கனவு மெய்யாகுமா?
ஐயா A. P. J. அப்துல்கலாம் சொன்னது போல இளைஞர்களே கனவு காணுங்கள்… அதுவும் நல்ல கனவாக காணுங்கள்… அதுவும் நிறைவேறும் கனவாக காணுங்கள்.. அந்த கனவு நிஜமாக ஆவதற்கு உண்டான வழிமுறைகளையும் செய்ய வேண்டும்…
எனக்கு தமிழ் பாடம் மிகவும் பிடிக்கும். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தமிழ் ஆசிரியை சாந்தி டீச்சர் நன்றாக சொல்லி தருவார். நான் எப்படியும் தமிழில் 100/100 மதிப்பெண் எடுத்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.. ஆனால், 4 மதிப்பெண் போய் 96 எடுத்தேன்.
10 ம் வகுப்பு படிக்கும் போதே என்னுடைய தமிழ் டீச்சர் என்னை தான் பேப்பர் திருத்த சொல்லுவார்… என்னுடைய பேப்பர் ஐ மட்டும் அவர்கள் திருத்திக் கொடுப்பார்… மற்ற அனைத்தையும் நான் தான் திருத்துவேன்..
அதில் இருந்தே எனக்கு டீச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது… அதற்கு ஏற்றார் போல் நானும் நன்றாக படித்தேன்… பி. எட் படிக்க முடியாமல் போய் விட்டது… இன்று வரை பீல் பன்னிட்டு தான் இருக்கிறேன்…
என்னுடைய அக்காவும் ஒரு தமிழ் டீச்சர் தான்… தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறாள்… எக்ஸாம் முடிஞ்சு ஊருக்கு வரும் போது பேப்பர் கட்டை கொண்டு வருவாளா… தம்பி, இதுல தமிழ் பேப்பர் இருக்குடா… எல்லாத்தையும் திருத்திரு டா என்று சொல்லுவாள்….
எனக்கு பேப்பர் திருத்த மிகவும் பிடிக்கும்… தமிழில் பிழையை ஈஸியா கண்டு பிடித்து விடுவேன்… அதனால் வேகமாக திருத்தி விடுவேன்….
பி. எட் படிக்க முடியாதது இன்னும் வருத்தமாகவே உள்ளது….
தொடரும்….






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!