Yen kalangarai vilakkame 43.2

Riya Dev

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
சிறிது நேரம் பேசியவர்கள் ரிஷிக்கு கால் வர வெளியே சென்றான்...

" சப்னா லவ் மேரேஜ் ஆ நீங்க?? என நிலா கேட்க ...
"ஹ்ம்ம் லவ் கம் அரேஞ்ட் அண்ணி! என்றாள் சிரித்து கொண்டே ..

ஓ ....ஓகே! ஓகே! என நிலா கூற அக்ஷய் காலேஜ்ல சீனியர் வந்து ப்ரொபோஸ் பண்ணான்.

" நான் ஸ்கூல் படிக்கும் போதிலிருந்து குட்டியண்ணாகிட்ட எல்லாத்தையும் சேர் பண்ணுவேன் !அண்ணா அட்வைஸ் பண்ணுவான் லவ் எல்லாம் இந்த வயசுல வேண்டாம்னு!!!

" இவனை பத்தி சொன்னதும் வெயிட் பண்ண சொன்னாரு !!!!அக்ஷய்க்கிட்டே என்ன சொன்னார்னு தெரியல !!!

"அவன் அப்புறம் த்ரீ இயர்கப்றம் வந்து பேசினான்" அண்ணா அதுக்கப்புறம் ஓகே சொல்லிட்டாரு !!!

"நான் கூட கேட்டேன் உனக்காக இருகானானு பாத்தேன்!!!

ஹ்ம்ம்... ஹி த்ருலி லவ்ஸ் யூ! அப்டினாரு!!!
" அண்ணா ஒரு விஷயம் சொன்னாலோ செஞ்சாலோ கரெக்ட் ஆ இருக்கும் "

"பெருசா லவ்ல இன்டெரெஸ்ட் காட்டல நாங்க கூட அடிக்கடி பேசுவோம்!

" ரிஷினு பேரு வைச்ச மாதிரி சாமியார் ஆயிடுவாரோன்னு!!! என கூறி சிரித்தாள் .

"யாரு உங்க அண்ணன்..... சாமியார்....

"நீங்க வேற அவர் பெரிய ரொமான்டிக் ஹீரோ "என்றாள் நிலா யோசிக்காமல்...

" ஓ அண்ணி அப்டியா சொல்றீங்க ???என கேட்டு கொண்டிருக்கும் போது ரிஷி சரியாக உள்ளே நுழைந்தான்.

" அண்ணா அண்ணி உன்ன என்ன சொன்னாங்க தெரியுமா ????என கேட்க

"சப்னா ப்ளீஸ் வேண்டாம் வேண்டாம் என்றாள் நிலா ..

"ஹே அப்புடி என்ன சொன்னா ??என ரிஷி கேட்டான்.

" நீ பெரிய ரொமான்டிக் ஹீரோவாம்! என்றாள் தங்கை...

ஒற்றை புருவம் தூக்கி அப்டியா என நிலாவை பார்க்க முகம் சிவந்து போனாள் நிலா முதல் முறையாக....

அவளையே பார்த்து நின்றான் ரிஷி.

அதை பார்த்ததும் "அம்மா கூப்பிட்றாங்க என கூறி கிளம்பினாள் சப்னா ...

அவளருகே வந்து அமர்ந்த ரிஷி நிலா என ஆரம்பிக்க ..

"இங்க பாரு அவங்க சொன்னாங்க ரிஷி னு பேர் வைச்ச மாதிரி சாமியாரா போயறிவியோன்னு பயந்தங்களாம்!!!! அதான் சொன்னேன் நீயாவது சாமியாரா போவதாவது.....
சும்மா சொன்னேன்: என்றாள்.
அவசரமாக ...

அவள் கண்களை பார்த்து அப்போ நான் அப்டி இல்லையா?? என்றான்.

அவனை இமைக்காமல் பார்த்தவள் "வெளில போலாமா!!! என்றாள் சின்ன சிரிப்புடன் ரிஷி "ஹ்ம்ம் போலாம் சாப்பிட கூப்பிட்டாங்க வா! என்றான்.

அதற்குள் தியா வர குட்டிமாமா வா என அவனை இழுத்து கொள்ள அவனும் சென்றான்..

அங்கே அவன் மீது அமர்ந்து அவள் விளையாடிய விதம் ரசிக்கும்படியாய் இருக்க நிலா அதை போட்டோ எடுத்தாள் .

அவர்கள் அருகே சென்றவள் அவன் தோளில் அமர்ந்திருந்த தியா குட்டிக்கு முத்தமிட செல்ல தவறாய் சரியாய் ரிஷி நிமிர அவன் கன்னத்தில் விழுந்தது ..

அதை பார்த்த அனைவரும் சிரிக்க தியா "நிலா அத்தை இது என் குட்டி மாமா!!!! நீ ஏன் கிஸ் பண்ண ??என்றாள்.

அய்யோ என்றெண்ணியவள் "இல்ல பாப்பா !!!!உனக்குதான் குடுக்க வந்தேன்..... என திரு திரு வென முழித்தாள் .

அதை பார்த்த ரிஷி சிரிக்க கடுப்பானாள் நிலா .

அவள் காதருகே "நீ கொடுத்ததை திருப்பி குடுப்பேன்" என பாடினான் .

"போ லூசு" என அங்கிருந்து விரைந்தாள் ..

"அண்ணி பிளஷிங்!!!! அண்ணா என்றாள் சப்னா சிரித்தவாறு..

சாப்பிட அமர்ந்தான் அங்கே மற்றுமொரு சோதனை...

" சித்தி நிலா பிரான் சாப்பிட மாட்டா" என கூற அவனை வேண்டுமென்றே மட்டம் தட்ட

"இல்ல அத்தை வைங்க "என்றாள்.

" பிரான் பிரியாணி அதை தட்டில் வைத்ததும் வாயில் வைத்ததும் குமட்டியது !!!

அதை பார்த்தவன் தன்னுடைய தட்டில் வேறு உணவை வைத்து அவளுடையதுடன் மாற்றி கொண்டான்.

நிலா "ரிஷி "என்ன என்று எல்லாரையும் பாக்க

"ரிஷியோ பொண்டாட்டி தட்ல புருஷன் சாப்பிடலாம் !என்றான் .

கலாட்டா செய்தவாறு சாப்பிட்டனர்.

சப்னா அவளது அறைக்கு அழைத்து சென்றாள் நிலாவிற்கு ஒரு பார்ஸல் தர "அண்ணி மை கிப்ட்" என்றாள் .

அது அழகான டிசைனர் சாரீ ப்ளூ கலர் "இந்த ஒர்க் நான் பண்ணது அண்ணி! என்றாள்..

" வாவ்! சூப்பர் ...என்றாள் நிலா .

"நான் படிச்சது வீணாக கூடாதுனு அண்ணா தான் பொட்டிக் வைக்க சொன்னார் ..

என்னோட டிசைன் தான் எல்லாமெ என்றதும்..
" ரொம்ப நல்லா இருக்கு தாங்க்ஸ் சப்னா" என்றாள்.

அண்ணி நான் மெஹந்தி கூட போடுவேன் என்று நிலாவின் இரு கைகளிலும் அழகாக போட்டு விட்டாள்.


ரிஷி இரு கப்களில் கஸ்டர்டு ஆப்பிள் கீர் கொண்டு வந்தான் .

"ஹலோ லேடீஸ் சாப்பிடுங்க" என்றான்.

" அண்ணா நீ போய் என தங்கை கேட்க இட்ஸ் ஓகே டா "என்றான்.
 

Latest Episodes

Sponsored Links

Top