arrow_back
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டம் அத்தியாயம் – 02

அத்தியாயம் – 02

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

வர்மா ஹாஸ்பிடலில் “கீர்த்தி வேலை முடிஞ்சதும் கால் பண்ணு நான் வந்து கூட்டிட்டு போறேன்” என வீரா கூற “ஏன் மாமா அஸ்வந்த் இங்க தானே இருக்கான் அவன் கூட வாரேன்”  என அவள் கூறினாள் “அவன் கூட உன்னை சேராதன்னு சொல்லி இருக்கேன்ல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்தா கண்டிப்பா ஏதும் எழரைய கூட்டாம வர மாட்டீங்க இந்த லட்சணத்துல மேடம் அவன் கூட வாரீங்களா சீ போ” என அவன் கூற  போ மாமா என் அவள் கூறி முகத்தை திருப்பிக் கொள்ள அங்கு அஷ்வந்த் அவனுடைய காரில் வந்து கொண்டிருந்தான்.

 

அங்கு வந்தவன் ரெண்டு பேரும் என்ன சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க  கீர்த்தி ஆல்ரெடி  லேட் அந்த அரை லூசு ஆதிக்கிட்ட செருப்படி வேற வாங்கணும் வா போலாம்” என “ஆமா மாமா பாய்” எனக் கூறி விட்டு ஹாஸ்பிடலுக்கு சென்றனர் கீர்த்தியும் அஸ்வந்தும். அவர்களைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அங்கிருந்து சென்றான் வீரராகவன்.

 

உள்ளே வந்த இருவரும் சீஃப் டாக்டர் அறைக்கு வந்திருக்க அவர்கள் இருவரையும் பார்த்த ஆதி தன் கையில் கட்டி இருந்த கடிகாரத்தையும் பார்த்தான். இருவரையும் பார்த்து “இதுதான் ஹாஸ்பிடலுக்கு வார டைம்மா கொஞ்சமாவது டைமிங் சென்ஸ் இருக்கா வேலைக்கு சேர்ந்து இன்னும் முழுசா ஆறு மாசம் கூட முடியல அதுல பாதி நாள் லேட்டா தான் வாரீங்க” என்றவன் அஷ்வந்திடம் திரும்பி “நீ எப்ப வர எப்ப போறன்னே தெரிய மாட்டேங்குது இதுதான் உங்க ரெண்டு பேருக்கும் லாஸ்ட் வார்னிங்பட் நான் உங்களுக்கு இது வரைக்கும் இது தான் லாஸ்ட்டு சான்ஸ்ன்னு  இருபது தடவைக்கு மேல சொல்லிட்டேன் ஆனா இதுதான் லாஸ்ட் அடுத்த முறை இப்படி லேட்டா வந்தீங்கன்னா கண்டிப்பா பனிஷ்மென்ட் தான்” கூறி  மேலும் கொஞ்ச நேரம் கழுவி ஊற்றி விட்டு அனுப்பி விட்டிருந்தான் அவர்களின் சிஃப் டாக்டர் ஆதி.

 

பாடசாலையில் சித்தார்த் அவனுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க பின்னால் இருந்து அவன் தலையில் தட்டிய மித்ரா “டேய் மங்கி என்னடா பண்ற என கேட்க அது ஒன்னும் இல்ல கேப்ஸிகம் நம்ம கிளாஸ்ல இருக்கா இல்ல சாரா  அவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னு ஐடியா கேட்கிறேன்” என கூற “அத ஏன்டா இந்த லூசுக் கூட்டத்துகிட்ட கேக்குற  என்கிட்ட கேளு” என மித்ரா சொல்ல “யாரு நீ உனக்கு லவ்வுக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது நீ  எனக்கு ஐடியா கொடுக்க போறீயா போடி லூசு” என்றான் சித்தார்த்

“டேய் அவ கெடக்குறா நீ உன் லவ்வ அவகிட்ட சொல்லிட்ட இல்ல ஆமாண்டா சொல்லிட்டே அப்ப நம்ம செட்டில இருந்து யாராவது அவள் என்ன நினைக்கிறான்னு  தெரிஞ்சுக்கிட்டு உன்ன பத்தி கொஞ்சம் பில்டப் பண்ணனும்”

” ஆமாம் மச்சி இது நல்ல ஐடியா தான்” என்றான் இன்னொருவன்

” அப்படியா சொல்ற” என சித்தார்த் கேட்க “ஆமா அப்படித்தான்” என  கூறினான் அந்த ஐடியா கொடுத்தவன் அவன் பெயர் ராகேஷ்.

அது ஓகே ராக்கி யாரு போய் பேசுறது என கேட்டான் ரவி 

“டேய் ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு  தான் தெரியுமா அதனால நம்ம கிளாஸ்ல இருக்க யாராவது ஒரு பொண்ணுகிட்ட தான் அவகிட்ட போய் பேச சொல்லணும்” என்றான் அசோக்

“ஆனா அது நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணா இருக்கனும்” என்றான் ரவி. “ஏய் நம்ம செட்ல ஏதுடா பொண்ணு” என்றான் குணா

“ஆமாண்டா நம்ம செட்டில ஏது பொண்ணு நான் வேணா என் ஆளு சுவாதிகிட்ட சொல்லி பேச சொல்லவா” என்றான் விக்கி.

“டேய் அவ ஒரு வத்திக்குச்சி அப்புறம் பத்த வச்சுருவா சும்மா இரு”

“வேற யாரு மச்சான் நமக்கு தெரிஞ்ச பொண்ணு” என சித்தார்த் கேட்க “ஏய் நம்ம மித்ரா பொண்ணு தான அவ பொண்ணுன்றதையே மறந்துட்டோம் பாரேன்” என ராகேஷ் சொல்ல

குடித்துக் கொண்டிருந்த ஆரஞ்சு ஜூஸை பக்கத்திலிருந்த விக்கியின் முகத்தில் துப்பினாள்  மித்ரா. “அடியே ராகு காலத்துல பிறந்த கோளாறு எல்லாரும் முன்னாடி இமேஜ்ஜ  டேமேஜ் பண்றதே வேலையா வெச்சுகிட்டு இருக்க நீ” என விக்கி அவளை அடிக்க துரத்த அவள் ஓட என அவர்கள் இருவரும் விளையாட அனைவரும் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

கல்லூரியில் மோஹிதா பிரதிக்ஷா இருவரும் அவர்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிருக்க  “ஏய் ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீட்டுல தானே இருக்கீங்க அப்புறம் ஏன்டி தனித்தனியாக வாரிங்க” என அவர்களுடைய நண்பி பிரியா கேட்க “ஏன்னா எங்க ரெண்டு பேரு மேல அவ்வளவு நம்பிக்கை எங்க வீட்டுல எங்க ரெண்டு பேர மட்டுமில்ல எங்க செட்ல யாரையுமே தனியா அனுப்ப மாட்டாங்க நாங்க ஏதாவது சேட்டை பண்ணுவோம்னு” என மோஹிதா கூற

“ஆமா அஸ்வந்த் மித்ரா அவங்க ரெண்டு பேர மட்டும் தனியா அனுப்புவாங்க எல்லாம் நேரம்” என்றாள் பிரதிக்ஷா 

“சரி சரி ரொம்ப பீல் பண்ற மாதிரி நடிக்காத” என்றாள் மோஹிதா 

“அவ்ளோ ஒப்பனாவா தெரியுது” என்றாள் பிரதிக்ஷா அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது கிளாஸிற்குள் ப்ரொபசர் வந்துவிட அனைவரும் பாடத்தில் கவனமானார்கள்

கீர்த்தனாவே ஹாஸ்பிட்டலில் இறக்கி விட்ட பின்  ரைஸ்மிலுக்கு சென்று தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தான வீரராகவன். “அண்ணா நீங்க இங்கதான் இருக்கீங்களா” என கேட்டபடி அங்கே வந்தான் விஜய். அவனைப் பார்த்த வீரராகவன் “வா விஜய் போன வேலை என்ன ஆச்சு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என கேட்க  பிரச்சனை எல்லாம் இல்லண்ணா எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

சரி என்றான் வீரராகவன். “அண்ணா நான் லோடு எல்லாம் ஏத்திட்டேன் நீ வந்து சரியான்னு பாரு நீ பார்த்தா போதாதா நான் வேற வந்து பாக்கணுமா எடுத்துட்டு போக சொல்லு” என கூற சரி என்று அவனும் சென்று விட்டான்.

வர்மா ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் அறையில் இருந்து வெளியே வந்த அஷ்வந்த்தும் கீர்த்தியும் தங்களது அறைக்கு சென்று விட அங்கு ஏற்கனவே அவர்களின் நண்பர்கள் மூவர் அமர்ந்து இருந்தனர் “டேய் இன்னைக்கும் ரெண்டு பேரும் லேட்டா” என கேட்டாள் காவ்யா “ஆமா  காலையிலேயே நல்ல உபதேசம்” என்றான் அஷ்வந்த். அவனைப் பார்த்து சிரித்த கௌத்தம் “ஆதிகிட்ட திட்டு வாங்காம உங்க ரெண்டு பேருக்கும் நாளே முடியாது இல்ல” என்றான்.

அவனைப் பார்த்து முறைத்த கீர்த்தி “ஏன்டா நீங்க அந்த சிடுமூஞ்சி கிட்ட திட்டு வாங்குனது இல்லையா” என கேட்க “அது எப்படி காலையிலேயே நான் வாங்கிட்டேன்” என்றான்.

“கௌதம் லிப்டிலேயே நான் வாங்கிட்டேன்” என்றான் நிவின் 

“நான் பார்க்கிங்லயே வாங்கிட்டேன்” என்றாள் காவ்யா . திட்டு வாங்கியதை மெடல் வாங்கியது போல பெருமையாக கூறிக் கொண்டிருந்தனர் அவர்களின் நண்பர்கள்

“நமக்கே இப்படி இருக்கே அந்த சிடுமூஞ்சி எல்லாம் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த பொண்ணு நிலமைய கொஞ்சம் நினைச்சு பாருங்க” என அந்த பெண்ணிற்காக பரிதாபப்பட்டாள் கீர்த்தி. “ஆனா சும்மா சொல்ல கூடாது ஆதி சார் செம ஆன்சம்” என்றாள் காவ்யா அவளைப் பார்த்து முறைத்தனர் மற்ற நால்வரும் 

“உன் கண்ணுல கொள்ளிகட்டய வைக்க உனக்கு ஒரு ஆளு கிடைக்கலையா சைட் அடிக்க நாள பின்ன அவர லவ் பண்றேன்னு சொல்லி எங்க முன்னாடி வந்து நிற்காதே” என கிழவி பாணியில் கூறினான் நிவின். அவன் கூறிய விதத்தை பார்த்து அனைவரும் சிரித்து விட அங்கு வந்த நர்ஸ் அவர்களிடம் நோயாளிகள் வந்திருப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.

 

பாடசாலையில் பல போராட்டங்களின் பின் சாரவிடம் பேச ஒத்துக்கொண்டாள் மித்ரா அதற்கு லஞ்சமாக பெரிய டைரி மில்க் சாக்லேட் பார் இரண்டையும் பெற்றுக் கொண்டாள்

மித்ரா சென்று சாராவிடம் “ஏய் சாரா என்னடி பண்ற” என்று கேட்க “ஒன்னும் இல்லடி சும்மாதான் வா வந்து உட்காரு” என அவளை அருகில் அமர வைத்தவள். “மித்து உன் கிட்ட நான் ஒன்னு சொல்லணும்” என்று சொல்லி வெட்கப்பட்டாள் 

“என்ன கருமத்தை வேணா பண்ணு வெட்கம் மட்டும் படாத” என மித்து கலாய்க்க “மித்து” என சினுங்கினாள் சாரா. சரி சரி சொல்லு என மித்ரா சொல்ல சாரா  எனக்கு எனக்கு என்னடி எனக்கு எனக்கு சீக்கிரம் சொல்லு சாக்லேட் உருக போகுது என கூற என்ன சாக்லேட் என கேட்டாள் சாரா. அது ஒன்னும் இல்ல சாரா. அண்ணா வாங்கி கொடுத்தான் எனக் கூறி மழுப்பி விட்டு அவளிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினாள் ஏய் இப்ப இந்த சாக்லேட் தான் ரொம்ப முக்கியமா என கேட்டு முறைக்க சரி சொல்லு என்றாள் மித்ரா உன் கிட்ட ஒன்னு சொல்லணும் என அவள் மீண்டும் இழுக்க சீக்கிரம் சொல்லி தொலைடி என மித்ரா சொல்ல அது எனக்கு எனக்கு உங்க அண்ணாவை ரொம்ப புடிச்சிருக்கு அவர் நம்பர் தாரியா என கேட்க மித்ரா சிரித்தே விட்டாள்

 

மோஹிதாவும் பிரதிக்ஷாவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்த வகுப்பிற்குள் வந்தார் அந்த கல்லூரியின் ப்ரின்சிபல் அவர் வந்தவுடன் அனைவரும் எழுந்து அருக்கு மரியாதை செலுத்த  அதனைப் பெற்றுக் கொண்டவர் “குட் மார்னிங் ஸ்டுடென்ட்ஸ் நம்ம காலேஜ்ல பிரசிடெண்ட் எலக்சன் நடக்கப்போகுது யாரு பிரசிடெண்ட்டுக்கு நிற்க போறீங்கன்னு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்க” என கூறி சென்று விட்டார்

அவர் சென்ற பின் வகுப்பில் சலசலப்பு ஏற்பட ஆரம்பித்தது.  அந்த நேரம் மணி அடித்து விட கிளாஸில் இருந்து ப்ரொபசர்  வெளியேறினார். அவர் வெளியேறியவுடன் மீண்டும் ஒரு சலசலப்பு  கடைசியில் அனைவரும் சேர்ந்து  பிரதிக்ஷாவையும் சந்தோஷ்  என்பவனையும் ப்ரெசிடென்ட் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தனர்.

 

வர்மா ஹாஸ்பிடலில் நோயாளிகளை பரிசோதித்து விட்டு மீண்டும் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர் அஷ்வந்த்தும் அவனது நண்பர்களும். அச்சமயம் அங்கு பதட்டமாக வந்த தாதி ஒருவர் “ஹாஸ்பிடல்ல இருக்க ஸ்டாஃப் staff எல்லாரையும் மீட்டிங் ரூம்ல அசெம்பிள் ஆக சொல்லி ஆதி சார் சொன்னாரு” என கூற “ஏன்” என கீர்த்தனா கேட்டாள். 

“தெரியல ஆனா நம்ம ஹாஸ்பிடலோட சேர்மன் வாராரு” எனக்கூறி அவள் செல்ல அனைவரும் பதட்டமாக மீட்டிங் ரூம் நோக்கி சென்றனர்.

 

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்