Yen kalangarai vilakkame 50

Riya Dev

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
எனக்காக
என்னிடமே
சண்டையிடும்
நீ ....

என்னிடம் தோற்கவே போட்டியிடும் நீ...

என்னை உணரவைக்க
வாதம் செய்யும்
நீ ....

புரிந்தது....

இனி என் எல்லாமும் நீயே
என்று ....

அத்தியாயம் 50


இரண்டு வாரங்கள் முடிந்திருந்தது நிலா ரிஷியுடன் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள்..

அவன் பேசிய நாளின் மறுநாளில் இருந்து தன்னுடைய கவனத்தை வேலையில் திருப்பியிருந்தாள்.

காலையில் இருந்து மதியம் வரை அவனுடன் ஆபீசில் ..

பின்னர் வீட்டில் அப்பாவுக்கு வைத்தியம்... மாலையில் தினமும் அன்னையுடன் கோவில் என ஓடி கொண்டிருந்தது நிலாவின் வாழ்க்கை.


இந்த இரு வாரங்களில் நிறையவே மாற்றம் வந்திருந்தது அவளிடம்..

கேன்சர் ரிசெர்ச் பற்றிய அவளுடைய கனவு ரிஷியின் மூலம் நிறைவேறி கொண்டிருந்தது.


அஸ்வகந்தா என்ற மூலிகையின் வேரிலிருந்து செய்யப்படும் மருந்துக்கான ஆராய்ச்சியில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்.


கிளினிக்கல் டீம் ஹெட் சிமியும் அவளுடன் வேலை செய்ய மிகவும் எளிதாகி போனது அவளுக்கு.

ரிஷிக்கும் நிலாவுக்கும் இடையில் மறந்தும் காதல் என்ற வார்த்தை வரவில்லை..


ஆனால் அவளே அறியாமல் வாழ்க்கையில் வந்திருந்தது...


அவனின்றி அணுவும் அசையாது என்பார்கள்...

நிலாவிற்கு சர்வம் ரிஷி மயமானது...

எதற்கெடுத்தாலும் ரிஷி... எங்கு சென்றாலும் ரிஷி.... என்றாள்.

ஒன்றாக உண்டு உறங்கி வேலை பார்த்து மனதால் அவனுடன் மிகவும் நெருங்கி இருந்தாள்.சும்மாவே ரிஷிக்கு குஷியாக இருக்கும்.

இப்போது கேக்கவே வேண்டாம் அவள் தன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கலானான்.

அவளோடு வம்பிழுப்பான்... விளையாடுவான்... ஏதாவது சொல்லி சிரிக்க வைப்பான்...


அன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் என கூடி இருந்தனர்.


கிளினிக்கல் டீம் ....நிலா, சிமி, அமர் மற்றும் ரிஷி.


" சோ டீம்!! ஆஸ் வி நோ!


" இந்த கான்செர் மெடிசின் கான ப்ரோபோசல் வி ஆர் கோயிங் டு கிவ்",

" பட் அதுக்கு முன்னாடி நம்மோட டீல் பேச போற கம்பெனி நம்ம காம்பெடிட்டர்ஸ் சில கம்பெனிஸோட ப்ரொபோசல்ஸ் டீல் பண்றங்க"

" தே வாண்ட் அஸ் டு கிவ் எ ப்ரெசென்ட்டேஷன் அபௌட் அவர் ஒன்:"

" சோ! டீம் ..."வாட் ஐ பெல்ட் வாஸ் சிமி வில் டூ இட்" என்றான்.


எல்லாரும் கை தட்ட நிலா புன்னைகையுடன் சிமியின் கையை பிடித்தாள் .

இப்போது சிமி ,"சாரி சார் டோன்ட் மிஸ்டேக் மீ !

"என்ன விட நிலா மேம்க்கு தான் நல்லா தெரியும்! சோ அவங்க பண்ணா பெட்டர் திஸ் இஸ் மை ஹம்பல் சஜஷன்" என்றாள்.

இப்போது ரிஷி நிலாவை பார்க்க நிலாவோ "ஹே எனக்கு இந்த மாதிரியெல்லாம் பழக்கம் இல்ல..

" ஐ டீச் பார் ஸ்டுடென்ட்ஸ்...

பட் திஸ் இஸ் டிஃபரென்ட்" என்றாள்.

ஆனால் சிமியோ

" நோ மேம் செர்டைன்லி யூ வில் டூ பெட்டர் தன் மீ" என்றாள்.

இப்போது ரிஷி

"ஓகே வி வில் டிஸ்கஸ் அபௌட் திஸ் லேட்டர்" என்றான் .

இங்கு சிமியிடம் பேசி கொண்டிருந்தாள் நிலா..

" லுக் சிமி!! இது என்னோட காரியர் இல்ல ....இன்டெரெஸ்ட்..

" பட் உங்களுக்கு அப்டி இல்ல! நீங்க இங்க இத்தனை வருஷமா ஒர்க் பண்றீங்க!!

" நான் இப்போதான் வந்தேன் நான் எப்படி பண்ண முடியும்?? என்றாள்


" மேம் நீங்க இந்த கம்பெனி எம் டி... என சொல்வதற்குள்

" ஓ கமான் சிமி! உங்க எம் டி தான உங்கள சூஸ் பண்ணார் !!சொல்லுங்க! அவருக்கு இது தெரியாதா??" என்றாள்.

" அதான் எனக்கு புரியல உங்கள விட்டுட்டு என்ன ஏன் சூஸ் பண்ணார்?? சார் என சிமி கூற

" ஹி டிரஸ்ட் யூ !!!!

"அண்ட் ஹி நோ உவர் ஹார்டஒர்க்"

நான் ரிசெர்ச் பண்ணேன் பட் செல் லைன் ஒர்க் பண்ணது ரிப்போர்ட் ரெடி பண்ணது எல்லாம் நீங்க தான !என்றாள் .

அவளுடைய தோளை தட்டி
"டைம் டு ப்ரோக்ரஸ் சிமி "என்றாள்.

அரை மனதாக சமததித்தாள் சிமி


இப்போது ரிஷியிடம் பேச அவனுடைய அறைக்கு சென்றவள் கடுப்பானாள்..


' வேலை ஒன்னும் கத்துகிறது இல்ல ஆடிக்கு ஒரு தடவ அம்மாவாசைக்கு ஒரு தடவ குட்டி குட்டின்னு வர வேண்டியது' என மனதுக்குள் திட்டினாள்.

வேறு யாரை நம்ம பஜ்ஜிமாவை...
தான்

அதுவும் இப்போது ரிஷியுடன் நெருக்கமாக நின்று அவனுடைய ஷார்ட் காலரை பிடித்து பேசி கொண்டிருந்தாள்.

" நீ போய்ட்டா எனக்கு புஜ்ஜிமா இருக்கா!! ரிஷியின் வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது.

கதவை தட்டி உள்ளே சென்றவளை பார்த்ததும் ரிஷி பேய் முழி முழித்தான்.


" போச்சு! காளியாத்தா....
மாரியாத்தா.... முப்பாத்த...
செல்லாத்தா.... என்ன காப்பாத்து ஆத்தா" இந்த முட்ட கண்ணி பார்வையே சரி இல்லை "என்று எண்ணியவன்


"சொல்லு நிலா" என்றான் கூலாக.

அவர்களை பார்த்த நிலா சிரித்தவாறு ஒண்ணுமில்லை என கூறி கொண்டே டேபிளின் மீது இருந்த ஷிவானியின் கைப்பையை கீழே தள்ளி விட்டாள் .

"அய்யயோ! என அதை அவள் எடுக்க செல்ல சட்டென்று ரிஷியின் மிக அருகில் வந்து சட்டையை பிடித்து தன் புறம் இழுத்து

"இவ இனிமே இங்க வந்தா நீ செத்த மவனே! என பல்லை கடித்தவள் .அவள் முன் சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டாள்.

இப்போது ரிஷி
"இன்னைக்கு அத்தை மாமா அனிவேர்சரி கேக் கொண்டு வந்தா நான் எடுக்கிறதுக்குள்ள ஊட்டி விட வந்து ...ஷர்ட்ல பட்ருச்சு அதான்: என்றான் விளக்கம் கூறும் விதமாக..

இப்போது இன்னும் கடுப்பானாள் நிலா.

ஷிவானியோ "டேக் இட் நிலா "என கேக் போஸ்சை நீட்ட

"ஹையோ நான் இன்னைக்கு விரதம் அவருக்காக! என்றாள்.

இப்போது ரிஷி ஆச்சர்யமாக பார்க்க
 
#9
ஹே, ரியா டியர்?
இந்த பஜ்ஜி மாவு எதுக்கு
அடிக்கடி இங்கே வர்றாள்?
இதெல்லாம் ஒண்ணும்
சரியேயில்லை, ரியா டியர்

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு வாழைக்காயை நல்லா சீவி
இந்த பஜ்ஜி மாவுல போட்டு எடுத்துடுவேன்ப்பா
ஆமாம் சொல்லிட்டேன்
 

Riya Dev

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
ஹே, ரியா டியர்?
இந்த பஜ்ஜி மாவு எதுக்கு
அடிக்கடி இங்கே வர்றாள்?
இதெல்லாம் ஒண்ணும்
சரியேயில்லை, ரியா டியர்

எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு வாழைக்காயை நல்லா சீவி
இந்த பஜ்ஜி மாவுல போட்டு எடுத்துடுவேன்ப்பா
ஆமாம் சொல்லிட்டேன்
hi banukka...how r you? adutha udyellam padikalaya??
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top