புதிய வேலை தேடியது
எப்போதும் போல் அன்று வேலைக்கு சென்றான். அங்கு அவனுக்கு பெரியசாமி என்ற ஒரு அண்ணன் நண்பனாக இருந்தார். அவரிடம் அனைத்தையும் சொல்லுவான். அவரிடம் மட்டும் அண்ணா, நான் நாளைக்கு கோவில்பட்டி க்கு இன்டெர்வியூ போறேன். ஓனர் அண்ணா கிட்ட சொல்லிருங்க.. என்றான்.
அடுத்த நாள் காலையில் வேகமாக எழுந்து குளித்து கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் க்கு சென்றான். கோவில்பட்டி க்கு ட்ரெயின் ஏறினான். அங்கு அவன் நண்பன் பழனி வந்து பிக்கப் பண்ணி சென்றான். ஆபீஸ் குளே சென்றதும் மேனேஜர் ஐ பார்த்தான். பயோடேட்டா, செர்டிபிகேட் பார்த்தார்…
கோவில்பட்டி யில் வீடு உள்ளதா என்றார்.. இல்லை என்றான். ரூம் எடுத்து தங்கி வேலை பார், என்றார். இவனுக்கு பிடிக்கவில்லை.. ஆபீஸ் ஐ விட்டு வெளியே வந்து அவன் நண்பனிடம், எனக்கு இது செட் ஆகாது டா, என்றான். ஜங்ஷன் இல் கொண்டு போய் ட்ரெயின் ஏத்தி விட்டான்.
விருதுநகர் வந்ததும் தன்னுடைய பைக் ஐ எடுத்து வீட்டுக்கு வந்தான். வரும் வழியில் பெரியசாமி அண்ணனுக்கு போன் பேசிகிட்டு வந்தான். இந்த வேலை செட் ஆகாது அண்ணே… என்றான். வேற வேலை ட்ரை பண்றேன்…
ஒரு வாரம் ஆகியது…. வேலை ஏதும் கிடைக்கவில்லை. அவனுக்கு சாப்பிட கூட தோணவில்லை.. பின்பு அவனுடைய மாமனார் வீட்டுக்கு சென்று அங்கு தங்கி வேலை தேடினான்.. இங்கும் ஒரு வாரம் அலைந்தான். வேலை ஒன்றும் அமையவில்லை.
கடைசியாக அவனுடைய மச்சான் கூட சென்று ஒரு சூப்பர் மார்க்கெட் இல் வேலைக்கு கேட்டான்…அவர்களும் அவனை நாளைக்கு வேலைக்கு வா, என்றனர்.
தொடரும்….






Nice