• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்களும் ரெக்கை கட்டி பறந்தது.

ருத்ராவை இப்போது வாரநாட்களில் காயுவும்.. வாரஇறுதியில் காயுவும் முத்ராவும் சேர்ந்தும்
காலையில் யோகா செய்ய பிடித்துக்கொண்டனர்.


முகிலன் காலையில் உள்ளே இருந்தால் தப்பிக்கும் மார்க்கம் ருத்ராவிற்கு கிடைத்திருக்கும்..
காயுவும் முத்ராவும் தொந்திரவு பண்ண வேண்டாம் என்று விட்டிருப்பார்கள்.. இங்கு தான் அவன்
அனைவருக்கும் முன் எழுந்து ஜாகிங் சென்று விடுவானே... ருத்ராவை விடுவதாக இல்லை
பெண்கள் இருவரும்.


வீட்டில் வாரம்வாரம் முத்ரா வந்து போக...ருத்ரா மட்டுமின்றி அவள் தங்கை முத்ராவும்
முகிலனின் குடும்பத்தாருடன் ஒன்றத் தொடங்கினாள். பின்னே.. காயுவை எப்படி
பார்க்கிறார்களோ அதே போல் இவளையும் கவனித்துக் கொண்டால்.. பாசம் வரத்தானே
செய்யும்...பேருக்கு தான் ஹாஸ்டல் வாசம்.. உணவு மதியம் வீட்டில் இருந்து தான்... தினமும்
மாலைவரை கோவையை சுற்றி வேறு பார்ப்பார்கள்.. சில நாட்கள் வீட்டிற்கும் வந்து விடுவார்கள்.
கல்லூரி பாதி நாள் என்றால் இப்படி தான் நேரம் போகும் போல...


அந்த நாட்களில் மாலை வரை வீடே உற்சாகத்தில் அதிரும்.. வீட்டில் தனியாக இருந்து பீடில்
வாசித்துக் கொண்டிருந்த காயுவுக்கு கூட இரு தோழிகள் கிடைத்தது கொண்டாட்டமாக இருந்தது.


பரணில் தூக்கி போட்ட உள்விளையாட்டுகள் அனைத்தும் தூசி தட்டப் பெற்றன..

அன்றும் அப்படி தான்.. மூன்று பெண்களும் கேரம் விளையாண்டுக் கொண்டிருக்க.. கார்த்தி அன்று
மாலை சீக்கிரமே வந்துவிட்டான். காலியாக இருந்த ஒரு பக்கத்தில் அமர்ந்து...


“விளையாண்டே ரொம்ப வருஷம் ஆச்சு.. நானும் வரேன்.. ஆட்டத்தை கலைங்க”

என்றான்.

இவர்கள் நால்வரும் லூட்டி அடிப்பதை மாணிக்கவேல் அபிராமி தம்பதியினர் சந்தோசத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தனர்.


“வீடு இப்போ தாங்க வீடு மாதிரியே தெரியுது”

என்று அபிராமி கூற.. தலையசைத்து அதை ஆமோதித்தார் மாணிக்கவேல்.

ருத்ரா மற்றும் முகிலனிற்கு இந்த இடைப்பட்ட நாட்கள் பூங்காற்றாய் இதயத்தை தழுவி... குளிர்ச்
சாரலாய் மனதை நனைத்தது.


ஒருவரை ஒருவர் சிறிது சிறிதாய் புரிந்து கொள்ள தொடங்கியிருந்தனர். தொழில் பேச்சு எங்கே
எப்படி என்றே தெரியாமல் வாழ்க்கைப் பேச்சாய் மாறி இருந்தது. வீட்டில் நடப்பது அவனிற்கும்..
தொழிலில் நடப்பது அவளிற்கும் அத்துபடி... தயக்கங்கள் அனைத்தும் தேய்ப்பிறையாய் குறைய
நேசம் வளர்பிறையாய் வளர்ந்து.. முழுமதி ஆகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தது.


ருத்... முகி என்று இருக்கும் இருவரும் ருத்ராமுகி ஆகும் நாள் அருகில் நெருங்கிவிட்டது என்பது
திண்ணம்.


கோவையில் அந்த பிரமாண்ட கல்யாண மண்டபத்தின் வாசலில் வாழை மரங்கள் மற்றும்
பழங்களின் தோரணங்கள் அலங்கரித்து தொங்க...


உறவுகள் மற்றும் நண்பர்களின் முகங்கள், அவர்கள் போட்டிருக்கும் உடை மற்றும் நகைகளுக்கு
இணையாக பளபளத்துக் கொண்டிருந்தது ஒரே ஒரு முகத்தை தவிர.. அவர் முகம் மட்டும் ஐயர்
ஹோமம் வளர்க்கும் தீ ஜவாலையை ஒத்து இருந்தது. அவரது கண்கள் எதுவும் செய்ய முடியாத
ஆத்திரத்தில் மணமேடையில் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கும் தனது மகளையும் ரெண்டு
வருடத்திற்கு பிறகு இன்று வந்து மீண்டும் தன் மகளை கைப்பிடிக்க வந்திருக்கும் ரிஷியையும்
வெறித்துக் கொண்டிருந்தது.


இவர் இப்படி அமைதியாக அமர்ந்திருக்கும் பின்னணிக்கு காரணம் அவரின் கணவர்
கிருஷ்ணகுமார் தான்..


இரு நாட்கள் முன்பு தந்தையும் மகளும் பெட்டியை கட்டி எங்கோ கிளம்ப..

“எங்க கிளம்புறீங்க...”

என்றவாறே வந்தார் விக்னேஸ்வரி.

“கிளம்புறீங்க இல்லை மாம்.. கிளம்புறோம்” என்றாள் மகள்.

“நானுமா.. ஏதாவது சுற்றுலாவா.. முன்னாடியே சொல்ல மாட்டீங்களா...?”

என்று வேலை அதிகம் இருந்ததால் எரிச்சல் பட...

“சுற்றுலா எல்லாம் அப்புறம் போயிக்கலாம்.. இப்போ கல்யாணத்துக்கு போறோம்.. இன்னும்
ரெண்டு நாள்ல கல்யாணம்..”


என்றாள் விகாஷினி... மறைக்க முயன்றும் உற்சாகம் தெறித்தது குரலில்.

“கல்யாணத்துக்கா.. அதுவும் ரெண்டு நாள் முன்னாடி.. ஆர் யூ மேட்... எல்லாம் நாளைக்கு நைட்
போயிக்கலாம்... ஆமா யாருக்கு கல்யாணம்.. இன்விடேஷன் வரவே இல்லை...”


என்றார்.

உடனே மகள் பெட்டியில் இருந்து தன் கல்யாண பத்திரிக்கையை எடுத்து நீட்ட...

அதை வாங்கியவர்..

“உனக்கும் அநேகமா சீக்கிரம் கல்யாணம் நடக்கும்...”

என்றவாறே பிரித்தார்... முன்பக்க பெயரை கவனிக்கவில்லை...

கல்யாண மணமக்கள் பெயரை பார்த்த அவர் தீயை மிதித்தவர் போல் ஆனார்.

தன் புதல்விக்கு கல்யாணம் என்பது முதல் கட்ட அதிர்ச்சி என்றால்..

இரு வருடம் முன் இறந்துவிட்டான் என்று நினைத்தவன்.. இன்று மாப்பிள்ளையாய் வந்தது
இரண்டாம் கட்ட அதிர்ச்சி... அதை விட உலகத்தில் மகளின் கல்யாணத்தை மகள் தந்த
இன்விடேஷன் மூலமாக தெரிந்தவர் இவராக தான் இருப்பார்.


கம்பெனியும் சாமர்த்தியமாக வாங்கிய பெண்ணை முறைத்து பார்த்தவர்.. அவள் சிரித்துக்
கொண்டிருக்கவும்.. ஆக்ரோஷத்தில் அடிக்க சென்றார்.


அதற்குள் மகளை தன்புறம் இழுத்த கிருஷ்ணகுமார்..

“போதும்.. ஒழுங்கு மரியாதையா கிளம்பி வா.. உன்னை இங்க விட்டு வச்சிட்டு எந்த நேரம் என்ன
பண்ணுவியோன்னு நிம்மதியா இருக்க முடியாது..”


என்றார்.

“வர முடியாது.. இந்த கல்யாணத்தை நடத்தவிடவும் மாட்டேன்”

என்று கீறிச்சிட்டவரை..

“அப்போ நாம டிவோர்ஸ் தான் பண்ணனும்.. பரவால்லையா...?”

என்று கேட்க..

அவர் பதில் கூறும் முன்...

“உன் மரியாதையையும் யோசிச்சிக்கோ... இத்தனை வருஷம் என்னத்த வாழ்ந்தானு உன்னை
தான் எல்லாரும் பேசுவாங்க...”


என்று அவரது வீக் பாயிண்ட்டில் அடித்தார்.

விக்னேஸ்வரிக்கு மற்றவர்கள் தன்னை பிரமிப்பாக பார்க்க வேண்டும்.. மரியாதை தர வேண்டும்..
அது தான் முக்கியம்.. மற்றதெல்லாம் ஏன்.. மகளும் கணவனும் கூட அதற்கு அடுத்து தான்.. விட்டு
கொடுப்பாரா..? வேண்டா வெறுப்பாக கிளம்பி..


இதோ இப்போது உட்கார்ந்து வெறித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாத படி கிருஷ்ணகுமார்... ரிஷிக்கும் அவனின்
குடும்பத்திற்கும் ஆபத்து வராமல் மறைமுக பாதுகாப்பு கொடுத்த கையோடு.. ஆபத்து வந்தால்
அதற்கு மனைவி தான் காரணம் என்றுகாவல் நிலையத்தில் ரகசிய புகாரும் இவரின் கண்
முன்னால் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட அனைத்து வழிகளிலும் லாக் செய்யப்பட்டிருந்தார்
என்றால் சரியாக இருக்கும்.


இங்கே அவர் இப்படி புகைய.. மண்டபத்தில் கல்யாண ஜோடியும்.. ருத்ராமுகியும் கண்களால்
காதல் பேச...


மீதி இருக்கும் ஒரு ஜோடியான முத்ரா மற்றும் கார்த்தி தான்... அவள் பார்க்கையில் அவன் வேறு
எங்கோ பார்க்க... அவன் பார்க்கையில் அவளும் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கண்களை
திறந்து வைத்தே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இன்னும் சில
நொடிகளில்... அசாதாரணமான நேரத்தில் தங்களின் காதலை வலியோடு உணருவார்கள்.


வழக்கம் போல் தனக்கு பிடித்த இளநீல நிறத்தில் சோலி அணிந்து தன் தாய் தந்தையிடம்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் முத்ரா.. அவள் கூடவேதான் ருத்ராவும் காயுவும் இருந்தனர்.
இப்போதெல்லாம் இவர்கள் மூவரை பிரித்து தனித் தனியே பார்க்க முடிவதில்லை... முப்பெரும்
தேவியரை போல் ஒன்றாகவே எங்கும் அலைந்தனர்.


பெற்றோரை இந்த கல்யாணத்திற்கு மகள்கள் இருவரும் அழைக்க.. அவர்களும் மகள்களை காண
வந்திருந்தனர். இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்து மனம் நிறைந்தது... இதைத் தவிர
வேறென்ன வேண்டுமாம் பெற்றவர்களுக்கு...


“கெட்டி மேளம்..கெட்டி மேளம்..” என்று ஐயர் குரல் உயர்த்த... மங்கள வாத்தியங்கள் மணமக்களை
வாழ்த்த.. அட்சதை மழையென பொழிய... விகாஷினி கழுத்தில் மூன்று முடிச்சிட்டு
மனைவியாக்கி கொண்டான் ரிஷி.
Nice
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ருத்ரமுகி அழகா இருக்கு .....அசாதாரணமான சூழ்நிலையா என்னவா இருக்கும் யாருக்கான கல்யாணம் பண்ண போறாங்களோ ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இப்போயாச்சும் உங்களுக்கு வீரம் வந்துச்சே கிருஷ்ணகுமார் வெல் டன்??????
பல்லு புடிங்கின பாம்பு இனி என்ன செய்யும்..

அட என்னாடா கார்த்தி பையா சிக்கிரம் உங்க காதலை சொல்லிக்கோங்க டா??

அப்பாடா ரிஷி தாலி கட்டிட்டான்...????சுபம்
நைஸ் டா?????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
இப்போயாச்சும் உங்களுக்கு வீரம் வந்துச்சே கிருஷ்ணகுமார் வெல் டன்??????
பல்லு புடிங்கின பாம்பு இனி என்ன செய்யும்..

அட என்னாடா கார்த்தி பையா சிக்கிரம் உங்க காதலை சொல்லிக்கோங்க டா??

அப்பாடா ரிஷி தாலி கட்டிட்டான்...????சுபம்
நைஸ் டா?????
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top