மளிகை கடை வேலை
ஒரு வாரம் வீட்டிலே இருந்தான்… அங்கிட்டு இங்கிட்டு னு சுத்திகிட்டு இருந்தான்… ஒரு நாள் அவனுடைய பெரியப்பா மகன் ரோட்டில் பாத்து ஒரு பலசரக்கு கடைல வேலைக்கு எழுதி போட்ருக்கு டா, நீ வேணா போய் கேட்டு பாரு என்றார்… நானும் போய் கேட்டேன்… திங்கள் கிழமை யில் இருந்து வர சொன்னார்கள்…
திங்கள் கிழமை வேலைக்கு சென்றேன்… 9.15 க்கு ஓனர் வந்து கடையை திறப்பார். மொத்தம் கடையில் 6 பேர்… அங்கு அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்… பில் போடணும், சரக்கு எடுத்து குடுக்கணும், பேக் பண்ணனும்… முதலில் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் பழகிருச்சு….
நாள் சம்பளம் தான்… வாரவாரம் தருவாங்க…. இப்படியே போய்க்கொண்டு இருந்தது….காலங்கள் கடந்தன… அங்கு நான் 8 வருடம் வேலை பார்த்தேன்….
திடிரென்று எனக்கு ஒன்று தோன்றியது…. வேற வேலைக்கு போலான்னு…ஒனரும் போனஸ் ஐ நிப்பாட்டிட்டாரு… உடனே வேற வேலைய தேட ஆரம்பிச்சேன்… பிரண்ட்ஸ் எல்லாம் பைனான்ஸ் கம்பெனி க்கு கூப்பிட்டாங்க, இல்லடா எனக்கு செட் ஆகாது என்றேன்….
தொடரும்…..






Nice