• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் அருமையான பதிவு சகோ
????
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
மும்பை செவேன்ஹில்ஸ் மருத்துவமனை...

ரிஷி கண் முழித்து தாய் தந்தையை பார்த்து அளவளாவினான்... அவனுடைய முகிலிடம் அவனின் திருமணம் குறித்து விசாரித்து ஓட்டினான்... அனைத்தையும் செய்த அவன்...
அவனையே பார்த்து கொண்டிருந்த விகாஷினியை கண்டுக்கொள்ளவில்லை.


கிருஷ்ணகுமார் செய்தி கேள்விப்பட்டு மகிழ்ந்தார். உடனே வருகிறேன் என்றவரை விகாஷினி தான்..

“வேணாம் பா... நான் பேசிட்டு அப்புறம் சொல்றேன், நீங்க வாங்க”

என்று தடுத்திருந்தாள். இதோ இப்போது வரை பேச நேரம் கிடைக்கவில்லை.

தாய் தந்தையரை தான் இன்று மாலை ஹோட்டல் வருவதாகவும் கோயம்புத்தூர் செல்ல போய்
தயாராக இருக்குமாறும் கூறியிருந்தான். பல மாதங்கள் அசையாததால் கை கால்களுக்கு இந்த இரு நாட்கள் பயிற்சி கொடுக்க... கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான்.


இரு நாட்களும் யாரேனும் இருந்துக்கொண்டே இருப்பதால் விகாஷினியும் பேச
விரும்பவில்லை.. அவனுடன் பேசுகையில் அவள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றே இந்த
இரு நாட்கள் பொறுமையாக கழித்தாள். ஆனால் இன்றோ அவன் கோயம்புத்தூர் செல்ல
போவதாக கூறியது கடுப்பை கிளப்பியது.


அவனின் பெற்றோர் சென்றதும் முகிலை பார்த்து...

“நீ கொஞ்ச நேரம் வெளிய வெயிட் பண்றியா...? நான் இவன் கிட்ட பேசணும்”

என்றாள்.

அதுகென்ன போயிட்டுவரேன் என்பவனா முகிலன்...

“நான் பேசும்போது உன்னை போக சொன்னேன்னா... இல்லைல.. இப்போ என்னை போக சொல்லுற... போகமுடியாது போ...”

என்றான்.

இருவரும் முறைத்துக்கொண்டிருக்க... ரிஷிக்கு சிரிப்பு பீறிட்டது... சிரித்துக்கொண்டே

“டேய்... இன்னுமாடா நீ மாறல... போடா... போ.. எனக்கும் பேசணும் தான்”

என்றான்.

அவன் கூறியதும்...

“ஹ்ம்ம்... சரி... நானும் போய் பாக் பண்றேன்... எல்லாரும் ஒரே பிளைட்ல போகலாம்”

என்று கூறி கிளம்பிவிட்டான்.

அவன் சென்றதும் கதவை அடைத்தவள்... மெளனமாக தன் கைப்பையில் வைத்திருந்த விகாஷினி கன்ஸ்ட்ரக்ஷன்
சொத்து பத்திரத்தை அவன் கையில் திணித்தாள்.


அதை பிரித்து படித்து பார்த்தான்.. பின் ஒன்றும் சொல்லாமல் அதை கட்டிலில் வைத்து அவளை
நிமிர்ந்து பார்க்க...


அவளோ என்ன இவன்... எல்லார்கிட்டயும் வாய் கிழிய பேசுறான்... நம்ம கிட்ட மட்டும்
மௌனசாமியார் வேஷம் போடுறான் என்று எண்ணினாள்...


“சொத்து இப்போ என்கையில தான் இருக்கு... எனக்கு யார் கூடவும் இன்னும் கல்யாணம் ஆகல... இந்த சொத்தை நான் என்ன பண்ணனும்னு நினைக்குரியோ... அத சொல்லு.. நான் பண்றேன்”

என்று காதலை வார்த்தையால் சொல்லாமலே செயலில் காண்பித்தாள் விகாஷினி.

அடுத்தக் கனம் என்ன நடந்தது என்று தெரியும் முன்பே ரிஷியின் இறுகிய அணைப்பில்
இருந்தால் அவனின் விகாஷி...


அவன் அணைத்ததும் அவனிற்கு கோபம் இல்லை என்று தெளிந்த விகாஷினி... டேய் பிராடு....
விடு டா... விடு என்றவாறு விலகியவள்.


“நான் ஒருத்தி ரெண்டு நாலா உன் முகத்தை.. முகத்தை பார்த்துட்டு இருக்கேன்... ஒரு ஸ்மைல்.. இல்ல ஒரு பேச்சு என்று ஏதாவது பண்ணுனியா... கண்டுக்காத மாதிரி இருந்துட்டு இப்போ வந்து கட்டிப்பிடிச்சா என் கோபம் போயிருமா...?”

என்று பொரிய...

“நீயா பேசுற அடுத்த நொடி நான் பேசணும்னு நினைச்சேன்... நீ தான் பேசவே இல்ல...”

என்று கூற...

"சரி விடு... எதுக்கு நீ கோயம்புத்தூர் போற... நான் என்ன பண்றது இங்க..."

என்று அவன் அருகில் அமர்ந்து கேட்க...

“நம்ம கல்யாண ஏற்பாடு யாரு கவனிப்பா... நான் கோயம்புத்தூர் போய் தான எல்லாத்தையும்
பார்க்கணும்”


என்று கண் சிமிட்டி கூறினான்.

"என்மேல உனக்கு கொஞ்சம் கூட கோவம் இல்லையா...?"

என்று ஆச்சரியமாக கேட்க...

“யாரு சொன்னா இல்லைன்னு... அதெல்லாம் நிறைய இருந்தது... ஆனா ஒருத்தி நான் கோமால
இருக்கும் போது விடாம தோன தோனன்னு பேசியே என் கோபத்தை குறைச்சிட்டா...”


என்று அவளை நக்கலடித்தான்.

“அடேய்... நான் உருகி உருகி பேசுனது உனக்கு தோன தோனவா...”

என்று அவனின் தோளில் சரமாடியாக அவள் அடிக்க...

“பின்ன... எப்போ பாரு தாலாட்டு பாடுற மாதிரி... நான் உன்னை தான் லவ் பண்றேன்.. உன்னை
தான் லவ் பண்றேன்னு சொல்லிட்டே இருந்தா... மனுஷனுக்கு எழுந்துக்க தோணுமா...?”


என்றான்.

இருவரும் செல்ல குறும்போடும் சிணுங்கலோடும் மீண்டும் வெகுநாட்கள் கழித்து... இல்ல
இல்ல வெகு மாதங்கள் கழித்து.... காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.



உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்றுப் போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்றுப் போனாலும்
காதல் நின்றுப் போகாது
நீ என்னைச் சேர்ந்திடும் வரையில்
இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில்
யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம்
வாசலில் வந்துச் சேர்ந்ததே
ஆசைக் காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே



நான் கூறிய ஓட்ஸ் மற்றும் ராகியின் மேலும் சில தகவல் இதோ..

https://www.google.com/url?sa=i&source=undefined&cd=&ved=0ahUKEwjJwZLT3NnfAhWNWX0KHQl6DeMQzPwBCAM&url=http://tamil.webdunia.com/health-news-in-tamil/disadvantages-of-oats-116101100026_1.html&psig=AOvVaw0RxFRPPgqcd3NnLpwGFJHI&ust=1546883612757814
Superb
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஹாஹா கார்த்தி எப்பவும் என்னைப்போல சாப்பாடு அதுதானே எல்லாம் ஹெஹெ ....முத்ரா உனக்கு பிடிச்ச கலர் னு தான் பாத்த நான் நம்பிட்டேன் ....ரிஷி விகாஷி சேர்ந்தாச்சி சூப்பரப்பு
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அட பாவி ரிஷி என்ன நடிப்புடா ...
பாவம் அந்த பொண்ணு இப்பிடி கலக்க அடிச்சிட்டியே போடா குரங்கே??‍♀?

முத்ராவுக்கும் இப்போ பட்டாம்பூச்சி பறக்க தொடங்கிடுச்சா சுப்பரு மா?....
ருத்ரா மனசும் இப்போ முகிலை தேடுது
நைஸ் டா???????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அட பாவி ரிஷி என்ன நடிப்புடா ...
பாவம் அந்த பொண்ணு இப்பிடி கலக்க அடிச்சிட்டியே போடா குரங்கே??‍♀?

முத்ராவுக்கும் இப்போ பட்டாம்பூச்சி பறக்க தொடங்கிடுச்சா சுப்பரு மா?....
ருத்ரா மனசும் இப்போ முகிலை தேடுது
நைஸ் டா???????
????? Thank you maha kaa.. ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top