• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
உன் மேல்...
வெறுப்பு கொண்டதால் விலகவில்லை..
புரிந்து கொள் ..

விருப்பு கொண்டதால்..
விலகி செல்கிறேன்..
என் கரம் பற்றியவனே..
யாதுமாகி நின்றவனே..
விட்டுவிடு...
என்னை ..
என்னிடமே..

அத்தியாயம் 41

நிலாவை பார்த்திருந்தான் ரிஷி.
ரிஷியை பார்த்தவள் இப்போது ஷிவானியிடம் பேச தொடங்கினாள்.


" சாரி ஷிவானி! என்னால தான் லேட் நான் முதல வரலைன்னு தான் சொன்னேன்.... அதான் ஷிவானி வருவாங்கல்ல அப்டினு சொன்னேன்!

" அவர் தான் இல்லைல நீ வரலைன்னா எனக்கு வேலையே செய்ய முடியாது !கண்டிப்பா வா! அப்டினு கூட்டிட்டு வந்தார்!

" கால்ல கூட லைட்டா அடி அவர் தான் வீட்லேருந்து கார் வரைக்குமே தூக்கிட்டு வந்தார் .

"இப்போகூட பாத்தீங்களா? அவர் என்ன பிடிச்சிட்டு இருந்ததை! என்றாள் நிலா.

இதை கேட்ட ஷிவானி இன்னும் கடுப்பானாள்.

" அதோட கார்ல கூட! என நிலா ஆரம்பிக்க ..
"இட்ஸ் ஓகே நிலா போலாம்! என்றாள் ஷிவானி கடுப்புடன் .

"நமுட்டு சிரிப்புடன் சென்றாள் நிலா.

லிப்டில் ஓன்றாக ஏறியவர்கள் இப்போது ஷிவானி சிரித்து கொண்டே ரிஷியிடம் மீண்டும் ஹிந்தியில் பேசினாள்..


" ரிஷி நீ இந்த அரேஞ்சு மேரேஜ் ல மாட்டிட்டு கஷ்டப்படற போல !!

"எதுவுமே தெரியாம இது உன்னை கடைசி வரைக்குமே ஏங்க !என்னங்கன்னு !உயிரை வாங்க போகுது "என்றாள்.

ரிஷியோ இப்போது எரிச்சலாகி "ஷிவானி இப்டி பேசாத எனக்கு பிடிக்கல" என ஹிந்தியில் பதில் சொன்னான்.


இப்போது நிலா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள் .

பின்னர் ரிஷியின் கேபினுக்குள் வந்தனர்.


நிலா ரிஷியிடம் "என்னங்க நான் செகண்ட் பிளோர் போறேன் அந்த கேன்சர் மெடிசின் பத்தி டீடைல்ஸ் தெரிஞ்சுக்கிறேன்" என்றாள்.

ரிஷி பதிலாக "அங்க சிமினு ஒருத்தங்க இருப்பாங்க! கிளினிக்கல் ப்ரோமோஷன் டீம் ஹெட்.. அவங்க! கிட்ட பேசு "!ஏற்கனவே சொல்லிட்டேன்! உன்ன பத்தி" என்றான்.


இதை பார்த்த ஷிவானி "என்ன மெடிசின் ரிஷி நிலா இங்க ஒர்க் பண்ண போறாளா?? என கேட்க

ரிஷியோ "நிலா எம் பில் இன் பயோ கெமிஸ்ட்ரி!! அதோட சென்னை அடையார் கான்செர் இன்ஸ்டிட்யூட் ல ட்ரைன்ட் "

"சோ ஆர் கே பார்மா நியூ மெடிசின் கான ரிசெர்ச் ல நிலா ஹெல்ப் பண்ண போறா" என்றான்.
பெருமையாக..

இப்போது ஷிவானியின் முகம் சுருங்கி போனது.

" ஓகே ஐ அம் லீவிங்! பை ஷிவானி ஹவ் எ நைஸ் டே! என கூறி சென்றாள் கதவு வரை போனவள்..
திரும்பி ..


ஷிவானி! எனக்கு ஹிந்தி தெரியும். நான் அதை கம்யூனிகேட் பண்ண மட்டும் தான் பேசுவேன்"
மத்தவங்கள ஹர்ட் பண்றதுக்கு இல்ல!

" அதோட மொழி தெரியாதவங்க முன்னாடி அதை பேசி நக்கல் பண்றதுக்கு..

நாம தெரிஞ்சுக்காமலே இருக்கலாம்.

" மொழி ஒரு மீடியம்... அது நாலெட்ஜ் இல்ல.... என்றாள் சுத்தமான ஹிந்தியில்..

இப்போது ஆச்சர்யத்தில் ரிஷி.. அதிர்ச்சியில் ஷிவானி..

மெலிதாக சிரித்தவாறு சென்றாள்.

நிலா ரிஷியின் முன்னே இது அவமானமாக தோன்ற அதற்க்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் அங்கிருந்து கிளம்பினாள் பஜ்ஜிமா !சாரி புஜ்ஜிமா!..

" ஹ்ம்ம் சண்டை போடல ....சத்தம் போடல...

சிரிச்சிகிட்டே பதிலடி குடுத்துட்டு போறா!! சபாஷ்டி பொண்டாட்டி" என மனதுக்குள் மெச்சினா.

இப்போது ஷிவானியை பார்த்தால் பாவமாக இருந்தது.

" இவளுக்கு இது தேவையா?? என எண்ணினான்..

அங்கே சிமியிடம் எல்லா விவரங்களையும் அறிந்த நிலா நாளை பார்ப்பதாக கூறினாள்.

" எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் இல்லாமல் அமைதியாக எளிமையாக பேசிய நிலாவை சிமிக்கு பிடித்து போனது.

அதோடு நிலா அவரை ஹெட் என்ற மரியாதையோடு பேசியது இன்னும் நன்றாக இருந்தது.

" சிமி நான் ஹெர்பல் ரிசெர்ச் ல இருந்திருக்கேன் இன்னும் கொஞ்சம் டீடைல் சர்ச் பண்ணிட்டு உங்கள பாக்கறேன்! என கூறினாள்.

உணவு வேளை வந்தது அங்கே ரிஷியின் கேபினுக்குள் நுழைந்தவள் அப்டியே நின்றாள்.

ஏனனில் ரிஷி போனில் யாருக்கோ கிஸ் குடுத்து கொண்டிருந்தான்.

பின்னர் நிலாவை பார்த்தவன் "ஓகே செல்லம் நான் அப்புறம் பேசுறேன்" பை !என கூறி கட் செய்தான் .

நிலா யோசனையாக ஹ்ம்ம் ..யாருகிட்டைடா ரொமான்டிக் பேசின மாதிரி இருந்தது "என்றாள் .

ரிஷி," அது மை டார்லிங் !என்றான் சிறிது நேரம் அமைதியாக நின்றவள் "ஓகே வா சாப்பிடலாம் பசிக்குது என்றாள் .

"ஹே அவ்ளோதான் உன் ரியாக்ஷன்?? என கேட்க..

நிலாவோ "ஹ்ம்ம் என்ன யாரதுனு கேட்டா பொசெசிவ் னு சொல்லுவ எதுக்குப்பா நீ யாருகிட்ட வேணா பேசு "எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல! என்றாள் ..சாப்பாடை எடுத்து வைத்தவாறு..

" ஹ்ம்ம் அப்போ உனக்கு யாருன்னு தெரிய வேண்டாம் அப்படித்தானே! என்றான்.

அவனை பார்த்தவள் "ஒண்ணு உனக்கு தெரிஞ்ச வயசான ஆன்ட்டி யா இருக்கும் இல்ல!! ஏதாச்சும் குட்டிஸ் இருக்கும்" என்ன கரெக்டா? என்றாள் அவனுக்கு உணவை வைத்தவாறு.

இப்போது ஆச்சரியமடைந்த ரிஷி "ஹே எப்படி கரெக்டா சொல்ற! என்றான்.

" என் ரிஷியை பத்தி எனக்கு தெரியும் அதோடு தப்பா பேசுறவன் இவ்ளோ தைரியமா கண்ண பாத்து பேச மாட்டான்" என்றாள் பரிமாறியவாறு .

"என்ன சொன்ன?? என்றான்.

" தப்பா பேசுறவன் என நிலா சொல்ல இல்லைல்ல... அதுக்கு முன்னாடி என் ரிஷியை பத்தி எனக்கு தெரியும் னு தான சொன்ன "என்றான்.

ஆமா என்னோட பிரண்டு ரிஷியை பத்தி தெரியும்னு சொன்னேன் அதுக்கென்ன" என்றாள் சாதாரணமாக...

ஒத்துக்க மாட்டாளே!! ஹ்ம்ம் என நினைத்தவன் ..

அது என்னோட சித்தி பொண்ணு சப்னாவோட டாட்டர் பேரு தியா ரொம்ப நாள் ஆச்சு!! பேசி ..இப்போ 2 கிளாஸ்ல
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top