என்பதே நியாபகம் வர.. கீழே சென்று தந்தை அமர்திருக்கும் சோபாவில் அவருக்கு அருகில் அமைதியாக சென்று அமர்ந்தாள்.

கருணாகரன் ருத்ரா வந்து அமர்ந்ததை உணர்ந்தாலும் ஒன்றும் கூறாமல் டிவியில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார்.

எப்பொதும் தான் வந்து அமர்ந்தால்...

"என்னமா..?"

என்று கேட்கும் தந்தை இன்று ஒன்றும் சொல்லாமல் இருக்கவே.. அவரது கைக்குள் தனது கையை விட்டவள்...

“அப்பா... சாரி பா... நான் இனிமேல் யாரையும் எதிர்த்து பேச மாட்டேன்.. கோபப்படமாட்டேன்... சரியா.. என்கூட பேசுங்க பா...”

என்று குரலடைக்க கூறினாள். இரு கண்களிலும் ஒரு பெரிய நீர்த்துளி உருவானது...

அவளை நிமிர்ந்து பார்த்த கருணாகரனிற்கு இன்றும்... சிறுவயதில் தவறு செய்து சாரி கேட்கும் குட்டிப்பெண்ணாக தான் தெரிந்தாளோ என்னவோ... கண்ணீர் உருண்டு ஓடும் முன்பே அதை துடைத்த கருணாகரன்...

“இப்போ எதுக்கு என் பொண்ணு அழுகுறா...? அப்பா பேசணும் அவ்வளவு தான... பேசிட்டா போச்சு... அப்பா உன்மேல கோபமாலாம் இல்லடா... வருத்தம்தான்டா... உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா... அதை நினைச்சு கூட பார்க்கமுடியல...”

என்றவர்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தார்... பின்பு அவளது மனநிலையை மாற்ற வேண்டி...

“நேற்று அந்த தம்பி குடுத்த கார்ட பார்த்தியா...? என்ன சொன்ன...?”

என்று கேட்டார்.

“ருத்ராவும்... சிறிது உற்சாகத்தோடு... நான் சரின்னு சொல்லிட்டேன் பா.. உடனே எனக்கு வேலை தந்துட்டாங்க... ஆரம்பிச்சிட்டேன் பா..”

என்றாள்.

“சரிமா... உனக்கு பிடிச்சிருந்தா சந்தோசம் தான்.. போய் பாரு போமா...”

என்று சொல்ல..

தந்தை தன்னுடன் பேசிய மகிழ்ச்சி அவள் மாடிப்படியில் குதித்து ஏறிய விதத்தில் தெரிந்தது.

சிறிது நாட்கள் இவ்வாறு வழக்கம் போல் அனைவருக்கும் செல்ல...

ஒரு நாள் காலையில் அபிராமி அவர்களது அறையில் முகிலனை குறித்து மாணிக்கவேலிடம் பேசி.. இல்லை இல்லை.. புலம்பிக் கொண்டிருந்தார்.

“என்னங்க இவன் இப்படி பண்ணுறான்... கல்யாணம்னு பேச்செடுத்தாலே மூஞ்சிய திருப்பிட்டு போறான். காயுவும் கொஞ்ச நாள்ல படிப்ப முடிச்சிருவாடானு சொல்லி பார்த்தேன்.. அப்போ அவளுக்கு பாருங்க அப்படிங்குறான்.

சின்னவன் கிட்ட உங்க அண்ணாவ சம்மதிக்க வைடானா... ஏன் மா வேண்டாம் னு சொல்றவன டார்ச்சர் பண்றீங்க... அதான் எனக்கு பாருங்கனு சொல்றேன்ல சொல்லி... என் நிலைமை புரியாம கலாய்ச்சிட்டு போறான்...”

என்று அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக... மாணிக்கவேல் கார்த்தியை எண்ணி சத்தம்போட்டு சிரிக்க தொடங்கினார்.

நான் என்ன ஜோக்கா பேசிட்டு இருக்கேன்.. இப்படி சிரிக்குறீங்க... என்றவர் பின்பு

“எனக்கு ஒரு யோசனைங்க... பெரியவன் வேலை வேலைனு அதுக்கே தான அத்தனையும் பண்றான்.. பேசாம அவன் அவன் வேலைக்கு உதவி பண்ற மாதிரி ஒரு பொண்ண கட்டி வச்சிருவோமா... அதுக்கு அப்புறம் அவங்க பாடு”

என்றார்.

அதை கேட்ட மாணிக்கவேல்...

“நீ எதையோ மனசுல வச்சிட்டு தான் பேசுற... ஆனா அது என்னனு தான் தெரியலை”
என்றார்.


“ஆமாங்க... பெரியகுளம் கருணா அண்ணா வீட்டுல அவங்க பொண்ணு ரொம்ப திறமையானவ அதனால வேலைக்கு அனுப்புங்கனு கேட்டான்ல... என்னால அதை நம்பவே முடியலங்க... பேசாம அந்த பொண்ண இவனுக்கு பார்த்தா என்ன...”

என்றார் அபிராமி.

மாணிக்கவேலும் சிறிது யோசித்து

“பார்க்கலாம் தான் ஆனா.. உன் பையன் சம்மதிக்கணுமே... அப்புறம் தான எதையும் யோசிக்க முடியும்”

என்றார்.

“எல்லாம் சம்மதிப்பான்ங்க... நான் சொல்லி பார்க்குறேன்... நீ அவளை கல்யாணம் பண்ணுனா அவ இங்க வந்து வேலை பார்ப்பாள்... வேற இடத்துல அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சுனா உன்கிட்ட வேலை பார்ப்பாள்னு சொல்ல முடியாதே... அது... இது... என்று சொல்லி பார்க்குறேன்...”

என்றார்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அவரும்...

“சரிமா.. உன் இஷ்டம்... ஆனா இப்போ வேண்டாம்... அவன் எதோ பெரிய வேலைல மாட்டியிருக்கான்... அது முடிஞ்சதும் நானே சொல்றேன்.. நீ பேசு சரியா...?”

என்று கேட்டார்.

“அபிராமியும் சரிங்க...”

என்று சம்மதித்தார்.

இதற்கிடையில் ருத்ராவின் டிசைன் முக்கால்வாசி முடிந்து கடைசிக்கட்டத்தில் இருந்தது. அதையும் இன்னும் ஐந்து நாட்களில் முடிக்க வேண்டும் என்பதால் மிகத்தீவிரமாக அதில் மூழ்கி கொண்டாள்.

முத்ராவிற்கு தான் வீட்டில் இருக்க சலிப்பாக இருந்தது... சரி யோகாவில் மேற்படிப்பு படிக்கலாம் என்றால் அவர்களது கல்லூரியில் அந்த படிப்பு இல்லை.

சென்னை, கோயம்புத்தூர், காரைக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு ஊரில் தான் M.Sc யோகா இருந்தது. எப்படியும் வீட்டில் விடமாட்டார்கள் என்று தெரிந்ததால் பக்கத்தில் இருக்கும் தன் தோழியின் பியுட்டி பார்லரில் தந்தையிடம் கெஞ்சி வேலைக்கு செல்ல அனுமதி வாங்கிவிட்டாள்.

தான் இரு நாட்கள் முன்னதாகவே டிசைனை அனுப்பிவைப்பதாக ருத்ரா கூறியிருந்தாள். இன்னும் இவர்கள் உரையாடல் மெயில் அளவில் தான் இருந்தது. போனில் பேச இருவருக்கும் தோன்றாதது தான் அதிசயம்.

அப்படி இப்படி என்று மீதி நாட்களும் பறந்து ருத்ரா டிசைனை அனுப்பியும் விட்டாள்.

அதை திறந்து பார்த்த கார்முகிலன் முழுதாக ஒரு நிமிடம் பிரமிப்பில் ஆழ்ந்தான். பின் அதை யாருக்கும் தெரியாமல் தானே ஆப்பிள் கம்பெனிக்கு அனுப்பினான். எந்த ப்ராஜெக்ட் எடுத்துகொள்ளப்படும் என்று அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும் என்று பதில் வரவே... கொஞ்சம் ஆவலாகவும் அதிக டென்ஷனோடும் எதிர்பார்க்க தொடங்கினான்.

பின்பு எழுந்து தன் கம்பெனியின் சிவில் இன்ஜினியரிடம் டிசைன் அனுப்பி விட்டதாகவும்... தற்போது அது ரகசியமாக இருக்கட்டும்... நாம் வேறு ப்ரொஜெக்டில் கவனம் செலுத்துவோம் என்று கூறி அப்படியே சில நாட்களாக தங்கை பொறுப்பில் இருந்த ராம் ஜவுளிகடைக்கு மேற்பார்வை பார்க்க சென்றான்.

இங்கோ ருத்ரா,

“தான் அனுப்பிய டிசைன் பார்த்து கார்முகிலன் ஒன்றும் சொல்லலையே... அனுப்பினேன் அடுத்த வாரம் தெரியவரும் என்றதோடு முடித்துக்கொண்டான். நன்றாக இருந்ததா...? இல்லையா...? எதாவது சொல்லலாம்ல என்று எண்ணும்போதே”

அவள் மனது...

“நல்லாயிருக்க போயி தான அனுப்பியிருக்காங்க”

என்று சமாதானம் செய்தது... சற்றும் முகிலனிற்கு குறையாத ஆவலோடும் பரபரப்போடும் காத்திருக்க ஆரம்பித்தாள் ருத்ரா.

அபிராமியும் மாணிக்கவேலிடம் கேட்டு ஞாயிற்றுக்கிழமை அவனது பெரிய வேலை டென்ஷன் குறைந்துவிடும் என்பதை அறிந்து... அன்று இரவை முகிலனோடு திருமணம் குறித்து பேச தேர்ந்தெடுத்தாள்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top