• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 9 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

Late ah post poduren sorry, inime seekarama post poduren. Chapter 9 kizha iruku, padichitu unga comments ah sollunga.

அத்தியாயம்-----9
சென்னை ஏர்போர்ட்டில் இருந்து நேராக தன் டி.நகர் பிரான்சுக்கு வந்த மனிஷ் மேனஜர் ஷண்முகத்தை அழைத்தவன் “ புட்டேஜை போடுங்க.” என்றதும்.
எந்த புட்டேஜ் என்று கேளாது அவன் கேட்ட்தை போட்டவர். அவன் எதிர் பார்த்த நேரம் வரும் போது மனிஷை பார்த்த வாறே….”இது தான் சார்.” என்று ஒதுங்கி நின்றதும்.
அதில் தன் பார்வையைய் கூர்மையுடன் செலுத்த… சரியாக ஆறாரை மணிக்கு அதிக கூட்டம் வரும் நேரம் பார்த்து வந்த அந்த இளம் பெண். நெக்லஸ் பகுதிக்கு செல்வது துள்ளியமாக மனிஷூக்கு தெரிந்த்து.
அந்த விற்ப்பனை பிரிவில் இருந்த பெண்ணிடம் சுமார் அரை மணிநேரமாக “அந்த டிசைன் காமிங்க. இந்த டிசைன் காமிங்க.” என்று ஒவ்வொரு நகையாக எடுத்து பார்த்தவள்.
பின் அந்த விற்பனை பெண்ணிடம் “எனக்கு எந்த டிசைனும் பிடிக்கல.” என்றதும். அந்த விற்பனை பெண் எடுத்து காமித்த அந்த நகைகள் அமைந்து உள்ள பாக்ஸை எடுத்து வைத்து திரும்பும் நேரத்தில் அவசரமாக தன் ஹான்பேகில் ஏதோ எடுத்து வைப்பது போல் பார்த்த விற்பனை பெண் தான் எடுத்து வைத்த ஷோகேசில் இருப்பதில் ஒரு நெக்லஸ் குறைந்து இருப்பதை பார்த்து பதட்டத்துடன் அந்த பெண்ணின் பேகை பிடிங்கி அதில் இருந்த நகையைய் பார்த்து கோபத்துடன் கத்த.
விற்பனை பெண் போட்ட சத்தத்தில் அங்கு இருந்த அனைவரும் கூடி அந்த பெண்ணை ஒரு வார்த்தை கூட பேசவிடாது அனைவரும் திட்டியது மட்டும் அல்லாது அந்த கடையின் வாடிக்கையாளர் ஒருவர் அந்த பெண் மீது கைய் வைத்த சமயத்தில் காவல்துரை வந்து விட.
பின் அனைத்தும் காவல் துரை பார்த்துக் கொள்வதாக கூடிய மக்களை கலைத்த காவல் துரை. “எனக்கு யார் போன் செய்த்து….?” என்று கேட்டதும்.
ஷன்முகம் முன் வந்து “நான் தான் சார் போன் போட்டேன்.” என்ற பதிலில்.
“நீங்க இந்த கடையில் என்னவா இருக்கிங்க…….?” இன்ஸ்பெக்டர் கேள்விக்கு.
“மேனஜரா இருக்கேன் சார்.”
“எத்தனை வருஷமா…?…”
“இந்த கடை ஆராம்பிச்சதில் இருந்தே நான் தான் சார் மேனஜர்.”
“இப்போ இந்த கடை எப்போ ஆராம்பிச்சதுன்னு நான் கேட்கனுமா…..?” என்ற அவர் கேள்வியில் தன் தவறு உணர்ந்து.
“சாரி சார். எட்டு வருஷமா இங்கு மேனஜரா இருக்கேன் சார்.” என்று தன் விசாரணையைய் அந்த மேனஜரிடம் நடத்திக் கொண்டு இருந்தாலும் இன்ஸ்பெக்டர் பார்வை முழுவதும் அந்த பெண்ணிடமே இருந்தது.
அந்த பெண்ணும் எந்த வித பயமும் இல்லாது கைய் கட்டிக் கொண்டு அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருக்க. அடுத்த மாதம் ஓய்வு பெரும் நிலையில் இருக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கு தெரிந்து விட்டது அந்த பெண் திருடவில்லை என்று.
அந்த கடை ஊழியரில் ஒருவன் அருகில் இருப்பவனிடம் … “விசாரணை இப்படி தான் இருக்குமா…..? என்று கேட்டவன்.” பின் “ஆனா சினிமாவில் வேறு மாதிரி காட்டுவாங்கலே…..? என்ற சந்தேகத்தையும் கூடவே எழுப்ப.
அதற்க்கு அருகில் இருந்தவன் “ரொம்ப முக்கியம்…..நானே இங்கு என்ன நடக்குதுன்னு தெரியாம பார்ததுட்டு இருக்கேன். இதில் இவன் வேறு.” என்ற இவர்களின் இந்த குசு, குசு பேச்சு இன்ஸ்பெக்டருக்கு இடஞ்சலாய் இருக்க.
“ கொஞ்சம் அமைதியா இருங்க. நான் இங்கு விசாரிச்சிட்டு இருக்கேன்லே ….” என்று ஒரு அதட்டல் போட.
அதில் இருவரும் ஒரு சேர….”விசாரிங்க சார். விசாரிங்க.” என்று அமைதியாகி விட.
“ம்…..” என்ற சொல்லோடு தேவியின் பக்கம் திரும்பியவர்.
“நீ சொல்லும்மா…..” அவளின் கனவை கேட்கும் ஆவளோடு கேட்க.
அங்கு இருந்தவர்களை சுற்றி பார்த்த தேவிக்கு அவர்களின் மனநிலை புரிந்து போக வந்த சிரிப்பை அடக்கினாலும், தன் கனவு படிப்பு பற்றி பேசும் போது உணர்ச்சி வயப்பட்டே பேச ஆராம்பித்தாள்.
“நான் பிறந்ததில் இருந்தே ஸ்க்ரூ, பேனர், ஆயில்,இதெல்லாம் பார்த்து வளந்தேன் சார்.”
அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது பார்த்த இன்ஸ்பெக்ட்டரை பார்த்து சிரித்தவள்.
“என் அப்பா மெக்கனிக்கல் சார். கடை பின் பக்கம் தான் வீடு. நான் வீட்டில் இருந்ததோடு கடையில் தான் அதிக நேரம் இருந்து இருக்கிறேன். அதில் வந்த ஆர்வமா இல்லை என் பன்னிரெண்டாவது வயதில் அப்பா இறந்ததும். அந்த தொழில் தான் எங்களுக்கு கஞ்சி ஊத்தியது என்ற விசுவாசமான்னு தெரியல.
கொஞ்ச நாள் கடையில் வேலை பார்த்த பையன் வந்த பணத்தை ஒழுங்கா தான் கொடுத்தான்.
உடையவன் பாக்கலேன்னா …..அது எப்படி போகுமுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. முக்கா வாசி அவன் எடுத்துட்டு கால் வாசி தான் கொடுத்தான்.
அதிலேயே அவனுக்கு சம்பளமும் கொடுக்கனும். ஒரு நாள் அவன் தில்லு, முல்லு ,பார்த்து திட்டினதுக்கு வேலைய விட்டுட்டு போயிட்டான். அப்புறம் என்ன என் பதினாஞ்சாவது வயசில இருந்தே இந்த கைய் ஸ்பெனர பிடிக்க ஆராம்பிச்சது. படிப்பையும் விடல.
இந்த தொழில வேலையா பாக்காம என் அப்பாவா பார்த்தேன் சார். என் அப்பா ஆசை எல்லாம் பெரிய ஒர்க் ஷாப் வைக்கனும் என்று. என் ஆசை அதோடு ஒரு கார நானே வடிவமைக்கனும் என்று. அது தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன் சார்.”
அவள் பேச பேச அவள் கனவை நினைவாக்குவாள் இந்த பெண் என்று நினைத்தவராய். தேவிக்கி கைய் கொடுத்தவர்.
“உன் கனவு வெற்றியடைய என் வாழ்த்துமா…..” என்று வாழ்த்தியவர்.
பின் அங்கு இருந்தவர்களை பார்த்து….” இந்த பெண்ணின் ஹான் பேக் எங்கே…..?” என்று கேட்டதும்.
“அப்பா இப்போவாவது கேட்டாரே…..” தன் கையில் உள்ளதை தன் வயதையும் பொருட்படுத்தாது மேனஜர் ஓடி போய் கொடுக்க.
அவர் வாங்கிய மூச்சில்…… “இப்போ எதுக்கு இப்படி ஓடி வர்றிங்க. வயசுக்கு ஏத்த நிதானம் தேவை. அப்படி இருந்து இருந்தா இப்படி ஒரு அப்பாவி பெண்ணை அசிங்க படுத்தி இருக்க மாட்டிங்க.” என்று ஒரு குட்டு வைத்த பின் அந்த பேகை வாங்கி பார்த்தவர்.
அதில் இருந்த நெக்லஸை எடுத்து ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டு இருந்த விற்பனை பெண்ணை அருகில் அழைத்தவர்.
“இந்த நகையாம்மா…..?” என்ற கேள்விக்கு.
“ஆமாம் சார்.” என்று பவ்யமாய் பதில் அளித்த அந்த பெண்ணுக்கு உள்ளுக்குள் ஒரே நடுக்கமாய் தான் இருந்தது.
தேவியின் பேச்சை கேட்டவளுக்கு தவறு செய்து விட்டோமோ…..? என்ற எண்ணமே வந்து விட்டது.
அந்த நகையைய் அங்கு இருந்த மூத்த ஊழியர் ஒருவரை அழைத்து.” இது உங்க கடை நகையா…..?” என்று கேட்டதுக்கு.
சிறிதும் யோசியாது.” எங்க கடை நகை தான் சார்.”
“அது எப்படி மேலோட்டமா பார்த்த உடனே சொல்றிங்க……?” என்று கேட்டதுக்கு.
“இந்த வடிவமைப்பு எங்க முதலாளியோடது சார். அது தான் உடனே சொல்லிட்டேன்.”
“ஒ அப்படியா……?” என்று கேட்டவர்.
பெரிய பெரிய கடையில் தங்கள் கடையின் முத்திரையைய் நகையில் பதித்திருப்பதை உற்று பார்த்தவர் கோபம் வந்தவராய்.
“உங்க கடை நகையா இது….?பாருங்க ….பாருங்க.” என்று ஆவேசத்துடன் கேட்க.
ஏற்கனவே பீதியில் இருந்த அந்த விற்பனை பெண் மயக்கம் வரும் நிலைக்கு தள்ளப்பட்டவளாய்…..அங்கு இருந்த இருக்கையில் அமர.
மேனஜரோ….முதலாளி ஊரில் இல்லாத போது கடையின் பொறுப்பு நம்மது ஆச்சே...இந்த சமயத்தில் இது மாதிரி விவகாரம் நடந்தால் நம்சீட்டை கிழித்து விடுவாரே….
முதலாளி நம்பி வைத்த தன் மகளின் திருமணம் என்ன ஆவாது……? என்ற பதட்டத்தில் இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் ஓடி போய் அந்த நகையைய் பிடுங்காத குறையாய் பறித்து நகையில் உள்ள முத்திரையைய் சத்தமாக.
“P.P.T.M” என்ற பாராம்பரியம் தங்க மாளிகையின் முத்திரை பதித்து இருக்க. நம்ப முடியாது அந்த நகையைய் உற்று உற்று பார்த்தவர்.
“சார் இது எங்க முதலாளி வடிவமச்சது சார்.” என்று சொல்லும் போதே…
நினைவு வந்தவராய்….. “அந்த நகை கடை மீது தன் டிசைனை திருடியதா எங்க முதலாளி கேசு போட்டு இருக்காரு சார்.” ஏதோ கண்டு பிடித்தவராய் சொல்ல.
 




ugina

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,193
Reaction score
1,314
nice ud sis but idail yetho missing
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis......... ithu chellamavin thiruvilayatala
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Unakku yen intha vendaatha veen velai, Chellammaa?
Nee Manishyidam nallaa semathiyaa vaangik kattap povathu uruthithaan polave Chellammaa dear
 




Last edited:

Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

நன்றாக இருந்தது இப்பகுதி .

நன்றி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top