• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஒரு வருட காலம் கடந்திருந்தது. காலையில் கண் விழிக்கும் முன்பே மித்ரனின் கைகள் படுக்கையைத் துழாவ அருகில் சம்ரிதி இல்லை. சமையலறையில் இருந்து வந்தப் பாடல் சத்தம் அவள் அங்கு இருப்பதைக் கூறியது.

"பாவாடை அவிழும் வயதில்
கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே - உறவானவன்
கொலுசிலுள்ள ஓசை கேட்ட
மனசிலுள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரைப் போல - பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைத் தான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே"

உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தவளின் பின் சென்று இடையோடு அவளைக் கட்டிக் கொண்டான் மித்ரன்.

"என்னை எழுப்பாமத் தனியா நீ மட்டும் வந்து என்னடா பண்ணிக்கிட்டிருக்க?" தூக்கம் கலையாத நிலையில் அவள் தோளில் தலை சாய்த்தவாறே வினவினான்.

"ம்ச்... இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிடணும் போல இருந்துச்சு அத்தான். தூக்கமும் வரலை. அதான் இதையாவது செய்வோமேன்னு வந்தேன்."

"என்கிட்ட சொல்லியிருந்தா நான் செஞ்சு கொடுப்பேன்ல்ல"

"எவ்வளவு வேலை தான் அத்தான் நீங்க செய்வீங்க. பகல் பூரா என்னையும் பார்த்துக்கிட்டு ஆஃபீசையும் கவனிச்சுக்கிட்டு பிசியா இருக்கீங்க. ராத்திரியும் நான் தூங்கினப்புறம் உட்கார்ந்து ஆஃபீஸ் வேலை பார்க்குறீங்க. இப்பதான் அசந்து தூங்குனீங்க. அதான் எழுப்பலை."

"உங்க நாலு பேரையும் கவனிக்குறதை விட எனக்கு வேறென்ன வேலை? ஹ்ம்ம்" ஆம் சம்ரிதி இப்பொழுது கருவுற்றிருந்தாள். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று குழந்தைகள் அவள் வயிற்றுக்குள் இப்பொழுது அவர்களின் காதலுடைய சாட்சியாக முண்டிக் கொண்டிருந்தன.

வந்தே தீருவோம் என்று அடம் பிடித்த சுஜாதாவையும் லெக்ஷ்மியையும் இப்பொழுது வேண்டாம் என்று கூறித் தடுத்துவிட்டுத் தானே தன் மணவாட்டியைக் கவனித்துக் கொண்டான் காதலோடு.

உணவிலிருந்து தூக்கம் வரை அத்தனை விஷயத்துக்கும் அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள் சம்ரிதி. முழுதாக ஆறு மாதக் காலம் முடிவடைந்த நிலையில் இப்பொழுதுதான் வாந்தியும் மயக்கமும் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. வளைகாப்பிற்காக நாளை இருவரும் இந்தியா கிளம்புகிறார்கள்.

"நாளைக்கு பிஃளைட் டிராவல் வேற இருக்குல்ல. இப்பப் போய் எதுக்கு உனக்கு இந்த வேலை? வா வந்து உட்காரு. மீதியை நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவளை அழைத்து வந்து ஹாலில் கால் நீட்டி வசதியாக அமர வைத்துவிட்டுத் திரும்பியவனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் சம்ரிதி.

"என்னடா"

"அத்தான் எனக்கு உங்களைக் கட்டிக்கணும் போல இருக்கு" என்று சொல்லிக் கைகளை நீட்டியவள், "ஆனா முடியலை" என்றவாறுப் பெரிதாகிப் போயிருந்த வயிற்றைத் தடவிக் கொண்டாள். சொல்லும்பொழுதே கண்ணீர் துளிர்த்துவிட்டது.

"அடடா என்னடா இது? கட்டிக்கணும் அவ்வளவுதானே" என்று சொல்லியவாறே அவளைப் பின்னிருந்து சற்று இறுக்கமாகவே அணைத்துக் கொள்ள,

"இப்படியில்ல... இப்படி" என்று முன்புறமாகக் கைகளைக் காட்டினாள் சம்ரிதி.

"இன்னும் ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்குவீங்களாம். நம்ம குட்டீஸ் மூணு பேரையும் பத்திரமா வெளியே வந்ததுக்கு அப்புறம் நீயே சொன்னாலும் நான் உன்னை விட்டுத் தள்ளிப் போக மாட்டேன். சரியாடா" தன் குழந்தைகளுக்குத் தாயானவளைக் குழந்தையாகவே கொஞ்சிக் கொண்டிருந்தான் மித்ரன்.

இப்படிச் சிலப் பலக் கெஞ்சல்களோடும் கொஞ்சல்களோடும் அவர்களின் இந்தியப் பயணம் முடிந்து வளைகாப்பு நாளும் வந்து சேர்ந்தது. இந்தியா வந்து அம்மாவையும் அத்தையையும் பார்த்தப்பின் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செல்லம் கொஞ்சத் தொடங்கியிருந்தாள் சம்ரிதி.

திருமணத்திற்கும் சேர்த்து வைத்து வளைகாப்பை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் மித்ரன். அர்ஜூன், அரவிந்தன் இருவரும் தத்தம் குடும்பத்தோடு வந்திருக்க சகோதரர்கள் நால்வரும் நெடு நாட்கள் கழித்து ஒன்று சேர்ந்த அந்தத் தருணத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

தேஜூ தன் கணவர் சுரேஷ் ஆதித்யா மற்றும் தங்கள் ஒரு வயது மகள் ஆராதனாவுடன் வந்து கல்யாணத்தில் விட்டுப் போனதுக்கும் சேர்த்து வைத்து இப்பொழுது மித்ரனைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

நிரஞ்ஜன் மற்றும் டாக்டர்.விஜய நிர்மலாவும் கூட வந்திருந்தார்கள் மித்ரனுடைய அழைப்பை ஏற்று. லெக்ஷ்மிக்கும் அவர்கள் இருவரையும் நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சியே. முதலில் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டார் லெக்ஷ்மி.

விஸ்வநாதனை யாராலும் கையில் பிடிக்க முடியவில்லை. கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றிய புராணம் பாடிக் கொண்டிருந்தார் மனிதர்.

"என் மகனும் மருமகளும் மட்டும் தனியா எப்படி மூணு குழந்தைகளையும் பார்த்துக்க முடியும்? ஆளுக்கு ஒன்னா தூக்கிக்கிட்டா கூட இன்னொரு குழந்தை அழுமே. அதனால நான், என் வொய்ஃப், என் தங்கச்சி லெக்ஷ்மி மூணு பேருமே சிங்கப்பூர் போயிடுவோம். குழந்தைகளுக்குக் குறைஞ்சது மூணு வயசாவது ஆகுற வரைக்கும் நாங்க அங்க தான் இருப்போம். அதனால நம்ம கிளப்போட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் நீங்க தான் பார்த்துக்கணும்" என்று தன் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

இவர் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து இவருக்குத் தெரியாமல் சிரிப்பதே சுஜாதா, பார்த்திபன் மற்றும் நேஹாவுக்கு பெரும் வேலையாகிப் போனது.

ஆகாய நீல வண்ணத்தில் அடர் பச்சை நிற பார்டர் அமைந்த மென் பட்டுடுத்தி சர்வ அலங்காரப் பூஷிதையாக நடக்க முடியாமல் அசைந்தாடி வருபவளை ஆசைத்தீரப் பார்த்திருந்தான் மித்ரன். அலங்காரம் செய்து விடுவதாகக் கூறி சம்ரிதியிடம் சென்றவனை தேஜூவும் நேஹாவுமாகச் சேர்ந்து வெளியே அனுப்பியிருந்தார்கள். அதன் பிறகு இப்பொழுதுதான் சம்ரிதியைப் பார்க்க முடிந்தது மித்ரனால்.

அருகில் வந்ததுமே மித்ரனை நோக்கிக் கையை நீட்டியிருந்தாள் சம்ரிதி. தேஜூ மற்றும் நேஹாவைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் கொண்டான் மித்ரன்.

மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார இருக்கையில் அவளை அமரவைத்து சந்தன குங்குமமிட்டு முதல் வளையலாகத் தான் வாங்கி வைத்திருந்த வைர வளையல்களை அணிவித்துவிட்டான் மித்ரன். அவன் ஒவ்வொன்றையும் செய்யும் பொழுதும் கண்களில் காதலும் கண்ணீரும் போட்டி போட இமைக்காமல் பார்த்திருந்தாள் சம்ரிதி.

பின் ஒவ்வொருவராக வளையலிட கோலாகலமாக நடந்து முடிந்தது வளைகாப்புப் பெருவிழா. சம்பிரதாயம் என்று சொல்லி சம்ரிதியை மட்டுமாகப் பார்த்திபன் மற்றும் நேஹாவின் துணையோடு லெக்ஷ்மி திருச்சிக்கு அழைத்துச் செல்ல இவர்கள் வீட்டை அடையும் முன்பாக அங்கு நின்றிருந்தான் மித்ரன்.

மெல்லிய சந்தன நிற இரவு உடை அணிந்து, முடியை மொத்தமாகத் தூக்கிக் கட்டி, கை நிறைய வளையல்களுடன் அவளுக்குப் பிடித்த மாமரத்தடியிலுள்ள ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் சம்ரிதி மித்ரனோடு.

அவர்கள் அருகில் வந்த லெக்ஷ்மி "உன்னோட வளைகாப்பிற்கு உங்க அப்பாவோட பரிசு இது" என்று சொல்லி ஒரு டைரியைக் கொடுத்தார் சம்ரிதியிடம்.

"இந்த டைரி பூரா உங்கப்பா உனக்காக எழுதின கவிதைகள் தான்டா இருக்கு. நீ பிறக்குறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டாங்க. உன்னோட ஒவ்வொருப் பருவ வளர்ச்சியின் போதும் அதைப் பத்தி இதுல ஒரு கவிதையாவது எழுதிடுவாங்க உங்கப்பா. இதை ரொம்பவே முக்கியமான நாளன்னைக்குத் தான் உனக்குத் தரணுமுன்னு வைச்சிருந்தேன். இதை விடப் பொருத்தமான நாள் வேற என்ன இருக்க முடியும்? அதான் கொடுத்துட்டேன். படிச்சுப் பாருடா" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் லெக்ஷ்மி.

மனம் முழுக்கப் பரவசத்துடன் அதைப் பிரித்தாள் சம்ரிதி. முதல் பக்கத்தில் ராஜனுடைய கையெழுத்தில் அழகாக மிளிர்ந்தன வார்த்தைகள் "எழுதுகிறேன் ஒரு கடிதம் - என் மகளுக்காக" என்று.6C487F0B-BB2C-403C-A642-FBF210BAEB06.jpeg
 
Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
அழகான எழுத்து நடை, அறிமுக எழுத்து என்று நம்ப முடியாது. அழகாக இனிமையாக கதையை கொண்டு சென்ற நேர்த்தி மனதை கவர்ந்த்து. அருமை ?
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாவ்! செம...சங்கி, அதுவும் அந்த அப்பாவின் டைரியில் தொடங்கிய வரியில் கொண்டு வந்து கதையின் தலைப்பை முடித்திருந்தது அருமை...
"எழுதுகிறேன் ஒரு கடிதம்..."
இவ்வளவு நாளும் சாதாரணமாக தான் கடந்திருந்தேன் அந்த வரிகளை.
ஆனால் இன்று...ஒரு மகளுக்காக அப்பா எழுதிய வரிகளாக அதை பார்க்கும் போது கொஞ்சம் நான் உணர்சி வசப்பட்டு போனதென்னவோ உண்மை தோழி...
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
வாவ்! செம...சங்கி, அதுவும் அந்த அப்பாவின் டைரியில் தொடங்கிய வரியில் கொண்டு வந்து கதையின் தலைப்பை முடித்திருந்தது அருமை...
"எழுதுகிறேன் ஒரு கடிதம்..."
இவ்வளவு நாளும் சாதாரணமாக தான் கடந்திருந்தேன் அந்த வரிகளை.
ஆனால் இன்று...ஒரு மகளுக்காக அப்பா எழுதிய வரிகளாக அதை பார்க்கும் போது கொஞ்சம் நான் உணர்சி வசப்பட்டு போனதென்னவோ உண்மை தோழி...
நானும் இதைத்தான் நினைத்தேன் சுவி. தலைப்பை அழகாக நியாயப்படுத்தும் நிறைவு.
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
எழுதுகிறேன் ஒரு கடிதம்......இத்தலைப்புக்கு அர்த்தத்தை ஆரம்பத்திலிருந்தே யோசித்திருந்தேன்....மித்துவுக்கும் சமிக்குமாக இருக்கும்னுதான் நினைத்திருந்தேன்....but அப்பாவுக்கும் மகளுக்குமாக இருக்கும்னு எதிர்பார்க்கவில்லை....lovely story...????
 
Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நைஸ் எபிலாக் அக்கா??...

மூணு பிள்ளையா... சூப்பர் ??

எழுதுகிறேன் ஒரு கடிதம்... நிஜமாவே அந்த தலைப்பு அப்பா பொண்ணுக்கா இருக்கும்னு நினைக்கல அக்கா... அருமையான பதிவு அண்ட் முடிவுக்கா????
 
Last edited:

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
ஒரு வருட காலம் கடந்திருந்தது. காலையில் கண் விழிக்கும் முன்பே மித்ரனின் கைகள் படுக்கையைத் துழாவ அருகில் சம்ரிதி இல்லை. சமையலறையில் இருந்து வந்தப் பாடல் சத்தம் அவள் அங்கு இருப்பதைக் கூறியது.

"பாவாடை அவிழும் வயதில்
கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே - உறவானவன்
கொலுசிலுள்ள ஓசை கேட்ட
மனசிலுள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரைப் போல - பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைத் தா நேநேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே"

உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தவளின் பின் சென்று இடையோடு அவளைக் கட்டிக் கொண்டான் மித்ரன்.

"என்னை எழுப்பாமத் தனியா நீ மட்டும் வந்து என்னடா பண்ணிக்கிட்டிருக்க?" தூக்கம் கலையாத நிலையில் அவள் தோளில் தலை சாய்த்தவாறே வினவினான்.

"ம்ச்... இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிடணும் போல இருந்துச்சு அத்தான். தூக்கமும் வரலை. அதான் இதையாவது செய்வோமேன்னு வந்தேன்."

"என்கிட்ட சொல்லியிருந்தா நான் செஞ்சு கொடுப்பேன்ல்ல"

"எவ்வளவு வேலை தான் அத்தான் நீங்க செய்வீங்க. பகல் பூரா என்னையும் பார்த்துக்கிட்டு ஆஃபீசையும் கவனிச்சுக்கிட்டு பிசியா இருக்கீங்க. ராத்திரியும் நான் தூங்கினப்புறம் உட்கார்ந்து ஆஃபீஸ் வேலை பார்க்குறீங்க. இப்பதான் அசந்து தூங்குனீங்க. அதான் எழுப்பலை."

"உங்க நாலு பேரையும் கவனிக்குறதை விட எனக்கு வேறென்ன வேலை? ஹ்ம்ம்" ஆம் சம்ரிதி இப்பொழுது கருவுற்றிருந்தாள். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று குழந்தைகள் அவள் வயிற்றுக்குள் இப்பொழுது அவர்களின் காதலுடைய சாட்சியாக முண்டிக் கொண்டிருந்தன.

வந்தே தீருவோம் என்று அடம் பிடித்த சுஜாதாவையும் லெக்ஷ்மியையும் இப்பொழுது வேண்டாம் என்று கூறித் தடுத்துவிட்டுத் தானே தன் மணவாட்டியைக் கவனித்துக் கொண்டான் காதலோடு.

உணவிலிருந்து தூக்கம் வரை அத்தனை விஷயத்துக்கும் அவனை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள் சம்ரிதி. முழுதாக ஆறு மாதக் காலம் முடிவடைந்த நிலையில் இப்பொழுதுதான் வாந்தியும் மயக்கமும் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. வளைகாப்பிற்காக நாளை இருவரும் இந்தியா கிளம்புகிறார்கள்.

"நாளைக்கு பிஃளைட் டிராவல் வேற இருக்குல்ல. இப்பப் போய் எதுக்கு உனக்கு இந்த வேலை? வா வந்து உட்காரு. மீதியை நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவளை அழைத்து வந்து ஹாலில் கால் நீட்டி வசதியாக அமர வைத்துவிட்டுத் திரும்பியவனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் சம்ரிதி.

"என்னடா"

"அத்தான் எனக்கு உங்களைக் கட்டிக்கணும் போல இருக்கு" என்று சொல்லிக் கைகளை நீட்டியவள், "ஆனா முடியலை" என்றவாறுப் பெரிதாகிப் போயிருந்த வயிற்றைத் தடவிக் கொண்டாள். சொல்லும்பொழுதே கண்ணீர் துளிர்த்துவிட்டது.

"அடடா என்னடா இது? கட்டிக்கணும் அவ்வளவுதானே" என்று சொல்லியவாறே அவளைப் பின்னிருந்து சற்று இறுக்கமாகவே அணைத்துக் கொள்ள,

"இப்படியில்ல... இப்படி" என்று முன்புறமாகக் கைகளைக் காட்டினாள் சம்ரிதி.

"இன்னும் ரெண்டே ரெண்டு மாசம் பொறுத்துக்குவீங்களாம். நம்ம குட்டீஸ் மூணு பேரையும் பத்திரமா வெளியே வந்ததுக்கு அப்புறம் நீயே சொன்னாலும் நான் உன்னை விட்டுத் தள்ளிப் போக மாட்டேன். சரியாடா" தன் குழந்தைகளுக்குத் தாயானவளைக் குழந்தையாகவே கொஞ்சிக் கொண்டிருந்தான் மித்ரன்.

இப்படிச் சிலப் பலக் கெஞ்சல்களோடும் கொஞ்சல்களோடும் அவர்களின் இந்தியப் பயணம் முடிந்து வளைகாப்பு நாளும் வந்து சேர்ந்தது. இந்தியா வந்து அம்மாவையும் அத்தையையும் பார்த்தப்பின் இன்னும் கொஞ்சம் கூடுதலாக செல்லம் கொஞ்சத் தொடங்கியிருந்தாள் சம்ரிதி.

திருமணத்திற்கும் சேர்த்து வைத்து வளைகாப்பை விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் மித்ரன். அர்ஜூன், அரவிந்தன் இருவரும் தத்தம் குடும்பத்தோடு வந்திருக்க சகோதரர்கள் நால்வரும் நெடு நாட்கள் கழித்து ஒன்று சேர்ந்த அந்தத் தருணத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.

தேஜூ தன் கணவர் சுரேஷ் ஆதித்யா மற்றும் தங்கள் ஒரு வயது மகள் ஆராதனாவுடன் வந்து கல்யாணத்தில் விட்டுப் போனதுக்கும் சேர்த்து வைத்து இப்பொழுது மித்ரனைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

நிரஞ்ஜன் மற்றும் டாக்டர்.விஜய நிர்மலாவும் கூட வந்திருந்தார்கள் மித்ரனுடைய அழைப்பை ஏற்று. லெக்ஷ்மிக்கும் அவர்கள் இருவரையும் நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சியே. முதலில் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியை யாருக்கும் காட்டாமல் மறைத்துக் கொண்டார் லெக்ஷ்மி.

விஸ்வநாதனை யாராலும் கையில் பிடிக்க முடியவில்லை. கண்ணில் தென்படுபவர்களிடமெல்லாம் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றிய புராணம் பாடிக் கொண்டிருந்தார் மனிதர்.

"என் மகனும் மருமகளும் மட்டும் தனியா எப்படி மூணு குழந்தைகளையும் பார்த்துக்க முடியும்? ஆளுக்கு ஒன்னா தூக்கிக்கிட்டா கூட இன்னொரு குழந்தை அழுமே. அதனால நான், என் வொய்ஃப், என் தங்கச்சி லெக்ஷ்மி மூணு பேருமே சிங்கப்பூர் போயிடுவோம். குழந்தைகளுக்குக் குறைஞ்சது மூணு வயசாவது ஆகுற வரைக்கும் நாங்க அங்க தான் இருப்போம். அதனால நம்ம கிளப்போட ஆக்டிவிட்டீஸ் எல்லாம் நீங்க தான் பார்த்துக்கணும்" என்று தன் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருந்தார் விஸ்வநாதன்.

இவர் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து இவருக்குத் தெரியாமல் சிரிப்பதே சுஜாதா, பார்த்திபன் மற்றும் நேஹாவுக்கு பெரும் வேலையாகிப் போனது.

ஆகாய நீல வண்ணத்தில் அடர் பச்சை நிற பார்டர் அமைந்த மென் பட்டுடுத்தி சர்வ அலங்காரப் பூஷிதையாக நடக்க முடியாமல் அசைந்தாடி வருபவளை ஆசைத்தீரப் பார்த்திருந்தான் மித்ரன். அலங்காரம் செய்து விடுவதாகக் கூறி சம்ரிதியிடம் சென்றவனை தேஜூவும் நேஹாவுமாகச் சேர்ந்து வெளியே அனுப்பியிருந்தார்கள். அதன் பிறகு இப்பொழுதுதான் சம்ரிதியைப் பார்க்க முடிந்தது மித்ரனால்.

அருகில் வந்ததுமே மித்ரனை நோக்கிக் கையை நீட்டியிருந்தாள் சம்ரிதி. தேஜூ மற்றும் நேஹாவைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் கொண்டான் மித்ரன்.

மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார இருக்கையில் அவளை அமரவைத்து சந்தன குங்குமமிட்டு முதல் வளையலாகத் தான் வாங்கி வைத்திருந்த வைர வளையல்களை அணிவித்துவிட்டான் மித்ரன். அவன் ஒவ்வொன்றையும் செய்யும் பொழுதும் கண்களில் காதலும் கண்ணீரும் போட்டி போட இமைக்காமல் பார்த்திருந்தாள் சம்ரிதி.

பின் ஒவ்வொருவராக வளையலிட கோலாகலமாக நடந்து முடிந்தது வளைகாப்புப் பெருவிழா. சம்பிரதாயம் என்று சொல்லி சம்ரிதியை மட்டுமாகப் பார்த்திபன் மற்றும் நேஹாவின் துணையோடு லெக்ஷ்மி திருச்சிக்கு அழைத்துச் செல்ல இவர்கள் வீட்டை அடையும் முன்பாக அங்கு நின்றிருந்தான் மித்ரன்.

மெல்லிய சந்தன நிற இரவு உடை அணிந்து, முடியை மொத்தமாகத் தூக்கிக் கட்டி, கை நிறைய வளையல்களுடன் அவளுக்குப் பிடித்த மாமரத்தடியிலுள்ள ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் சம்ரிதி மித்ரனோடு.

அவர்கள் அருகில் வந்த லெக்ஷ்மி "உன்னோட வளைகாப்பிற்கு உங்க அப்பாவோட பரிசு இது" என்று சொல்லி ஒரு டைரியைக் கொடுத்தார் சம்ரிதியிடம்.

"இந்த டைரி பூரா உங்கப்பா உனக்காக எழுதின கவிதைகள் தான்டா இருக்கு. நீ பிறக்குறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்சுட்டாங்க. உன்னோட ஒவ்வொருப் பருவ வளர்ச்சியின் போதும் அதைப் பத்தி இதுல ஒரு கவிதையாவது எழுதிடுவாங்க உங்கப்பா. இதை ரொம்பவே முக்கியமான நாளன்னைக்குத் தான் உனக்குத் தரணுமுன்னு வைச்சிருந்தேன். இதை விடப் பொருத்தமான நாள் வேற என்ன இருக்க முடியும்? அதான் கொடுத்துட்டேன். படிச்சுப் பாருடா" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் லெக்ஷ்மி.

மனம் முழுக்கப் பரவசத்துடன் அதைப் பிரித்தாள் சம்ரிதி. முதல் பக்கத்தில் ராஜனுடைய கையெழுத்தில் அழகாக மிளிர்ந்தன வார்த்தைகள் "எழுதுகிறேன் ஒரு கடிதம் - என் மகளுக்காக" என்று.View attachment 12674

Good Finish
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top