Yen kalangarai vilakkame 53

Riya Dev

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ தோழிகளே ..


நீண்ட இடைவெளிக்கப்பறம் உங்கள மீட் பண்றதுல ரொம்ப சந்தோஷம்...

சாரி இவ்ளோ லேட்டா அப்டேட் குடுக்கிறதுக்கு!!
எல்லாரும்... என்னை மன்னிச்சு....உறவில் நீ இருந்தும்...
உணர்வில் நீ இல்லை
என்றிருந்தேன் ...

என்னவனே !!புரிந்தது...

உறவில்...உணர்வில்...
உயிரில்... நீ என்று...


என் கலங்கரை விளக்கமே அத்தியாயம் 53.உறக்கம் வராமல் மாடியில் அமர்ந்திருந்தாள் நிலா .

"ரிஷி ஏன் இன்னும் கால் பண்ணல??

" அவனுக்கு ஏதாச்சும் ஆயிருக்குமா? சே !சே !லூசு நிலா அப்படியெல்லாம் இருக்காது".

இவனோட பெரிய தொல்லை...

பெருசா பேசுவான்...

" இப்போ பாரு இவ்ளோ நேரமா கால் பண்ணல...
லவ் பண்ற மூஞ்சிய பாரு" என எண்ணி கொண்டிருந்தாள்.

அந்த நேரம் அங்கே வந்த நிலாவின் தந்தை

"என்னடா பாப்பா! இன்னும் சாப்பிடல ??இங்க வந்து உக்காந்திருக்க" என்றார்.

" பசிக்கல பா !நீங்க சாப்டீங்களா? என்றாள்.

ஆச்சு டா !என்ன?? நிலாக்குட்டி முகம் டல் அடிக்குது"
என்றதற்கு

"ஆமா! எல்லாம் உங்க மருமகனால தான் .நேத்து நான் கால் பண்ணலன்னு ,"என்ன கத்து கத்துனாரு ...
இப்போ காலைலேருந்து ஒரு கால் இல்லை.. மெசேஜ் இல்ல.. என திட்டினாள் .

"என்ன பாப்பா? அவரோட வேலை பத்தி தெரியும்! அதுல பிஸி ஆ இருக்கலாம்ல! பேசுவாரு டா..

" இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா?? என்றார்.

இப்போது சட்டென்று முகம் மாறி கண்ணில் நீருடன்

"தெரியல பா! நான் உண்மையா நேசிக்கிறவங்க ஒரு கட்டத்துல என்ன அவொய்ட் பண்ணிட்டு போறாங்க பயமா இருக்கு "என்றாள்.

இப்போது அவளருகே அமர்ந்து தலையை ஆதரவாக தடவி

"என்ன டா !இன்னும் பழசை நினைச்சுட்டு இருக்கியா??

" ரிஷி அப்டி இல்லைடா!!

நான் சொன்னேன்ல உண்மையான அன்பு வைச்சா அது கண்டிப்பா திரும்ப கிடைக்கும்.

" உனக்கு ரிஷி அப்டித்தான்!

உன் மேல உயிரா இருக்காரு டா !

"உன்ன மட்டுமில்லை நம்ம குடும்பத்துல உள்ள எல்லார் மேலையும் அக்கறையா இருக்காரு!

" கவலைப்படாத பாப்பா !!ஒருத்தர் நம்ம கிட்ட பேசலை அப்டினா...

சின்ன சண்டை வந்துச்சுன்னா...

அவங்க மத்த சூழ்நிலைல நம்மகிட்ட நடந்துக்கிட்ட நல்ல விஷயங்களை நெனைச்சு பாக்கணும் டா".

நேசிக்க தெரிஞ்சா மட்டும் பத்தாது புரிஞ்சுக்கவும் தெரியணும் "என்றார்.

அவர் பேச பேச நிலாவிற்கு ஏதோ புரிய தொடங்கியது.

மேலும் அவர் "பாப்பா நீ எல்லார் மேலையும் அக்கறை எடுக்கற மாதிரி !!un மேல எல்லா விஷயத்துலைய அக்கறை எடுக்கிற ஒருத்தர் கிடைச்சருக்கார் டா "என்றதும் ..

நிலா உடனே "உண்மை தான் பா! என்றாள்.

" சரிடா ரொம்ப நேரம் உக்காராத பனி சீக்ரம் சாப்பிடு டா "என்று கூறி சென்றார்.

இப்போது நிலா

"நான் ரிஷியை.... என யோசிக்கும் முன் அவள் மொபைல் அலற எடுத்தால்

அவள் நாயகனே அழைத்திருந்தான் கோவம் இருந்தாலும்

அதை சட்டென்று அட்டென்ட் செய்தவள்..

" அறிவுகெட்ட எரும மாடு!! காலையில் இருந்து கால் இல்லை...

மெசேஜ் இல்ல..

பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்கேனா போய்ட்டேனா ஒரு அக்கறை இருக்கா ...உனக்கு!!!

" லவ் யு! லவ் யு! சொன்னா மட்டும் பத்தாது செயலையும் இருக்கணும்" என கத்தி கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் பதில் வராமல் போகவே

" என்ன இவன் லைன்ல இருக்கானா ??என யோசித்தவள்.

ரிஷி! ரிஷி! என கத்தி கொண்டிருந்தாள்.

" ராது நான் கமல் பேசுறேன் !!என கூற நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த குரல்....

நான்கு ஆண்டுகளாக கேக்க ஏங்கிய குரல் ...

பதில் சொல்ல தோன்றாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் ராது.

ராது லைன்ல இருக்கியா? நான் கமல் பேசுறேன் .

"எனக்கு தெரியும்! உனக்கு என் மேல கோவம் இருக்கும்னு !

"நான் உன்ன பாக்கணும் ராது! ப்ளீஸ் என்றான்.

"ரிஷிகிட்ட இப்போதான் பேசினேன்!

" நீ ஒண்ணும் கவலைப்படாத !

இனிமே உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன்.

உன் கமல் உன்கிட்டையே வந்துட்டேன்.

கடைசி மெயில் நீ அனுப்பும் போது கேட்ருந்த !!கமல் உங்க வாழ்க்கைல நான் இல்லையானு??

" இனி நீ மட்டும் தான் என்னோட லைப் ராது! என்று பேசி கொண்டிருந்தான்.

நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை அவள் வாய் தானாக ரிஷி என்றழைக்க..

" ராது ரிஷி இஸ் ஆ ஜென்டில் மேன்!

" நீ எனக்கு அனுப்பின மெயில் எல்லாம் காமிச்சேன் "

அதை பாத்துட்டு புரிஞ்சிக்கிட்டாரு!!

" உங்க ராதுகிட்ட பேசுங்கன்னு அவர் தான் சொன்னாரு" என்றான்.

நொறுங்கி போனாள் நிலா.

கண்ணில் நீர் நிற்கவில்லை.

ரிஷி என மீண்டும் அழைக்க

"நிலா ரிஷி உன்ன கூட்டிட்டு வர நாளைக்கு வராரு !!

நீ வந்ததும் மத்தத பேசிக்கலாம்!

" மிஸ் யு ராது! என கால் கட் செய்திருந்தான்.

ரிஷி.... என கத்தி கொண்டு கையில் இருந்த போனை தூக்கி எறிந்தவள் தலையில் அடித்து கொண்டு அழ தொடங்கி இருந்தாள்.

இங்கே ரிஷியிடம் போனை குடுத்த கமல் .

"தாங்க் யு !ரிஷி பார் அண்டர்ஸ்டாண்டிங் அஸ்" என்றான்.

புதிரா புன்னகைத்தவன்

"நிலா! ஐ மீன் ராது என்ன சொன்னாங்க ??என்றான்.

" கண்டிப்பா அதிர்ச்சியா தான் இருக்கும் குரல் கேட்டதும் வாயடைச்சு போய்ட்டா!!!

" நீங்க என்ன நெனைப்பீங்கனு கவலைப்படறானு நெனைக்கிறேன்!!

"பட் நீங்க தான் புரிய வைக்கணும் மிஸ்டர் ரிஷி "என்றான்.

" ஸுயர் மிஸ்டர் கமல்" என்றான்.

" நாளைக்கு கிளம்பறேன் நான் வந்ததும் ஐ வில் கால் யு "என்றான் ரிஷி .

"ஓகே! ரிஷி தாங்க் யு" என்றவன் கிளம்பினான்.

அவன் செல்வதை பார்த்தவன் மீண்டும் நிலாவிற்கு அழைக்க


அது சுவிட்ச் ஆப் மோடில் இருந்தது.


என்ன நடக்க போகிறது ??

அங்கே

ரிஷியின் நிலாவா...

கமலின் ராது வா...

விடை விரைவில்

Velicahm varum...
 
#3
ஹேய் ரியா டியர் எங்கே போனீங்க ஆளையே காணோமே
உடம்பு சரியில்லையா?
உங்களை மீண்டும் சந்தித்ததில் ரொம்பவே சந்தோஷம்ப்பா
அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க,
ரியா டியர்
 
Last edited:
#9
அட கூமுட்டை குப்பா கமல்
உனக்காக உருகினவளை வேண்டாம்ன்னு எட்டி உதைச்சுட்டு இப்போ எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு நிலாவை கூப்பிடுறே, கமல்?
உன்னோட காதலி ரிஷிக்கு மனைவியாகி ரொம்ப நாளாச்சு
இனி அவள் மிஸஸ் ரிஷி
ராதா இல்லை
ராதா நிலா உன்னைத்தேடி வர மாட்டாள்
அப்படியே வந்தாலும் அவள் ரிஷியின் நிலாவாகத்தான் இருப்பாள்
 
#10
Riya dear enga pa poitimga aalaye kanom health sari ellaya, ini regular ah kudumga pa, dai koomuttai kamal arivu iruka da unaku Ava kekumbodu vendam nu poitu ippo kalyanam annavala vandu kupiduriye arivu kettavane, dai rishi unaku moolai iruka illaya ippadi phone potu kudupiya po naalai sema ya kudupa poi vangiko, Kamal un kuda varuva nu kanavu kanatha da, Ava rishi Oda wife da, nice update riya dear thanks.
 
Latest Episodes

Advt

Advertisements

Top