varamai vantha urave 2

#1
வரமாய் வந்த உறவே 2சென்னை என்றதும் அதிர்ந்தால் பிரியா. ஆனால் மகளின் ஆசைக்காக தன் சம்மதத்தை தெரிவித்தால்.

மம்மி! ஜ அம் சோ ஹாப்பி... இதுவரைக்கும் நான் தமிழ்நாட்டுக்கு போனதேயில்லை இந்த முறை கண்டிப்பாக போக போறேன், என்றாள் சம்யுத்தா.

சங்கீதாவின் பெற்றோர்க்கு சம்யுத்தா என்றால் கொள்ளை பிரியம். தன் மகளை போல் பார்த்துக் கொள்வார்கள் என்று பிரியாவிற்கு நன்றாக தெரியும். அதனால் நிம்மதியாக இருந்தாள்.

அதே சந்தோஷத்துடன் கல்லுரிக்கு சென்றாள்.

கல்லுரியில் சம்யுத்தா சங்கீயிடம், மம்மி சென்னை போக சரி சொல்லிட்டாக டி.

நீயும் வரப்போறது தெரிந்தால் அம்மா ரோம்ப சந்தோஷம் படுவாங்க, உன்னை திவ்யா கூட பார்க்கனும் சொன்னாள், என்றாள் சங்கீ

சங்கீதாவின் பெற்றோர ரகு ரோகினி. சகோதரி திவ்யா. திருமனமாகி கனவனுடன் கோவையில் வசிக்கிறாள்.

சம்யுத்தா, அந்த நாளை எதிர் நோக்கி காத்திருந்தாள்.


சென்னை செல்லும் நாள்:

ரயில் நிலையத்தில் சங்கீதாயுடன் சென்னை கிளம்ப தயாரானாள். அவளுக்கு அப்பொது தெரியவில்லை தன் உறவை தேடிச் செல்கிறாள் என்று.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. நேரம் காலை பத்து மணி. தங்கள் பெட்டிகளுடம் காரில் அண்ணா நகரில் உள்ள பாட்டி வீட்டை அடைந்தனர்.

அதே நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் லன்டனில் இருந்து தரையிரங்கிய விமானத்தில் இருந்து ஆட்கள் வெளியே வர தொடங்கினர்.

ஆறடி உயரம், கண்களின் ரேபன் கூலர்ஸ், அடங்காத கேசத்தை கைகளால் கோதிக் கொண்டே வந்தான். புன்னகையால் அனைவரையும் கட்டி இழுக்கும் புன்னகை மன்னன், கைகளில் ரோலக்ஸ் வாட்ச் என கம்பீரமாக இருந்தான், மித்ரன்.

ஹாய் மச்சி! என்றான் விஷால் அவனுடைய நன்பன் மற்றும் தன் கம்பெனியின் சென்னை கிளையின் மேலாளர்.

வா டா, என்ன இன்றைக்கு சரியான நேரத்திற்கு வந்துட்டே, என்றான் மித்ரன்.

கொஞ்சம் நேரம் சைட் அடிக்க தான் வேற எதற்கு வருவாங்க.

ம்ம், ஒரு நாள் நல்லா வாங்க போற அப்ப தான் தெரியபோது, என்றான்

அதை நான் பார்த்துகிறன், லன்டன் மிட்டிங் எப்படி போச்சி டா என பேசிக்கொன்டே தங்கள் காரில் பயனம் செய்தனர்.

அதுயெல்லாம் நல்லாதான் இருந்துச்சு டா,

இந்த சமயத்தில் மித்ரனின் பேசி அலறியது, மாம் என்று வந்தது. அதை பார்த்து விஷாலிடம், நான் வந்தது எப்படி தான் தெரியுமோ? என்றான்

ஹாய் டார்லிங், இப்பத்தான் வந்தேன், சரி மா இரன்டு நாளில் வீட்டில் இருப்பேன்.

ம்ம்ம், நான் தான் நீ பார்க்கிற பெண்ணை கல்யானம் பன்னிக்கிறேன் சொல்லிட்டேன் லா அப்புறம் ஏன் மா என்னை கேட்குறிங்க.

சரி மா, என்று போனை வைத்தான், மித்ரன்,

என்ன டா கல்யானமா? அதுக்குள்ள பெண்னை பார்த்துடாங்களா, லவ் பன்ற ஐடியா இல்லையா.

அட நீ வேறடா, அவங்க பெண் எப்பவோ செலட் பன்னிடாங்க டா.

வாழ்த்துக்கள் மச்சி, விஷால்.

அதை நீயே வைச்சிகோ இப்ப காரை நிறுத்து, சாப்பிங் பன்னிட்டு போகலாம் என்றான்.சங்கீதாவின் பாட்டி வீட்டில் சம்யுத்தா தன் சின்ன வயது கதைகளை எல்லாம் பாட்டியிடம் சொல்லிக் கொன்டு இருந்தாள்.

பாட்டி என்ற உறவு முறையில் இதுவரை யாரையும் கண்டது இல்லை, முதல் முறையாக உறவுக்காக அவளின் மனம் ஏங்கியது.

பாட்டி! நான் இந்த மாதிரி குடும்பமாக இருந்தது இல்லை. நானும் அம்மாவும் மட்டும் தான். என் கூடவே என் வீட்டுக்கு வாங்களேன்? சிரித்துக் கொண்டே கேட்டால்.

பாட்டிக்கு புரிந்தது இவள் உறவுகளின் பாசத்தை பற்றி அறியாத பென் என்று, பின் ரகுவிடம், நாளைக்கு திவ்யா வீட்டிற்கு போகலாம் என்றார்.

சரி அம்மா, நான் டிக்கெட் புக் பன்றேன்.

சம்யு, இங்க பக்கத்தில் இருக்கிற மாலுக்கு போகலாம் வா, என்றாள் சங்கீதா.

அப்படியே பீட்சுக்கு போகலாம், கடல் அலையில் விளையாடலாம் , என்றாள் சம்யுத்தா.

மித்ரனும் விஷாலும் பக்கத்தில் உள்ள மால்க்கு சென்றனர். இருவரும் ஒரு உணவகத்திற்கு சென்று உக்கார்ந்தனர்.

என்ன சாப்பிடப்போற என மித்ரனிடம் கேட்க அவனிடம் இருந்து பதிலே வரலை. என்ன என்று அவனை பார்க்க இதயத்தை தட்டிக் கொடுத்துக்கு கொன்டு இருந்தான்.

டேய், என்ன டா பன்ற என்றான் விஷால்.

தெரியலை மச்சி என்னுடைய ஹார்ட் வேகமாக துடிக்குது,

அதே நேரத்தில் சம்யுத்தா மாலுக்கு வந்தாள்.
 

Sponsored

Advertisements

New threads

Top