• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
நிரந்தரமான மகிழ்ச்சி..

துணிவான முடிவுகளில் இருக்கிறது.. பரிவான வார்த்தைகளில் இருக்கிறது..
கனிவான அணுகுமுறையில் இருக்கிறது ..
பரிவான உதவிகளில் இருக்கிறது.. அத்தியாயம் 1
அன்று விடியல் தரப்போகும் அதிர்ச்சி அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள். "இது நல்ல இடம் அவ வேண்டாம் என்று சொல்வதற்க்காக விட்டு விட முடியாதே" என்று உரக்க ஒலித்தது அன்னையின் குரல். மெல்ல போர்வையில் இருந்து தலையை விலக்கி,"லீவு நாளுல கூட கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க விடமாடீங்களா? ஏன் இப்டி கத்துறீங்க?" என்று கூறி மீண்டும் இழுத்து மூடி தூங்க தொடங்கினாள் மகள்.
"ஆமா! நல்லா தூங்குடி இன்னும் எத்தனை நாள் இப்டியே இருந்து எங்க உயிர வாங்க போற " என்று கோபத்துடன் கத்தி விட்டு சென்றாள் அன்னை. "விடேன்! அவகிட்ட இன்னொரு தடவ பிரமையா சொல்லி பாக்கலாம்" என்றார் அவளின் தந்தை.

எழுந்து செல்லில் மணி பார்த்து' இனி தூங்க முடியாதே! என்று முடிவுக்கு வந்த பின் மெல்ல எழுந்து உடல் சுத்தம் முடித்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த மகளிடம்," அப்பா கூப்பிடறார்" என்று காபியை வைத்து விட்டு போனார் அன்னை.

சரி என்று தலை அசைத்தபடியே யோசனையில் ஆழ்ந்தாள் அவள். திரும்பவும் அதே பேச்சு சலிப்பாக இருந்தது! மகளுக்கு வெடுக்கென எழுந்து ரசித்து குடிக்கும் காபியும் ருசிக்காமல் போனது அன்று அவளுக்கு.

தந்தையிடம் சென்று "என்னப்பா காலையிலேயே சத்தம் அதிகமாக இருந்ததே "என கேட்க அவளை அருகில் அமர்த்தி அவள் கரத்தை பிடித்து "பாப்பா உன் கல்யாண விஷயம்தான்டா, பிடிவாதம் பிடிக்காதே ! அப்பா சொல்றதை கேளுடா, உனக்கும் 27 வயசாகுது என சொல்லிக்கொண்டிருக்கும் போதே செல்போன் அலற அப்பாடா! என்றிருந்தது அவளுக்கு.

" அப்பா போன் இதோ வரேன்" என்று அறைக்குள் செல்ல கால் சேவை மையத்தில் இருந்து வந்திருந்தது. ஐயோ என்று எண்ண "யாரு போன்ல பேசிட்டியா அப்பா கூப்பிடறார் போ" என்றார் தாய் .

அப்பாவிடம் "நாந்தான் சொல்றேன்ல எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், ரிசெர்ச் பண்ணி பிஎச்டி வாங்கணும்".

உடனே அம்மாவோ "இப்போவே கேக்க ஆரம்பிச்சுட்டாங்க இன்னும் பொண்ணுக்கு இன்னும் அமையலையான்னு! உன்னால நாங்க பட்ட பணநஷ்டம் போதாதா? இப்போ மனக்கஷ்டம் வேற! எல்லாரும் எப்பவும் உன் இஷ்டத்துக்கே ஆடணும்னு நினைக்காத "என்று கோபமாக கேட்டார் அன்னை.

முகவாட்டத்துடன் தந்தையை பார்த்தாள்! திடுக்குற்றாள் மகள்! ஏனென்றால் அவர் முகம் மேலும் வாடி இருந்தது.
" டாடி யோசிச்சு சொல்றேன்" என கூறி அறையினுள் வந்தாள்.

எப்படி கண்ணனுக்கு கண்ணாக வளர்த்த தாய் தந்தை ! இதுவரை எனக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள் என்று எண்ணும் போதே விழியில் திரண்ட நீர் கன்னம் வழித்தோடியது.

ஒரு முடிவுக்கு வந்தவளாய் தந்தையிடம் சென்று "அப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நீங்க இப்டி இருக்காதிங்கப்பா என்று சொல்லி புன்னகைத்தாள்.

எதிர்பாராத திடீர் சந்தோஷத்தால் துள்ளிய தந்தை "பாப்பா நெஜமா எனக்கேட்டு அவளை தோளோடு அணைத்து கொண்டார்.

இப்போவது எங்க கஷ்டம் புரிஞ்சதே என்று கூறி சென்றார் அன்னை.

மகளிடம் "பாப்பா மாப்பிள்ளை போட்டோ உன் ஷெல்ப்ல வைச்சிருக்கேன் பாருடா உனக்கு கண்டிப்பா பிடிக்கும்" என்றார்.

கசப்பான புன்னகையோடு சிலையென அமர்ந்திருந்தாள் அறையில். " ஏன் நாங்கெல்லாம் தாலி கட்டினால் கழுத்தில ஏறாதா "என்று அந்த குரல் மீண்டும் ஒலித்தது.

இனி இதையெல்லாம் நினைத்து பார்க்கவே கூடாது என்று விழிகளை அழுந்த மூடினாள்.

மாப்பிள்ளை போட்டோவை அவள் தந்தையே அவள் கையில் தந்து" நீ பாரு பாப்பா நான் போறேன்" எனக்கூறி சென்றார்.

ஒரு பெருமூச்சுடன் அந்த போட்டோவை பார்த்தாள் அவள். பார்த்தவுடன் இடுங்கிய அவள் விழிகள் மெல்ல அலட்சியம் கொண்டது.
இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது அப்பா ......



உங்க மாப்பிள்ளையே கல்யாணத்த நிறுத்துவான்....




யாரவன் ???????

வெளிச்சம் வரும்......
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Wow nice epi startinge amaralam keep rocking
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top