• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

wonderful story on parenting

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஒரு நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று
அறிவித்தது, அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்... அனைவரிடமும் வினாத் தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது.
.
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.
"உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.

அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க
வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்" என்றார்,
.
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும், "நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை" என்றனர்.
.
அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை
என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
.
அதன்பின், அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.
"விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள். மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம்"
.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம், அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.
"வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள். எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள்"
.
(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா? )
.
அதற்கு அந்த மேலாளர் சொன்னார்,
"எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப்
பாருங்கள்" படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்,
.
அந்த பத்தாவது கேள்வி இது தான்..
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.
.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்,
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
.
சிந்தனைக்கு :
இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர,...
நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top