varamai vantha urave 3

#1வரமாய் வந்த உறவே 3


என்ன பதிலை காணோம் என்ற யோசணையோடு அவனை பார்க்க,

“என்னடா பேய் அடிச்சாமாறி இருக்க. நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன், நீ கேட்டாமாறியே தெரியலையே”

அவனை பார்த்து, “ஏதோ வித்தியாசமா ஒரு பில்லா இருக்கு டா, என் ஹார்ட் வேற ரொம்ப வேகமாக துடிக்கிறது, நான் தொலைச்ச ஒன்னு என்னை தேடி வராமாதிரியே இருக்கு”

இவன் இது மாதிரியெல்லாம் பேச மாட்டானே என்ற யோசனையுடன், “சரி வா எங்யே இருந்த இப்படி தான் பேசுவ நாம் டிரஸ் வாங்க போகலாம்” என்று ஒரு துணிகடைக்குள் சென்றனர்.

********

சம்யுத்தாவும் சங்கீதாவும் மால் முழுக்க சுற்றி விட்டு களைத்து போய் இருந்தனர்.

இன்னுக்கு எனக்கு என்ன ஆச்சு, ஏதையுமே கான்சன்ரேட் பன்னமுடியலை என யோசித்துக் கொண்டே சங்கீயிடம் “ மம்மிக்கு கால் பண்ணிட்டு வரேன் டி”, என சிறிது தூரம் நடந்துக் கொண்டே பேச தொடங்கினாள்.

பேசிக் கொண்டே எதிரே வந்தவர் மீது மோதினாள். எதிரே இருந்தவரின் பொருள் தரையில் சிதறியது. அவரிடம், “ சாரி ப்ரோ” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். விஷால் தரையில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு மித்ரனை தேடிச் சென்றான்.

இருவரும் காரில் செல்லும் போது தன் பையை பார்த்தான். அப்போது ,

“என்னடா இது?” என ஒரு பிரேஸ்லெட்யை காட்டினான்.

“அச்சோ! இது அந்த பெண்னுதா இருக்கும்”, என தான் வரும் போது ஒரு பென் மீது மோதிவிட்டதை கூறினான்.

சரி, இது என் கிட்டவே இருக்கட்டும் என்று கூறிவிட்டு அதை தன் பர்சில் வைத்துக் கொண்டான் மித்ரன்.

*******

கடற்கரையில் அலைகளிடம் விளையாடிவிட்டு தன் கையை பார்த்த போது,

சங்கீ!..... என் பிரேஸ்லெடை காணோம் டி, மம்மி வாங்கி கொடுத்தது. இப்ப நான் எங்கே என்று தேடுவேன் என அழுதால்.

இருவரும் எல்லா இடங்களிலும் தேடினர் ஆனால் கிடைக்கவில்லை.

அந்த நாள் அதே வருத்ததுடன் கழிந்தது.

*********

அடுத்த நாள் காலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் ரகு இருவருடன் சென்றனர்.

அவள் இருந்த சந்தோஷத்தில் கோவை செல்வதை கூட தன் தாயிடம் கூற மறந்துவிட்டாள்.

பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டை அடைந்ததும் வீட்டை பார்த்து,

“இது வீடா? இது பெரிய அரண்மனை மாதிரி இருக்கு. உன்மையா இது தான் வீடா என்று தன் தோழியிடம் கேட்டாள்.

பழைய காலத்து ஜமீன் வீடு என்றாலும் நவீன வசதிகளுடன் இருந்தது.

திவ்யா இவர்களை உள்ளே அழைத்து செல்ல குடும்பத்தினர் அனைவரும் அவர்களை வரவேற்றார்கள்.

சம்யுத்தா ஒரு நிமிடம் திகைத்துவிட்டாள். பின் திவ்யாவிடம், “என்ன க்கா எவ்வளவு பேர் இருக்காங்க. வீட்டில் ஏதாவது விஷேசமா?”

அவள் சொன்னதை கேட்ட அனைவரும் சிரித்துவிட்டனர்.

“இவங்க எல்லாரும் என் குடும்பம் தான் வா அறிமுகம் செய்றேன்”. அவளின் குடும்பம் பற்றி,

கோவையின் மிக பெரிய ஜமீன் குடும்பம். மோகன்- மேகலா தம்பதியருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள்.

பெரிய மகன் சன்முகம், சிறியவன் பிரபாகரன். மகள் லட்சுமி. முதலில் தன் மகளுக்கு திருமனம் முடித்தவர் அடுத்த வருடத்திலே மகன் இருவருக்கும் ஒரே மேடையில் மனமுடித்து வைத்தார்.

லட்சுமி வாசதேவன் தம்பதிகளுக்கு ஒரு மகன் பிறந்தான். அடுத்த வருடத்திலேயே பிரபாகரன், சுந்தரி தம்பதிகளுக்கும் மகன் பிறக்க, முத்த மருமகள் ராகவி தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற வருந்தினாள்.

ஐந்து வருடம் கழித்து சுந்தரி இரண்டாவது முறையாக கருவுற்றாள். அதே சமயத்தில் ராகவியும் கருவுற்றாள். குடும்பமே அவளை தங்க தட்டில் வைத்து தாங்கினார்கள். சுந்தரியும் கூட தன் நலனை மறந்து ராகவிக்காக உதவியாக இருந்தாள்.

சுந்தரிக்கு இரண்டாவதும் மகன் பிறக்க, ராகவிக்கு அழகிய மகள் பிறந்தாள். சன்சலா அந்த வீட்டின் இளவரசி. அவள் பெயரில் தொடங்கப்பட்டது அவர்களின் நிறுவனம் chanchala groups of company.

ஆனால் விதியின் விளையாட்டால் ஒரு நாள் மோகன் தன் முத்த மருமகள் மற்றும் இரண்டு வயது ஆன சன்சலாவுடன் காரில் செல்லும் போது சாலை விபத்தில் அவர்கள் முவரையும் இழந்தது அந்த குடும்பம்.

*********

திவ்யா சதா என்று அழைக்கும் சம்யுத்தாவிடம்,

“சதா இவங்க அகில் என் கனவர், அவங்க தம்பி முகில். அத்தை மாமா பிரபாகரன் மற்றும் சுந்தரி. இவங்க லட்சுமி மா அவங்க பெண் ஸ்ரீபிரியா. பெரிய மாமா பிரெண்டு மகள் திருமனத்திற்கு மேட்டுபாளையம் போய் இருக்காங்க. பாட்டி மேகலா அந்த ருமில் இருக்காங்க”, என தன் பெரிய குடும்பத்தை அறிமுகம் செய்தாள்.

இவள் சம்யுத்தா, நான் சதானு கூப்பிடுவேன், சங்கீ பிரெண்டு, என கூறினாள்.

“ஹாய் பிர..... இவங்களை நான் எப்படி கூப்பிடனும் திவ்யா”

எனக்கு தங்கச்சி னா ரெம்ப பிடிக்கும். அதனால நான் உனக்கு அண்ணா, என்று அகில் கூற, ஆமாம் என்னை நீ சித்தினே கூப்பிடு என்று பார்த்து பல நாள் பழகியது போல் பேச தொடங்கினர்.

அத்தை நானும் தான் வீட்டுக்கு வந்து இருக்கேன். ஒருத்தரும் என்னை கண்டுக்கவேல்லை.

என்ன மா இப்படி சொல்ற இது உன் வீடு, இந்த வீட்டு ராசாத்தி”, என அவளை கொஞ்ச,

ரகு அனைவரிடமும் “சரி நான் கிளம்பரேன். இப்ப கிளம்பனா தான் நைட்குள்ள வீட்டுக்கு போக முடியும்”

என்ன சம்பந்தி அதுக்குள்ள வா வாங்க சாப்பிட்டு அப்புறம் பார்க்கலாம், என சாப்பிட அழைத்தார்.

இல்லை மா முக்கியமாக வேளை இருக்கு. பிள்ளைகளை விட்டு போக தான் வந்தேன். சங்கீதா பற்றி எனக்கு கவலை இல்லை. சதா அப்படி இல்லை. அவளுக்கு அம்மா மட்டும் தான். குழந்தைக்கு உறவுனு யாருமே கிடையாது. எல்லோர்கிட்டவும் எப்படி பேசனும் கூட தெரியாது.. கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்க.

என்ன மாமா இதை நீங்க சொல்லனுமா அவங்கள என் தங்கச்சினு சொன்னேன் லா இனிமே நான் பத்திரமா பார்த்துக்கிறேன்.

ரொம்ப சங்தோஷம் மாப்பிள்ளை, அப்ப நான் கிளம்புரேன் என கிளம்பினார்.

முதலில் தயங்கினாலும் பின் அனைவரிடமும் சகஜமாக பழக தொடங்கி விட்டாள்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top