• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்னில் கலந்திடு உயிரே பாகம் 6 💘

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
நல்லா தானே போய் கிட்டு இருக்கு ! திடீரென்று மாமா பேசிய வார்த்தைகள் நியாபகத்திற்கு வர, " அம்மா கிட்டவும் கேட்க வேண்டாம் சொல்லிட்டாரு மாமா கிட்டவும் கேட்க முடியாது. அம்மத்தா கிட்ட தான் கேட்கனும் நேரம் வரட்டும் கேட்போம். அப்படியே யோசித்தவாறு தூங்கிவிட்டான்.


காலை எழுந்தவன் சுறுசுறுப்பாக தனது வேலைகளை முடித்து விட்டு வகுப்பிற்கு கிளம்பியவன் நண்பர்களுடன் சென்றான். வகுப்பு கவனமில்லை எப்போது வகுப்பு முடியும் என்று பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு வழியாக வகுப்பு முடிவடைந்து விட்டது.

"நான் கொஞ்சம் கடைக்கு போகனும் நீங்க வீட்டு கிளம்புங்க நான் வாரேன். என்றான் முகிலன்


" நாங்களும் வருகிறோம். என்றான் சோமு

"ஆமா…... முகிலா எங்கள கடைக்குள்ள விட மாட்டாங்களா? என்ன என்றான் கதிர்

"விடுவாங்க வாங்க " வெறுப்பாக முகிலன்

" யாருக்கு என்ன வாங்க போகிறாய் என்றான் கதிர்

" சேமிக்கு தான். …….. என்று இளித்தான் முகிலன்


"ஹஹஹ எனக்கு மட்டும் ஏதோ சொன்ன ? " என்றான் கிண்டலாக கதிர்

அது. …. வந்து…. கதிரு அன்னைய நிலவரம் பரீட்சை இப்போ பரீட்சை முடிவடைந்து விட்டது பாஸ் பண்ணிருவேன் என்று நம்பிக்கையும் உண்டு . என்றான் முகிலன்


"அப்டியா முகிலா எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கு அப்பா நானும் ஆரம்பிச்சிறேன். என்றான் கதிர்,

முகிலன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.


சோமுவுக்கு தான் ஒன்றும் தெரியாதே ! என்ன ஆரம்பிச்சுடே சொன்ன நானும் ஆரம்பிப்பேன் தானே!


கதிர் திருதிரு என்று முழிக்கிறான். உடனே முகிலன் அது ஒன்றும் இல்லை நான் சேமிக்கு சில பொருட்கள் வாங்கினேன். தானே! அதோ போலா கதிரும் வேறொருவர்க்கு வாங்கி கொடுக்கலாம் என்கிறான்.


ஓஓஓ... சரி சரி என்றான். சோமு ,


"வாங்கடா வீட்டுக்கு கிளம்பலாம்". என்று பேச்சை மாற்றி விட்டான். கதிர் , முகிலனும் "ஆமாடா பஸ்ஸை விட்டால் அவ்வளவு தான் !.


வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுத்துட்டு வெளியே இறங்கினார்கள்.


சேமிக்கு என்ன என்ன பொருட்கள் முகிலன் வாங்கினான் . என்று பின்னர் பார்ப்போம்.


பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர். சோமு முதலாவது இருக்கையில் அமர்ந்து விட்டான். கதிருக்கும் முகிலனுக்கும் எட்டாவது ஒரே இருக்கையில் இடம் கிடைத்தது.


" எத்தனை நாட்களுக்கு சோமுவிடம் மறைக்க போகிறாய். என்றான் முகிலன்

" சொல்ல வேண்டும் ஆனால்….. சோமு என்னை பற்றி என்ன நினைப்பான். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. காதலுக்காக நட்பை தியாகம் செய்யும் அளவிற்கு என் மனம் இடம் கொடுக்க வில்லை . முதலில் நீயும் சோமுவும் அதற்கு பிறகு தான் யார் என்றாலும். …


"புரியுது கதிர் , எப்போது ?

உன் காதலை சொல்லபோகிறாய்.என்றான். முகிலன்,

"நம்ம காலஞ் முடிக்க வேண்டும் . மதியும் +2 முடிக்கட்டும். அதுக்கு அப்புறம் முதல் சோமுவிடம் பேசுவேன். சரி என்றால் சரி இல்லை என்றால். …. எல்லாம் விதி என்று விட்டு விடுவேன்.


அப்ப்ப்பா. ….. நல்ல புத்தி எப்ப வந்துச்சு சாருக்கு ?

உன் கூட இருந்த அப்டி தான் ! முகிலா
இவ்வளவு கேக்குறியா நீ எப்ப சொல்லபோறா உத்தேசம்! என்றான் கதிர்.

நீ வேற டா ! இப்ப தான் சேமியா பெரிய பொண்ணு ஆகியிருக்கா , இந்நேரம் போய்ட்டு நான் உன்னை காதலிக்கிறேனு சொன்னா " எனக்கு அதெல்லாம் தெரியாது ? ஐயோ….. அம்மா..... ஆத்தானு…. !ஊரா கூட்டிறுவா அப்புறம் என் கதை அவ்வளவு தான் !


நீ சொன்னது தான் நானும் நினைச்சி இருக்கேன் + 2 முடிக்கட்டும் அப்புறம் சொல்லுவேன். அது வரை சீண்டி கொண்டு இருப்பேன்.

நினைக்கிறேன். ஆனால் நடக்குமா தெரியாது? என்றான் முகிலன்


ஊர் வந்துவிட்டது. இறங்கி விட்டார்கள் பொருட்களை வாங்கிய முகிலனுக்கு வீட்டில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.?

சோமு " அம்மத்தா கிட்ட குடு சேமியா கிட்ட குடுக்க சொல்லு "

அம்மா இருந்த எதும் தப்பா நினைப்பாங்க டா என்றான் முகிலன்.


செய்றதே தப்பு தானே ! என்று சோமு கூற இருவரும் வாய் அடைத்து போனர்.

எனக்கு எல்லாம் தெரியும் சேமியாவை பிடிக்கும் , விரும்புற. …….அதானே!


ஆமாம் என்பது போல் முழித்தான். முகிலன்


சரி சோமு நீ வீட்டுக்குள் போய் பார்த்து விட்டு வா லட்சுமி அம்மா இருக்கிறார்களா இல்லையா? என்று கதிர் கூறினான்.


வீட்டுக்குள் சென்று லட்சுமி அம்மா வீட்டில் இல்லை உள்ள வாங்க டா

என்றான் சோமு


பெரும் நிம்மதியாய் உள்ளே முதல் அடியை எடுத்து வைத்தான்.


லட்சுமி அம்மா….. கதவு பின்னாடி தான் இருக்கீங்க ! என்று சோம சத்தமாக கூற முகிலன் முன் வைத்த காலை பின்னே எடுத்து ஓடி சென்று தின்னை பின்னே ஒழிந்து விட்டான்.


அம்மா வீட்ல இல்லை ராசா நீ உள்ளே வா என்றார் . அம்மத்தா

உள்ளே ஓடி வந்தவன் நங்கென்று குட்டினான். சோமு தலையை முகிலன்


ஏன் பொய் சொன்னாய்? என்று முகிலன் கேட்க , எப்பவுமே நான் தான் ஏமாறுவேன் . அதான் என்றான் அசால்டாக சோமு உனக்கு அப்புறம் இருக்குடா மவனே. …… , அம்மத்தா எனக்கு ஒரு உதவி ஏன் ? ஏதுக்குன்னு கேட்க கூடாது. சரியா? என்று முகிலன்


சரி சொல்லு ராசா… சேமியாவுக்கு கொஞ்சம் ஜாமான் வாங்கியிருக்கேன் அம்மத்தா அதெல்லாம் நீ கொடுத்திரு , நான் குடுத்தேனு சொல்லி குடுக்கணும் சரியா … அம்மாக்கு தெரிஞ்ச நான் இதெல்லாம் வாங்க மாட்டேனானு கேட்பாங்க திட்டுவாங்க அம்மத்தா அதான் . என் செல்லம்மத்தா உனக்கு வெற்றிலை பாக்கு வாங்கி தாரேன்.


" ஆஆஆ உன் மாமன் மவளுக்கு கண்டாங்கிச் சேலை எனக்கு காஞ்சி போன வெற்றிலையா?" கிண்டல் அடித்தார் அம்மத்தா, உனக்கு அடுத்த வாரம் புடவை வாங்கி தாரேன் அம்மத்தா என்று சமாளித்தான். முகிலன் , இல்லை ராசா சும்மா விளையாடினேன்.



" நல்ல பாட்டி நல்ல பேரன் " என்றான் கதிர் , லட்சுமி வாரா நான் பையை எடுத்துட்டு வெச்சுட்டு வாரேன். அம்மாத்தா ஓடிவிட்டாள்.

இன்னைக்கு வகுப்பு முடிவடைய எவ்வளவு நேரம் ? என்றாள் லட்சுமி

பரீட்சை வருகிறது தானே! அம்மா அதுதான் வகுப்பு முடிவடைய தாமதம். அம்மா நான் குளிச்சிட்டு வாரேன். என்று வெளியே வந்துவிட்டான். அவனுடன் சேர்ந்து கதிரும் சோமுவும் வெளியே வந்துவிட்டனர். தத்தமது இல்லத்திற்கு சென்றனர்.


இரவு சாப்பாட்டை முடித்து விட்டு பாய்யை விரித்து படுத்து விட்டான் . நாளைக்கு குடிசை கட்டும் நிகழ்வு இருப்பதால் சீக்கிரம் உறங்கி விட்டான்.



குடிசை கட்டும் சடங்கு அடுத்த
பாகத்தில் பார்ப்போம் நண்பர்களே!
Thamil kawshi
உங்களில் ஒருத்தி 💞
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top