• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤️MPK 18❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
974
Reaction score
1,226
Location
Banglore
eiJGM8914752.jpg
வணக்கம் தோழமைகளே,

இதோ 'மனம் பறித்த காரிகையே - 18'

படிச்சிட்டு கண்டிப்பா மறக்காம உங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...

போன எபிக்கு 'லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்' மூலம் நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.


Happy reading😀📖
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
974
Reaction score
1,226
Location
Banglore
மனம்❤️18


“கடல் அலை வந்து கரைக்கிட்ட அதோட காதலை சொல்லுதாம் ஆனா கரை அத புரிஞ்சுக்காம போயிடுதாம். ஆனா விடாத அந்த அலை தன்னுடைய காதலை இந்த கரை கிட்ட சொல்லிக்கிட்டே இருக்குதாம்மா. என்ன ஒரு கற்பனை பார்த்தீங்களா அந்த கவிஞர்க்கு.” எனக் கடலையே பார்த்தபடி அவள் கூற,

“படிக்கிற பழக்கம் வேற இருக்கு போலயே.” என வினாவினான் ராம்.

“ஆமா படிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும் கதை, கவிதை, பயண கட்டுரைகள், நாவல்ஸ் எல்லாமே படிப்பேன். இப்ப லேட்டஸ்டா ரொமான்டிக் நாவல்ஸ் படிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு.” எனக் கண்ணடித்துக் கூறியவளை பார்த்தவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதாய் தோன்றியது அவனுக்கு.

‘உன்ன பாத்ததுல இருந்து ஏதோ ஒரு விதத்துல நீ என்ன ரொம்ப ஈர்க்குற.’ எனத் தனக்குள்ளே கூறிக் கொண்டான்.

இதுவரை பணத்திற்காக காதலை சொன்ன பெண்களைப் பார்த்தவன். தன்னைவிட ஸ்டேட்டஸில் பெரிய இடத்தில் இருப்பவள் கொஞ்சம் கூட அந்த பண திமிர் இவளிடத்தில் இல்லை. அவள் அழகோ முதல் முறையே அவனைக் கவர்ந்த ஒன்று. அதிகமாக பெண்களுக்கு என்று செய்வது அவர்களை மேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது என்பதுதான். இவளுக்கு இயற்கையிலேயே இவ்வளவு அழகு இருந்தும் அதை அவள் பெரிதாக கணக்கில் கொள்வது போல் தெரியவில்லை. வாழ்க்கையைப் பற்றி அவள் கூறிய தத்துவங்கள் இவனை வியப்படைய செய்தது. இந்த சிறிய பெண்ணுக்குள் இவ்வளவு பெரிய விஷயங்கள் ஒளிந்து இருக்கிறதா என்ற வியப்புதான் அது. அவளின் இயல்பான பேச்சு, சட்டென்று குடும்பத்தினரிடம் ஒட்டிக்கொண்ட பாங்கு, நான் பெரிய இடத்துப் பெண் என்னால் எல்லாம் சமைக்க முடியாது என்று பிக்கு செய்யாமல் வீட்டிற்கு வந்த முதல் நாளே சமையலறையில் தன் கைவண்ணத்தை காட்டியது என ஒவ்வொரு விஷயத்திலும் அவனை ஈர்த்தாள் அவள்.

இப்படி ஏதேதோ சிந்தனைகள் உழன்று கொண்டிருந்தவனை கூப்பிட்டாள் சாத்வி. அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாது போகவே, அவனை உலுக்கினாள்.

“ஆங் என்ன சது?” எனத் திடீரென அவள் உலுக்கியதில் கேட்க,

“ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன் அப்படி என்ன யோசனை?”

“அது...”

‘உன்ன பத்தின நினைப்புதான்.’ என நினைத்தவனை மீண்டும் உலுக்கினாள்.

“என்னடா முதல் நாள் விளையாட்டுன பிரீஸ் அண்ட் ரிலீஸ் கேம கொஞ்ச நாளா மறந்து இருந்திங்களேனு பார்த்தேன் திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா?” என இவள் கூறவும்,

பின்னத்தலைக்கோதி சிரித்துக் கொண்டான் அவன்.

“ஊத காத்து அடிக்குது கிளம்பலாமான்னு கேட்டேன்.” என அவள் திரும்பவும் கூற,

“சரி வா.” என சட்டென அவன் எழுந்து இவளுக்கும் கை கொடுத்தான்.

வீடு சென்று சேர்ந்தவர்களை அவளுடைய அறை பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் அர்ஜுனும் சந்தியாவும்.

“என்னங்க இந்நேரத்துக்கு கார் வெளியே போயிட்டு வருது.” என்ற சந்தியாவிற்கு,

“பீச்சுக்கு போயிட்டு வராங்கனு நினைக்கிறேன்.” என்ற பதிலை தந்தான் அர்ஜுன். அதன் பின் அவர்களைப் பற்றி வழக்கம் போல புலம்ப,

“ஆரம்பிச்சிட்டீங்களா நான் தான் சொல்றேன் இல்ல அவங்கள அவங்க போக்குல விடுங்க அவங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தரும் புடிச்சிருக்கு. அது அவங்களா புரிஞ்சுகிட்டா தான் உண்டுனு.” எனச் சலித்துக் கொண்டே பதில் கூறினாள்.

“என்னடி ரொம்ப தான் சலிச்சிக்கிற. அவங்க ரெண்டு பேரும் லைஃப்ல நல்லா இருக்காங்களா இல்லையான்னு தெரியாம நம்ம மட்டும் சந்தோஷமா இருக்கிறது கில்டியா இருக்கிற மாதிரி இருக்கு. அதனால தானே சொன்னேன்.” என்றவனை ஒரு மாதிரி பார்த்து வைத்தாள் சந்தியா.

இத்தனை வருடம் ஆசை ஆசையாக காதலித்து கல்யாணம் செய்து கொண்டு, இப்பொழுது அந்த வாழ்வை ரசித்து அவனுடன் வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் குற்றவுணர்வாக இருக்கிறது என்று அவன் பேசினால் அவளுக்கு எப்படி இருக்கும்? இதில் வேறு நாளை பாலிக்கு அவர்களுடன் சேர்ந்து செல்ல வேண்டுமே அவர்கள் நன்றாக பழகவில்லை என்றால் அதற்கும் இவர் ஏதாவது கூறுவாரோ? என்ற எண்ணம் தான் ஓடிக்கொண்டிருந்தது சந்தியாவிற்கு.

இங்கே சாத்வி ராமின் அறையிலோ இருவரும் உறங்க முயல உறக்கம் தான் வர மறுத்தது.

“நாம ஏதாச்சும் படம் பாக்கலாமா எனக்கு தூக்கமே வரல.” எனக் கேட்டாள் சாத்வி.

“படமா?” என எழுந்தமர்ந்தான் ராம்.

“ஆமா நம்ம வீட்ல மினி தியேட்டர் இருக்குன்னு சொன்னீங்க. ஆனா அது நீங்க காட்டவே இல்லையே. அங்க போய் படம் பாக்கணும்னு ஆசையா இருக்கு கூட்டிட்டு போறீங்களா?” என மூக்கை சுறுக்கி கேட்டவளை பார்த்தவன் முகத்தில் சிரிப்பு வர,

“சரி வா.” என அழைத்து சென்றான்.

மாடிக்கு செல்லும் லிப்டின் அருகே வந்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு லிப்ட்டினுள் ஏறினான். மொட்டை மாடிக்கு சென்றவுடன் வாயைப் பிளந்தாள் சாத்வி. இரண்டு வீட்டிற்கும் சேர்த்து ஒரே மொட்டைமாடி அதனால் மிகவும் பெரியதாக இருந்தது அது.

அதில் அழகிய தோட்டம் அமைத்து நடுவே அனைவரும் அமர்ந்து பேசும் படி பெரிய வட்ட மேசையும் அதற்குரிய நாற்காலிகளும் கல்லால் செதுக்கப்பட்டிருந்த அந்த இடத்தை ஏதோ பார்க் போல் வடிவமைத்திருந்தார்கள்.

“வாவ் செமப்பா.” என வாய் திறந்தே கூறினாள் அவள்.

“ஃபுல் கிரெடிட்ஸ் கோஸ் டு மாமி.”

“குணா ம்மா வா!” என ஆச்சரியமாய் கேட்டாள் சாத்வி.

“ஆமா மாமியோட ஐடியா தான் இதுதெல்லாம்.”

“குணா ம்மாக்குள்ள இவளோ திறமை ஒளிச்சி இருக்கா!” என்றவள் அவனை பின் தொடர்ந்து சென்றாள்.

அங்கே மாடியிலேயே சுவரில் இருக்கும் அதே டிசைன் உடன் மிக மிக நுணுக்கமான மாற்றம் மட்டுமே தெரிந்தது அந்த சுவருக்கும் கதவுக்கும். அது கூட மிகவும் உத்து பார்த்தால்தான் அங்கே ஒரு கதவு இருப்பதே தெரியும் அதைப்போல் அமைத்திருந்தார்கள் அந்தக் கதவை.

அதன் உள்ளே சென்றால் ராம் சொன்ன மினி தியேட்டர். உண்மையிலேயே திரைப்படங்கள் இருப்பது போன்ற பெரிய திரை இருந்தது அங்கே. உட்காரம் இருக்கைகள் கூட அதிகமாகவே இருந்தது ஒரே முறை ஒரு முப்பது பேர் அமர்ந்து படம் பார்க்கும் அளவு பெரிதாகவே இருந்தது.

“இவ்ளோ சீட்டிங்ஸ்ஸா?” என வாய் பிளந்தால் சாத்வி.

“எப்படியும் அஜ்ஜுக்கும் எனக்கும் மேரேஜ் ஆகும். அந்தந்த பொண்ணுங்க வீட்ல இருக்க அப்பா, அம்மா அவங்களோட அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி அவங்களுக்கு நெருக்கமானவர்கள் அந்த பொண்ணுங்களோட பிரண்ட்ஸ், நம்ம வீட்டு ஆளுங்க இப்படி எல்லாரையும் மனசுல வச்சுக்கிட்டு ரெடி பண்ணுது.”

“எனக்கும் சந்தியா அக்காவுக்கும் கூட பிறந்தவங்க யாருமே இல்லயே.” என இவள் கூற,

“அது என்னவோ நம்ம நாலு பேருக்கும் கூட பொறந்தவங்க யாரும் இல்லாமல் போயிட்டாங்க. பட் அது ஒன்னும் பிரச்சனை இல்ல அதுக்கு பதில் தான் நம்ம பசங்களாம் வருவாங்களே!” என இவளிடம் பேசிக்கொண்டு படம் போடுவதற்கு அனைத்தையும் தயார் செய்தான் ராம்.

சாதாரணமாக அவளிடம் கூறிவிட்டான். ஆனால் தான் கூறியது மீண்டும் நினைவுபடுத்தி பார்த்தவனுக்குள் தங்களின் பிள்ளைகள் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்துப் பார்த்து அதில் சாத்வியின் முகத்தையே கண்டான்.

“என்ன படம் போடட்டும்?” என ராம் கேட்க,

“உங்க இஷ்டம்.” என நன்றாக சீட்டில் அமர்ந்துக் கொண்டாள் சாத்வி.

“டும் டும் டும் போடட்டுமா என்னவோ அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என இவன் சொல்ல,

“எனக்கும் பிடிக்கும்ப்பா ஜோவும் மேடியும் செம பேர் அதுல.” என குதூகலமானாள் சாத்வி.

“ஆமா.” என்றவன் படத்தை ஓட விட்டான்.

“இந்த படத்தை பல தடவை பார்த்திருக்கேன் ஆனா இதே மாதிரியே எனக்கும் திடீர்னு இப்படி கல்யாணம் பேசுவாங்க நினைச்சு பாக்கல.” என்றான் ராம்.

“ஆனா நம்மள மாதிரி கல்யாணம் பண்ணிக்கலையே அவங்க எடுத்த உடனே அதை நிறுத்துறதுக்கு தானே ட்ரை பண்றாங்க.” என்றாள் சாத்வி.

“சப்போஸ் உனக்கு இதுல விருப்பம் இல்லனா நிறுத்தற ஐடியாவுல தான் இருந்தேன்.” என்றான் ராம்.

“ஓ! அப்போ என்னால தான் நம்ப கல்யாணம் நடத்து இருக்கு. அதுக்கு நீங்க ஏதும் ரேகிரேட்(வருத்தம்) பண்றிங்களா?” என அவள் கேட்டு அவனையே பார்க்க,

திரையிலிருந்து பார்வையை அவள் புறம் திரும்பியவன். அவள் கேட்டது போல் இந்த திருமணம் நடந்ததற்காக வருத்தப்படுகிறோமா? என அவன் யோசித்துப் பார்த்தான்.

இல்லை இந்த திருமணம் நடந்து விட்டதே என்ற வெறுப்போ வருத்தமோ அவனுக்கு இல்லை. இன்னும் சொல்ல போனால் கல்யாணத்துக்கு பிறகு அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். யோசித்துப் பார்த்தால் அவனுடைய தனிமை உணர்வு இப்பொழுது எங்கே போனது என்று தெரியவில்லை.

“இல்ல உண்மைய சொல்லும்னா நான் ஹேப்பியா தான் இருக்கேன் நீ?” என பதிலுக்கு அவளை வினவ,

“சேம் ஹெர்(same hear)(எனக்கும் அப்படி தான்).” எனத் தலையாட்டி தோளை உலுக்கினாள் அவள்.

பின், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு திரையில் பார்வையை பதித்தார்கள்.

அந்தப் படத்தில் திருமணத்தை நிறுத்துவதற்காக ஹீரோ இன்னொரு பெண்ணைத்தான் காதலிப்பதாக கூறி தன் நண்பனின் காதலியை கைகாட்டி திருமணம் நிறுந்த முயற்சிகள் எடுத்தான்.

“நல்லவேளை நீங்க எதுவும் மேரேஜ் நிக்க இன்னொரு பொண்ண கூட்டுட்டு வந்து நிறுத்தல.”

“அப்படி ஒரு ஐடியாவே வரலம்மா.”

“அது வரைக்கும் சந்தோசம்.”

“ஏன்?”

“ஏன்னா நான் கல்யாணத்துக்கு பிஸ் ஆயிட்டேன். நீங்க அதை நிறுத்தி இருந்தீங்கன்னா அடுத்து என்ன பண்றதுன்னு லைட்டா ஜெர்காகி இருக்கும் இல்ல.”

ராம், “அது சரி” என மீண்டும் படத்தில் கவனத்தை திருப்பினான்.

அந்தப் படத்தில் ஒரு காட்சி ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருமே திருமணத்திற்கு முந்தின நாள் இரவு பேசிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் பிடித்து போய் அந்த திருமணத்தை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த வேலை அந்த திருமணம் எதிர்பாராமல் நின்று விடும்.

“ச்ச…கிட்டத்தட்ட ரெண்டு பேரும் மேரேஜ்க்கு ஓகேன்னு வந்துட்டாங்க இப்ப பார்த்து நின்னுடுச்சு பாருங்க.” என அவன் தோளில் தட்ட,

“சரி அதுக்கு நீ எதுக்கு என் தோள பதம் பாத்துக்கிட்டு இருக்க.” எனத் தோளை அவன் தடவி கொடுக்க,

“சாரிங்க கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்ட.” என்றாள் பாவம் போல்.

“ம்…” என தலையாட்டி மீண்டும் திரையில் கவனத்தை பதித்தவனின் தோளில் தன் தலை சாய்த்து இருந்தாள் சாத்வி.

“சது…” என அவன் அழைத்துப் பார்க்க ஒரு பதிலும் இல்லை.

‘அடிப்பாவி இப்ப தானடி நல்லா பேசிட்டு இருந்த அதுக்குள்ள எப்படி இப்படி ஒரு தூக்கம்.’ என நினைத்தவன் தன் கையில் இருந்த ரிமோட்டை கொண்டு திரையை அணைத்தான்.

பின், மெதுவாக அவளை தூக்கியவன் அந்தக் கதவை சற்று சிரமப்பட்டு திறந்தான். அது தானாக மூடிக்கொள்ளும் எனவே, அதை திரும்ப மூட வேண்டிய அவசியம் இல்லை.

லிப்ட் அருகே வந்து, பட்டனை பிரஸ் செய்து விட்டு லிப்ட் திறக்கவும் அப்படியே அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். தங்கள் ஃபுளோரில் வந்து இறங்கி, நம்பர் லாக் போட்டு கதவை திறந்து அறையில் உள்ள நுழைந்து கட்டிலில் அவளை கிடைத்திய பிறகு தான் இவனுக்கு மூச்சே வந்தது. வெறும் கன்னத்தின் மென்மையே அவனை அவளிடம் மயங்கச் செய்ய, இப்பொழுது அவளின் இடையின் மென்மை அவனை இன்னும் கிறங்க செய்திருந்தது. சற்று நேரம் அப்படியே நின்று அவளை பார்த்தான்.

‘சரியான இம்சைடி நீ.’ என மாணசீகமாக அவளிடம் பேசியவன் தலையை உலுக்கிக் கொண்டு, அவன் புறம் சென்று அவசர அவசரமாக கண்கள் மூடி படுத்துக் கொண்டான்.

மறுநாள்!

காலை உணவு முடிந்த உடனே பாலிக்கான அவர்களின் பயணம் துவங்கி விட்டது.

காலை எட்டு ஐம்பத்தி ஐந்துக்கு எல்லாம் விமானம் புறப்பட தயாரானது. கிட்டத்தட்ட எட்டு மணி நேர பயணம் அது.

இரண்டு ஜோடிகளும் அவரவருக்கென ஜோடி ஜோடியாக இருந்தா இருக்கைகளில் அமர்ந்துக் கொண்டார்கள்.

சாத்வி தான் பேச்சை துவங்கினாள்.

“ஆமா நைட்டு படம் தானே பார்த்துட்டு இருந்தோம் அப்புறம் என்னாச்சி?” என ஒன்றும் புரியாமல் வினாவினாள் சாத்வி.

காலை எழுந்தது முதலில் அவளுக்கு அது தான் குழப்பமே அங்கு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவள் எப்படி படுக்கைக்கு வந்தால் என்று அவளுக்கே புரியவில்லை.

“வேற எப்படி நான்தான் தூக்கிட்டு வந்தேன்.” என சாதாரணமாக கூறினான் ராம்.

“என்ன? நீங்களா?”

“இப்ப எதுக்கு அதிர்ச்சி படம் பாத்துட்டு இருந்து டக்குனு தூங்கிட்ட வேற என்ன பண்ண சொல்ற இதுக்கு தனியா நான் ஆள் வெச்ச தூக்கிட்டு வர முடியும்.”

“நான் என்ன மூட்டையா ஆள் வச்ச தூக்க?” என சிலிப்பிக் கொண்டாள் அவள்.

“ச்ச ச்ச அப்படியே மூட்டையா இருந்தாலும் நீ பூ மூட்ட கணமே இல்ல.”

தன்னை பூ மூட்டை என அவன் வர்ணித்ததில் சிரிப்பு வந்தது அவளுக்கு.

“சாரி வழகம் போல தூங்கி சொதப்பிட்டானா?” என்றாள் பாவமாக,

“இல்ல இல்ல எனக்கும் தூக்கம் வந்துடுச்சி நீ தூங்கவும் தான் நானும் தூங்குனேன்.” என மனசாட்சியே இல்லாமல் புளுகினான் அவன்.

“எனக்காக சொல்லாதீங்க அவளோ தூக்கம் வந்தவரு தான் என்ன லோங்கு லோங்குன்னு தூக்கிட்டு வந்தீங்களா?” என அவள் கேட்கவும்.

“சரி விடு இப்போ எயிட் ஹார்ஸ் ட்ராவல் டைம் இருக்கு. நேத்து பாத்தத்துல இருந்து இப்போ கன்டின்யூ பண்ணலாமா?” என அவன் கேட்க, இவளும் சரி என தலையாட்டினாள்.

அந்த படத்தின் ரெண்டாம் பகுதியை தன் மொபைலில் ஓட விட்டு அவளுக்கு ஒரு புற ஹெட்செடை கொடுத்து, மற்றொரு புறதை இவன் வைத்துக் கொண்டான்.

மனம் கொள்ளை போகுமா…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top