அத்தியாயம் 1
அத்தியாயம் – 1
” ச்சீ …உன்ன பெத்ததுக்கு நல்ல பரிகாரம் செஞ்சிட்ட பாவி மகளே …” என்று ஊரே கூடி நிற்க தேவிபாலா தன் 19 வயது மகள் கீர்த்தியை அடி வெளுக்க …மனமும் உடலும் சோர்ந்து போனவளாக அடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் வேறு யாரும் காப்பாற்ற ஆளும் இல்லாமல் அடியை வாங்கி கொண்டிருந்தவளின் மனமோ என்றோ உடைந்திருந்தது …
தேவிபாலா கீர்த்தியை மாட்டை அடிப்போது போல் அடிப்பதை பார்த்து விட்டு அங்கு நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு சரோஜா என்ற பெண்மணி ” ஏன் க்கா …என்னவா வேணாலும் இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா வயசு பொண்ண ஊரு முன்னாடி நிக்க வெச்சி மாடு மாறி அடிப்ப …வீட்டுக்குள்ள கூட்டிட்டு போ க்கா …”என்று அவர் சொல்ல …
” ஆமா டி ஆமா …இவ செஞ்சி வச்சிட்டு வந்த காரியத்துக்கு இவளை வெத்தலை பாக்கு வெச்சி சீரும் சிறப்புமா தலை மேல வெச்சிக்கிட்டு ஆடுவாங்க …”
” என்னவா இருந்தா என்ன ம்மா தேவி உன் பிள்ளையை இப்படி வெளிய வெச்சி அடிக்கிறியே …நாளைக்கு அந்த பிள்ளை தெருவுல எப்படி தலைக்காடும் சொல்லு …” என்று இன்னொரு பெரியவர் கீர்த்திக்கி பரிந்து கொண்டு வர …
” சும்மா இருயா …உன் வீட்டு பொண்ணு எவன் கூடையோ கெட்டு சீரழிஞ்சி பிள்ளையை சுமந்துக்கிட்டு வந்தா வாம்மா கண்ணுனு நீ ஆரத்தி தட்டோட உள்ள வர வைப்பியா இல்ல சீறு செஞ்சி சீமந்தம் தான் வைப்பியா …முடியாதுள்ள …” என்றவர் ஓஒ வென்ற குரலில் ஒப்பாரி வைக்க …இத்தனை கீழ்த்தரமான வேலையை கீர்த்தி செய்திருக்கமாட்டாள் என்று சிலர் சமாதானம் படுத்த வர இன்னும் சிலரோ இந்த காலத்து பெண்கள் என்றாலே இப்படி தான் என்று கீர்த்திக்கு இன்னும் வேண்டும் இதுவும் வேண்டும் என்ற நிலையில் புழுவை பார்ப்பது போல் பார்க்க …அந்த பார்வையில் தான் செய்த செயலை எண்ணி குறுகி தான் பொய் நின்றாள் …
” ஏய் கேடுகெட்டவளே சொல்லுடி எவன் கூட போய் படுத்து பிள்ளையை வாங்கிட்டு வந்த …எந்த தெரு பொறுக்கிய டி காதலிச்ச …உங்கப்பன் செத்து தான் சாவடிக்கிறானா நீ உசுரோட இவனோட பிள்ளையையோ வாங்கிட்டு வந்து சாவடிகிரியே …” என்று மீண்டும் அவர் அவள் மீது மீண்டும் கையை ஓங்கி கொண்டு வர …” அட நிறுத்தும்மா …” என்று அவரின் செயலை ஒரு பெண்மணியின் குரல் தடுத்திருந்ததது …
” உனக்கு அறிவில்லா பிள்ளைத்தாச்சி பொண்ணு மேல கையை நீட்டுற …” என்றவரின் கர்ஜனையும் அவரின் தோற்றமும் ஒரு வித படபடப்பை தேவிபாலாவுக்கு தர இருந்தும் இந்தம்மா யார் என்ற தைரியம் ” என் பிள்ளை நான் உதைப்பேன் கொஞ்சுவேன் …உனக்கு …” என்றவரின் குரல் பக்கத்தில் 6 அடிக்கு வாட்ட சாட்டமாக நின்றிருந்தவனின் கனலை கக்கும் பார்வையில் ” உங்களுக்கு என்னம்மா …” என்று மாறி இருந்தது …
” எனக்கு என்னவா …அந்த பொண்ணு எனக்கு வேண்டப்பட்டவை …அவ வயித்துல வளரது என் வம்சம் …”என்றவரின் குரலில் இப்போது அங்கு இருந்தவர்கள் எல்லாம் ஓர் மாதிரி என்னவாக இருக்கும் என்று தாங்களாகவே யோசித்து கதை திரித்து பேச ஆரம்பிக்க …
” ஓஹோ அவளை கூட்டிக்குடுத்த புன்னியவாதி நீதானா …” என்றவரின் வார்த்தைகள் முடிக்கும் முன் ” ஏய் …” என்ற குரலோடு கண்கள் சிவக்க கையை ஓங்கி இருந்தவன் ….” பொம்பளைன்னு பார்க்குறேன் …” என்று சிவந்த கண்கள் உருள நாக்கை மடித்து கயை ஆட்டி எச்சரிக்க அங்கு இருந்தவர்களின் சப்த நாடியும் ஒடுங்கி தான் போய்விட்டது …
” டேய் சும்மா இரு …” என்றவர் கீர்த்தியை பார்க்க அவளோ அங்கு கூனிக்குறுகி நின்று இருப்பதை பார்த்து …” கீர்த்தி இங்க வாம்மா …” என்று அழைக்க நடுங்கி கொண்டே அவரை பார்த்தவளை …” ப்ப்ச் இப்ப நீ இங்க வரியா அத்தை அங்க வரட்டா …” என்றவரின் சிறிது காட்டமான குரலில் நடுங்கிக்கொண்டே அவரிடம் வந்தவளை அவள் கையை பிடித்து பக்கத்தில் நிக்கவைத்தவர் …
” இங்க பாருங்கமா …சின்ன சிறுசுங்க ஏதோ வயசு கோளாறுல தப்பு செஞ்சிடிச்சிங்க …அதை மனசுல வைக்காம அவங்க விருப்ப பட்ட வாழ்க்கையை தேடி தரது தான் பெரியவங்களோட பெருந்தன்மை … அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் அதுக்கப்பறம் அந்த உறவை தக்க வைக்கிறதும் வைக்காததும் அவங்களோட சாமர்த்தியம் …” என்றவரின் பேச்சை கேட்ட ஊர்மக்களும் அவர் சொல்லும் கருத்தை புரிந்துகொண்டதில் இன்னும் ஒன்றும் பேசாமல் அழுதுகொண்டிருந்த தேவிபாலாவை பார்த்தவர்கள் …
” இந்தாம்மா தேவி பையன் வீட்டு காரங்களே கீழே இறங்கி வந்து பேசுறாங்க நீ என்ன இன்னும் முகத்தை தூக்கி வெச்சிட்டு அழுகுற …பறிபோறது நம்ம பொண்ணு மானம் தான் அதுனால இந்த வீண் பேச்சை எல்லாம் விட்டுட்டு சட்டு புட்டுன்னு ஆகுற வேலைய பாரு …” என்று கூடி இருந்தவர்கள் சொல்ல ….
கண்ணை துடைத்து கொண்ட பாலா …” சரி சொல்லுங்கம்மா …எப்ப கல்யாணத்தை வைச்சிக்கலாம் …” என்று அவர் கேட்க …”இப்பயே இங்கயே வெச்சுக்கலாம் …”என்றவரின் பேச்சில் அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அதிர …” இங்கேயே …பையன் இல்லாம எப்படிம்மா கல்யாணம் …” என்றவரின் கேள்வியில் சிரித்தவர் …
” வேற யாரு என் தம்பி ஆதி தான் மாப்பிள்ளை …” என்று சொன்னவரை அதிர்ந்து பார்த்தான் ஆதி …அதிர்ந்து பார்த்த ஆதியை இப்போது அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா …
தொடரும் …





