• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

WHITE SAUCE PASTA

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தேவையான பொருட்கள்:-
பாஸ்தா - 200 கிராம்
பால் - 1/2 லிட்டர்(1.5 டம்ளர் பால் 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்)
காரட் -1
வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
குடமிளகாய்- 1 ( சிறியது)
பச்சை பட்டாணி - சிறிதளவு
சீஸ் - 1 cube (துருவியது)
chilli flakes - 1 டீஸ்பூன்( chilli flakes இல்லாவிடில் 2 வரமிளகாய் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்)
மிளகு,சீரகப் பொடி - 2 டீஸ்பூன் ( மிளகு,சீரகம் இரண்டும் சம அளவில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளலாம்)
மைதா மாவு - 2 டீஸ்பூன்
butter - 2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:-
ஒரு கடாயில் 4 தம்ளர் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். பாஸ்தா வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி அதை வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் 2 டீஸ்பூன் ஊற்றி வைத்துக் கொள்ளவும் ( இதனால் பாஸ்தா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்) . அடுத்து கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், காரட், பீன்ஸ், பட்டாணி, குடமிளகாய் முதலியவற்றை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி அதனை வேறு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் வேறு கொஞ்சம் பெரிய கடாயில் butter சேர்த்து அதில் மைதா மாவை சேர்த்து வதக்கவும் பின் அதில் காய்ச்சிய பாலை சேர்த்து கட்டி விடாமல் கிண்டவும் 1நிமிடம் கழித்து அதில் துருவிய சீஸை சேர்க்கவும் மேலும் ஒரு நிமிடம் கழித்து அதில் மிளகுசீரகப்பொடி 2 ஸ்பூன், chilli flakes 1 ஸ்பூன், வதக்கிய காய்கறிகள், வேக வைத்த பாஸ்தா ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து( உப்பு ஏற்கனவே காய் வதக்கவும், மிளகு சீரகத்திலும், சீஸிலும் இருக்கும்) 2 நிமிடங்கள் கடந்து இறக்கவும்.
சூடாக பரிமாறி சாப்பிடவும்._20190201_165050.JPG
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
It is called Bechamel Sauce.. Add parmesan cheese.
It is best with long pasta like fettuccine

There are tones if videos on You Tube

Awesome Allivisalatchi for the Indianised version
Thank you dear naan endha receipe yum konjam alter panni nammoor style LA than seiven dear ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top