arrow_back
கனியாத்ரேயம் கனி 3
கனியாத்ரேயம் chevron_right பகுதி 3 / 13

கனி 3

visibility 23
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 3  

 

நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தனது அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தவள், சூரியனுக்கு நமஸ்காரம் செய்யும்போது மணி ஐந்து பதினைந்து ஆகியிருந்தது. வானம் இருள் சூழ்ந்த நேரமது.

 

கனியாவோ,

 

“சாரி… நீங்க லேட்டு சூரியபகவானே…”

என்று சூரியன் காணாத வானை பார்த்து புன்னகைத்தாள்.

 

காலை மசாலா தேனீரில் தன்னுடைய சுறுசுறுப்பையும் கொஞ்சம் கலந்து, அனைவருக்கும் அக்கறையோடு தேனீர் கொடுத்தாள்.

 

அதைப் பருகிய அனைவரும் புத்துணர்ச்சியுடன் முகூர்த்தக்கால் நடுவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.

 

வாசலில் மாவிலை கட்ட சென்ற கனி, “பெரியம்மாவ்” அந்த ஊர் முழுக்க கேக்குமளவுக்கு கத்தினாள்.

 

கனியின் சத்ததில் அமிர்தவள்ளியின் செவி பரன் கிழிந்தது. “ஏன்டி மா கத்துற”

 

“பெரிய வண்டி வண்டியா வருது. நைரா அண்ணி வீட்டாளுங்க வராங்க” என்று உரக்கச் சொன்னாள்.

 

நைராவின் கேரளக் குடும்பத்தினர் பெரிய கூட்டமாக திருநள்ளாறு கிராமத்திற்குள் வந்தனர்.

 

கிட்ட தட்ட ஆறு பெரிய கார்கள், அவளது குடும்பமும் பெரிய குடும்பம்தான். வந்திருப்பது குடும்பத்தில் பெரிய முக்கிய தலைகள் மட்டும். இல்லையென்றால் பட்டாளமாய் நண்டு சிண்டு சேர்ந்து இன்னும் பத்து கார்கள் வருந்திருக்கும்.

 

வந்தவர்களை இன்னமுகத்துடன் வரவேற்று, தேனீர், இனிப்பு, காரம், என்பனவற்றை எல்லாம் கொடுத்த பிறகு  நைராவும் வெற்றியும் குடும்பமாக ஒன்றுக்கூடி பேசும் இடத்தில் இருவரும் சேர்ந்து குடும்பங்களுக்கு இடைமே மொழிப்பெயர்ப்பு செய்து கொண்டிருந்தனர்.

 

அவர்கள் பெரிய குடும்பமாக இருந்ததால், வீட்டில் அனைவரையும் தங்க வைக்க முடியாமல், அவர்களை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தனர். நைராவையும் அவளது குடும்பத்தினர் தங்களுடன் கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றனர்.

 

வெற்றி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் ஏழு நாட்களில் மொத்தமாக அவள் தனக்கே சொந்தமாகும் உவகையில் ஊறி இருந்தான்.

 

அடுத்த நாள் காலை,

 

மூகூர்த்தகால் வைத்து  வீட்டை முழுவதுமாக மூடக் கூடாது என்று, கலைவாணியை மாத்திரம் வீட்டில் வைத்துவிட்டு,அனைவரும் புடவை, நகைகள் திருமணத்துக்கு தேவையான ஏனைய பொருட்கள் எடுப்பதற்கு கிளம்பினார்.

 

அதன்படி முதல் காரில் வெற்றி, நைரா, சாய்சரண்,  கௌரி ஆகிய நால்வரும் கிளம்பினர். அடுத்த காரில் கனியா, மித்திரன், திருச்செல்வம், அமிரிதவள்ளி நால்வரும் ஏறியிருந்தனர்.

 

திருச்செல்வத்தின் குடும்பம் பரம்பரையாக வாங்கும் ஜவுளி கடைக்கு சென்றிருந்தனர்.  காஞ்சிப்பட்டில் வெள்ளி ஜரிகையில் புடைவைகள் கேட்டு கேட்டிருந்தனர்.

 

திருசெல்வம் மாத்திரிம் கதிரை போட்டு அமர்ந்திருக்க, மற்ற ஏழுபேறும் புடவை பார்ப்பதற்கு நின்றுக் கொண்டிருந்தனர். வெள்ளியில் ஜரிகை கொண்ட பட்டு புடவைகள் இருபதுதான் இருந்தன. அதில் இரண்டை நைராவுக்கு மேல் வைத்துப்பார்த்து ஒன்றை எடுத்தனர்.

அதன் விலை இலட்சத்தை தாண்டி இருந்தது.

 

அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே நாளில் வேறு வேறு முகூர்த்த வேளையில் ஏற்பாடுகள் அமைந்ததால், கிருத்திகாவிற்கும் கையோடு முகூர்த்த புடவை எடுத்தனர்.

 

பொண்ணுக்கு புடவை எடுத்த பிறகு அம்மா, கலைவாணி, மணிமாறன், கௌரி, சரண் மற்றும் கிருத்திகாவின் குடும்பத்தினருக்கும் உடைகள் எடுத்தபடி இருக்க, கனி அவளுக்கு தாவணி பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

அவளின் தலையை தட்டிய அமிதவள்ளி, “இன்னும் எத்தனை நாளைக்கு தாவணியை போட்டு சுத்தப் போற? வெற்றி, மித்ரன் கல்யாணத்துக்கு நீ புடவதான் கட்டணும்” என்று பிடிவாதமாக நின்றார். அருகில் இருந்த கௌரி, கனியை பார்த்து சிரித்தாள்.

 

“ஐயோ! பெரியம்மா, புடவ கட்டி பெரிய மனுஷியாக விரும்பல, தாவணி உடுத்தி எப்பவும் சின்ன பிள்ள மாதிரியே இருக்கேனே” அவள் கண்கள் மின்னக்கூறினாள் கனி.

 

“உன் வயசுல, என் கைல வெற்றி  இருந்தான்” என்று கூறும்போதே,

 

“போதும் பெரியம்மா, நான் புடவை வாங்கிக்கறேன்” அமுதவளியின் வாயை மூடப் பார்த்தாள்.

 

ஆனால், அவரோ, “கொஞ்சம்ச் சொல்றதைக் கேளு கனியா”

 

அவர் வாயின் மீது கையை வைத்து மூடியவள், “நான் புடவ கட்டி உங்களைவிட பெரிய மனுஷி ஆகுறேன். வேண்டாம் பெரியம்மா. உங்கள் கதையை மட்டும் சொல்லாதீங்க” எனென்றால், அவள் பல முறை அந்த கதைகள் கேட்டிருந்தாள்.

 

“அப்படி வா வழிக்கு” என்றதோடு கனியாவுக்கும் விலை உயர்ந்த பட்டு புடவை ஒன்று எடுத்திருந்தார் அமிர்தவள்ளி.

 

இளசுகளை இதுக்கு மேல் சந்தைக்கு வர வேண்டாமென்று,

“இதுக்கு மேல வாங்க தேவையானதை நாங்க வாங்கிட்டு வாறோம் நீங்க வீட்டு கிளம்புங்க” என்று அமிர்தவள்ளி, கூற

திருசெல்வமும் ஆமோதித்தார்.

 

வெற்றி, நைரா, சரண் ஒரு காரில் முன்னே சென்றனர். கௌரி அவளுக்கு ஒரு அழகு சாதன பொருளொன்று தேவையிருக்க, அதை வாங்க மித்ரன் அழைத்து செல்வதால்,ஆதமாக, இருப்பின்களையும் அழைத்து வருவதாக மித்திரன் கூறியிருந்தான் வெற்றியிடம்.

 

வெற்றியின் கார் தங்குத்தடை இன்றி சீறாக சென்றது. வெற்றியின் கார் பின்னிருந்து வேகமாக முன்னே வந்த பெரியலாரி, கட்டிடங்கள் அமைக்கும் கம்பிகளை கொண்டது. பிரேக் இல்லாதது போல் வளைந்து நெளிந்து சென்றது அந்த பெரிய வண்டி.

 

வண்டியின் அளவை கடந்து கம்பிகளின் சுமை இருந்தது. அங்கும் இங்கு அசையும் வேளை, சரியாக பூட்டபடாத கதவுகள் திறந்து சில கம்பிகள் கீழே விழ, “கூமுட்டை ரோட்டில எப்படி வண்டி ஓட்டுது பாரு” வெற்றி சொல்லி வாயை மூடவதில்லை.

 

வண்டியை முந்திக்கொண்டு சென்று இதனை எப்படியாவது கூற வேண்டும் என்று அவன் முந்திக்கொண்டு செல்ல முயற்சி எடுத்த வேளையில், மீண்டும் அந்த வண்டியில் மீண்டும் குலுங்க கம்பிகள் கார் மீது விழுந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தது.

 

அடுத்த நொடி, இந்த பெரிய வண்டியின் சாரதி தப்பி  இருந்தான்.

 

வெற்றி முதலில் செய்தது  நைராவின் முகத்தைத் தன் இருக் கைகளாலும் பொத்திக் கொண்டான், அவளுக்கு ஏதேனும் நடக்காதவாறு வைத்திருந்தான்.

 

வெற்றியின் கழுத்தை கம்பிகள் குத்ததவாறு, சரணின் கைகள்  பிடித்திருந்ததை வெற்றியால் உணர மட்டும் முடிந்தது.

 

அதே வேளை வெற்றியின் வயிற்றின் மேல் சில கம்பிகள் மாட்டிக்கொண்டிருந்தன. சிறிது நேரம் அப்படியே இருந்தால், வெற்றியின் வயிற்றை துளைத்து விடும்போல.

 

நைராவின் இடது கையின் தசையை கம்பி நன்றாக கிழித்தது இருந்தது. வயிற்று பகுதியிலும் தொடை பகுதியிலும் சிறு சிறு காயங்கள் கம்பிகளால் ஏற்பட்டிருந்தன.

 

சரணின் இரண்டு கைகளும் கம்பிகள் துளைத்திருந்தன. இடது கையில்  ஒரு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. வெற்றியை காப்பாற்ற கழுத்தை பற்றியதால் ஏற்பட்ட காயமிது.

 

நைரா தனது கையிலிருந்த தொலைபேசியை கௌரிக்கு அழைப்பை விடுக்க, அழைப்பை ஏற்ற கௌரி ஸ்பீக்கரில் வைக்க, விபத்து நடந்ததை ஆங்கிலத்தில் கதற, வேகமாக காரை சுழட்டினான் மித்ரன்.

 

அதற்குள் அந்தத் தெருவில் வந்த இருவர் கம்பிகளை அப்புறப்படுத்தத் தொடங்கிருந்தனர். உள்ளிருப்பவர்களை வெளியே எடுக்கக் கடினம் என்பதனால் முதலில் கம்பிகளை எடுத்து அப்புறப்படுத்தினர்.

 

காரிலிருந்து ஓடி வந்து வேகமாக  வந்த மிதிரன், அவனும் சேர்ந்து அதிவேகத்தில் கம்பிகளை அப்புறப்படுத்த, “அண்ணா… வெற்றி அண்ணா” என்று கௌரியும், கனியும் மாறி மாறி கத்திக் கதறினர்.

 

சரண் கையில் இரத்தம் வழிவதை கண்ட கனி தனது தாவணியின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து சரணின் இரு கைகளிலும் கட்டி விட்டிருந்தாள். மீதி முந்தானையை தோளோடு சொருகி இருந்தாள்.

 

நைராவை தூக்கிய மித்ரன் ஆட்டோவை பிடித்து சரண் மற்றும் கௌரியையும் சேர்த்து அனுப்பி வைக்க, “வெற்றி அண்ணாவா சீக்கிரம் கூட்டிட்டு வந்துரு மித்ரன்” அழுகையுடன் கூறிய கௌரி வைத்தியசாலைக்கு பறந்தாள்.

 

வெற்றியை வெளியே எடுக்க முற்பட்டவன் அவன் வயிற்றில் ஒரு கம்பி சொருகி இருந்ததை கண்டு, “அண்ணா, ஒரு நிமிஷம்  வலிய பொறுத்துக்கோங்க.” என்ற மித்ரன்  கலங்கி குரலில், கண்ணீரை கட்டுப்படுத்தி விட்டு கம்பியை எடுக்கும்போது, “அம்மா…ஆஆஆ” என்று அலரி இருந்தான் வெற்றி.

 

வெற்றி வயிற்றிலிருந்து இரத்தம் வழிவதை கண்ட கனியா, அவள் மூச்சை இருக்கிப் பிடித்து வேறு வழியின்றி அவள் மீதி இருக்கும் முந்தானையை அவிழ்த்து தெருவில் நிற்கிறோம் என்பதையே மறந்து வெற்றியின் வயிற்றில் முந்தானையை இருக்கி கட்டினாள். வெற்றி வலியில் துடித்திருந்தான். அடுத்தநிமிடம் மித்ரன் தூக்கி காரில் வைக்க, கனி வெற்றியை தன் மடியில் ஏந்திக்கொண்டாள்.

 

அவனை தூங்க விடாமல் கன்னத்தட்டி தட்டி எழுப்பிய வண்ணம், “வெற்றி அண்ணா உங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க நல்லாதான் இருக்கீங்க”

 

“நைரா..” தன்னை நம்பி வந்தவளை எப்படி இருக்கிறாளோ என்று தவிப்பே அவனை அதிகமாக வலித்தது.

 

“அண்ணிக்கு நல்லாருக்காங்க” இது கேட்டபின்பு வெற்றியின் கண்கள் சொருகின. பலமா கன்னத்தை தட்டியவள் நாடிதுடிப்புப் பார்க்க பல்ஸ் குறைந்து கொண்டு சென்றது.

 

“வெற்றி அண்ணாக்கு பல்ச் குறையுது மித்ரணண்ணா இன்னும் ஃபாஸ்டா போங்க.” மேலும் வேகத்தை கூட்டியவன், அடுத்த முப்பது வினாடியில் வைத்தியசாலை வாசலில் காரை நிறுத்தினான் மித்ரன்.

 

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வெற்றி உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

 

கனியா முந்தானை இன்றி நிற்கும் கோலத்தை கண்டு சுதாரித்த மித்ரன், அப்பொழுதுதான் அவனது ஷர்ட்டை கழட்டி கனியாவிடம் கொடுத்திருந்தான். மித்ரன் பணியனுடன் இருந்தான்.

 

கௌரி, வீட்டிற்கு அழைப்பை விட்டு விஷயத்தை கூறியிருந்தாள்.

 

நைராவின் இடது கைக்கும் தொடைப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்திற்கும் மருந்திட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த சிறு சிறு காயங்களுக்கும் மருந்திட்டு சிகிச்சை அளித்திருந்தனர்.

 

சரணின் நிலை சற்று வேறுபட்டிருந்தது. அவனது விரலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் உடனடியாக அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்ய முடியாததால், மறுநாள் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவர்கள் ஒத்திவைத்தனர்.

 

மித்ரன் மூவருக்கும் பணம் செலுத்த சென்றிருந்தான்.

 

வெற்றியின்  நிலையை முழுவதுமாய் பரிசோதித்த மருத்துவர்கள், அவனை அவசரமாக சத்திரசிகிச்சை பிரிவுக்கு  அழைத்து சென்றனர்.

 

வெற்றியின் பிளட் குரூப் ஏபி நெகட்டிவ் அவசரமாக தேவை என்று கேட்டிட, கௌரி இரத்தம் கொடுக்குவதற்காக சென்றிருந்தாள்.

 

அப்போது திருசெல்வம், அமிர்தவள்ளியும்  நெஞ்சில் அடித்துக்கொண்டபடி, பதற்றத்துடன் ஓடி வந்தனர்.

 

“வெற்றி” என அமிர்தவள்ளி கத்திய வர,

 

“பெரியம்மா!” என்று கதறியவள், ஓடிச்சென்று அமிர்தவள்ளியை இறுக்க அணைத்திருந்தாள்.

 

“வெற்றி அண்ணாக்கு ஒன்னும் இல்ல, டாக்டர்ஸ் ட்ரீட்மண்ட் பார்க்கிறாங்க. கௌரி அக்கா, வெற்றி அண்ணாக்கு பிளட் கொடுக்க போயிருக்காங்க” இதற்கு கனியாவுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. சரியாக அமிர்தவள்ளியை சமாதானப்படுத்த முயன்றாள்.

 

மேலும் நைராவின் வீட்டினர் வைத்தியசாலைக்கு வர அவர்களுக்கு என்ன, எப்படி கூறுவதென்று தெரியாமல் தவித்துப் போனாள் கனியா. ஏனென்றால் ஆங்கிலத்தில் கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

 

அமிர்தவள்ளியின் அழுகுரல் முடிவதாக இல்லை. “கடவுளே, இதுக்கு நீ என்னைய பேசாம எடுத்திருக்கலாம். என் பிள்ளையா இவ்வளோ கஷ்டப்படுத்துறியே!” என தலையில் அடித்துக்கொண்டார்.

 

வெளியே நர்ஸ் ஒருவர் வர, திருசெல்வம், வெற்றியைப் பற்றி நர்ஸிடம் விசாரிக்க, “ஏபி நெகட்டிவ் பிளட் பத்தல. பிளட் பேங்குக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கோம் பிளட் கிடைக்க லேட்டாகும். வேற யாரும் இருந்தா கொஞ்சம் சீக்கிரம் அரேஞ்ச் பண்ண முடியுமா?”  என்று கேட்டிட, திருசெல்வத்தின் இரத்தமும் அதேதான் அதனால் அவர் இரத்தம் கொடுக்க சென்றார்.

 

திருசெல்வத்தின் இரத்தமும் வெற்றிக்கு ஏற்றப்பட்டது.

 

அடுத்த நாள் காலை…

 

விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நைராவும் சரணும், உடல்நிலை ஓரளவுக்கு தேறியிருந்ததால் மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினர்.

 

சரணுக்கு காலில் எந்தப் பிரச்சனையும் இல்லாததால், கையில் ஏற்பட்ட காயத்தை மட்டும் கவனித்துக்கொண்டு அவனால் நடக்க முடிந்தது. நைராவுக்கும் காயங்கள் அதிகமாக இருந்தாலும், மெதுமெதுவாக நடக்க முடிந்தது. அவளது கையில் இருந்த காயத்திற்கும், உடலில் ஏற்பட்டிருந்த மற்ற காயங்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் வெற்றியின் நிலை மட்டும் இன்னும் மாறவில்லை.

 

அவனது உடலில் ஏற்பட்டிருந்த காயங்கள் காரணமாக, மருத்துவர்கள் அவனை மருத்துவமனைப் கட்டிலில் இரு கைகளிலும் மருந்துகள் எறியவாறு, அவனைச் சுற்றி மருத்துவ உபகரணங்களும், அவனது உடல்நிலையை கண்காணிக்கும் கருவிகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன.

 

வெற்றியின் அருகில் அமிர்தவள்ளியும் திருச்செல்வமும் மாறி மாறி அமர்ந்திருந்தனர். அவனது முகத்தைப் பார்த்தபடியே அமிர்தவள்ளியின் மனம் பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது.

 

நேரம் மெதுவாக நகர்ந்தது.

 

மருத்துவமனையின் அறைக்குள் அமைதியாகப் படுத்திருந்த வெற்றியின் விரல்கள் லேசாக அசைந்தன.

 

பல மணி நேரங்களுக்குப் பிறகு, வெற்றி தனது கண்களைத் திறந்தான்.

*********

 

 

உங்கள் ஆதரவை கொடுங்கள் வாசகர்களே நன்றி ❤️❤️❤️

அடுத்த அத்தியாயம்

கனி 4

கனி 4  கண்ணைத் திறந்தவன் தான் யாரைப் பார்க்கிறோம் என்றே தெரியாமல் இருந்தான். அப்போது வெற்றியின் உதடுகள் மெதுவாக அசைந்தன. “அம்மா…” அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதும், அமிர்தவள்ளி உடனே அவனருகில் சென்று அவனது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார். அவளது தொடுதலை உணர்ந்த வெற்றி, தன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்