Yarendre Ariyathavan Yaadhumaginan episode 2(a)

#1
அவள் உறைந்து நின்றது சில கணங்கள் மட்டுமே…”அடியே பிசாசு ரியூ” என்று நிஷா அவளை உலுக்கிய பின்னரே சுய உணர்வு பெற்றவள் , சற்றும் தாமதிக்காமல் வகுப்பறை விட்டு வெளியேறியவள் அவனை கண்களால் அலசினால்… வெளிர் நிற சட்டையும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து கம்பீரமாய் வேக நடையுடன் அவன் சென்றது அவள் மனதில் ஆழ பதிந்து போன அவனை இனங்கண்டு கொண்டால் அவள்…

அவன் வகுபறையில் நுழைந்ததும் என்னடா பெட் கட்டின மாதிரியே அவ கிட்ட லவ்வ சொல்லிட்ட போல என்றான் அவன் வகுப்பு மாணவன் ஒருவன். இது தெளிவாக அந்நேரம் வகுப்பில் நுழைந்த நம் ரியூ காதிலும் விழுந்தது…
“எதுல பெட் கட்டணும்னு வெவஸ்தை இல்லாதவனுங்க” என்று முனுமுனுத்த படி அவர்கள் அருகே சென்றவள், கண்களில் கனல் பறக்க “டேய் ஆலியம் செபா என்ன தைரியம் இருந்த இப்படி செய்து இருப்ப உனக்கு அறிவு இருக்கா இல்லையா(?) என்று வரிசையாய் வசை பாடினால்…
வகுப்பில் இருந்த சில அறிவு ஜீவிகள் ஆலியாம் செபா அப்படினா என்னவா இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்…
“ஏன்டா என் உருளைகிழங்கு வருவல கொட்டின “ என்று கேட்டாலே ஒரு கேள்வி அப்போது தான் வகுப்பினுள் நுழைந்த நிஷாவும் ஸ்வேவும் “என்னடி ஸ்வே செல்லம் இவ லவ்வ சொன்னதுக்கு திட்டுவானு பார்த்த உருளைகிழங்கு கொட்டினது பெரிய கொல குத்தம் மாதிரி சண்டை பிடிச்சிட்டு இருக்கா” என்றால் நிஷா.

“இவள பத்தி தெரிஞ்சும் இப்படி திங்க் பண்ண உன் மூலைய கொண்டு போய் மூளைல போட்டு மூடி வைடி “என்றால் ஸ்வேதா
அவள் திட்டுவதை ஏதோ பாரிஸில் அவனுக்கு பாராட்டு விழா நடத்துவது போல் சுவாரசியமாக கேட்டு கொண்டிருந்தான்.

விட்ட இவ அவ்வளவுதான் இன்னிக்கு பூரா திட்டிட்டு இருப்பா என்றவாரே, ஸ்வேதா அவள் அருகில் சென்று மெல்லிய குரலில், “ஏன் டி இவன திட்டிட்டு இருக்க “என்று கேட்டால் , அவளை “லூச நீ “என்பது போல் பார்த்து வைத்தால் ரியூ. பாக்குற பார்வைக்கு ஒன்னும் குரைச்சலில்லை ரியூ பேபி என்று மனதில் நினைத்தவள் “பிசாசு குட்டி இவன் அவன் இல்லடி, அவசரத்துல அவன் திரும்பி போகும் போது ஸ்பெக்ஸ் போட்டு இருந்தத நான் பார்த்தேன்டி நீ கவனிக்கலயா” என்றால் ஸ்வேதா ,”ஆமா பேபி நானும் பார்த்தேன் “என்று நிஷாவும் கூறினால்… தன் கவனகத்தை நொந்தவாரே “ ஸாரி அண்… “அண்ணா என்று கூற வந்தவள் அங்கிருந்த மற்றொருவனை பார்த்தவாரே வாய் வரை வந்த வார்த்தையினை விழுங்கியவள் (பின்னே அண்ணானு சொல்லி கூப்பிட்டா ஐயர் ஆத்து மாமியா நீ அண்ணானு கூப்பிட்றது அவ்ளோ இதமா இருக்கு என்று இளித்தவன் அவன் தானே எனவே கொஞ்சம் அடக்கி வாசித்தால் என்னிக்காவது அவனை பழி தீர்க்கும் எண்ணத்துடன்) அப்போது தான் கவனித்தால் அவனை …
அவனை கண்டதும் ஷாக் அடித்தது போல் உறைந்து விட்டவள் சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு, “அச்சோ இவன் அந்த அஞ்சு ரூபா அருணாச்சலம் ஆச்சே”…’ இவன் ஏன் இப்படி பட்டிக்காட்டான் பாப்கார்ன பாக்குற மாதிரி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்கான்’ என்று நினைத்தவள் “அச்சோ சாரி அஞ்சு … ஹான் அது சாரிங்க சாரி தான் சொல்ல நினைச்சேன்” என்று கூறியவள் சிட்டாய் அங்கிருந்து பறந்துவிட்டால்…
இவள நம்பி வந்தா நம்மல டீல்ல விட்டு போறாலே என்று முனுமுனுத்தவாரே அவள் தோழியரும் அவ்விடத்திலிருந்து பறந்தனர்…
இவற்றை உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா… டார்லி நீ இவ்ளோ பேசுவியா சோ ஸ்வீட் டார்லி என்று தனக்கு தானே பேசிக் கொண்டான்…
இந்நிகழ்வுகளை நான்கு ஜோடி கண்கள் விழிகளில் அனல் பறக்க பார்த்திருந்தனர்…

யாதுமாவான்...
 

swetha198

Author
Author
#9
Swey dialogues ennakku nalla puriyuthu confuse I'lla ezhuthi engala nee confuse pannalenuuuuuuu ninaikiren😜😜😜😂😂😂 sarithane chellam yenge ponaalum Nam sweet kutty than arivu kutty angeyum iva than vandhu doubts clear panraa paavam pilla ethana perukku than help pannuva enga kutty @swetha198 😍😍😍😍😀😀😀
Nanaaaa🤔🤔🤔idhula aapu edhum ilayee kaaa😘😘
 

Latest Episodes

Sponsored Links

Top