கொண்டவன் கொடுத்தானடி – 5
கொண்டவன் கொடுத்தானடி – 5
மதிய வேளை கத்திரி வெயில் மண்டையை பிளக்க, மருதுவும், வள்ளியும் வயலில் வேலை செய்ய முடியாமல் வீட்டுக்கு வந்து விட்டனர்.வீட்டுக்குள் நுழையும் போதே சுந்தரியும், நாச்சியும் கத்தி கொண்டிருந்தனர். அவர்கள் குரல் வாசல் வரை கேட்க பெற்றவர்கள் இருவரும் ஒருவரை, ஒருவர் பார்த்து கொண்டு.
“என்னத்துக்குப் புள்ள இம்புட்டுச் சத்தம்”
“தெரியலையே மாமா, சுந்தரி வம்பு பண்ணிருப்பா, இரண்டையும் வூட்டுல தனியா வுட்டுட்டு போகும் போதே எண்ணி வச்சேன்” இருவரும் பேசி கொண்டே உள்ளே நுழைய, இரு பெண்களும் அடித்துக் கொள்ளாத குறையாகத் தான் நின்றனர்.
“என்னங்கடி இது மயித்தப் புடிச்சுகிட்டு கிடகீக? இரண்டு பேரு சத்தமும் வாசலை தாண்டி கேட்குது”
“ஆத்தா! மாமா கூடச் சண்டை கட்டி வச்சுப்புட்டு வந்திருக்கு.இன்னைக்குச் சந்தைக்குப் போகும் போது சின்னசாமி மாமா சொல்லுச்சு” அதாவது சுந்தரியின் மாமனார் எதார்த்தமாக சந்தையில் நாச்சியை பார்த்து சொல்லி விட்டார் போலும்.
“இந்தா புள்ள? புள்ளையோட சாமி கும்புடதேன் வந்தேன்னு சொன்ன” வள்ளி மகளைக் கடிந்து கொள்ள.மருது எதுவும் பேசாமல் தரையில் அமர்ந்து விட்டார், எல்லை மீறிய பேச்சுக்கள் வந்தால் மட்டுமே உள்ளே நுழைவார்இது போல் பிரச்சனைகள் வந்தால் சிறிய மகளிடமும், மனைவியிடமும் விட்டிட்டு அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்ப்பார்.
“ஏன்? நான் இங்கன வந்திருந்தா உமக்கு ஏன் குத்தி வைக்குது? நீயுந்தேன் இங்கன வந்திருக்க”
“நான் இரண்டு நாள் சீராடி, எம் பொழைப்பை பார்க்க போயிடுவேன். உம்ம மாதிரி சண்டை கட்டிக்கிட்டு இங்கன குந்தி வைக்க வரல” இந்தப் பேச்சு நாச்சி பேசும் போது முனியசாமியின் மொத்த குடும்பம் வாசலில் நின்றது.
ஆம் அன்று நாச்சி வாய் வார்த்தையாக எதையுமே சொல்ல வில்லை.மறு நாளே கந்தசாமியின் முகம் பார்க்காமல் அவனிடம் தகவலை சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பார்க்காமல் இதோ பிறந்தகம் வந்து விட்டாள்.பிறந்தகம் வந்து இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் மூன்றாவது நாள் முனியசாமி அனைவரையும் அழைத்துக் கொண்டு இதோ கொட்டம்பட்டி வந்து விட்டார், அவர்கள் வந்த நேரம் இங்கு இப்படி.
“சுந்தரி அவ கிட்ட என்னத்துக்குப் பாயிர உமக்கும், மருமவனுக்கும் என்னபுள்ள சண்டை அதைச் சொல்லு?”
“அவீங்க ஆயி பேச்சை கேட்டு அடிக்க வராய்ங்க ஆத்தா”
“அடிக்க வர அளவுக்கு நீ என்ன வாய் பேசி வச்ச” தன்னைச் சரியாக நாடி பிடித்த நாச்சியின் மீது சுந்தரிக்கு வெறி வர.
“இந்தாரு நான் உமக்குப் பதில் பேசி வைக்க முடியாது நீ என்ன பெரிய இவளா? பண்ணையார் வூட்டுல வாக்க படவும் பவுசு வந்துருச்சோ” என்றதும் வள்ளிக்குக் கோபம் வர.
“ஆரை பார்த்து என்னடி கேட்குற? உங்களை எல்லாம் கரையேத்தி வைக்க நான் அந்தப் புள்ள தலையிலதேன் அம்புட்டையும் வச்சேன், என் குலசாமி அது.அது குணத்துக்கு நல்ல இடமா வாக்கப்பட்டு வாழுது, உமக்கு என்ன அதுல வஞ்சம்னு கேக்கேன்.
உம்ம கண்ணாலத்துக்கு வேண்டி அந்தப் புள்ள செய்யும் போது தெரியலையோ அது ஆருன்னு.அப்ப கேட்க வேண்டியது தானே! நீ ஆருடி எமக்குச் செய்யன்னு?” வள்ளி அத்தனை கோபமாகக் கத்தி வைத்தார்.
“என்ன செஞ்சதை சொல்லி காட்டி வைக்கிறியா? நீ தானே பெத்த? உம்ம கடமையைத்தேன் நீ செஞ்ச”
“இந்தாரு சுந்தரி ஆத்தாகிட்ட சண்டைக்கட்டி வைக்காத உம்மேல தப்பு இல்லன்னா அங்கனையே இருந்து பேசி, வம்பு பண்ணிவை, அதை வுட்டுப்புட்டு ஏன் கோச்சுக்கிட்டு வார? வேம்பு மாமா அம்புட்டு லேசுல கோபப்படாது அது குணம் தெரியாத எங்களுக்கு?”
“என் புருஷனை பத்தி உம்ம விட எமக்குத்தேன் தெரியும்”
“அது என்னவோ உண்மைத்தேன், ஆனா உம்மைப் பத்தி உம்மப் புருஷனை விட எமக்குத்தேன் தெரியும்” வெளியில் நின்று இவர்கள் வழக்காடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த முனியசாமிக்கு மருமகளின் பேச்சில் இதழ் ஓரம் சிறு புன்னகை எட்டி பார்த்தது.
அதுவரை கத்திய சுந்தரி தணிந்து, “என் நாத்திகாரிக்கு எம் புருஷன் புடவை வாங்கிக் கொடுத்திருக்கு எமக்குத் தெரியாம, அதுவும் போக அந்தப் புள்ளைக்குக் கொலுசு வாங்கிக் கொடுத்திருக்கு” சொல்லும் போதே கண்ணில் நீர் வழிந்தது சுந்தரிக்கு.
அவளது கண்ணில் நீரை கண்டதும்,”இந்தாரு அவீங்க வூட்டு பொண்ணுக்கு சீலை வாங்கித் தரதுல உமக்கு என்ன புள்ள குறைஞ்சு போச்சு”
“உமக்குச் சங்கதி தெரியாது நாச்சி. அந்தப் புள்ளையத்தேன் இவுகளுக்குக் கட்ட பார்த்தாய்ங்க போல அது ரொம்பச் சிறுசா கிடக்குன்னு பிரத்தில எம்ம கட்டுனது. கண்ணாலம் ஆன நாள் தொடங்கி என் நாத்திகாரி வூட்டுக்கு வந்தாலே இந்தப் பேச்சுத்தேன்.
என் புருஷன் அக்கா மகன்னு அசந்து பேசி வச்சா கூட எமக்கு இராவு உறக்கம் புடிக்க மாட்டேங்குது புள்ள.இந்த அழகுல எமக்குத் தெரியாம செஞ்சா நான் எப்படி இதை எண்ணி வைக்க?”
“அது சரி!” அதுவரை என்னவோ ஏதோவென்று பயந்து கொண்டிருந்தவர்களுக்குச் சுந்தரியின் பேச்சில் சிறு ஆறுதல் பிறக்க.
“இதெல்லாம் ஒரு சண்டையா புள்ள? கோட்டி! இதுக்கு வேண்டியே நீ ஆத்தா வூட்டுக்கு வந்தா, இன்னும் எம்புட்டு இருக்கு அதெல்லாம் எப்படிச் சமாளிப்ப? உம்ம கண்டு தானே அதுங்க தைரியமா வளரும்?
மாமாவ வர சொல்லி தகவல் சொல்லுவுடு வரட்டும், அவுக என்ன சொல்றாகன்னு பார்ப்போம் அதுவரை பொறுமையெடு.என்ன ஆனாலும் அங்கனையே இருந்து சாதி சுந்தரி.இங்கன வந்து ஆயி, அப்பனை நோக வைக்காத.
நம்பக் கூடவே கண்ணாலம் பிள்ளை பேறு, அதுக்குக் காது குத்து, சீர்ன்னு சுத்தி வந்தா.இவனை எப்போ பார்க்குறது? சின்னவனைக் கரையேத்தி வைக்கிற வர அவீங்களுக்கு உடம்புல வலு வேணாமா.
இனி என்ன நடந்தாலும் சமாளிக்கப் பழகு, ரொம்பத் தலைக்கு மீறி வந்தா நான் இருக்கேன் உமக்கு” அதுவரை நாச்சியிடம் முறைத்துக் கொண்டு இருந்தவள்.நாச்சியின் பேச்சில் சுந்தரியின் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
பட்டென தணிந்து போன சுந்தரி, “மன்னிச்சுக்கோ புள்ள” என்றவளை நெருங்கி அவளது கண்ணைத் தொடைத்து விட்டு.
“படப்படன்னு கொட்டி புடு அப்புறம் மன்னிப்பு கேளு” தமக்கையைக் கடிந்து கொண்டவள். அவளது கை பிடித்துத் தன்னுடன் அமர வைத்து கொண்டாள். அதுவரை வாசலில் சத்தம் காட்டாமல் நின்ற மூவரும் உள்ளே நுழைந்தனர்.
முதலில் அவர்களை கண்டது மருது தான் வாரி சுருட்டி எழுந்தவர்,”வாக! வாக!” என்க அப்போது தான் எல்லாரும் பார்த்தனர்.
வள்ளி,”வாக அண்ணே! வாக மதனி! வாக மருமவன்” என்றவர் பரபரப்பாக எழுந்து கொள்ள.அவளுடன் சுந்தரியும் எழுந்து கொண்டு வரவேற்றாள்.
நாச்சி, “வாக மாமா! வாக அயித்த! என்றவள் கணவனை மெத்தனம் பார்வை பார்த்து வைக்க” பல்லை கடித்தவன் கண்ணுல ஏத்ததை பார்த்தியா? சரியான ராங்கி சிறுக்கி மனதுக்குள் முனகி கொண்டான்.
“மருமவ நேத்தி வச்சிருக்கேன் வாகன்னு சொல்லுச்சு அய்யாவும் நான் பொஞ்சதிய பார்க்க போறேன்னு கிளம்பவும், நாங்களும் கிளம்பி வந்து புட்டோம் என்றவர் பார்வை நாச்சியின் மீதே இருந்தது.
“அதுக்கு என்ன விளக்கம் சொல்லி வைக்கிறீக நம்ப வூடு அண்ணே!” என்ற வள்ளி அவர்களுக்கு குடிக்க எடுக்க போக.அதற்குள் நாச்சி அனைவருக்கும் மோர் கலக்கி எடுத்து கொண்டு வந்தாள்.
கந்தசாமி வழமை போல் அவள் இடுப்பில் தொத்தி கொண்டிருந்தவனை கொத்தாக பறிக்க அவனோ தனது தொண்டையைத் திறந்து விட்டான், “மூச்சு! மூச்சு! கத்தி வச்ச கடிச்சுப்புடுவேன் படவா” என்றவன் அவனை இறுக்கி அனைத்து வாசம் பிடித்தவன்.என்னத்தடா வாய்க்குள் வச்சிருக்கப் பன்னு கன்னம் என்று கன்னத்தை கவ்வி விட.
வெகு ஆச்சிரியமாகப் பார்த்து கொண்டிருந்தனர் மருது குடும்பத்தினர்.முத்து காளை வேறு விடாமல் கத்தி கொண்டே இருந்தான். “ப்ச்! தொடங்கியாச்சா எப்ப பாரு அவனை வம்பு பண்ணி வைக்கிறது தாங்க மாமா” நாச்சி அவனிடம் தனது தம்பியை வாங்க போக.
“வுடு புள்ள அவுக ஆசையா கொஞ்சுறாக” என்ற தாய்யை முறைத்து பார்த்தாள் நாச்சி, சிறியவன் காட்டுத் தனமாகக் கத்தி வைக்கச் சுந்தரி கடிந்து கொண்டாள்.
“இந்தாரு முத்து! மாமா ஆசையா கொஞ்சுறாக நீ என்னத்துக்கு இம்புட்டு கூச்சல் போடுற” அதற்கு மேல் பொறுக்க முடியாத நாச்சி கணவனது கையைக் கிள்ளி விட்டு தம்பியை அவனிடம் இருந்து பிடிங்கி கொள்ள, அவளது இந்தச் செயலில் அதிர்ந்து நின்றது என்னவோ அவளது பிறந்தகம் தான்.
நாச்சியின் செயலில் பதறி வள்ளி, “என்ன புள்ள நீ?”
“அட வுடும்மா இது தினத்துக்கு நடக்குறதுதேன், அய்யாவு பொடியினை வம்பு செஞ்சிகிட்டே இருப்பாக” சிரித்தபடி முனியசாமி சொல்ல, அப்போது தான் மூச்சே வந்தது அவர்களுக்கு.
“சரி எப்போ கோவிலுக்குப் போறது?”
“முதல சாப்புடுக கோவிலுக்குப் போறதுனால கவுச்சி இல்லை” அவர்கள் வரவு தெரியாது என்பதால் மருது சங்கடமாகச் சொல்லி வைத்தார்.
“அதுக்கு என்ன மருது பார்த்துக்கலாம் சாப்பிட்டு செத்த சாஞ்சு கொடுத்துப்புட்டு, பொழுதுக்குக் கோவிலுக்குப் போயிட்டு நாங்க அப்படியே கிளம்புறோம் மருது”
“என்ன அண்ணே இரண்டு நாள் இருந்துப்புட்டு போக”
“இல்லம்மா அய்யாவு இருந்து மருமவள கூட்டிட்டு வருவாக நாங்க பொழுதோட கிளம்பனும், நானும் இங்கன கிடந்தா சோலி கெட்டு போகும்” முனியசாமி பேசி கொண்டிருக்கும் போதே சோற்றை எடுத்து வந்து பரிமாற, அனைவரும் பேசி கொண்டே உண்டனர்.
சாந்தாவும், நாச்சியும் பேசி கொள்ளவில்லை இருவரது விலகலும் வெளியில் தெரியாத அளவுக்குச் சாமர்த்தியமாகக் கையாண்டு நின்றனர்.அதன் பின் பொழுதுகள் வேகமாக ஓட அனைவரும் கோவிலுக்குச் சென்று வந்தனர்.
அங்கிருந்தே முனியசாமியும், சாந்தாவும் கிளம்பி இருக்கக் கந்தசாமி நாச்சியுடன் வீட்டுக்கு வந்தான்.இரவு வேளை உணவை முடித்துவிட்டுத் திண்ணையில் அமர்ந்தவன் வரவை அறிந்து சொக்கப்பனும் வர, அவர்களுடன் பேசி கொண்டிருந்தான்.
வள்ளி,”நாச்சி நாங்க எல்லாரும் சொக்கப்பன் மச்சான் வூட்டுக்கு உறங்க போறோம்.நீ மருமவன் கூட உறங்கு என்ன? தம்பிய தூக்கி வா புள்ள”
“வேணாம் அவன் இங்கனையே கிடக்கட்டும் நடு ஜாமம் என்னைக் காணாட்டி அழுது வைப்பான்”
“அதுக்கு வேண்டி எம்புட்டு நாள் அவனைத் தூக்கி திரிவ நான் பார்த்துக்கிடுறேன்” என்றதும் பிடிவாதமாக அவனைக் கொடுக்க மறுத்து விட்டாள் நாச்சி, வள்ளி போராடி பார்த்து அவளைத் திட்டி விட்டு கணவன், சுந்தரி மற்றும் அவளது பிள்ளை என நால்வரும் சொக்கப்பன் வீட்டில் உறங்க சென்று விட்டனர்.
வெகு நேரம் கந்தசாமி பேசிவிட்டு தட்டியை வைத்து கதவை அடைத்து விட்டு உள்ளே வர.அங்கே சிறியவனை உறங்க வைத்து விட்டு தானும் அப்படியே உறங்கி இருந்தாள் நாச்சி.வேகமாக வந்தவன் இலகுவான உடையை மாற்றி விட்டு சிறியவன் உறக்கம் கலையாமல் அவனைச் சற்று தள்ளி படுக்க வைத்துப் பத்திரம் பண்ணியவன்.
முரட்டு தனமாக அவள் மேல் கவிழ்ந்து வைத்தான்.அவனது இந்தத் தீடீர் செயலில் மூச்சு முட்டி போயி கண்ணைத் திறந்தவள் வேகமாக மூச்சு வாங்கி,”யோவ்! உமக்குக் கூறு கிடக்கா?”
“அது கிடந்தா நான் ஏண்டி ராங்கி உம்ம கட்ட போறேன்” என்றவன் அவளை வம்பு செய்ய, அவனது முரட்டு தனம் தாங்க முடியாமல்.
“மாமா!”
“இப்போதேன் தெரியுதா மாமான்னு? எத்தினி ஏத்தம் கண்டிருந்தா தகவல் சொல்லிப்புட்டு வருவ?”
“ப்ச்! எம்ம இடம் எதுன்னு தெரியாம நான் என்னத்த உரிமை கொண்டாடி வைக்குறது” அவளது கழுத்தில் புதைந்து இருந்தவன் அவளது பேச்சில் வெடுக்கென நிமிர்ந்து அவளை நேராக பார்த்து.
“உரிமை இல்லாமதேன் ஜாடை பேசி கேள்வியா கேட்டியா? எம்ம முகத்தைக் கண்டு பேசி வைக்கலனாலும் எம்மைத் தானடி கேட்டு வச்ச, அவ பேசி வச்சா, ஆருடி நீன்னு அவளை கேளு? இல்லை எம்மைக்கிட்ட நேருக்கு நேர் கேளு?”
அது என்ன உன் மாமன் கிட்ட பொறணி அதுவும் எம்மையும், எம்ம ஆத்தாளையும் கொண்டு.உம்ம மாமனாரு இரண்டு போரையும் நிக்க வச்சு விளாசி தள்ளி புட்டாரு.மாமா வூட்டுக்கு போயி சண்டை கட்டி அம்புட்டு வம்பாகி போச்சு” என்றதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இப்போ என்னத்துக்கு முகரையைத் திருபுறவ” என்றவன் அவளை வலுக்கட்டாயமாகத் தனது முகம் காண செய்தவன்.
“இந்தாரு நாச்சி! பேச்சி அப்பனும், அண்ணணும் ‘ஒரு ஆத்தா அப்பனுக்குப் பொறந்தா பேச்சியைக் கட்டிக்கிடாதன்னு வம்பு செஞ்சாய்ங்க’ அவீங்க அப்படிச் சொல்லியும் அந்தப் புள்ளைய நான் கட்ட முடியுமா புள்ள? அதுவும் போக ஆத்தாளை ஏமாத்தி குத்தகை பணத்தை எடுத்துக்கிட்டாய்ங்க அதைக் கண்டு நான் கேட்டதுல தொடங்குன வம்பு.
மாமே மவன்னு ஆசைய விட ஆயி, அப்பன் மறுவாதிதேன் பெருசுன்னு உம்ம கட்டிகிட்டேன்.என்னைக்கு உம்ம கட்டி கட்டிகிட்டேனோ அன்னைக்கே நீத்தேன் பொஞ்சாதி.அந்த புள்ள செத்து போவேன்னு அரளி விதையைக் குடிக்கவுத்தேன் கண்ணாலம் அன்னைக்கு ராவு புத்தி சொல்லி வச்சேன்.வேற ஒன்னுமே இல்லை இது என் அப்பன் மேல ஆணை ” என்றதும் ஓர், இரு நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தவள்.
அதுவரை அவனை அணைக்காமல் இறுக்க மூடியிருந்த கைகளைத் தளர்வு செய்து அவனை அனைத்துக் கொள்ளச் சிறு புன்னகையாக அவளது செயலை ஏற்றவன்.
“சாமி மலை இறங்க காலுல விழுந்து வைக்கனும் போலையே, அம்புட்டு வைராக்கியம் காட்டுறவ ஹ்ம்ம்! ஏண்டி! ராங்கி கோபம் வந்தா ஒரு திணுசா கண்டுக்காம தெரிவியா?” என்றவன் அவளிடம் புதைந்து போகத் தனது நெஞ்சை குறுக்கி அவனைத் தன்னுள் புதைத்து கொண்டாள்.
அதன்பின் பேச்சுகளற்ற அன்பை இருவரும் அவர்கள் வழியில் பரிமாறி கொண்டு கலைத்து உறங்கும் வேளையில் இருவரது கைகளும் ஒன்று போல் சேர்ந்து சிறியவனை இழுத்து அருகில் படுக்க வைத்துக் கொண்டது.
இவர்களது இந்தப் புரிதலும், பிடித்தமும் காதலாக மாறி போகுமா? சிறியவனுடன் இவர்களது பாசமும், பிணைப்பும் பல ஆண்டுகள் கழித்தும், இதே போல் இருக்குமா? என்பதை நாமும் பல ஆண்டுகள் சென்று பார்ப்போம் வாருங்கள்.






அருமையான பதிவு 👌👌👌