You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


vvu 4

kavi nila

Author
Author
#1
திவ்யாவும் சங்சீதாவும் பேசிக் கொண்டு இருக்க சம்யுத்தவிற்கு பயண களைப்பில் தூக்கம் வந்தது.


அதை பார்த்த சுந்தரி, “என்ன பாப்பா ரொம்ப அசதியா இருக்கா?” என.

ஆமாம் சித்தி ரொம்ப டயர்டா இருக்கு, கொஞ்ச நேரம் தூங்கவா என கேள்வியாக கேட்க,

இரு மா, டேய் முகிலா எங்க வா டா என தன் இரண்டாவது மகனை அழைத்தார்.

என்ன மா?”, என கையில் ஃபொனில் கேம் விளையாடிக் கொண்டே வந்தான். “சொல்லுங்க மா என்ன வேண்டும்”,

“மேல இருக்கிற ரூமிற்கு அழைச்சிட்டு போடா” என முகிலிடம் சொல்லிவிட்டு, சம்யுத்தாவிடம், “என்னால மேல் ஏற முடியாது மா முட்டி வலி, நைட்டு சாப்பாட்டுக்கு கீழ வரியா இல்லனா மேலே சாப்படுறிய”


இல்ல ஆன்ட்டி நான் கீழே வந்தே சாப்பிடுறேன். வா முகில் வந்து ரூம் காட்டுங்க. போகும் போது அவா¢கள் இருவரை பற்றியும் பேசிக் கொண்டு சென்றனா¢.

அறை கதவை திறந்து உள்ள சென்றாள். மிக பெரிய அறை. மிகவும் நேர்த்தியாக அழகாக கலை வண்ணத்துடன் இருந்தது. பால்கனியில் இருந்து பார்த்தால் கீழே உள்ள தோட்டம் தெரியும்.
சரி சிஸ், எதனா வேனும் னா சொல்லுங்க, என கூறிவிட்டு சென்றுவிட்டான்.*********


இரவு 8.30,


சமையல் ரெடி வாங்க வாங்க சாப்பிடலாம், என அனைவரையும் அழைத்தார் சுந்தரி.

என்னமா லேட் ஆச்சு ஆனா அகில் இன்னும் வரலையா? என பிரபா மருமகளிடம் கேட்க,

லேடாகும் சொன்னாங்க, வர நேரம் தான் நீங்க வாங்க மாமா சாப்பிட, என்றாள் திவ்யா

அனைவரும் டைனிங் டேபிளில் அமர, “என்னமா அந்த பாப்பா இன்னும் வரல நான் வேணா போய் எழுப்பவா”, என சுந்தரி கேட்க

“வேண்டாம் அத்தை அவளுக்கு பசிச்சா அவளே வருவா, தூங்கட்டும் ரொம்ப டயர்டா இருப்பா போல நான் சாப்பிட்டு அவ ரூமுக்கு எடுத்துப் போறேன்” - சங்கீதா

கார் வரும் சத்தம் கேட்க, அண்ணா வந்துட்டாங்க இருங்க நான் பார்க்குறேன் என்றான் முகில்.

கதவை திறந்து கொண்டு வந்தவரை பார்த்து,

அத்தான்! என மித்ரனை கட்டிக்கொண்டான்.

லட்சுமி, என்ன டா சொல்லாம இப்ப வந்து இருக்க. எதுவும் நைட் டைம் வேற எதனா பிரச்சனையா?

கூல்! கூல்! ஒரு பிரச்சனையும் இல்லை அங்க வேலை முடிங்சிடுச்சு அதான் உடனே கிளம்பி வந்தேன். ஸ்ரீகுட்டி எங்க?

அண்ணா! என ஸ்ரீயும் கூடவே சங்கீயும் வந்தனர்.


எப்ப வந்த சங்கீ பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, ஸ்ரீக்கு ரொம்ப ஜாலி தான் இனி நான் எல்லாம் அவ கண்னுக்கு தெரிய கூட மாட்டோம், என கேலியாக முடித்தான்.


இதோடா சீன் போடுறீங்கள, சார் வாங்க சாப்பிடலாம், என அழைத்தான் திவ்யா.

அத்தை, மாமா சாப்பிடே இருங்க நான் இதோ வரேன், என்று சொல்லிவிட்டு மேலே உள்ள தனது அறைக்கு சென்றான்.

மித்ரனின் தந்தை 2 வருடங்களுக்கு முன்பு இறந்தா£¢. அதன் பின் லட்சுமி தன் பிள்ளைகளுடன் தன் அண்ணன் வீட்டிலே தங்கிக் கொண்டார்.

தன் ரூமிற்கு செல்ல மாடிப்படி ஏறும்போது “என்னடா இது திரும்பவும் ஹார்ட் வேகமாக துடிக்கிறது. முதல டாக்டரை போய் பார்க்கனும்”, அறையில் உள்ள விளக்கை போட்டான்.

யாரு இது என் ரூமில் தூங்கறது, என கிட்ட செல்லும் முன் அங்க முகில் வந்தான்.

“அத்தான்! இருங்க சிஸ்டர் தூங்கறாங்க. நீங்க எப்ப வருவிங்கனு தெரியாது. அதான் அவங்கள இந்த ரூமில் இருக்க சொன்னேன். சாரி, அத்தான். இப்ப என் ரூமிற்கு வாங்க”, என அழைத்தான்.


டேய் நான் ஊருக்கு போய் வரத்துக்குள்ள உனக்கு இவ்வளவு பெரிய தங்கையா!


“ஜயோ! இவங்க சங்கீவுடைய ஃப்ரண்டு, எனக்கு தான் தங்கச்சியே இல்லையே அதான் கடனுக்கு வாங்கினேன். வாங்க போகலாம்” என அழைக்க,


நீ போடா நான் கப்போர்டில் இருந்து டிரஸ் எடுத்து வரேன். உன் தங்கையை எழுப்ப மாட்டேன்.

முகில் சென்ற உடன் அலமாரியில் இருந்து டிரஸ் எடுத்துக் கொண்டு, “திரும்பாத டா திரும்ப கூடாது நீ குட் பாய்” என்று கட்டில் பக்கம் சென்ற தன் பார்வையை திரும்பி தனக்கே கூறிக் கொண்டான்.


“பரவாயில்லை, ஒரு முறை முகத்தை மட்டும் பார்த்துட்டு போய்டுவோம்” என கட்டிலின் அருகில் வந்து பார்த்தான்.


குழந்தை போல் தலையனை பிடித்துக் கொண்டு, இரண்டு கன்னங்களும் ஆப்பிள் போல் இருக்க, தூங்கினாலும் சிரித்துக் கொண்டு இருக்கும் இதழ், நெற்றியில் விளையாடிக் கொண்டு இருக்கும் ஒற்றை முடி என தன் முன் இருந்த தேவதையை கண்டு ஒரு நிமிடம் மயங்கி போனான்.
தன்னையும் மறந்து “ஏஞ்சல்” என தடுமாறிய மனதை ஒரே நிமிடத்தில் மீட்டு எடுத்தான்.“ஒரு பெண் தூங்கும் போது ரூமில் இருக்கிறதே தப்பு இதல அவளை தொட்டுப் பார்க்க நினைக்கிறது ரொம்ப தப்பு டா முதல வெளிய போ” என அவனுக்கே அவன் முளை கட்டளை போட்டது.


வெளிய வந்தவனுக்கு அந்த முகமே கண் முன் வந்தது. டைனிங் டேபிளில் சாப்பிட அமர்ந்தான். அனைவரையும் கண் பார்த்தாலும் பேசுவதை காது கேட்டாலும் அவன் கவனம் முழுவதும் இங்கு இல்லை. அப்பொழுது அவன் தாய்,


“கண்ணா, உனக்கு பெண் பார்க்க சரி சொன்னல அம்மா பார்த்துட்டேன் பா. ஜாதகம் கூட நல்லா பொருந்தி இருக்கு. நம்ம சொந்தம் தா பா”.

“யாரு அண்ணி பொன்னு” என்று சுந்தரி கேட்டால்.


என் நாத்தனார் பெண் சஹானா, இப்ப தான் காலேஜ் முடிச்சிருக்கா, என யோசனையுடன் மித்ரனை பார்க்க


அகில் மித்ரனின் தோளில் கையை போட்டான். அதன் பின்பு தான் இந்த உலகத்திற்கு வந்தான். அகில் அவனை பார்த்து,

அம்மா சொன்னதுக்கு சரியா டா? என்றான்.


கேள்வியே தெரியாமல், “ம்மா நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓ.கே”


சரி பா, அம்மாக்காக பார்க்க கூடாது நாளைக்கு சஹானாவை இங்க வர சொல்லியிருக்கேன். பேசிப் பார்.


அம்மா சொன்னதை கேட்ட பின், யோசனையுடம் படுக்க சென்றான்.


**********


பறவைகளின் ஒசையால் அதிகாலையே தூங்கம் களைந்துவிட்டது சம்யுத்தாவிற்கு. தன் அறையில் உள்ள பால்கனி வழியே தோட்டத்தை பார்த்தவளுக்கு அங்கு செல்ல தோன்றியது.


தோட்டத்திற்கு சென்றால் அங்கு பைப்யை பார்த்து செடிக்களுக்கு நீரை இரைத்தால்.


செடிக்கு தண்ணர் உத்தரத்து இவ்வளவு பிடிக்குமா?


திரும்பி பார்த்தால், நடுத்தர வயதை உடைய ஒருவர் இருந்தார். அவரிடம்

“ஆமாம் ஆங்கிள் ரொம்ப பிடிக்கும் ஆனால் எங்க வீட்டில் தோட்டம் வைக்க இடம் இல்லை. நீங்க யாரு ஆங்கிள் நெத்து உங்களை நான் பார்க்கவில்லை”


இப்பதான் மா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வந்தேன். அகிலோட பெரியப்பா. நேத்தே உன்னை பற்றி பிரபா சொன்னான் மா, என சன்முகம் தன்னை அறிமுகம் செய்துக் கொன்டார்.


பெரியப்பா! என கத்திக் கொண்டே முகிலும் அகிலும் அங்கு வந்தனர்.

கத்தாதிங்க டா, என்ன முகில் இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்ட. எதோ சரியில்லையே. என்ன விஷயம் டா.

ஒரு வேளை சங்கீக்காக எழுந்தோம்னு நம்ம முகமே காட்டிக் கொடுக்குதோ, பேசாம சொல்லிடலாமா, வேணாம் டா இப்ப பெரியப்பாவை சமாளி என, “ஒன்னும் இல்லை பெரியப்பா காலையிலே பிரன்டு கால் பன்னான் தான் தூக்கம் போய்டுச்சு”

என்னமோ சொல்லுற பார்க்கலாம். சரி வாங்க உள்ள போகலாம்.

எப்ப வந்திங்க மாமா, என மித்ரனும் அங்கு வந்தான்.

நான் இப்ப தான் வந்தேன், நீ எப்ப பா வந்த என கேட்டார்.

நான் நேத்து நைட் வந்தேன் என கூறிக் கொண்டே சம்யுத்தாவை பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


இவங்க யாரு நான் நேத்து பார்க்கவேயில்லையே? என மித்ரனை பார்த்து கேட்டாள்.

இவங்க ஸ்ரீகுட்டியோட அண்ணன் என்று சம்யுத்தாவிடமும், இவங்க சங்கீ பிரென்டு என மித்ரனிடமும் அகில் அறிமுகம் செய்தான்.

அனைவரும் உள்ளே சென்றனர.


***********


வெளியே செல்ல இருந்த மித்ரனிடம், “கண்ணா, சஹானா கால் பன்ன பா இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ வந்துடுவாளாம்”

சரி மா நான் இன்னிக்கு அவிநாசி போகனும் ம்மா. மதியானம் வந்துடுவேன். கால் பன்றேன் மா.

அப்படியே நம்ம வீட்டுக்கும் போய் பார்த்துட்டு வா. நான் அடுத்த வாரம் போய் பார்க்குறேன்.


***********
சஹானா வந்ததும் வீடே களைக்கட்ட தொடங்கிவிட்டது. வீட்டில் உள்ள அனைவரும் இளையவர்களே. பாட்டு, நடனம் என பொழுது போனதே யாருக்கும் தெரியவேயில்லை.சாப்பிடுவதற்காக சமையல் அறையை நோக்கிச் சென்ற சங்கீதா, “அம்ம்ம்மா££££!” என்ற அலறல் சத்தம் கேட்டு அங்கே சென்றான், முகில்.


ஏய், கீழே என்ன டி பன்னுறா? என முகில் கேட்டான்.

கால் வலிக்குது டா, எழுந்துக்க முடியலா, என அழுகையுடன் சொன்ன அவளை துக்கிக் கொண்டு பக்கத்து அறைக்கு சென்றான்.

இரு நான் அம்மாவை அழைச்சிட்டு வரேன்.

வெளியே வந்தவன் அனைவரிடமும் சொல்ல, “தம்பி முதல டாக்டருக்கு கால் பன்னுபா” என சன்முகம் சொன்னார்.

டாக்டர் அவளை பரிசோதனை செய்து விட்டு, “பயப்பட ஒன்னும் இல்ல ரெண்டு நாள் காலை அசைக்காம பாத்துக்கோங்க. அப்புறம் நான் வந்து பார்கிறேன்.”

அப்பொழுது தான் மித்ரன் வீட்டிற்கு வந்தான். வீடே அமைதியாக இருந்தது. எதிரே வந்த தன் தங்கையிடம், “என்ன ஆச்சு டா டாக்டர் போராரு”

அண்ணா அது வந்து சங்கீ க்கா கீழே விழுந்துட்டாங்க. காலை அசைக்க கூடாதுனு டாக்டர் சொன்னாங்க.

அப்படியா இரு நான் போய் பார்த்துட்டு வரேன், என ரூமிற்கு சென்று அவளிடம் பேசிவிட்டு வெளியே வரும் போது சஹானாவை பார்த்தான்.

ஹாய், சஹானா எப்படியிருக்க வீட்டில் அத்தை மாமா எப்படியிருக்காங்க.

எல்லோரும் நல்ல இருக்காங்க மாமா. நீங்க எப்படி இருக்கீங்க என கேட்டுக் கொண்டு இருந்தவளை சம்யுத்தா நிறுத்தி,

மாமானு திவ்யா ஆங்கிளை தானே கூப்பிட்டாள் அப்ப இவங்களை ஏன் கூப்பறாங்க என யோசனையாக “மாமாவா? இவங்களுக்கு அவளோ வயசா ஆகிடுச்சுனு யாருமே என் கிட்ட சொல்லவேயில்லை” என கூற, சஹானா சிரித்துவிட்டாள்.


மித்ரனும் அவள் கேள்வியில் அதிர்ந்து சிலையாகி விட்டான்.
 
Last edited:

Sponsored

Advertisements

Top