• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருவரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
கருவரம்

இதய சங்கமத்தில்
இளம்பிறையாய் மலர்ந்த
கருவறை மலரே..

எதிர்பார்ப்பின் பூரணத்துவமாய்
பூரித்த வயிற்றினுள்
புதையலான உன்னை...

கைசேர்ந்த ஆணவத்தில்
அலட்சியம் கோர்த்து,
காலை கிறக்க வாந்தியை
கடுகடுத்து தாங்கிய என்னை...

தூங்கா இரவுகளில்
துணையிருந்த உன்னை,
இம்சையாய் இடமாறுவதாய்
முணுமுணுத்த என்னை...

முகங்காணும் சாக்கில்
சுமையிறங்கும் நொடிநாடி
துடிதுடித்த என்னை..

கூர்கத்தி கோடிழுக்க
கூப்பாடிட்ட முதல் கதறலை,
மயக்கத்தில்
மந்தமாயுணர்ந்த என்னை..

மன்னித்து மறுவாய்ப்பாய்....
ஆழ்மனதுள் அலைமோதும்
பிழை இழைத்ததான
ஆற்றாமை களைய...

வசந்தம் குடியேற்ற
வயிறுவீங்கும் வாசனையை,
நொடிநொடியாய் நுகர..

கிறக்க காலையை,
கிடைத்தற்கறிய
கணமாய் நினைவிலேற்ற..

அங்குலமங்குலமாய் வெளித்தள்ளி..
முயலுதலை,
முதற்பாடமாய் கற்பிக்க...

வளிகலக்கும் உன்
முதல் அழுகையை
முழுவதுமாய் உணர..

கருவறை சுவர்களில்
இனிமை மொழியில்
இயக்கக்கவிதை எழுத...

பாதமசைத்து,
பழகிடும் பயிற்சியில்
பனிக்குடக்கடலில்,
ஆர்ப்பரிக்கும் அலையெழுப்ப....

உன் அறுவடை ரேகைகள்
இன்னும் ஆழ விதைக்க....

உனக்காய் பிரவாகிக்கும்
உதிரமதை அமுதாயுறிஞ்ச...

மீண்டுமொருமுறை ........
கருவாக உருவாகி
வரமாகுவாயா ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top