Yen kalangarai vilakkame 50.2

Riya Dev

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
"ஆமா பேசினதுக்கே இப்டி... நான் பாடினேன்... அவ்ளோதான்" என கூற


"ஆமா! ஆமா! ரொம்பா பயந்தவன் தான்... நீ நம்பிட்டேன்"என்றாள்.


"ஹே லூசு நான் சாதரணமா தான் பேசினேன்"நீ ஏன் தப்பா நெனைக்கிற என்றான் .

"ஓஹோ!!! அவன் அருகே வந்து நின்று

" இப்டி நின்னு அவ பேசுவா அது தப்பில்ல!!! என்ன வெளில போக சொல்லிட்டு நீ பேசுவ" அது தப்பில்ல..

"நான் தப்பா நெனைக்கிறேனா"?? என கத்தி கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதை தனது கழுத்தில் உள்ள டை யை கழட்டியவாறு சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தான்.

" இங்க நான் கத்து கத்துறேன் சிரிக்கிறியா நீ ??என கூற தண்ணீர் குடித்து கொண்டிருந்தவன் பாட்டிலின் மீதி தண்ணீரை அவள் மீது ஊற்றினான்.

" ஹே எருமை அருகிலிருந்த தண்ணீரை நிலா எடுக்க ரிஷி மீண்டும் கையில் உள்ளதை அவள் மீது ஊற்றினான்.

" சாந்தி பொண்டாட்டி !!சாந்தி!

இவளோ "அவ யாருடா அது சாந்தி" என துரத்த இருவரும் குளியல் அறையை அடைந்தனர்.

இப்போது நிலா

" மாட்னியா எதுக்கு டா தண்ணியை ஊத்தினா பக்கி" என கூறி பாத்டப்பின் தண்ணியில் தள்ளி விட அவனை தள்ளி விட முயன்று இவளும் சேர்ந்து உள்ளே விழுந்திருந்தாள்.

இப்போது சிரித்தவன் தேவையாடி இது உனக்கு ??என கூறினான்.

தண்ணியினால் அவனை அடித்தவளின் கையை பிடித்து தன் புறம் இழுத்தவன்.

" ஹே சொல்றதை கேளுடி பாப்பு!

" ஷிவானியை என் பிரண்டோட கம்பனிக்கு போக சொன்னேன்" என அவளிடம் பேசியதை கூறினான்.

அவன் தோளில் குத்தியவள் "என்ன வைச்சுட்டே சொல்லிருக்க வேண்டியது தான?? என கேக்க

"ஏற்கனவே உனக்கும் அவளுக்கும் டெர்ம்ஸ் சரி இல்லை !
"உன் முன்னாடி சொன்னா உன் மேல தேவை இல்லாத கோவம் வரும் "
அதான்...

அவள் கன்னத்தை அழுத்தி
" இந்த முட்டைக்கண்ண வைச்சு முறைச்சு வேற பாக்குற அதான்" என்றான்.

" ஹ்ம்ம்... அத்தை பொண்ணு மேல அக்கறை "என கேக்க

"போச்சுடா!! என எண்ணியவ

" ஹ்ம்ம் கண்டிப்பா அக்கறையும் தான்!!! அவ காரியரும் முக்கியம் தான!

" மத்தபடி என் பொண்டாட்டிய விட்டு குடுக்க முடியுமா ??என அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

கையை தட்டி விட்டவள்

"நிலா சமாதானம் ஆகாத என எண்ணியவள்!!

" ஆமா இன்னைக்கு கூட உன் கம்பெனின்னு வரும் போது சுமி ய தான சூஸ் பண்ண?? என வேண்டுமென்றே வம்பிழுத்தாள்.

அவளை ஒரு நொடி பார்த்தவன் எழுந்து கை நீட்ட அவன் கையை பிடித்து அவளும் எழுந்தாள்.

பின்னர் ரிஷி "உன் கம்பெனியா அது நம்ம கம்பெனி!

அதோட நான் ஏன் அப்டி பன்னேனு உனக்கே தெரியும் "என நிலா சிமியிடம் கூறியதை இப்போது ரிஷி நிலாவிடம் கூறினான்.

" நான் வேற நீ வேற இல்லடி....
என் எடத்துல நீ இருந்தா நீயும் இதைதான் செஞ்சுருப்ப "என்றான்.

அசந்து போனாள் நிலா நிஜமாகவே...

" நாம நெனைச்சத இவன் சொல்றானே என்று அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் மனதில் ஏதேதோ தோன்ற சீ நிலா என்னது இது என நினைத்து செல்ல முயல ..

"என்னடி சண்டை போட வேற காரணம் கிடைக்கலையா??? என கேட்டவன் அருகில் வந்து காதோரமாக

" நிலா மேடம் இப்டி பாத்தா என்ன அர்த்தம்?? என கேக்க முகம் சிவந்த நிலா மெல்லிய புன்னகையோடு திரும்பி வெளியேற முயல அவள் கையை பிடித்தான் ரிஷி.


" விடு ரிஷி" என்றாள் திரும்பாமல்.

" சண்டையை கன்டினியூ பண்ணிட்டு போடி" என்றான்.

" கடவுளே என்று எண்ணியவள்

நிலா அவன் கண்ணை மட்டும் பாக்காத... என மனதுக்குள் கூறியவாறு

"திரும்பி தலை ஈரமா இருக்கு... குளிருது... சேஞ்ச் பண்ண போறேன் என்றாள் எங்கோ பார்த்தவாறு .

அவளையே பார்த்தவன் எதுவும் கூறாமல் உதடு மடக்கி சிரிக்க

அதை பார்த்தவள் கைய விலக்கி வெளியேறினாள் ..

"இப்போது தானே மூச்சு விடமுடியுது !!

நிம்மதியா...

"அய்யயோ நிலா இது ஆவறதில்லை" இனி அவன்கிட்ட ஜாக்கிரதையா!! இரு" என சொல்லி கொண்டு எதிரில் இருந்த கண்ணாடி முன்னாடி நின்றவள்.

தன்னை பார்க்க முகமெல்லாம் சிவந்து புது வித உணர்வில் இருந்தாள் நிலா.

" என்ன பத்தி தானே நினைச்சுட்டு இருந்த" என பின்னிருந்து ரிஷி அணைக்க பட்டென அதிர பார்த்தால் அங்கு அவன் இல்லை.

குளியல் அறையில் சத்தம் கேட்டது.

" என்னாச்சு நிலா உனக்கு ஹ்ம்ம்...வர வர நீ சரி இல்லை" என்று தனக்குள் சொல்லி கொண்டவள் சீக்ரம் உடை மாற்றி கீழே பஹிரதியிடம் சென்றாள்.

இப்போது வெளியே வந்த ரிஷி நிலா இல்லாததை பார்த்து

"ஹ்ம்ம் ஓடிட்டாளா!! இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன் செல்லக்குட்டி" என்று கூறி புன்னகைத்தான் .
 

Advertisements

Top