• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 51

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
என்னிடம் கேட்காமல்..
என்னுள் நுழைந்தாய் ..

இப்போது
மட்டும்
ஏன் ???
என்னிடம் கேட்கிறாய்...

கேட்டுக்கொள்..
என்னிடம் இருக்கும்
உன்னிடமே ..

அத்தியாயம் 51


அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவன் "நிலா என்னாச்சு? என்று கேட்டான்.

இப்போது அவன் புறம் திரும்பியவள் "ஏதோ ட்ராவல்ஸ் கால் பண்ராங்க நாளைக்கு நைட் பஸ் ஊருக்கு போறேனா நான்"என்றாள்.

இப்போது ரிஷி தலையில் கை வைத்தவன்

"ஹே நேத்தே மாமா கால் பண்ணாரு!! ஆடி முடியுதுல்ல...

ஏதோ வேண்டுதல் சொன்னாருல்ல!! அதான்!!

"நான் தான் டிக்கெட் புக் பண்ணேன் சொல்ல மறந்துட்டேன். உன் நம்பர் நான் தான் குடுத்தேன் உன்கிட்ட சொல்ல சொன்னாரு "என்றான்.

அவனை முறைத்தவள் "நான் மட்டும் போறேனா? என்றாள்.

" ஆமாண்டா எனக்கு வேலை இருக்கு !என கூறியவனிடம்

"ரிஷிபய்யா ப்ளீஸ் !ப்ளீஸ்! நீயும் வாயேன்" என குழந்தை குரலில் சிணுங்க அதை ரசித்தவன் அவள் தோளில் கை போட்டவன்

"உன் ரிஷிபய்யனுக்கு வேலை இருக்குடி" என்றான்.

" உனக்கு எப்பப்பாரு வேலை தான்!உன் பாப்பு முக்கியமில்லை போ! என்றாள்.

"ஹே இல்லடி! எனக்கு என்னோட பாப்பு தான் முக்கியம்! பட்.... என இழுக்க

"சரி! சரி !ரொம்ப பண்ணாத நான் போறேன் ஜாலியா இருந்துட்டு வருவேன்" என கூறி விலகி சென்றாள்.

" ஹ்ம்ம் என்ன விட்டு போறது தான் உனக்கு எப்பவுமே சந்தோஷம் இல்ல" என்றான் ஒரு மாதிரி குரலில்.

சட்டென்று அவன் புறம் திரும்பியவள் சமாளித்தவாறு "டிக்கெட் புக் பண்ணது யாராம் ???நானா??
நீ தானே...

பேச வந்திட்டான ....

"போன தடவ போகாத போகாதன்னு சொல்லி என்னலாம் பண்ண...

" இப்போ நீ தான போக சொன்ன... என பேசி கொண்டே சென்றவள் மேலும்

"எனக்கு உன்ன விட்டுட்டு இருக்கணும்னு ஆசையா ???

"போன தடவையே உன்னையும் பிரிய முடியாம தான்... அப்பாகிட்ட அவ்ளோ பேசினேன்" என்னமோ சொல்ற??? என்றவளை

அதற்கு மேல் அவளை பேச விடாமல் இழுத்து அணைத்திருந்தான்.

இதுவரை ரிஷியின் அணைப்ப அவளை சமாதானப்படுத்தும் விதம் இருக்கும்.... சீண்டும் விதம் கூட இருக்கும்...

ஆனால் இன்று
அவன் அணைப்பில்.

கணவன் என்ற உரிமையும்... என்னை விட்டு போய் விடாதே என்ற தவிப்பும்..
தெரிந்தது.

கடைசி வரைக்கும் இப்டியே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் தெரிந்தது.

அவன் அணைப்பில் முழுவதுமாக தன்னை தொலைத்திருந்தாள் நிலா.

நேரம் கூட கூட அணைப்பின் இறுக்கமும் கூடியிருந்தது.

இதுவரை ஏற்படாத உணர்வில் இருந்தாள் நிலா.

கதவு தட்டும் ஒலியில் மீண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ரிஷியோ "கதவை தட்றாங்க! என்றான்.

ஹ்ம்ம் என்றவாறு சென்றவளை "நிலா! என்று அழைத்தான்.

அவன் முகம் பார்க்காமல் "ஹ்ம்ம்" என்றாள்.

" தலை கலைஞ்சிருக்கு பாரு!! என்றான்.

" அய்யோ என கண்களை இருக்க மூடி திறந்தவள் முடியை சரி செய்தபின் கதவை திறந்தாள் .

அங்கே கவலையுடன் நின்றிருந்தாள் சாய்ஷா.

" வா எப்படி இருக்க?? என்றாள் நிலா "இருக்கேன்" என்றாள்.

ரிஷி அவளை பார்த்து சினேகமாக சிரிக்க இப்போது முறைத்தாள் சாய். "என்ன சிரிக்கிற! எல்லாம் உன் பிரண்டால வந்தது இன்னைக்கு வரட்டும் அவனை" என்றாள் கோவமாக.

" கூல் டா! இன்னைக்கு எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்" என்றான்.

இரு என எழுந்தவளை தடுத்த ரிஷி "நான் போய் குடிக்க ஏதாச்சும் கொண்டு வரேன் பேசிட்டருங்க" என்று கீழே சென்றான்.

அந்த செயல் கூட நிலாவின் மனதுக்குள் ஒரு இதமான உணர்வை ஏற்படுத்தியது.

இப்போது சாய் புறம் திரும்பியவள் "என்னடா இப்டி மெலிஞ்சு போயிருக்க சாபிடறியா? இல்லையா? வேலை! வேலைனு! ஓடற போல?? என கேட்க

எதுலயும் மனசு ஒட்ட மாட்டேங்குது" நிலா உனக்கு தான் காரணம் தெரியுமே ??என கவலையோடு கூறினாள்.

இருவரும் பேசி கொண்டிருக்க சாய்க்கு ஜூஸ் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்தான் ரிஷி.

சாய் கால் வர மொபைலில் பேச தொடங்கினாள் .

இங்கே ரிஷியிடம் நிலா "என்னடா ஒரு கப் காபி உனக்கு?? என்றாள்.

" இதோ !என அவளுடையத காட்ட

" ஹே அவளே ரொம்ப கவலையோட வந்திருக்கா!!! இப்போ இதல்லாம் தேவையா??? என நிலா கேக்க "அப்போ அவ போனப்புறம் வைச்சுக்கலாமா டி" என்றான்.
கண்ணடித்தவாறு ..

"சீ போ லூசு" என்றாள்.

இப்போது அங்கே அமர் வர சாய் பார்த்ததும் ரிஷயிடம்

"மச்சான் ஒரு முக்கியமான வேலைடா மறந்துட்டேன்" என செல்ல முயல

" வா மச்சான் உனக்கு வேலையே இங்க தான்! என கூறி அழைத்தான்.

அவனை பார்த்த சாய் வெடித்திருந்தாள் .

"நேரா விஷயத்துக்கு வரேன் நீ என்ன லவ் பண்றியா? இல்லையாடா? என கேட்க இந்த நேரடி தாக்குதலுக்கு பயந்தே அமர் அவளை அவொய்ட் செய்ந்திருந்தான்.

" சாய் !!நான் உன்ன பிரண்டு... என ஆரம்பிக்க
" என்ன பிரண்டா தான் நெனைச்சு பழகினேன்" சொல்றியா??

" பொய் சொல்லாதடா!

உன் அக்கறை.. கேர் ...பிரண்ட்ஷிப் ஓகே" அப்போ அந்த பொஸசிவ்நஸ் அது?? அதுவும் பிரண்ட்ஷிப்பா?? என்றாள்.

ரிஷியின் பார்வை தானாக நிலாவின் புறம் திரும்பியது அவனை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

இப்போது சாய் "திடீர்னு அவாய்ட் பண்ற!! பேச மாட்டேங்கற !!என்னடா நெனைச்ச?? என்னை நீ ??சொல்லு!! என கத்தலில் தொடங்கி அழுகையில் முடித்திருந்தாள்.

அவளை சமாதானப்படுத்த முயன்ற நிலாவை பார்வையால் தடுத்தான் ரிஷி.

அமரோ" இல்லை சாய்! உனக்கும் எனக்கும் ஒத்து வராது" என முடிக்கும் முன்..

" பொய் நான் சொல்லட்டுமா?? என்ன காரணம்னு"
உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை??
" இவ பிசினஸ் பிசினஸ்னு ஓடறவ தான!!! என்ன பெருசா கேரக்டர் இருக்க போகுதுனு.. நெனைச்சு??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top