Madhi
புதிய முகம்


அத்தியாயம் 1.,













அழகான மர வீடு...
அந்த வீட்டை சுற்றிலும் பச்சை புற்கள் ரயில் தண்டவாளம் போல இணையாகவும் , இரண்டு மீட்டர் அகலமும் இருந்தது....
அந்த புற்களின் நடுவில் ஆங்காங்கே வித விதமாக நிறங்களில் பூக்கள் நிறைந்த செடிகள் வைக்கப் பட்டு இருந்தது...
அந்த புல் தண்டவாளத்தின் முன்னாள் கூழாங்கற்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டு இருந்தது ஒரு சிறிய நீச்சல் குளம்...
அதை தாண்டி உள்ளே சென்றால் , ஒரு சதுர மேசையும் அதற்கு பொருத்தமான நாற்காலிகள் நான்கும் அழகாக வைக்கப்பட்டு இருந்தது போர்டிக்கோ வில்....
அதன் அருகில் மரத்தாலான கூடை போன்ற அமைப்பை கொண்ட ஊஞ்சல் ஒன்று அந்த போர்ட்டிக்கோ வின் சீலிங்கில் உள்ள வளைவு கம்பியில் சங்கிலியால் கட்டி தொங்க விடப்பப்பட்டு இருந்தது...
அதை தாண்டி உள்ளே செல்ல மூன்று வாசற்படிகள் இருக்க, அதன் வழியே உள்ளே சென்றால், இடது புறம் சமையலறையும், வலது புறம் விசாலமான ஹால் அதில் ' ட'. வடிவில் மரச்சுவற்றை ஒற்றி போடப் பட்டு இருந்தது ஒரு சோஃபா செட் , கிரே வித் பிரவுன் கலரில்...
அதன் நடுவில் ஒரு டீ டேபிள்... கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டு சதுர வடிவில்...
கிட்செனில் சென்று பார்த்தால், அம்மாடியோ.... இவ்வளவு அழகான அழுக்கு இல்லாத சமையலறை. பெண்களின் கனவே மாடுலர் கிட்சென் தானே.. அதே கிட்சென் தான் அங்கு அல்ட்ரா மாடர்னாக இருந்தது...
அதில் இருந்து வெளி வந்து நேராக சென்றால், ஹாலை ஒட்டியவாறு ஒரு படுக்கை அறை...
ஆத்தாடி எவ்வளவு பெரிய ரூம்... அதில் தரையில் போடப்பட்ட மெத்தையும் ...
மரச்சுவற்றில் பதித்த அலமாரிகளில் கண்ணாடியும் பொருத்தப் பட்டு இருந்தது....
படுத்துக் கொண்டே கைக்கு எட்டும் தொலைவில் நைட் லேம்ப்...
வலது புற மூலையில் ஒரு ஸ்டடி டேபிள்....
அதில் வளைந்து வந்தது போல ஒரு லேம்ப்...
அதை விட்டு வெளி வந்தால் அந்த அறையை ஒட்டி ஒரு பாத்ரூம்..
இத்தனையும் அடக்கி இருந்தது அந்த அழகு வீடு .......
அடர்ந்த...
கானகத்தின் நடுவே...
அந்த வீட்டை சுற்றிலும் கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர் இடை வெளி விட்டு வித விதமான மரங்கள் வட்டமாக வளர்ந்து இருந்தது இயற்கையாகவே...
அதை தாண்டி சென்றால் நிச்சயம் காட்டு விலங்குகளுக்கு இரையாவதில் சந்தேகம் எதுவும் இல்லை..
அதனால் திரும்பி வந்து விடுவோம்...
அப்பப்பா எப்படியோ வீட்டை சுத்தி பாத்தாச்சு...
என்னடா பாட்டு சத்தம் கேட்குது வீட்டுக்குள்ள... வாங்க போய் பாக்கலாம்...
" ஒன்றா.......
ரெண்டா...
ஆசைகள்.
எல்லாம் சொல்லவே ....
ஓர் நாள் போதுமா...",
பாட்டு பாடும் ரேடியோ சத்தத்தையும் தாண்டி கேட்டது அந்தக் குரல்... காந்தக் குரல்...
எங்க... எங்கன்னு தேடி பார்த்தா....
அந்த அல்ட்ரா மாடர்ன் கிச்சனில் இருந்து வந்தது அந்த குரல்...
" ஒரு ஊரில்.... அய்யய்யோ சாரி,
ஒரு காட்டில், அழகே அழகாய் ஒருவன் இருந்தானே....
அழகுக்கு இலக்கணம் எழுத
அவனும் பிறந்தானே",
அம்புட்டு அழகுங்க பையன்....
என்ன செய்றான்னு எட்டி பார்த்தா, மணக்க மணக்க காப்பி போட்டுட்டு இருக்கான்... அந்த அழகு பையன்.
யாருக்கு காப்பி கலக்குறான்...
அவனுக்கு தான் கலக்குறான்...
நமக்கு குடுக்கமலே அவன் குடிக்கிறான் சரி நம்ம போவோம்.. மரியாதை இல்லாத வீட்டில நமக்கு என்ன வேலை...
இந்த அழகனுக்கு ஏத்த அழகிய பாக்கணுமே...




அப்படியே நம்ம கண்ணுன்ற கேமராவை திருப்பி பொடி நடையா போனா, போயிட்டே இருந்தா......
போரடிக்காமல் இருக்க பாட்டு பாடலாம் தப்பில்ல...
" எங்க நம்ம போறோம்",
' ஹீரோயின தேடி ',
ரிபீட் ," எங்க நம்ம போறோம்",
' காது செவிடா உனக்கு... ஹீரோயின தேடினு சொன்னோம்ல',
ஓகே கூல்....
வந்துட்டோம்... வந்துட்டோம்..
எங்க வந்துட்டோம்...
நட் ரோட்டுக்கு வந்துட்டோம்..
உன்கூட சேர்ந்த நடு தெருவுக்கு போவோம்னு நினைச்சோம்... ஆனால் நீ அதுக்கும் மேல நடு ரோட்ல நிறுத்திட்ட...
போதும்... போதும் கவனியுங்கள் ஹீரோயின் வர்ற அறிகுறி எதாவது தெரியுதான்னு...
வந்துருச்சு.....
என்ன பாத்ரூமா...
நோ...! அறிகுறி...
என்னா அறிகுறி ?....
வேகமா காத்தடிக்குது.... மரம் எல்லாம் அப்படியும் இப்படியும் ஆடுது... பூவு மட்டும் கொட்டல... ஆனாலும் இது ஹீரோயின் வர்ற நேரம் தான்..
வந்துட்டாள்...
"கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு",
என்னம்மா ஹீரோயின் கருப்பா இருக்கு..
ஏன் ஹீரோயின்னா கருப்பா இருக்க மாட்டாங்களா.. என் ஹீரோயின் கருப்பு நிற அழகி...
அது சரி... உன் கூட வந்த பாவத்துக்கு நாங்க ரோட்டுல நிக்கிறோம்... அந்த பொண்ணு ஏன் நிக்குது...
அதை அந்த அழகி கிட்ட தான் கேக்கணும்...
சரி கேட்போம்.
வாங்க போலாம்...











