• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veeranukor vidaikodupu

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அண்மையில் நடந்த புல்வாமா தாக்குதலில் வீரசொர்கம் அடைந்த நம் ராணுவ சகோதரர்களுக்கும் , அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்துக்கும் இக்கவிதை சமர்பணம்...

கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


தூங்கிதான் போனாயே
தாயின் தூக்கம் தூக்கியே போனாயே..
கருப்பையும் கலங்குதடா கண்மணியே
கண்முன்னே ஒருமுறை வாராயோ.. என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


தாலேலோ பாடிடவே தகப்பன் தான் நான் இருக்க..
தாய்நாட்டிற்காக தனியாக தவிக்கவிட்டு போனதேனோ.. என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


அண்ணமார் தானிருக்க
அண்டம் தாண்டி போனாயோ...
தாங்கி நின்றாயே, தம்பி என்னையும்
தவிக்க விட்டு போனாயோ..என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


அக்காவாயினும் மகனேனவே
அருகில் வைத்து வளர்த்தேனே..
ஆருயிரே மறந்ததேனோ
அருகிலே நீ வாராயோ..
தந்தையென சுமந்தாயே
தகவலாய் போனாயே..
தங்கையென தாங்க யார் வருவார்
தமயனே தனித்து விட்டதேனோ என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


அப்பா என்னும் என் அண்டமே..
அநாதையானேனே நானும் இன்றே
வெற்றி கோப்பையை மகன் பிடிக்க..
வெற்றிடத்திலிருந்து காண்பாயோ..என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


அப்பாவின் தேவதை நான்-உன்
அன்பின் பரிசு நான்..
தோள் தூக்கி அகமகிழ..
தோன்றலே நீ காலனிடம் தோற்றதேனோ.. என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


நட்பினால் பிணைந்தோமடா
நட்டத்தில் விட்டு சென்றாயே
நலிந்த என் உயிர்தனை -பிறர்
நகைக்கவிட்டு சென்றதேனோ என்


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்
கலையாமல் கண்ணுறங்கு...


காதலால் பூத்த நெஞ்சதுக்கு
கருங்குருதிதனை தந்ததேனோ
உறவாய் அழைக்க பலருண்டு
உன்னை ஈடாக்க யாருண்டு..
அணைத்த தோள்கள் வலித்ததோ
அரணாக எனை சுமந்த இதயம் துடித்ததோ..
அரற்றுகிறேன் ஆருயிரே
யார் துணையோ எனக்கினி...
சுமக்கின்ற சிசுவிற்கு என்ன சொல்வேன்..
சுமக்கும் என் இதயத்துக்கு என்ன
சொல்வேன்..
இறுதிவரை உன்னுடனே என்று கூறியது
இறுதிஊர்வலத்தில் உன்னை காணவா..
கலங்காதே என் அன்பே..
சுமந்த பிள்ளையோ சுமக்கும் பிள்ளையோ..
உன் வழியே நாட்டிற்கு அர்பணிப்பேன்..
ஊடகம் சொல்லா போன உன் வீரத்தை உன் உதிரத்துக்கு உரைத்திடுவேன்..
விழி நீர் நிரம்பி வெதும்பி தவித்திடினும்
திடமுடன் நிமிர்ந்து நிப்பேன் நான் வீரனின் மனைவியென..
இறவா புகழை பெற்ற
இம்மண்ணின் மைந்தனே
போதும் உன் ஓட்டங்கள்
போதும் எங்களுக்கான உன் தவிப்புகள்
போதும் நீ சிந்திய குருதி கலந்த கண்ணீர்கள்
போதும் எங்களுக்காக உழைத்தது..
போதும் அன்பே நீ கண்ட துன்பங்கள்..
துயில் கொள் என்னவனே..
இந்தியத்தாய் உன்னை இதயத்துடனே
இதமாக அணைத்திடுவாள்..


கண்ணான கண்மணியே
கண்ணுறங்கு பூமகனே
காணாத தூக்கமெல்லாம்

கலையாமல் கண்ணுறங்கு...
கவலை நீங்கி கண்ணுறங்கு.
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கண்ணீர் தவிர வேறு செய்யஇயலா இயலாமையில் நெஞ்சம் கொதிக்கிறது........ ஆனால் அந்த கண்ணீரையும் கண்களுக்கு உள்ளேயே அடக்கி வைக்கிறோம். கோழைத்தனத்துக்கு பதில் கொடுத்து ஆனந்த கண்ணீராய் வெளியேற்றுவோம்............
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
கண்கள் கலங்கியது
அவர்கள் ஆன்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறேன்
அவர்தம் சுற்றத்திர்க்கு எங்கே வார்த்தைகள்
ஆறுதல் சொல்ல:cry:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
வார்த்தைகள் இல்லை வலியினைச் சொல்ல ????சொல்லாமல் போனால் இதயம் கனக்கிறது ???உங்கள் கவிதையில் எங்களின் கண்ணீர் துளிகள் ஆறுதலை தேடி நீண்ட பயணம்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top