• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

you tube resippi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
யூ ட்யூப் ரெசிப்பி .......

"நித்து, மணி 4.30 ஆயிடுத்து.. உளுந்தம் பருப்பை எடு", என்ற கிருஷ்ணனுக்கு வயது 71. இருபது வருடம் முன்பு ... சென்னைக்கு மிக அருகாமையில் [???], ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி, கடன் வாங்கி சொந்த வீடு கட்டி , கடனை அடைத்து, இரு பிள்ளைகளை படிக்க வைத்து ... நிமிரும்போது... ரிடையராகி இருந்தார்.

நித்து .. என்ற நித்யகல்யாணி ... அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்.. "இப்போ எதுக்கு உப்பிலி நம்பர் ?, எங்காத்து மனுஷா-ன்னா உங்களுக்கு இளக்காரமா போயிடுத்து.. ", என்று கூற.... கிருஷ்ணன் நித்து -வின் பதிலை கேட்டு தலையில் அடித்துக் கொண்டார்.

"நான் உப்பிலி நம்பர் எங்க கேட்டேன், உளுந்தம்பருப்புன்னா கேட்டேன், அந்த காது மெஷினை மாட்டிக்கோ முதல்ல.", நித்ய கல்யாணி மாமிக்கு காது கேக்காது.:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

அவ்வளவா கேக்காது-ன்னு மாமி சொல்வார். ஆனா பேசுபவர்களுக்கு தெரியும் அவ்வளவும் கேக்காது என்று. :p:p:p:p:p:p:p

ஆனால், வாயசைப்பை வைத்து புரிந்து கொள்வதில் கெட்டி. ஹியரிங் எயிட்-ஐ அடிக்கடி கழட்டி வைத்து போடுவதற்கு மறந்து விடுவார். o_Oo_Oo_Oo_Oo_Oo_O

"ஓ , உளுந்து கேட்டேளா?", சொன்னவாறே, அடுக்களை அலமாரியில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து கொடுத்தார். வாயிற்கதவு திறக்கும் ஓசை கேக்க, "நித்து , ஸ்ருதி வந்துட்டான்னு நினைக்கிறேன், பாலை அடுப்புல வை...", இவர் சொன்னதற்கேற்ப, இவரது இரண்டாவது மருமகள் ஸ்ருதிதான் வீட்டிற்கு வந்தது. அவளுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகி இருந்தது, அருகில் இருக்கும் பள்ளியில் ஆசிரியை தேவைப்பட, வீட்டில் சும்மா இருப்பானேன் என்று இவளும் வேலைக்கு சேர்ந்து விட்டாள். இவள் கணவன் சுந்தர் ஏ.ஜி .எஸ். அலுவலகத்தில் பணி செய்பவன். சுருங்கச்சொல்லின் இவ்வீட்டின் புது வரவு...

வாசலில் செருப்பை கழட்டிவிட்டு, கிச்சனுக்கு வந்து பார்த்தவள்... திகைத்தாள், அங்கே ...

ஒரு பக்கத்தில் எடை போடும் தராசு & எடை கற்கள் ,
கிண்ணம் நிறைய ஐஸ் கட்டிகள்,
டைமர் (timer ), செட் பண்ணிகொண்டிருக்கும் மாமனார்,
அவர் அருகில் ஒரு சில்வர் டப்பா, கூடவே ஒரு படி (உழக்கு )...

தலை கிர்..ர்ர்...ரியது.. அடுக்களை வேதியியல் ஆராய்ச்சி கூடம் போல் இருந்தது... முழித்தாள். "ப்பா .. ஏதாவது வேணுமா?, என்ன பண்றீங்க ?", புதிதாய் எதோ செய்கிறாரோ என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் + பயம் இருந்தது ஸ்ருதிக்கு..

"ஒன்னும் இல்லம்மா... முதல்ல காப்பிய குடி.. அப்பறம் இதை பாக்கலாம் ", சொல்லி கல்யாணி காபியை நீட்டினார், அவருக்குத்தான் கிருஷ்ணனின் பழக்கம் அத்துப்படி ஆயிற்றே ? . அப்படியே கணவருக்கும் காபி கொடுத்து, தானும் ஒரு லோட்டா-வை கையில் எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்தனர் .. நித்யகல்யாணியம் ஸ்ருதியும்.

"சித்தி...", "ஸ்ருதிம்மா", என்று கூச்சலிட்டு கொண்டே வந்தார்கள், ஜனகநந்தினியும், விஷ்ணுபிரசாத்தும். இரு பிள்ளைகளும் , ராம் மற்றும் ஜானகி யின் வாரிசுகள், முறையே நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பில் இருப்பவர்கள். ராம், வீட்டின் தலை மகன், சுந்தரின் அண்ணன், இன்ஷுரன்ஸ் அலுவலகத்தில் பணியில் இருப்பவன், ஜானகி, வங்கியில் வேலை பார்ப்பவள். ஒற்றுமையான கூட்டு குடும்பம். :love::love::love::love::love::love::love:

"இன்னிக்கு என்ன ஸ்னாக்ஸ்?, சித்தி?"

ஹாண்ட் பாக் -கில் இருந்து கடலை அச்சு பாக்கெட்டினை எடுத்து பிள்ளைகளுக்கு தந்தவள் " தாத்தா உள்ள ஏதோ பண்றார் ".. என்று சொல்லி முடிக்கும் முன்......

"ஆ... அய்ய்யயோ .. தாத்தாவா?", விஷ்ணு & நந்தினியின் அலறலில் வீடு கிடுகிடுத்தது.

"ஷு .. சத்தம் போடாதீங்க.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்மள கூப்பிடுவார்..." தாத்தாவை தெரிந்தவளாய் கூறினாள் ஜனகநந்தினி.

அதற்குள் காபியை முடித்து அடுப்படிக்குள் சென்றிருந்தார், கிருஷ்ணன்., தராசினை எடுத்தவர், ஒரு பக்கம் 200 + 50 கிராம் எடை கற்களை வைத்தார். மறு தட்டில் உளுந்தினை போட்டு நிறுத்தார். தராசு முள் நேர்கோட்டில் நிற்பதற்குள், 4-5 முறை கைப்பிடி உளுந்தினை எடுப்பதும், மீண்டும் போடுவதுமாய் இருந்தார்.. "நித்து , இந்த கடைல எல்லாம் நம்பர் காமிக்கிற எடை மெஷின் வர்றதோல்லியோ?, அதை அமேசான்-ல வாங்கிடலாம்-னு இருக்கேன். இந்த தரோஸோட மல்லு கட்ட முடியல..", என்று கூற, நித்து மாமியோ.. தேமே என்று நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனசுக்குள்ளே மாமா - வை தாளித்துகொண்டுருந்ததில் - காதில் புகை..... :alien::alien::alien::alien::alien::alien::alien:

"அம்மாடி.. நந்தினி.. கொஞ்சம் வாயேன்.. ",தாத்தா அழைக்க..."சித்தி.. இனிமே சூப்பர் என்டர்டெயின்மெண்ட் தான்.. வாங்க..", இவளையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றது அந்த வாண்டு ...

"ஸ்ருதி, நீயும் வந்துட்டியா?, வெல்.. நல்லதா போச்சு.., இந்த தராசு முள், சரீயா.. கரெக்டா நடுல நிக்கறதா பாரு.."

"ஆ... சரியா காமிக்கறத்துப்பா.. "

"நேக்கு சரியா இல்லையே. லைட்டா வலது பக்கம் இறங்கினாப்பல இருக்கு..., இந்தண்டை வந்து பாரு....", அவர் கோணத்தில் இருந்து பார்க்க சொல்லும்போதே, இங்கே நித்து மாமி, "ஆ........மா, இங்க நாலு கிராம் அதிகமாயிடுத்துன்னா.... அமெரிக்கா காரன் குண்டு போட்டுடுவான் [o_Oo_Oo_O:cautious:].... என்ன பண்றது?, நல்லா பாரும்மா....", நொடித்தாள்.

"அய்யோ .... மாமி .....இழுவை ஜாஸ்தியா இருக்கே ?.... தேவையில்லாம உள்ள வந்துட்டோமோ ?", இது ஸ்ருதியின் மைண்ட் வாய்ஸ்...

அவர் சொன்ன கோணத்தில் பார்த்து, தராசு நேர்கோட்டில் இருப்பதை உறுதி செய்து, உளுந்தினை அளந்து போட்டாள்.

"அச்சச்சோ ... பாரு பாரு.. ஐஸ் க்யூப் கரையரது... நித்து , நேக்கு வேற கியுப்ஸ் வச்சிருக்கோல்லியோ, உளுந்தை ஐஸில தான் ஊறவைக்கணும்-னு அந்த ரேவதி மாமி அவளோட யூ ட்யூப் ரெஸிபி -ல போட்டிருக்காளே ?"

ஓ.. ஓகே. மாமனார், ஏதோ சமையலுக்கு தான் தயாராகிறார்.. என்று ஆசுவாசமாக மூச்சு விட்ட மருமகள், கூடவே.. "ஐஸ் க்யூப்-ல ஊற வைக்கணுமா?, பிரிட்ஜ் இல்லாதவா என்ன பண்ணுவா?... சரி போட்டும் அப்படி என்ன ஒரு ஸ்பெஷல் டிஷ் ரெடியாறது ?".. இவ்வளவும் மனதுக்குள்ளே....

"நிறைய இருக்குப்பா..ரெண்டு டிரே -லையும், அம்மா வச்சிருக்கா..."

"அதெல்லாம் சரியா பண்ணிடுவா.. என்ன பேச்சு தான் கொஞ்சம் அதிகம்.."..
பேசிக்கொண்டே.. டைமர் செட் செய்தார்.. "பாருமா , சரியா அம்பத்தஞ்சு நிமிஷம் இந்த உளுந்து ஊறணும்...... ", ஸ்ரத்தையாய் மண்டையை ஆட்டினாள் ஸ்ருதி ...

பக்கத்தில் இருக்கும் ஊற வைத்த அரிசியை பார்த்தார்..அதன் அருகில், ஒரு டைமர் இருந்தது... பக்.பக்... பக். பக்..... அதை பார்க்க எதோ அவளை சுற்றி டைம் பாம் இருக்கும் உணர்வை கொடுத்தது.. [எத்தனை தமிழ் படம் பாத்திருக்கோம்? ] பயமாய் மாமனாரை பார்த்தவளுக்கு, அவர் ஏதோ தேடுவது தெரிய... "அப்பா என்ன தேடறேள் ?" கேட்டாள் ..

"இல்ல, வெந்தயம் சரியா இருபது கிராம் அளந்து வைச்சிருந்தேன்.. அதை உளுந்துல பதிமூணு நிமிஷம் கழிச்சு போடனும்... அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..."

இவளும் சரி என்பதாய் தலை அசைத்தாள்....அனைத்தும் ஊறி... ரெசிபி படி, அரிசியை நன்கு நைஸாகவும் இல்லாமல், கரகர-பதமாயும் இல்லாமல் ஆட்டி எடுத்து... உளுந்தினை கிரைண்டர்-ரில் போட்டதும்... "இதுக்கு தண்ணியே ஊத்தப்படாது.. சரியா , மூணு நிமிஷம் கழிச்சு பத்து ஐஸ் க்யூப் போடணும், அப்பறம் ஏழு நிமிஷதுக்கு பதினஞ்சு ஐஸ் கியூப்.... என்றவாறே தொடர்ந்து சொல்ல... இவளுக்கு நிஜமாய் தலை சுற்றியது...

அதற்குள் பிள்ளைகள் லூட்டி தொடங்க, ஸ்ருதி அவர்களை படிக்க வைக்கவென, பத்து நிமிடம் வெளியே வந்தாள் ...

மீண்டும் உள்ளே செல்லும்போது, அங்கே மாமனார்... மாமியாரை...... வெட்டவா? குத்தவா ? என்று ஷின் ஷானை அவன் அம்மா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபத்துடன் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார்...

மெதுவாய் கேட்டாள்.. "என்னாச்சு?"

"நான் உப்பு கேட்டேன் "

" சரீ "

"அவ என்ன கொடுத்தா-ன்னு பாரு "..

ஒரு சின்ன தட்டில் அழகாய் சுக்கு அமர்ந்திருந்தது...

[ஸ்ருதி மனசுக்குள் ROFL :D:D:D ], அடியேய்.. சிரிச்சுடாத... மாமனார் மெச்சிய மருமகளா இருக்கணும்-நா, ரேசு குர்ரம் படத்தில வர்ற ஸ்ருதிஹாசன் மாதிரி லோப்பல (தெலுகு-ல உள்ளுக்குள்ள) விழுந்து விழுந்து சிரிச்சுக்கோ .. வெளில... மூச்...]

ஒருவழியாய் அரவை முடித்து எடுக்கும்போது.. "நில்லு நில்லு...", என்று வந்த கிருஷ்ணன்.. ஒரு ஸ்பூனில் மாவை எடுத்து, வாயால் ஊதினார்..

"ஒண்ணுமில்லமா ... நல்ல அரவை பதம் என்னான்னா... அரைச்ச உளுந்தை ஊதினா காத்துல பறக்கணும்".. சொன்னார்.அருகிலேயே இருந்த நித்யகல்யாணி மாமி முறைத்தாள்... இப்போது அவர் முறைப்பது சரியே என்று தோன்றியது ஸ்ருதிக்கு...

அப்படி என்ன நமக்கு தெரியாத ஐட்டம் இது?, ஒருவேளை குழிப்பணியாரத்துக்கு மாற்று பலகாரமா?

அனைத்தும் முடித்து அவரிடம் ஒரு சபாஷ் வாங்கி, பின் மெதுவாய் கேட்டாள் ...."ப்பா.. இந்த ரெசிபி பேரு என்ன?"

"அட மாட்டுபொன்னே.. இது தெரிலையா.. பஞ்சுபோல் இட்லி வேணுமா-ன்னு போன அறுசுவை நூறு-ல அந்த மாமி செஞ்சாளே ? " ," உங்க மாமி செய்யற இட்லி ..... ஒண்ணா... சுவத்துல அடிச்சா.. திரும்பி வருது.. இல்லன்னா.... இட்லி தட்டோட ஒட்டிண்டு போறது.. நாளைக்கு நான் பண்றேன் பாரு இடலி", என்று கூற...

:oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops:

"என்....ன்னா.......து...து...து............????????????? அடுத்ததாய் மனம் சொன்னது.. "அடப்பாவி மாமா.. நேத்து கூட வளைச்சு வளைச்சு பத்து இட்லி முழுங்கற?... மாமி இட்லி நன்னா இல்லையா? அப்போ நன்னா இருந்தா எத்தனை முழுங்குவ ?".. சூடு வச்ச ஆட்டோ மீட்டராய் மூளை கொதிக்க....

:devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish::devilish:

இட்லிக்கா இந்த அலப்பறை..............????

அடுத்த நாள், காலை.. டைனிங் டேபிளில் இருந்த யாரும் வாயே திறக்கவில்லை... [எங்க... முடிஞ்சாத்தானே?] பெவிகால் போட்டு ஒட்டியதைப்போல் நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டியிருக்க என்ன பேச....?

மாமனார், பிரம்மப்பிரயத்தனப்பட்டு வாயை திறந்து, "என்னமோ தப்பு இருக்கு... ம்ம்ம்... இன்னிக்கு மறுபடியும் ட்ரை பண்ணலாம்....." என்றவுடன் ...

"தொப்"

"தொப்"

வீட்டில் இருந்த அனைவரும் மூர்ச்சையாயினர்....

மயக்கம் தெளிய என்ன செய்வது என்று கிருஷ்ணன் யூ ட்யூப்பில் தேட ஆரம்பித்தார்...

Disclaimer : மக்களே... இந்த கதைக்கும் , அந்த/எந்த மருத்துவமனை இட்லிக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை, இல்லவே இல்லை... நிச்சயமா இல்லை...என்பதை தமிழ்நாட்டு காலை உணவான இட்லி-யின் மீது ஆணையிட்டு கூறுகிறேன்..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top