• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter - 7 part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
அத்தியாயம்---7
மனிஷின் பதட்டம் ரஜினிபாய்க்கு சந்தோஷத்தையும், பயத்தையும் , சேர்த்து கொடுத்தது எனலாம். ஏதாவது காரணத்தால் இந்த இடம் தழையாது போனால் அந்த பெண்ணின் நிலை என்ன ஆவாது.
ஆம் அந்த பெண்ணை நினைத்து தான் ரஜினியாய்க்கு கவலை அதிகரித்தது. மனிஷிடம் பேசி முடித்ததும் முதல் வேலையாக கடவுளிடம் அந்த காளியம்மான் தான் இந்த இடத்தை முடித்து வைக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
செல்லம்மாவை பார்த்துக் கொண்டே கனவுலகில் இருந்தவனை ஜெயந்தியின் பெரியப்பா “வந்து ரொம்ப நேரம் ஆகுதா…..?” என்ற கேள்வியில் அவரை புரியாது பார்த்த மனிஷிடம்.
“பார்த்திங்களா….நான் என்னை அறிமுகம் படுத்தாமலேயே பேசுறேன்.” என்று சொன்னவர்.
தன் கைய் நீட்டி…. “நான் பெண்ணின் பெரியப்பா சந்திரசேகர். சின்னதா பேன்ஸி ஸ்டோர் வெச்சி நடத்திட்டு வர்றேன்.” என்று சொன்னதும்.
தன்னால் அவர் கையைய் பற்றிக் கொண்ட மனிஷ்…. “ஐயம் மனிஷ்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்.
அவரின் அருகில் இருந்தவர்களை ஆவளோடு பார்க்க. தான் எதிர் பார்த்தவள் அங்கு இல்லாது ஏமாற்றத்தை கொடுத்தாலும் அதை முகத்தில் காட்டாது சிரித்துக் கொண்டு மற்றவர்களின் அறிமுகத்தையும் ஏற்றுக் கொண்ட பின்.
ஜெயந்தியின் பெரியம்மா சாந்தி…. “பொண்ணு அவ பிரண்டோடு வர்றேன்னு போனா தோ வந்துடுவா…..” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே….செல்லம்மா, ஜெயந்தி இருவரும் அங்கு வந்து சேர.
சாதரண அலங்கரிப்பில் இருந்த போட்டோவை பார்த்தே விழுந்த மனிஷ் இந்த விசேஷ அலங்கரிப்பில் விழாமல் இருப்பானா….என்ன…..?.
இது வரை நாகரிகம் பார்த்து கொண்டு தன் முகத்தில் எதுவும் காட்டாது இருந்தவன் செல்லம்மாவின் அழகில் நாகரிகம் என்றால் என்ன என்ற நிலைக்கு தள்ளப்பட்டவன் போல் அவன் கண்கள் அங்கு இங்கு அசையாது செல்லம்மாவின் முகத்திலேயே நிலைப்பெற்று இருந்தது.
“இவ தான் என் தம்பி மகள்.” என்று சொல்லிக் கொண்டே மனிஷை பார்த்த சந்திரசேகர் அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்து அதிர்ச்சியாகி தன் மனைவி தன் பிள்ளைகளை பார்க்க. அவர்களும் அதிர்ச்சியுடன் சந்திரசேகரை பார்த்தனர்.
அதிர்ச்சியாக வேண்டிய ஜெயந்தியோ கூலாக தங்கள் திட்டத்தின் முதல் படி வெற்றியைய் கொண்டாடும் விதமாக செல்லம்மாவை பார்த்து சிரிக்க.
போடும் வேஷத்துக்கு தகுந்த விதமாக வெட்கம் என்ற போர்வையில் தலை கவிழ்ந்து இருந்த செல்லம்மா தங்கள் திட்டம் ஜெயித்ததில் மகிழ்ச்சி அடைந்தாலும் ,முகம் தெரியா ஒருவன் தன்னை வெறித்து பார்க்கிறான் என்ற நினைப்பு அருவெருப்பை கொடுத்தது.ஆம் செல்லம்மா இன்னும் மனிஷின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.
ஆனால் அவன் தன்னையே தான் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்று தன் உடல் கூசலில் தெரிந்துக் கொண்டவளுக்கு எப்போது இங்கு இருந்து போவோம் என்று ஆகி விட்டது.
கையில் உள்ள செல்லை பார்த்துக் கொண்டு இருந்த செல்லம்மா வெளியிலேயே இரு என்று அதட்டி விட்டு வந்த சுகன் அண்ணாவை அழைக்கலாமா…..? என்று நினைக்கும் போதே….
விரு விரு என்று வந்த சுகன் செல்லம்மா ஜெயந்தியின் நடுவில் நின்றுக் கொண்டு செல்லம்மாவை பார்த்து.
“ பாப்பா மீட்டிங் பதினொரு மணிக்கு நியாபகம் இருக்கா…..? “ என்று கேட்டவன்.
“உள்ளே போய் சாமி பார்த்துட்டு போக சரியா இருக்கும் வா….” என்று கைய் பற்றி இழுக்க.
சுகன் இருவர் நடுவே நிற்க்கும் போதே...எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்ற மனிஷின் எண்ணம் ஓடும் போதே….
உரிமையுடன் பெண்ணின் கைய் பற்றி இழுக்கவும். எங்கு பார்த்தோம் என்ற நினைவை புறம் தள்ளி விட்டு சந்திரசேகரை பார்க்க.
ஜெயந்தியைய் விட்டு செல்லம்மாவை ஆர்வமாக பார்க்கும் போதே…. தங்கள் வீட்டு பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளைய் தேவையா…..? என்ற எண்ணம் வந்து விட்டதால் மனிஷின் பார்வைக்கு பதில் அளிக்காது.
சுகனிடம்…. “பாப்பா கிட்ட எங்க வீட்டிலேயே தங்க சொன்னேன். ஆனா பாப்பா தான் இல்ல ஓட்டலிலேயே தங்கிக்கிறேன்னு சொல்லுச்சி….ஊருக்கு போறதுக்கு முன்னவாவது வீட்டுக்கு வந்து போங்க.” என்று அழைப்பு விடுத்தவரிடம்.
“கண்டிப்பா அங்கிள்.” என்று தன்மையாக பதில் அளித்தான். ஜெயந்தியைய் பெண் கேட்க அவரிடம் தானே செல்ல வேண்டும் அதனால் உண்டான பணிவோடு குழைய.
இது வரை தலைகுனிந்தே இருந்த செல்லம்மா சுகனின் இந்த அதிகப்படி பணிவை பார்த்து புன்னகையுடன் ஜெயந்தியைய் பார்த்து சைகை செய்ய. ஜெயந்திக்கும் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விட.
ஜெயந்தியின் பெரியம்மாவுக்கு இந்த இடம் முடியாது என்ற எண்ணம் வரும் போதே….செல்லம்மாவின் அலங்காரத்தை பார்த்து இந்த பெண் ஏன் இவ்வளவு அலங்காரத்தில் வந்தாள் என்றும் நினையாமல் இருக்க முடியவில்லை.
ஜெயந்தியின் பெரியப்பா குடும்பத்துக்கு பெண்ணின் போட்டோ மாற்றி அனுப்பிய விஷயம் தெரியாததால்…மனிஷ் ஒரு ஜொள்ளு பார்ட்டி என்று தான் நினைக்க தோன்றியது.(அதுவும் ஒரு விதத்தில் சரி தான்.)
இவர்களின் பேச்சில் தலையிடாது ஒரு வித கூர்மையும் பார்த்துக் கொண்டு இருந்த மனிஷ். சுகன் செல்லம்மாவை அழைத்து செல்லும் போது தன் கைய் முன் நீட்டி தடுத்துக் கொண்டே சந்திரசேகரை பார்த்து.
“நான் பேசனும்.” என்று சொல்ல.
மனிஷின் கைய் நீட்டும் போதே...செல்லம்மா அடுத்த அடி எடுத்து வைத்தால் மனிஷை தீண்டு விடுமோ என்று அவசரமாக “செல்லம்மா….” என்று தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் போது தான் சுகனை மனிஷூக்கு அடையாளம் தெரிந்தது.
பாராம்பரியம் சஞ்சயின் வலது கைய் சுகன். செல்லம்மா சஞ்சயின் தங்கை. தனக்காக பெண் கேட்டு அவமானப்படுத்தலுக்கு பதிலாக தான் அவமானப்படுத்தினால் பதிலுக்கு….
சத்தியமாக அவர்களிடம் இருந்து இவன் இப்படி ஒரு பழவாங்காலை அவன் எதிர் பார்க்கவில்லை. என்ன மாதிரியான பழிவாங்கல்… மனம் கொதித்து தான் போனது.
தானும் அவ்வாறு தான் சஞ்சயைய் பழவாங்கினோம் என்று மறந்தவனாய்...தன் செல்லில் உள்ள போட்டோவை சந்திரசேகரிடம் காண்பித்து.
“இதை நீங்க தான் எனக்கு அனுப்பினிங்களா….?” என்று கேட்டதும். மனிஷின் செல்லை எட்டி பார்த்தவர். அதில் உள்ள செல்லம்மா போட்டோவை பார்த்து.
“நான் ஏன் செல்லம்மா போட்டோவை உங்களுக்கு அனுப்ப போகிறேன்…..?” பாவம் பக்கத்தில் ஒரு ஓரத்தில் தன் தம்பி மகள் இருப்பதை பார்க்காது சொல்ல.
அதை சுட்டி காட்டிய மனிஷ்… “இதில் ஓரத்தில் இருப்பது யாருன்னாவது தெரியுதா….?” என்ற கேட்டதும் தான் நன்கு பார்த்து ஜெயந்தி என்று அறிந்துக் கொண்டவர்.
அப்போது கூட வெள்ளந்தியாக….”அது பாப்பாவும் நம்ம பொண்ணும் பிரண்டு அதான் ஒன்னா போட்டோ பிடிச்சி இருக்காங்க.” என்று இது ஒரு குறையா என்பது போல் கேட்டவர்.
பின் “இந்த போட்டோ உங்களுக்கு யாரு அனுப்பிச்சா….?” என்று சந்திரசேகர் கேட்க.
“அது தான் யாரு அனுப்பிச்சா….?” என்று கேட்ட மனிஷின் பேச்சுக்கு இடையில் புகுந்து அந்த போட்டோவை பார்த்த ஜெயந்தி.
“அய்யோ இந்த போட்டாவையா அனுப்பிச்சேன்…” என்று பதறியவளாய்.
தன் பெரியப்பாவை பார்த்து….”பெரியப்பா என் போனில் பழைய போட்டோவை பார்த்துட்டு இருந்தேனா….அப்போ தான் நீங்க மாப்பிள்ளைக்கு இன்னுமா போட்டோ அனுப்பலேன்னு திட்டினிங்களா…அவசரத்தில் கைய் பட்டு இந்த போட்டோ போயிடுச்சி போல பெரியப்பா….” என்று கண் சிமிட்டி அறிய பிள்ளை போல் பேச.
அதை பற்றி ஒன்றும் கேட்காத மனிஷ் சந்திரசேகரிடம்….”என்னை பற்றி விவரத்தை உங்க பொண்ணுக்கு எப்போ சொன்னிங்க….? என்று கேட்க,
“அது பத்து நாளுக்கு முன்னவே சொல்லிட்டேன் தம்பி.” என்று சொன்னவர்.
மனிஷை தவறாக நினைத்து விட்டோமே என்று வருந்தியவராய்….”மன்னிச்சிடுங்க தம்பி.” என்று கேட்டதுக்கு.
எதுக்கு என்று கேட்காது….”பரவாயில்லை….” என் சொன்னவன். ஏதோ முடிவு செய்தவனாய்.”எனக்கு உங்க பெண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு. என்னை பிடிச்சி இருந்தா மேற் கொண்டு பேசலாம்.” என்று அசால்ட்டாய் ஒரு குண்டை போட்டு விட்டு அங்கு இருதவர்களை பார்த்துக் கொண்டு வந்தவன்.செல்லம்மா, சுகன் வரும் போது தன் பார்வையைய் அவர்களிடம் நிலைக்க விட்ட வாறே சொல்ல .
அதை கேட்டு செல்லம்மா, அதிகமாய் அதிர்ந்தாளா….?சுகன் அதிகமாய் அதிர்ந்தானா….? பிரிந்தறிந்து சொல்ல முடியவில்லை என்றாலும் மொத்தமாய் அதிர்ந்து தான் போயினர்.
அதுவும் ஜெயந்தி அதிர்வோடு கோபமும் எட்டி பார்த்து செல்லம்மாவை முறைத்து பார்க்க. இது வரை அருவெறுப்பு என்ற வகையில் தலை குனிந்து இருந்த செல்லம்மா.
முதன் முதலில் நிமிர்ந்து நேர் கொண்டு பார்வையோடு அவனை அள, அள வென்று அளவெடுக்க.
செல்லம்மா தன்னை முழுமையாக பார்க்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்த மனிஷ் அவள் பார்த்து முடித்ததுக்கு அடையாளமாய் அவன் கண்ணில் அவள் பார்வை நிலை பெறும் போது.
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
சும்மா இருந்த சிங்கத்த சொரிஞ்சுவிடறியே செல்லம்மா அது உனக்கே ஆப்பாக முடியபோகுது.
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

நல்ல சுவாரசியமாக இருக்கின்றது.

நன்றி
 




Thara

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
461
Reaction score
600
Location
Chennai
Ippady sontha kailaye soonyam vachukittaye chellakutty
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
ha ha bunu vanngaireeyaaaaa chcheellammaaaaaaaa
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hahaha? phaphooo veychutama appu ?chellamma ippo ennama panna phora??‍♀Nice ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top