• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓ மை ஏஞ்சல் --அத்தியாயம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,401
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

omy.jpeg

அத்தியாயம் 7

தேவதாவின் அப்பாவைப் பெரிய பணக்காரர் எனச் சொல்லி விட முடியாது. பாரம்பரியமாய் நடுத்தர அளவில் ஒரு ஜவுளி கடை வைத்திருந்தார். இந்தக் கடை அவர் தாத்தா ஆரம்பித்தது. அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லாம் அதை விரிவுப்படுத்தாமல், வருவதைக் கொண்டு வாழ்ந்து முடித்திருந்தார்கள். தேவராஜூமே அப்படித்தான் இருந்தார்.
அவர்களது வீடு நடுத்தர வர்க்க மக்கள் வாழும் இடத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் மலர் தோட்டம் இருக்க, நடுவே அழகானதொரு இல்லம். அந்த இல்லத்தில் மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அழுகைச் சத்தமும் ஒப்பாரி சத்தமும் காதை நிறைத்தது. வீட்டின் நடு கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது தேவராஜீன் பூத உடல். அதன் அருகே அமர்ந்து கதறிக் கொண்டிருந்தாள் தேவதா. அவள் தாத்தாவோ, பேத்தியின் அருகிலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
“அந்த யமனுக்கு உசுரு ஒன்னு வேணும்னா, என் உசுர எடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா? வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளைக்கு ஒன்னும் பண்ணிப் பார்க்காம நட்டாத்துல விட்டுட்டுப் போயிட்டானே! ஐயோ கடவுளே” எனும் அவர் கதறல் கல் நெஞ்சையும் கரைத்தது.
தாத்தனின் புலம்பலில் இவளுக்கு இன்னுமே கண்ணீர் பெருக்கெடுத்தது. தேவதாவின் காலோஜ் மேட் எனும் போர்வையில் அங்கேயே இருந்து எல்லாவற்றுக்கும் உதவிக் கொண்டிருந்த சங்கத்தமிழனுக்குத் தன்னவளின் கண்ணீர் மனதைப் போட்டுப் பிசைந்தது. அருகில் நின்று ஆறுதல் சொல்லக் கூட வழி இல்லாது மறுகி நின்றான்.
ஐ.சி.யூவில் மயங்கி கீழே விழுந்து கிடந்தவளை கண்ட நொடியில் இருந்து அவளைத் தன் கை வளைவுக்குள்ளே வைத்துக் கொள்ள வேண்டும் எனத் துடித்தது இவனுக்கு! ஆனால், இறப்புக்கு வந்திருந்த சொந்தபந்தங்கள், நண்பர்கள் எல்லோர் முன்னும் அவள் காட்சிப் பொருளாகிப் போகக் கூடாது எனத் தள்ளியே நின்றான்.
நிற்காமல் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட சக்தியின்றி கண்ணாடி பெட்டியில் இருந்த தகப்பனையேப் பார்த்திருந்தாள் தேவதா. கடைசி மூச்சை விடும் முன் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன.
“அம்மாடி! தேவதா”
“அப்பா!” எனக் கண் கலங்கினாள் இவள்.
போன தடவைப் பார்த்ததை விட இன்னும் இளைத்திருந்தார். கண்களில் மட்டும் ஒளி இருந்தது.
“அப்பா உன் அம்மாவைத் தேடிப் போகற நேரம் வந்திடுச்சு போலடா!”
“ஐயோ! அப்படிலாம் சொல்லாதீங்கப்பா”
அவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“பொம்பள புள்ளய எல்லோரும் பொத்தி வளர்ப்பாங்க! ஆனா நானோ, யாரயும் சார்ந்து நீ வாழ கூடாதுன்ற எண்ணத்துல உன்னை வளர்த்தேன். நான் இல்லைன்னா கூட என் மக இந்த பூமியில பொழச்சிப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தேவதா! உனக்கு அன்பையும், பாசத்தையும் நான் காட்டல! ஏன்னா எனக்கு காட்டத் தெரியல! உங்கம்மா கிட்டயும் நான் இப்படித்தான் இருந்தேன்! ஆனா அவ அதையெல்லாம் எதிர்ப்பார்த்தது போலக் காட்டிக்கிட்டதே இல்ல! அன்பையும், பாசத்தையும், காதலையும் அள்ளிக் குடுத்தா எனக்கு! கிடைக்கற வரைக்கும் அதோட அருமை தெரியல! கடை, புடவை, பணம்னு வாழ்ந்துட்டேன். உடம்பு சரியில்லாம அவ இருந்தப்போ கூட நான் அதை சீரியஸா எடுத்துக்கல! எல்லாருக்கும் வரதுதானேன்னு அலட்சியமா இருந்துட்டேன். கடைசி ஸ்டேஜ்லதான் உயிர்க்கொல்லி நோய்னு தெரிஞ்சது! அவளும் போராடிப் பார்த்து முடியாம போய் சேர்ந்துட்டா!” என்றவருக்கு மூச்சு வாங்கியது.
“அப்பா!” எனக் கலங்கியவள் அவர் நெஞ்சை நீவி விட்டாள்.
பின் மெல்ல மீண்டும் பேச ஆரம்பித்தார் தேவராஜ்.
“அவ போனதும்தான் வாழ்க்கைல என் சந்தோஷமும் கூடவே போய்டுச்சுன்னு புரிஞ்சது. குற்ற உணர்ச்சி என்னைப் போட்டுக் கொன்னது! பொண்டாட்டிய இன்னும் கொஞ்சம் கேர் எடுத்துப் பார்த்துருக்கலாமே, இன்னும் கொஞ்சம் அன்பா பேசிருக்கலாமே, ஒரு வாய் சோறு ஊட்டி விட்டிருக்கலாமேனு பல எண்ணங்கள். ஒவ்வொன்னும் நெஞ்சைக் குத்திக் கிழிச்சது! இப்படியே எனக்குள்ளேயே புழுங்கிப் போய் கிடந்தேன்! வாழ்க்கைல இனி எந்த சந்தோசத்துக்கும் லாயக்கில்லாதவன் நானுன்னு மனசுல பலமா விழுந்து போச்சு! உங்கம்மா கூடவே போய்டனும்னு நெனைச்சேன். ஆனா நீ இருக்கியே! எப்படி போக?” என்றவரின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது.
“நீ அப்பான்னு ஓடி வரப்போ, ஐயோ அவ இருந்து அனுபவிக்க வேண்டிய அன்பில்லையா இது! அவள யமனுக்குத் தூக்கிக் குடுத்துட்டு நான் எப்படி உன் பாசத்த அனுபவிக்கறதுன்னு உள்ளுக்குள்ள துடிக்கும்! அதனாலத்தான் உன்னை ஒதுக்கி வச்சேன்”
இவளுக்கு மனது சுருக்கென வலித்தது.
‘செத்துப் போனவங்களுக்கு நீங்க செய்யாத அன்புக்காக, உசுரோட இருந்த எனக்கு அன்ப மறுத்து என் மனசைக் கொன்னுட்டீங்களேப்பா’ என நினைத்தவள், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகப்பன் முன்னே எதையும் சொல்லவில்லை.
“அதோட நீ வளர ஆரம்பிக்கவும், உடம்புல மாற்றங்கள் தெரியவும் ஒரே தவிப்பா போச்சு எனக்கு! அம்மான்னு ஒருத்தி இருந்து இது என்ன, அது என்னன்னு உனக்கு விளக்கிச் சொல்லி, எப்படி நடக்கனும்னு உன்னை கைட் பண்ண இருந்திருக்கனும்! என் அலட்சியத்துனால இல்லாம போய்ட்டான்னு இன்னும் உடைஞ்சுப் போய்ட்டேன்! அதனாலத்தான் உனக்கு கைட் பண்ணறதுக்கு ஏதுவா ஒரு ஸ்கூல்ல சேர்த்து அங்கயே தங்க வச்சேன்!”
“போதும்பா ரொம்ப பேசாதிங்க! மூச்சு வாங்குது பாருங்க!”
“இருமா! பேசி முடிச்சிடறேன்! இனிமே பேச சான்ஸ் கிடைக்குமோ என்னமோ! உன்னை இண்டிபெண்டண்டா வளர்த்தேன்! ஏன் தெரியுமா? நீ உன்னைப் பார்த்துக்குவன்னு தெரிஞ்சா, உங்கம்மா கிட்ட சீக்கிரம் போய்டலாமேன்னுதான்! இந்த அப்பா உனக்கொரு கல்யாணம் கட்டி வைக்கலியேன்னு நெனைச்சிறாத பாப்பா! கல்யாணத்த விட படிப்பும் தன்னம்பிக்கையும்தான் உனக்கு நல்ல வழிய காட்டும்! உங்கம்மா என்னைக் கல்யாணம் கட்டி என்ன சுகத்த கண்டுட்டா!!! உசுர விட்டதுதான் மிச்சம்! நாள பின்ன உன்னை நல்லபடி பார்த்துக்குவான்னு நீ நம்பற ஒருத்தன கட்டிக்கோடா! இந்த அப்பாவோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும்”
“இப்படிலாம் பேசாதீங்கப்பா! தூரமா இருந்தாலும், எனக்குன்னு அப்பான்ற ஒருத்தர் இருக்காரு! அவரோட அக்கறை எனக்கு
 




vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
962
Reaction score
113,401
Location
anywhre
ஆசீர்வாதமா இருக்குன்னு வாழ்ந்துட்டு இருக்கேன்! என்னை விட்டுப் போய்டாதீங்கப்பா!”
“கண்ணு! என்னை விட்டுடுடா! உங்கம்மா கிட்ட போகறப்ப நான் எந்த மனக் கவலையும், சஞ்சலமும் இல்லாம போகனும்டா! இந்த நெஞ்சு வலி ரொம்ப நாளா இருக்கு எனக்கு! ஆனா அதுக்கான எந்த சிகிச்சையும் நான் எடுத்துக்கல! சாவ இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கேன்! நானே என் உயிர எடுத்துக்கிட்டு உன்னை அநாதையா விட்டுட்டுப் போனாத்தானே தப்பு! அதுவா வரப்போ சந்தோஷமா ஏத்துக்கறேன்டா! அப்பாவ வழி அனுப்பி விடு தேவதா”
“ஐயோ அப்பா!” எனக் கதறினாள் இவள்.
“போங்கப்பான்னு சொல்லு!”
கண்களில் இருந்து அருவியாய் நீர் இறங்க, தகப்பனின் நெற்றி வருடியவள்,
“அம்மா கூட இனியாச்சும் சந்தோஷமா இருங்கப்பா! என்னை நெனைச்சு எந்த கவலையும் வேணாம் உங்களுக்கு! என்னை நான் நல்லாவே பார்த்துப்பேன்! ஹேப்பி ஜேர்னிப்பா! அம்மாவ நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்னு சொல்லுங்க! ஐ லவ் யூப்பா!” எனக் குரலடைக்கச் சொன்னாள்.
“லவ் யூடாம்மா” என்றவரின் கண்கள் மெல்ல மூடியது.
பக்கத்தில் இருந்த ஹார்ட் பீட் காட்டும் கருவி மெல்ல நேர்க்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தது. இவளுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வர, அப்படியே மயங்கி சரிந்தாள். மயக்கத்தில் இருந்து கண் விழிக்கவே மூன்று மணி நேரங்கள் ஓடி இருந்தன. அவள் அருகிலேயே பதட்டத்துடன் இருந்தான் சங்கத்தமிழன். பெற்றவர்களுக்கு அழைத்து விவரத்தைச் சொன்னவன், இன்னும் சில நாட்கள் இங்கே தங்கி விட்டுத்தான் வருவேன் எனத் தெரிவித்திருந்தான்.
“தேவதா”
தகப்பனின் முகத்தைப் பார்த்தபடி இருந்தவள், தாத்தாவின் குரலில் நிமிர்ந்து பார்த்தாள்.
“சாங்கியம்லாம் செய்யனும்மா! எழுந்துக்க” எனச் சொல்ல, கரகரவெனக் கண்ணீர் இறங்கியது கண்ணில்.
பட்டென அவள் அருகே வந்த சங்கத்தமிழன், மெல்லியக் குரலில்,
“அழாதடி! மறுபடி மயக்கம் வந்திடப் போகுது! இப்படி அழுதினா அப்பா எப்படி சந்தோஷமா அம்மா கிட்ட போவாரு! ப்ளீஸ்! அழாதே” என்றான்.
மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண் விழித்த நொடி, இவனைக் கட்டிக் கொண்டு கதறியவள் எல்லாவற்றையும் சொல்லி இருந்தாள். தலையைச் சரியென ஆட்டியவள், கண்ணைத் துடைத்துக் கொண்டாள். அதன் பிறகு மளமளவென சாங்கியங்கள் நடந்தன. ஆண் குழந்தை இல்லாததால், பெற்ற மகனுக்குத் தகப்பனே கொள்ளியிட்டார்.
இறப்புக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போனதில், வீடே வெறிச்சோடிக் கிடந்தது. தாத்தாவும் பேத்தியும் குளித்து முடித்து, அமைதியாக அமர்ந்திருந்தனர். பக்கத்து வீட்டில் இருந்து உணவு வந்திருக்க, இருவரையும் சாப்பிட அழைத்தான் சங்கத்தமிழன். பேத்தியின் தோழன், கூடமாட எல்லாம் செய்தவன் என அவன் மேல் பிரியம் வந்திருந்தது தாத்தாவுக்கு.
“ஃபிரண்டு கூப்பிடறான் பாரு போய் சாப்பிடு தாயி!” என்றார் தாத்தா.
“நீங்களூம் வாங்க தாத்தா” என அழைத்தாள் இவள்.
“கொஞ்ச நேரமாகட்டும்மா! வயசாகுதுல்ல! நெனைச்சப்ப சாப்பிட முடியறது இல்ல! நான் ரூமுல கொஞ்ச நேரம் படுத்து இருக்கேன்” என்றவர், மெல்ல நடந்து உள்ளே போய் விட்டார்.
இத்தனை நாட்களாய் மகன் அருகிலேயே வாழ்ந்திருந்தவருக்கு, அவன் இல்லாமல் போய் விட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஓய்ந்து போயிருந்தார்.
தட்டில் உணவிட்டு எடுத்து வந்த சங்கத்தமிழன், தேவதாவின் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஆ காட்டு”
இவள் வாயைத் திறக்க, உணவை ஊட்டி விட்டான் இவன்.
“நீயும் சாப்பிடு சங்கு!”
தனக்கும் போட்டு எடுத்து வந்து அவள் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டான்.
“சங்கு!”
“ஹ்ம்ம்”
“நீ கெளம்பலியா?”
“இப்படி உன்னை விட்டுட்டு எப்படி போவேன் ஏஞ்சல்?”
சோகையாய் புன்னகைத்தவள்,
“நான் தேறிக்குவேன் சங்கு! தாத்தாவ நெனச்சாத்தான் பயமா இருக்கு!” என்றவள் பெருமூச்சொன்றை விட்டாள்.
“கடந்துதான் ஆகனும்டா ஏஞ்சல்! நீயும் மனச போட்டு உலப்பிக்காதே! ஹாஸ்பிட்டல் தரைல அலங்கோலமா விழுந்து கிடந்த உன்னைப் பார்த்து உசுரே போய்டுச்சு தெரியுமா எனக்கு! மரணபயம் காட்டிட்டடி!”
“நைட் சரியா தூங்கலல ட்ரைன்ல! அதோட அப்பா பேசனத கேட்டு ரொம்ப இமோஷனலா ஆகிட்டேன் சங்கு! அதான் கண்ணைக் கட்டிருச்சு போல! நான் இப்போ ஓகேத்தான்! நீ கிளம்பு! நான் இங்க என்ன, ஏதுன்னு பார்த்து செட்டில் பண்ணிட்டு சீக்கிரம் வந்துடறேன் சென்னைக்கு!”
முக்கியமானவற்றை முடித்து இமேயில் அனுப்பி விட்டு வந்திருந்தாலும், இன்னும் நிறைய வேலைகள் மீதமிருந்தன. அரக்கப் பறக்க செய்தால் கூட டேட் லைனுக்குள் ப்ராஜக்டை முடிக்க முடியுமா எனச் சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனாலும் இவளை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் மனம் வரவில்லை.
“சங்கு! இங்க அப்பாவோட கடை, தாத்தாவுக்கு ஒரு வழின்னு நான் செஞ்சு முடிக்க வேண்டியது நெறைய இருக்கு! கணக்கு வழக்குலாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்! அதெல்லாம் முடியற வரைக்கும் நீ இங்க இருக்கறது சாத்தியமில்ல! எவ்ளோ ஹெவி ஸ்கேடியூல்ல என் கூட இங்க வந்தன்னு எனக்கு நல்லாவே தெரியும்! நீ போய் வேலையைப் பாரு! அரியர் கிரியர் வச்சிடாதே ப்ளீஸ்! நம்ம ப்ளான்லாம் சொதப்பிடும்! எனக்கு உன் கூட சீக்கிரமா சேர்ந்து இருக்கனும் சங்கு! சோ போய் படிக்கற வேலையைப் பாரு! அதோட நீ என் கூடவே இருந்தா, சாஞ்சிக்க தோள் இருக்குன்னு என்னால சுயமா செயல்பட முடியாது! எல்லாமே லேட்டாகும்! நான் சீக்கிரம் வந்திடுவேன்டா சங்குகுட்டி!” எனச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் இவள்.
துன்பத்தில் தோள் கொடுக்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தோடே கிளம்பிப் போனான் சங்கத்தமிழன்.
“கண்ணு”
“சொல்லுங்க தாத்தா!”
“என்னோட நண்பன் ஒருத்தன், நர்சிங் ஹோம்ல இருக்கான். அங்க வயசானவங்கள நல்லா பார்த்துக்குவாங்களாம்டா! நானும் அவன போய் பார்க்கறப்போ இடத்த கவனிச்சேன். குடில் அமைப்புல, சுத்தமா இருந்தது! சாப்பாடும் ஓகேதான்! மாசா மாசம் ஒரு தொகைய ஃபீஸா கட்டனும்! அவனும் என்னைக் கூட வர சொல்லிக் கூப்பிட்டே இருக்கான். உங்கப்பா தனிச்சிப் போய்டுவானேன்னு கூடவே இருந்தேன்! இப்போ அவனே என்னை விட்டுட்டுப் போய்ட்டான்” என்றவருக்குக் கண்ணீர் வந்தது.
கண்ணைத் துடைத்துக் கொண்டு,
“என்னை அங்க சேர்த்து விட்டுடு ராஜாத்தி! இந்த வயசான கட்டைக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு! நீ சென்னைல இருந்தே படிச்சு முடி! இந்த வீட்டை வாடகைக்கு விட்டுடலாம்! நம்ம கடையைப் பக்கத்து கடைக்காரன் வாங்கிக்கறேன்னு கேட்டுட்டுப் போனான். அவனுக்கே வித்துடலாம்! வித்த காச உன் பேருல போட்டுக்கோ! இந்த வீட்டு வாடகைய எடுத்து என் நர்சிங் ஹோமுக்கு கட்டிடலாம். பாங்குல இருக்கற பணம், உங்கம்மாவோட நகை நட்டு எல்லாத்தையும் எடுத்துகோடா கண்ணு! உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சிக்கோ! சந்தோஷமா வாழு! இந்த தாத்தனோட பொறுப்பு உனக்கு வேணா! நேரம் கிடைக்கறப்போ ஓர் எட்டு வந்துப் பார்த்துட்டுப் போடா ராஜாத்தி! அது போதும் எனக்கு” என்றவரைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள் இவள்.
இவள் சென்னைக்கு அழைத்துப் போகிறேன் எனக் கெஞ்சியும், பிடிவாதமாக நர்சிங் ஹோமில் சேர்ந்து கொண்டார் தாத்தா. வாழ வேண்டிய குருத்துக்கு ஒரு பாரமாய் போய் உட்கார்ந்து கொள்ளப் பிடிக்கவில்லை அவருக்கு. கோவையில் எல்லாம் செட்டில் செய்து, தகப்பனுக்குக் காரியமும் செய்து விட்டு சென்னைக்குக் கிளம்பி விட்டாள் பெண்.
ரயில் நிலையத்தில் இவளுக்காகக் காத்திருந்தான் சங்கத்தமிழன். அவனைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தேவதா.
“லவ் யூ சங்கு!!!”
“லவ் யூ அன்ட் மிஸ்ட் யூ சோ மச் ஏஞ்சல்!!” என்றவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.
அதற்குப் பிறகு வந்த நாட்களில் தேவதாவை கண்ணுக்குள் பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டான் சங்கத்தமிழன்.

(மை ஏஞ்சல்???)
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
171
Reaction score
726
Location
Ullagaram
அச்சோ...! பேரை மட்டும் தேவதான்னு வைச்சிட்டு, இந்த சின்ன பொண்ணுக்கு இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும், கொடுத்துட்டு யாருமில்லாமலும் பண்ணிட்டாங்களே. இனிமேலாச்சும் நிம்மதி கிடைக்குமா..? இல்லை சோதனைகளும், வேதனைகளும் தொடருமா தெரியலையே...?
:unsure: :unsure: :unsure:
CRVS or CRVS 2796
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top