arrow_back
காக்கை சிறகினிலே அத்தியாயம் பதினேழு
காக்கை சிறகினிலே chevron_right பகுதி 17 / 20

அத்தியாயம் பதினேழு

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“அக்கா… இப்போ நாங்க மாமா கிட்ட பேசியே ஆகணும்…” அஞ்சலியின் உயிர் நண்பர்கள் ப்ரனித்தாவும் மிக்கியும் அவளின் உயிரை வாங்கி கொண்டு இருக்க அவளுக்கோ நாமே எப்படி அழைப்பது என்று உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது. இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தாலும் திருமணம் முடிவு செய்ததில் இருந்தே பேசாதவனிடம் எப்படி நாமே பேசுவது என்று அவளது ஈகோ தடுத்தது! அர்ஜுன் ஏன் பேசவே இல்லை என்று குழம்பினாள்! இன்னும் அவனது எண்ண போக்கை மாற்றி கொள்ளவில்லையோ என்ற சந்தேகமும் எழ பேச வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று கொண்டிருந்த தன் நண்பர்களிடம் மறுத்து பேசி கொண்டிருந்தாள்!

“ஐயோ ப்ரணி… அவர் ரொம்ப பிசிடி… உங்களை மாதிரி சின்ன பசங்க கிட்ட பேசவேல்லாம் அவருக்கு நேரமே கிடையாது…”

“ஏன்க்கா பொய் சொல்ற? நேத்திக்கு ராகுல் கிட்டயும் ஸ்ரீராம் கிட்டயும் கிரிகெட் விளையாடிட்டு போனார் மாமா… ச்சே… நாங்க தான் மிஸ் பண்ணிட்டோம்… அந்த ரெண்டு கொரில்லாவும் பெருமை பீத்திக்குதுங்க… எங்க கூடவும் வந்து கிரிகெட் ஆடியே தீரனும்…” என்று கூறவும் அஞ்சலிக்கு தூக்கி வாரி போட்டது… நேற்று வந்திருந்தானா?

“அம்மா… அம்மா…” தன்னால் முடிந்த அளவு கத்தினாள்! அலறி அடித்து கொண்டு வந்த அஞ்சலியின் தாய்

“ஏன்டி இப்படி கத்தற… எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போல இருக்கு…”

“நேத்து அவர் வந்தாரா?”

“யாரு?” குழப்பமாக

“அதான்… அர்ஜுன்… உன் மாப்பிள்ளை…” என்று பழிக்க

“வாயிலேயே ஒன்னு போடுவேன்… பேர சொன்னா! என்ன பழக்கம் இது அஞ்சும்மா…”

“எனக்கு நீ பதில சொல்லு… வந்தாரா?”

“ஆமா… நகை, பட்டு புடவையெல்லாம் குடுத்துட்டு, பத்திரிக்கையும் குடுத்துட்டு போனாரே… உன்கிட்ட புடவைய காட்டினேனே அஞ்சு…”

“ஏன் என்னை கூப்பிடல…”

“ஏதோ அவசரமா கிளம்பனும்னு கிளம்பிட்டார் கண்ணா…”

அவசரமாக செல்பவன் தான் கிரிகெட் விளையாடிவிட்டு சென்றானா? ஏன்? என்ன ஆயிற்று… என்று நினைத்து கொண்டிருக்கும் போதே ப்ரனிதாவும் மிக்கியும் சுவாரசியமாக செல்பேசியில் பேசி கொண்டிருக்க

“மாமா… நீங்க ஹான்ட்சம்மா இருக்கீங்க… இன்னைக்கு உங்கள சன் நியூஸ்ல பார்த்தேனே…” என்று ப்ரனிதா சிரிக்க

“…”

“பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்…”

“…”

“போங்க மாமா… அக்கா போர் அடிக்கிறா… எங்க கூட விளையாடவே வர மாட்டேங்கறா… எப்போ பாரு வீட்லயே உக்காந்துட்டு கண்ண திறந்து வெச்சுகிட்டு தூங்கறா… பாருங்க இப்போ கூட அப்படித்தான்…” என்று வாண்டு போட்டு குடுக்க அப்போதுதான் உரைத்தது அஞ்சலிக்கு

“ஏய் பிசாசு… யார் கூட பேசிட்டு இருக்க?”

“ம்ம்ம்… எங்க அர்ஜுன் மாமா கிட்ட தான்…”

“ஏய் எருமை… யார கேட்டுடி என் போன்ல இருந்து பண்ண…”

“போக்கா… நீ தான் எங்கள பேசவே விட மாட்டேங்கற… மாமா சோ ஸ்வீட் க்கா… உன் கூட டூ…”

“விட்டுக்கோ… ஒழுங்கா போன குடு…”

“முடியாது… நான் இன்னும் மாமாகிட்ட பேசல… இவ தான் பேசி இருக்கா…” என்று மிக்கி போர்க்கொடி தூக்க

“ஒழுங்கா குடுங்க குட்டி பிசாசுங்களா…” என்று திட்டி விட்டு செல்பேசியை கபளீகரம் செய்தாள்!

“ஹலோ…” அதீத கோபத்தோடு சொல்ல

“ஓகே பை எலி… அப்புறம் பேசறேன்… கொஞ்சம் வேலை இருக்கு…”

“எலிலிலிலி… நான்… யு… யு…” என்று சொல்வதற்க்குள்ளாக வைக்கப்பட கோபம் இருமடங்கானது! இந்நேரம் வரை இந்த குழந்தைகளிடம் பேசி கொண்டிருந்தவனுக்கு இப்போது என்னிடம் பேச முடியவில்லையா? பற்களை கடித்து கொண்டு செல்பேசியை பார்த்து உருத்து விழித்து விட்டு தன் தாய் அழைக்கவும் உள்ளே சென்றாள்!

***

மிக சுறுசுறுப்பாக வேலைகளை கவனித்து கொண்டிருந்தாள் மேகா, அவளது அலுவலகத்தில்! தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீட்டு தொகை வந்திருந்தாலும் அதை சீர்படுத்த வேண்டிய மிக பெரிய பொறுப்பு இருந்தது! அவளும் கொஞ்சம் கூட சுணங்காமல் செய்ய ஆரம்பித்து இருந்தாள்! கௌதமின் ஆலோசனைகள் மிக முக்கியமாக செயலாற்றி கொண்டிருந்தது! ஒவ்வொரு பிரிவாக பார்வையிட்டவள், திருப்தியாக… வந்த போன் கால்களை அட்டென்ட் செய்து பேசிகொண்டிருந்தாள்! இன்னும் ஒரு வாரமே அஞ்சலியின் திருமணம் நடக்கவிருப்பதால் அந்த பரபரப்பும் மனதில் இருந்தது! மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு சிறு குறுகுறுப்பும் எழுந்தது! ஹார்பரில் இருந்து செயலர் அழைக்க

“சொல்லுங்க சதாசிவம்… கண்டைனர டெலிவரி எடுத்தாச்சா?”

“மேடம்… அதுல தான் கொஞ்சம் சிக்கல்… இங்க ஹார்பர் டெலிவரி ஆளுங்க கொஞ்சம் தகராறு பண்றாங்க…”

“என்னவாம்…”

“சரக்க இறக்க கொஞ்சம் அதிகமா கேக்கறாங்க…”

“சரி குடுத்துடுங்க…”

“இல்ல மேடம்… அவங்க அதுக்காக கேக்கற மாதிரி தெரியல… பிரச்சனைய உருவாக்க வேணும்னே அநியாய ரேட் கேக்கறாங்க…”

“சரி… நான் வரேன்…”

“மேடம்… நீங்க…” என்பதற்குள் செல்பேசி வைக்கப்பட சதாசிவத்தின் முகத்தில் முத்து முத்தாக வியர்வைகள்!

அவசரமாக பெருமாளிடம் கூறி விட்டு விரைந்தாள் மேகா! ஹார்பர் போய் சேர்ந்த போது வாக்குவாதம் முற்றி இருந்தது… நுழையும் போதே கௌதமிடம் இருந்து அழைப்பு வந்தது!

“எங்க மேகா இருக்க?”

“கொஞ்சம் வெளிய இருக்கேன்ப்பா… என்ன விஷயம்?”

“இல்ல… அஞ்சுக்கும் அர்ஜுக்கும் எதாச்சும் கிப்ட் குடுக்கனும்ல… அதான் நீ ப்ரீயா இருந்தா போலாம்னு பார்த்தேன்…”

“ம்ம்ம்… இப்போ கொஞ்சம் வேலை இருக்குப்பா… ஈவினிங் போலாமா?”

“ஓகே டா… யு கேரி ஆன்… பை…”

பிரச்சனையை சொல்லி கௌதமிடம் உதவி கேட்கலாமா என்று நினைத்தவள், அவனுக்கு தொந்தரவு தர வேண்டாம் என நினைத்தாள்! பேசிவிட்டு சதாசிவம் அருகே சென்றவள், அந்த வாக்குவாதத்தை பார்த்து உள்ளுக்குள் அதிர்ந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் என்னவென்று விசாரிக்க அவர்கள் கேட்கும் தொகை உண்மையிலேயே அநியாயமாக இருந்தது! எடுத்து சொல்லி விளக்க, அந்த விளக்கங்களை எல்லாம் அவர்கள் காதிலேயே போட்டு கொள்ளாமல் புதிதாக இவள் பொறுப்பேற்று இருப்பதால் கொள்ளை அடிக்கவே முயன்றனர்! அவர்களுடன் வாதம் செய்து களைத்தே போனாள்!

“இங்க பாரும்மா… நீ சின்ன பொண்ணு ஹார்பர் வழக்கம் எல்லாம் உனக்கு தெரியாது… ஒழுங்கா இத ஒத்துக்கிட்டு போறதுன்னா நாங்க சரக்க இறக்குவோம் இல்லாட்டி எப்படியோ போகட்டும்ன்னு விட்டுடுவோம்… என்ன சொல்ற?”

“என்னங்க… நான் சின்ன பொண்ணா இருந்தா என்ன பெரிய பொண்ணா இருந்தா உங்களுக்கு என்ன? நியாயமா வாங்கற கூலிய வாங்கிட்டு சரக்க இறக்க வேண்டியதுதானே… தேவை இல்லாம ஏன் வம்பு பண்றீங்க…”

“அப்படித்தா செய்வோம்… போ… உன்னால என்ன முடியுதோ செஞ்சுக்கோ…”

“அப்படியா… நல்லா செஞ்சுக்கலாமே… இனிமே நீ இறக்க வேண்டாம்… எங்க ஆளுங்கல வெச்சு நாங்களே செஞ்சுக்கறோம்… போயிட்டு வா…” கடினமாக வந்தது ஒரு குரல்! குரல் வந்த திசையை பார்த்தனர்!

கௌதம் இன்னும் நான்கு பேருடன் நின்றிருந்தான்!

“எங்கள மீறி நீ இங்க சரக்க இறக்குவியா…” என்று ஒருவன் எகிற… கௌதம் பக்கத்தில் இருந்தவனை பார்க்க… அவன் அதற்காகவே காத்து கொண்டிருந்தவன் போல் முன் சென்று

“ஏல… யாருன்னு தெரியாம மோதாத… தூத்துக்குடி பெர்னாண்டஸ்ஸு… முடிஞ்சா பார்த்துக்கோ…”

அந்த ஒரு வார்த்தையே எகிறியவனை அடக்க போதுமானதாக இருந்தது!

“அலெக்ஸ் அய்யாதான் இனிமே இங்க சரக்க பாக்க போறாங்க… முடிஞ்சா கை வெச்சு பாருலே…” என்று கூறி விட்டு கௌதமுடன் வந்திருந்தவர்கள் முன்னேற முதலில் பிரச்சனை செய்த அனைவரும் வேறு வழியில்லாமல் இறங்கி வர வேண்டியதாகி போனது!

தான் ஒன்றுமே கூறாமல்… அவனும் ஒன்றுமே பேசாமல்… அடிக்க வேண்டிய இடத்தில் அடித்து… சண்டை போட்டவர்களையே சமாதானம் பேச வைத்த கௌதமின் திறமையை பார்த்து அசந்து தான் போனாள் மேகா! சிறு பெண்ணாம்… ஏமாற்றி மிரட்டி பணிய வைத்து விடலாம் என்று ஆழம் தெரியாமல் காலை விட்டவர்களுக்கு இப்போது கௌதம் வந்தது கழுத்துக்கு கத்தியானது! தூத்துக்குடி அலெக்ஸ் பெர்னாண்டஸ் என்றால் யாரென்று தெரியாதவர்கள் இல்லை அவர்கள் அனைவரும்! தப்பி தவறி சென்னை ஹார்பரில் அவர்களை நுழைய விட்டால் தங்கள் பிழைப்பு அவ்வளவு தான் என்று உணர்ந்தவர்கள் மேகாவிடம் அதிரடியாக சரணடைந்தனர்!

“அம்மா… பார்த்து கொஞ்சம் சொல்லுங்கம்மா… எங்க பொழப்பே போய்டும்… நாங்க இனிமே எந்த பிரச்சனையும் பண்ணாம சரக்க இறக்கறோம்… ஐயா கிட்ட சொல்லுங்க…” என்று ஆளாளுக்கு கெஞ்சவும் கௌதமை பார்க்க.

“நான் பார்த்துக்கறேன்… நீ விடு…” என்று கண்களால் சைகை செய்தான்!

அவன் வெகு நேர்த்தியாக பிரச்சனையை கையாண்ட விதத்தை பார்த்தே அசந்து போனவள் அவனது ஒவ்வொரு செயலையும் பார்த்து அவளுக்கே தெரியாமல் ரசிக்க ஆரம்பித்து இருந்தாள்! கௌதம் திரும்பி மேகாவை பார்க்க அப்போதுதான் அவளையும் அறியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தது அவளுக்கு புரிந்தது… அதை கௌதமும் பார்த்து என்னவென்பது போல புருவத்தை உயர்த்த… அந்த பார்வையில் தனக்குள்ளேயே குழம்பி போனாள்!… அவர்களிடம் பேசி முடித்து விட்டு அனைவரையும் சுமூகமாக அனுப்பி விட்டு மேகாவை நோக்கி வந்தான் கௌதம்!

“நீ பெரிய தைரியசாலிதான் அதுக்காக ஹார்பர்க்கு எல்லாம் வந்து தான் உன் தைரியத்த நிரூபிக்கனும்ன்னு அவசியம் இல்ல மேகா…” சொன்னவன் முகம் கல்லாக இருந்தது!

“சாரி கௌதம்… இதெல்லாம் எனக்கு தெரியல… பிரச்சனை பெருசா போகும்னு நான் நினைக்கில…”

“நான் போன் பண்ணும போது கூட உனக்கு சொல்லணும்ன்னு தோணவே இல்ல…” குற்றம் சாட்ட

“இல்லப்பா… நானே சமாளிக்க கத்துக்கனும்ன்னு நினைச்சேன்…” கண்கள் நிலம் பார்த்தது!

“அதுல விவேகமும் வேணும் மேகா… என்னை தள்ளி வெச்சுட்டு நீ போய் பிரச்சனைல மாட்டி இருந்தா… இந்நேரம்…” என்றவுடன் பதறியவாறே நிமிர்ந்த மேகாவை பார்த்து நிறுத்தி அவள் முகம் நோக்கினான் கௌதம்!

“இனிமே இப்படி பண்ண மாட்டேன் கௌதம்…” உளமார சொன்னவளை பார்த்து புன்னகைத்த கௌதம் அவளது கன்னத்தில் தட்டி

“குட்… சரி போலாம் கிளம்பு…” என்று காரில் ஏற… அவன் தொட்ட இடம் குறுகுறுத்தது மேகாவுக்கு!

“இப்போ எங்க போறோம்?”

“கிப்ட் வாங்க?”

“என்ன வாங்கலாம்ப்பா?” என்று குழந்தையின் குதூகலத்தோடு கேட்டவளை திரும்பி ஆழமாக பார்த்து புன்னகைத்து

“உன்னோட சாய்ஸ் தான்டா… ஓகே வா?”

“ஓகே ஓகே…” என்று சந்தோஷமாக சொன்னவளை பார்த்து மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது!

மனதளவில் தன்னிடம் நெருங்கி தான் இருக்கிறாள்! ஆனால் ஒரு சில விஷயங்கள் அவளை தடுத்து வைத்திருப்பது என்னவோ உண்மை! அதிலிருந்து கட்டாயம் மேகா வெளியே வருவாள் என்ற நம்பிக்கை வந்து விட்டது கௌதமுக்கு! என்ன பரிசு வாங்க போறீங்க என்று கேட்காமல் என்ன வாங்கலாம் என்று கேட்டதே கௌதம் மனதில் பன்னீர் பூவை தூவி விட்டது! மனதில் இந்த சந்தோஷங்கள் படையெடுக்க காரை மெதுவாக சீழ்க்கை அடித்த படியே செலுத்தினான்!

“என்ன… சார் இன்னைக்கு ரொம்ப குஷி மூட் ல இருக்கார்…” சிரித்தபடியே மேகா கேட்க

“ம்ம்ம்… பின்ன இருக்காதா? மாமா பசங்க அத்தை பசங்க பெரியப்பா சித்தப்பா பசங்கன்னு அத்தனை பேரும் எல்லாம் இன்னிக்கு வர்றாங்கள்ள மேகா… எல்லாரும் இப்படி ஒண்ணா சேர்ந்து டைம் ஸ்பென்ட் பண்ணி நாளாகுது… அதான்…” என்று சொல்லி விட்டு சிரிக்க

“ஓ ஓ ஓ… மாமா பசங்க அத்தை பசங்கன்னா பொண்ணுங்களும் சேர்த்திதானே… அதான் குஷி…” என்று வாய் சொன்னாலும் கண்களில் ஒரு பொறாமை தென்படவே செய்தது! அது ஏனென்று மேகாவுககு தெரியவும் இல்லை! உணரவும் இல்லை!

“பின்ன… அதுங்க இல்லாமையா? எங்க குடும்பம் ரொம்ப பெருசுப்பா… எங்க பாட்டிக்கு மொத்தம் எட்டு பிள்ளைங்க பசங்க…”

“எம்மாடியோவ்…” வியந்தாள்! அதே நேரத்தில் செல்பேசி அழைக்க

“ஒரு நிமிஷம் டா…” என்று கூறி விட்டு செல்பேசியை காதுக்கு குடுத்தான்! அர்ஜுன் தான் அழைத்து இருந்தது!

“சொல்லுடா மச்சான்…”

“எங்கடா இருக்க நீ…”

“கொஞ்சம் மேகாவ கூட்டிட்டு வெளிய வந்திருக்கேன்… என்ன விஷயம் சொல்லு…”

“வாவ்… சூப்பர்… நல்லா ரெண்டு பேரும் நகர்வலம் போங்க…” என்று சொல்லிவிட்டு சிரிக்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… உன் கல்யாணத்துக்கு கிப்ட் வாங்க தான் போறோம்… ஓவரா கற்பனைல மிதக்காத மாப்ள…”

“ஓகே மாமா… நானும் வந்துடறேன்… எங்க போற?” என்று கேட்க, கௌதம் அந்த நகை கடையின் பெயரை கூறினான்!

“சரி போயிட்டு இரு… வந்துடறேன்…” என்று கூறி விட்டு செல்பேசியை வைத்தான்! கௌதம் செல்பேசியை வைத்தவன் விட்ட கதையை தொடர

“ஆங்… எதுல விட்டேன்… எட்டு பிள்ளைங்க இல்லையா? அதுல ஆறாவது தான் எங்க அப்பா ஏழாவது அஞ்சு அப்பா…”

“பரவால்ல உங்க அம்மா அப்பாவாவது ஒரு குழந்தையோட நிப்பாட்டுனாங்களே… அதுவே கிரேட் கௌதம்…” என்று சொல்லி சிரிக்க

“கவலையே படாத… அதுக்கு நான் ஈடு கட்டிடுவேன்…” என்று கூறியது மேகா காதில் சரியாக விழாமல்

“ம்ம்ம்… என்ன சொன்னீங்க?”

“இல்ல… ஒன்னும் இல்ல… சும்மா…” இதழோர புன்னகையோடு! அந்த புன்னகை மேகாவை மனதுக்குள் எங்கோ சென்று தாக்க, பார்வை சங்கமிக்க… சட்டென்று மீட்டு கொண்டாள்!

மேகாவை நினைத்து அவளுக்கே வெறுப்பு தோன்றியது! என்ன ஆயிற்று எனக்கு? ஏன் என் மனம் தடுமாறுகிறது? வேண்டாம்… இந்த மாதிரி தடுமாற்றங்கள் வேண்டாம்… மனமே அடங்கு! மேகா மனதுக்குள் தடுமாறி கொண்டு இருக்க… கார் நின்ற இடம் நகை கடை. பிரத்யோகமாக வைரங்களுக்காகவே பெயர் பெற்ற தனி கடை!

அவனுடன் சேர்ந்து போகும் போது தான் தோன்றியது, அவன் எவ்வாறு ஹார்பர் வந்தான் என்று? நகைகளை பார்த்து கொண்டிருந்தவனிடம்

“கௌதம்… எப்படி அங்க கரெக்டா வந்தீங்க… நான் கூட சொல்லலியே…” குழப்பமாக மேகா கேட்க

மேகாவை பார்த்து புன்னகைத்த கௌதம்,

“மேகா… உன்னோட ஒவ்வொரு செயல்பாடும், கடைல நடக்கற ஒவ்வொரு விஷயமும் என்னை தாண்டித்தான் போகுது… அப்படித்தான் இதுவும்… சதாசிவம் எனக்கு முன்னமே இன்பார்ம் பண்ணிட்டார்டா…” என்று சாதாரணமாக கூறவும் மேகா இன்னும் குழப்பமடைந்தாள்!

“ஆனா ஏன் கௌதம்…?”

“நீ கடைய பார்ன்னு சொன்னது உனக்கு தன்னம்பிக்கை வரனும்ன்னு தான் மேகா… உன்னை தனியே தத்தளிக்க விட கிடையாதும்மா…”

“அப்படீன்னா… நீங்களே போய் இருக்கலாம்ல… எதுக்கு நான்?” குழப்பம் அதிகரித்தது!

“அப்புறம் எப்படி நீ இந்த விஷயத்த கத்துகறது? அப்படியாச்சும் என்னை நீ உதவிக்கு கூப்பிடுவன்னு பார்த்தேன்டா…” முகம் சுண்டி போய் கூற

“சாரி கௌதம்… பயமா இருந்தது… உங்களை கூப்பிட நினைச்சேன்… ஆனா உங்களுக்கு வேலை இருக்கும்… எதுக்கு டிஸ்டர்ப் பண்ணனும்ன்னு விட்டுட்டேன்ப்பா…” என்று வருத்தமாக கூறினாள்!

“ம்ஹூம்… அது இல்ல காரணம்… எதுக்கு இவனையெல்லாம் கூப்பிட்டுகிட்டுன்னு விட்டுட்ட… அதான்…” என்று வேண்டுமென்றே சீண்ட

“நான் அந்த மாதிரி உங்களை நினைக்கவே மாட்டேன் கௌதம்… நீங்க… நீங்க…” நொடியில் கண்களில் நீர் தேங்கி மடை தாண்டி வெளியே வர எத்தனிக்க

“ஹேய்… சும்மா லூலூலாய்க்கு சொன்னேன்… ஹய்யயோ இதுக்கு போய் யாராச்சும் கண்கலங்குவாங்களா? லூசு… லூசு… ஹேய் இது வெளி இடம் டா… வேணும்னா காருக்கு போலாமா?”

“எதுக்கு?” ஙஞனநமண போட்டு கொண்டு கேட்க

“எப்போவும் நீ ஆசை தீர அழுவியே… அதுக்கு தான்… தயவு செய்து இங்க டாம ஓபன் பண்ணிடாத ராஜாத்தி… அதுக்கப்புறம் நீச்சல் தெரியாதவங்க தத்தளிக்க போறாங்க…” கௌதம் சிவாஜி ஸ்டைலில் வசனத்தை உச்சரிக்க

முதலில் புரியாமல் பார்த்தவள் அவன் தன்னை கிண்டல் செய்வதை சட்டென்று உணர்ந்து கௌதமை பார்த்து சிரித்து கொண்டே முறைத்தாள்!

“யு யு… கௌஸ்…”

“அடிப்பாவி… என் தங்கச்சி காத்து உன் மேலையும் அடிச்சுடுச்சா?”

“ம்ம்ம்… இப்படி ஓவரா கிண்டல் பண்ணா அப்படித்தான்…”

“ஓகே… நீ கௌஸ்னே கூப்பிடு… நீ கூப்டா செம கிக்கா இருக்கு” என்று கண்ணை சிமிட்ட, அந்த பார்வை கூறிய அர்த்தத்தை அவளால் உள்வாங்க முடியாமல் தத்தளித்தாள்!

“ஹலோ என்ன பேச்சு ஓவரா போகுது…”

“ஓகே… ஓகே… ஈஸி மேகி… ஈஸி…” என்று சொல்லி சாமாதானபடுத்தியவனிடம்

“பட்… இப்படி எதுக்கு கௌதம்?”

“என்னதுடா?”

“இல்ல… ஏன் இந்த அளவு கேர் எடுத்து எனக்காக யோசிக்கிறீங்கன்னு கேக்கறேன் கௌதம்… சீரியஸா பதில் சொல்லுங்க…”

“ஏன்னா… நீ என் குழந்தை… என் குழந்தைக்கு நடை சொல்லி தரேன்… அது முதல்ல கீழே விழுந்து அடி பட்டுடுச்சாம்… அதனால நடக்கவே மாட்டேன்னு சொன்ன குழந்தைய என்ன பண்றது… இப்படித்தானே நடை பழக்கனும்…”

“கௌதம்…”

“நீ மாறனும் டா…” கண்களை நேராக பார்த்து கூற நெகிழ்ந்து போனாள் மேகா!

“கௌதம்…” வார்த்தைகள் வெளியே வராமல் தந்தியடித்தன! கண்களில் நீர் கோர்க்க அவனை பார்த்தவள் பக்கத்தில் திரும்பி கண்களை துடைத்து கொண்டாள்!

“கௌதம்… ஐ அம் ப்லஸ்ட்… ரியல்லி… ஐ அம் ப்லஸ்ட்… உங்களை மாதிரி ஒரு நல்ல பிரெண்ட் கிடைக்க குடுத்து தான் வெச்சு இருக்கணும்… தேங்க்ஸ்ப்பா… ரொம்ப தேங்க்ஸ்…”

“தேங்க்ஸ் மேடம்! ஐம் ஆல்வேஸ் அட் யூர் சர்விஸ்” என்று இடை வரை குனித்து பணிவை காட்ட மேகா தன்னை மறந்து சிரித்தாள்! அந்த சிரிப்பை பார்த்து ரசித்தவன் அதில் தொலைந்து போனான்! திடீரென்று பின்னால் இருந்து ஒரு அடி விழ

“டேய் கொஞ்சம் கீழ இறங்கி வாடா… ட்ரீம்லையே இருக்காத… ஹாய் மேகா” வேறு யார் அந்த மகானுபாவர்… அர்ஜுன் தான்… மேகாவையும் பார்த்து புன்னகைத்து கொண்டே!

“மாப்ள சார்… என்ன்ன்ன்ன மாப்ள சார்… உங்கள விடவா…” கௌதம் வெட்கத்தோடு அவனை வார

“வழியாத… துடைச்சுக்கோ…”

“ஆமா நீ என்ன அஞ்சுகிட்ட பேசறதே இல்லையாம்… உன்னை பத்தி பேசினாலே கடுப்படிக்கறாளாம்… ம்ம்ம்… என்ன விஷயம்… ஏன்டா சண்டையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… சும்மா விளையாட்டுக்குதான்… இப்போவே எல்லாத்தையும் பேசிட்டா… அப்புறம் கல்யாணத்துக்கு பின்னாடி என்னடா பேசறது? த்ரில் போய்டும்டா… எல்லாரும் பேசினா நாங்களும் செல்லும் கையுமா இருக்கணுமா? மாமா… மாத்தி யோசி!” என்று நீளமான லெக்சர் குடுத்த அர்ஜுனை பார்த்து கௌதம் வணங்கி,

“ஓகே வாத்தியாரே… ஓகே…” என்று சொல்லி சிரித்துவிட்டு

“சரி… சரி… சும்மா அரட்டை அடிக்காத வேலைய பாரு!”

“எல்லாம் நேரம்டா…”

அரட்டையை தொடர்ந்து கொண்டே கௌதம் அஞ்சலிக்கும் அர்ஜுனுக்கும் நகை செட் வாங்க… அர்ஜுன் அஞ்சலிக்கு தனியாக வைர மோதிரம் வாங்கினான்! மூவர் மனதும் நிறைந்து சந்தோஷம் வழிந்ததென்னவோ உண்மை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினெட்டு

“ஹேய்... மாலை ரெடியா?”“மெஹந்தி பங்ஷன் ஆராம்பிச்சாச்சு... இன்னும் ரெடி ஆகலியா?”“மேக்கப் ரொம்ப ஆய்லியா இருக்குப்பா... கொஞ்சம் குறைச்சு விடு...”நிற்க நேரமில்லாமல் தோழிக்காக சுழன்று சுழன்று சுற்றிய மேகாவை பார்த்தவர்கள் மலைத்தனர்!“எவ்ளோ அழகு இந்த பொண்ணு... என்ன சுறுசுறுப்பு...” தங்களுக்குள் பேசி கொண்டனர்.அதே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்