• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤️MPK 19❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
958
Reaction score
1,299
Location
Banglore
வணக்கம் தோழமைகளே,


இதோ 'மனம் பறித்த காரிகையே - 19'


படிச்சிட்டு கண்டிப்பா மறக்காம உங்களோட கருத்துகளை பகிர்ந்துக்கோங்க...


போன எபிக்கு 'லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்' மூலம் நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏.


Happy reading😀📖
 




Dhiya suramu

இணை அமைச்சர்
Author
Joined
Oct 19, 2022
Messages
958
Reaction score
1,299
Location
Banglore
மனம்❤️19

படத்தை விட்ட இடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

திருமணம் நின்றப் பின் அந்த பெண் படிப்பதற்கு சென்னை செல்ல, அந்த மாப்பிள்ளையும் அதே ஊரில் இருக்க, இப்போது அவன் அவள் பின்னேயே சுற்றுகிறான்.

“இதுக்கு முன்னையே எனக்கு அவளை பிடிச்சிருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணி இருக்கலாம்ல. அதான் சொல்லுவாங்க ஒரு பொருள் பக்கத்தில் இருக்கும் போது அது அருமை தெரியாதாம். அது தூரமா போகுமா தான் அதோட அருமை தெரியுமா? அந்த கதையா இருக்கு.” என சாத்வி சொல்ல,

“தத்துவத்தை மூட்டை கட்டி மூளையில வச்சிருக்கியோ. அப்பப்ப பயங்கரமா கலட்டி விடுறியே!” என்றான் ராம் சிரித்துக் கொண்டே,

அதன்பின் இருவருமே படத்தைப் பார்த்து அதைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தார்கள் இறுதியில் கிளைமாக்ஸ் சீன் வரும் பொழுது இருவருக்குமே பேச்சு வார்த்தை இல்லை படத்தில் மட்டுமே கவனம் இருந்தது. அதில் இறுதியாய் மாதவன், ‘ஒரு பொண்ண பாத்து எனக்கே தெரியாம மயங்கி விழுனுன்னு நினைச்சேன். அவ பின்னாடி அலையணும்னு ஆசைப்பட்டேன். அவ இல்லனா நான் இல்லனு தோணனும். அவள விட்டா இந்த உலகத்துல வேற எதுவுமே இல்லனு நினைக்கனும். அவளுக்காக உயிரையே கொடுக்கணும்னு நினைச்சேன் ஆனா அது எல்லாம் உண்மையாகிடுச்சு. ஐ லவ் யூ.’ என ப்ரபோஸ் செய்ய,

இருவர் விழிகளும் அந்த திரையிலேயே இருந்தது. அதன் பின் மாதவனும் ஜோதிகாவும் ஒன்று சேர, படம் முடிந்தது.

“பீல் குட் மூவில.” சாத்வி கேட்க,

“ஆமா.” என்றான் ராம்.

அதன்பின் சிறிது நேரத்தில் வழக்கம் போல் உறக்கத்திற்குள் சென்றாள் சாத்வி.

அதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

‘அதானே பார்த்தேன் என்னடா இவ்வளவு நேரமா முழிச்சிட்டு வராளேன்னு!’ என நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் சிறிது நேரத்தில் அவனும் உறங்கினான்.

உறக்கத்தில் கனவு உலகம் விரிந்தது. மாதவனும் ஜோதிகாவும் நின்றிருந்த அதே சிக்னலில் இப்பொழுது சாத்வியும் ராமும் நின்றிருந்தார்கள். மாதவன் ஜோதிகாவிடம் ப்ரபோஸ் செய்தது போல் இவனும் அவளுக்கு ப்ரபோஸ் செய்தான். பின் திட்டுக்கிட்டு கண் விழித்தவன்,

‘என்ன கனவு இது? ஒருவேளை அந்த படம் பார்த்துட்டு அப்படியே தூங்கினதுனால அது ஞாபகம் வந்திருக்குமா இருக்கும்.’ எனத் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.

அவ்வளவு நேரம் கனவிலேயே கவனமாக இருந்தவன் அப்பொழுதுதான் தன் தோளில் இருந்த பாரத்தை உணர்ந்தான்.

சாத்விதான் அவனுடைய தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவளை தவிர வேற யாராக இருந்தாலும் இந்த திருமண பேச்சு இவ்வளவு தூரம் வந்திருக்காது என்பது நிச்சயம். ஆனால் அவளை பார்த்தது முதல் என்னை எதுவும் பேச்ச விட்டாமல் ஊமையாக்கி, அவளை மணந்து கொள்ள வைத்து விட்டாளே இந்த மாயக்காரி.’ எனத் தன் தோள் சாய்ந்தவளைப் பார்த்து எண்ணம் சென்றது ராமிற்கு.

அதன் பின் உணவுகள் வர, அவளை எழுப்ப முயன்றான். மிகவும் கஷ்டப்பட்டு அவளை எழுப்பி சீட்டில் சாய்ந்து அமர வைத்தான்.

“ப்ளீஸ் பரஸ் தூங்க விடுங்க.” என கண்மூடிய விதத்திலேயே கெஞ்ச,

“என்னது பரஸ்ஸா?” எனத் தன்னை அவள் விளித்ததில் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.

“சாப்பாடு வந்திருக்கு சாப்டுட்டு தூங்கு சது.” என இவன் எவ்வளவோ கூறிப் பார்க்க அவளோ தூக்கத்தை கைவிடுவதாய் இல்லை.

காலை வீட்டில் சாப்பிட்டு வந்ததோடு சரி அதன் பின் எதுவும் சாப்பிடவில்லை. அப்படியே உறக்கத்திற்குச் சென்று விட்டார்கள் இருவரும். இதோ இப்பொழுது மணி மூன்றாகிறது இப்பொழுது கூட மதிய சாப்பாட்டை சாப்பிடவில்லை என்றால் என்ன ஆவது. இதற்கு மேல் இவளை எழுப்பி வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்டவன் அப்படியே அவள் கழுத்தை பிடித்து நிமிர்த்தி,

“சரி நீ முழிக்க வேணாம் வாய மட்டும் திற பாப்போம்.”

“எதுக்கு வாய தொறக்க சொல்றீங்க திரும்ப வாய்லயே முத்தா கொடுக்குற ஐடியாவா?” எனத் தூக்கத்திலேயே அவள் உளர,

“ஏய் இம்ச கத்தாதடி மானம் போகுது.” என அவள் வாய்யை மூடினான்.

“ம்…ம்…” என மூடிய வாயிலிருந்து ஓசை எழுப்பிக் கொண்டிருந்தவள் வாயிலிருந்து சட்டென்று கை எடுத்தான்.

“ஏய் இம்ச ஏண்டி இப்படி வம்பு பண்ற. நான் என்னமோ உன்ன கடத்திட்டு போற மாதிரி.” என அவள் தூக்கத்தை திரும்பவும் கலைக்க முயல,

“சச்ச மை பரஸ் வெரி குட் பாய். அப்படிலாம் யாரையும் கடத்திட்டு போக மாட்டாரு.” என்றாள் சாத்வி.

“அது சரி உன்கிட்ட நான் காண்டாக்ட் செர்டிபிகேட் எல்லாம் கேக்கல முதல்ல எந்திரிச்சு சாப்பிடு.” என மீண்டும் அதிலேயே கவனமாக இருக்க,

“கண் தொறந்து சாப்பிட்டா தூக்கம் கலைஞ்சிடும்.” எனப் புலம்பியவளை பார்த்தவன்.

“சரி நீ கண்ண தொறக்க தேவையில்லை முன்னாடி சொன்ன மாதிரி வாய தொற எனக்கு முத்தம் கொடுக்குற ஐடியா எல்லாம் இல்ல.” என அவளிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தான் ராம்.

“ஆ…” என அவன் சொன்னது போல் வாய் திறந்தவள் அப்படியே கண் மூடிப் படுத்து இருக்க, அவள் வாய்க்குள் உணவை வைத்தான் ராம்.

இப்படியே ஒவ்வொரு வாயாக அவளை போராடி சாப்பிட வைத்து, தண்ணீரும் புகட்டி விட, அவள் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்.

இவ்வளவு பொறுமையாக தான் ஒரு பெண்ணிடம் நடந்து கொள்வோம் என்று ஒரு மாதத்திற்கு முன்பு இவனிடம் சொல்லி இருந்தால் இவன் நம்பி இருக்கவே மாட்டான்.

நானா இப்படி எல்லாம் நடந்து கொள்வது என்று அவனுகே அவனை நினைத்து அதிசயமாக தான் இருந்தது. அப்படி இந்த சின்ன பெண் தன்னை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறாள் என்பதற்கான காரணத்தை மட்டும் யோசிக்க தவறி விட்டான் அவன்.

உறங்கும் அவளையே பார்த்தவன், “ஸ்லீப்பிங் பியூட்டி.” என முணுமுணுத்து அவன் உணவில் கவனமானான்.

அமர்ந்தபடியே தூங்குவதால் கால்களை அப்படியும் இப்படியும் வலியில் நகர்த்துக் கொண்டிருந்தவர்களின் அசௌகரியம் உணர்ந்து, அவள் கால்களை தூக்கி சீட்டை அவள் கால்கள் நீட்ட ஏதுவாக மாற்றினான் ராம்.

அது பிசினஸ் கிளாஸ் என்பதால் ஒரு சீட்டிற்கும் மற்றொரு சீட்டிற்கும் நிறையவே இடைவெளி இருக்கும். அது மட்டும் அல்லாமல் இவ்வாறு கால்கள் நீட்டி படுப்பதற்கு ஏதுவான சீட்டின் அமைப்புகளும் இருக்கும்.

அவன் கால்களைப் பிடித்ததில் லேசாக சினுங்கியவளை தோளில் தட்டிக் கொடுத்து மீண்டும் உறக்கத்திற்கு செல்ல வழி வகுத்தான்.

உறக்கும் அவளை பார்த்தான்…

‘என்ன நல்லா வச்சு செய்றடி இப்படி எல்லாம் நான் யாருக்கும் பணிவிடை செஞ்சதே இல்ல. நீ கேட்காமையே உனக்கு எல்லாம் செய்யணும்னு தோணுது.’ என நினைத்தவன். அவளையே அளவெடுக்க,

அவளின் நெற்றியில் இருக்கும் சிறு சிறு முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் நடனமாட, அதை ஒதுக்கி அடக்கினான். ஏனோ அவளின் அந்த மூடிய இமைமேல் முத்தம் வைக்கும் ஆசை வந்தது அவனுக்கு. எப்பொழுதும் அவனை ஈர்க்கும் அதே மென்மையான கண்ணம். அதன் மென்மையை உணர ஏங்கிய கைகளை கஷ்டப்பட்டு அடுக்கினான். அப்படியே அவன் பார்வை அவளின் இளம் ரோஜா வண்ண இதழ்களில் நிலைத்தது.

‘பாக்குறதுக்கு மட்டுமா பூ மாதிரி இருக்கு. அப்பா… எப்படித்தான் அவ்வளவு சாப்டா மெயின்டைன் பண்றாளோ?’ என அவள் இதழில் அவன் ஆராய்ச்சியை செய்து கொண்டிருந்தான் ராம். அதன் புறம் அவனை ஈர்த்துக் கொண்டிருந்தது அவளின் இதழ்கள். அதற்கு மேல் முடியாமல் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டான்.

‘நீ சரி இல்லடா ராம் நீ சுத்தமா சரியில்ல நல்ல பிள்ளையா தானடா இருந்த, ஏன்டா இவகிட்ட மட்டும் இப்படி நடந்துக்குற?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டவன். அதன் பின் கண் மூடி உறங்க முயன்றான். முயல மட்டுமே முடிந்தது சிறிது கூட உறக்கம் வரவில்லை. இப்படியே தவிப்பில் அவன் பயணம் முடிய, அவளுக்கோ ஏழு மணி நேர பயணமும் உறக்கத்திலேயே சென்றது.

அந்த ஒரு விமானம் மட்டும்தான் பாலிக்கு நேராக வரும் விமானம். மாலை சரியாக ஐந்து மணிக்கு பாலியில் தரையிறங்கியது அந்த விமானம்.

அரை மணி நேரமாக போராடி சரியாக விமானம் தரையிறங்கும் பொழுதுதான் அவளை எழுப்பி விட முடிந்தது ராமால்.

முகத்தில் அசடு வழிய, அவனைப் பார்த்து இளித்து வைத்தவள் வாய் திறக்க வர, அவள் வாயை தன் கைகளை கொண்டு மூடி.

“சாரி தானே அத நீயே வச்சிக்கோ.” என ஒரு வெட் டிஷுவை அவள் கையில் கொடுக்க, அதில் முகத்தை துடைத்து தூக்கம் கலைந்துக் கொண்டாள் சாத்வி.

அவ்வளவு நேரம் ஈர்த்த அந்த இதழ்களை தொட்டுவிட்ட மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளிக் கொண்டிருந்தது ராமிற்கு.

சற்று தள்ளி மற்றொரு சீட்டில் அமர்ந்திருந்த அர்ஜுனும் சந்தியாவும் இவர்களுடன் இணைந்து கொள்ள, இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் விமான நிலையத்தில் இவர்களுக்காக காத்திருந்தது அதில் சென்று ஏறிக்கொண்டார்கள் நால்வரும்.

ஏழு மணி நேரம் விமானத்திலேயே நன்றாக தூங்கி எழுந்ததினால். இப்பொழுது உறக்கம் இல்லாமல் பயணம் செய்ய முடிந்தது சாத்வியால்.

அவள் எழும்பொழுதே தான் படுத்து இருந்ததை வைத்து, அவன் தன்னை வசதிக்கு ஏற்றார் போல படுக்க வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சாத்விக்கு அவனை பார்க்க சங்கமாக இருந்தது.

அவர்கள் சென்று சேரும் இடத்தில் தனித்தனியாக இவர்கள் இரண்டு ஜோடிகளுக்கும் கார்கள் தயார் செய்திருந்தார்கள் இவர்களின் பெற்றவர்கள். இப்பொழுது நால்வரும் அந்தந்த இடத்திற்கு செல்வதற்கு வேறு ஒரு காரோட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். பயண களைப்பிற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது.

அர்ஜுன், சந்தியா மற்றும் சாத்வி மூவரும் பின்னால் ஏறிக்கொள்ள, ராம் முன்னாள் டிரைவர் சீட்டின் அருகே அமர்ந்துக் கொண்டான்.

ராமையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு வந்தாள் சாத்வி. ராமும் கிளியர் வியூ கண்ணாடி மூலம் அவளை தான் பார்த்துக் கொண்டு வந்தான். இப்படி இவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட சந்தியா, அர்ஜுனனை அழைத்து அதை சுட்டி காட்டினாள்.

பின் மொபைலை எடுத்து, ‘நான் தான் சொன்னேனே கொஞ்சம் கொஞ்சமா அவங்க ரெண்டு பேர் மாறுவாங்கன்னு அவங்க ரெண்டு பேரோட பார்வையை பார்த்தீர்களா?’ என்ற சந்தியாவின் மெசேஜை பார்த்த அர்ஜுனுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது நண்பனை நினைத்து.

சிறிது தூரத்தில் சந்தியாவும் அர்ஜுனும் தங்குமிடம் வந்தது. ஆம் இரண்டு ஜோடிகளுக்கும் தனித்தனி தங்குமிடங்கள் ஏற்பாடகி இருந்தது. அதை அவரவர்களுக்கு பிடித்தார் போல் தேர்ந்தெடுத்திருந்தார் ரத்தினசாமி.

அர்ஜுனையும் சந்தியாவையும் அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இறக்கி விட்டவர்கள். அவர்களும் உடன் இறங்கி அந்த தனி தீவுகள் போன்ற அமைப்பில் தனித்தனியே அமைந்திருந்த அழகிய அந்த இடத்தை பார்த்துவிட்டு,

“சரி அஜ்ஜு நாங்க கிளம்புறோம் நீ சந்தியாவ பத்திரமா பாத்துக்கோ.” என ராம் அவன் அறிவுரையை துவங்க,

“ரொம்ப பண்ணாதீங்க அதெல்லாம் எங்க அண்ணா அண்ணிய நல்லாவே பார்த்து பாரு.” என அர்ஜுனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தாள் சாத்வி.

“அப்படி சொல்லு சாத்விமா ஓவரா பண்ணறான் உன் புருஷன்.” என கூற, அர்ஜுனின் அந்த உரிமை பேச்சு பிடித்திருந்தது சாத்விக்கு.

“போதும் என் அண்ணன் உங்கள பத்தி நல்லா தெரிஞ்சுதான் என்ன பார்த்துக்க சொல்லி இருக்காரு.” என ராமிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தாள் சந்தியா.

அதில் சாத்வியையும் அர்ஜுனனையும் பார்த்து நகைத்தான் ராம்.

இப்படியே சிறிது நேர பேச்சுக்குப்பின் ராமும் சாத்வியும் அங்கிருந்து கிளம்பினார்கள். மீண்டும் காரில் ஏறும் போது சாத்வியுடன் பின்பக்கம் அமர்ந்து கொண்டான் ராம். அதில் சாத்விக்கு மிகுந்த மகிழ்ச்சி .

“என்ன அதிசயமா தூங்காம வர?” என ராம் கேட்க,

“நான் ஒன்னும் கும்பகர்ணி இல்ல பிளைட்ல எவ்வளவு நேரம் தூங்கினேன். அப்புறமும் எப்படி தூக்கம் வரும்?” எனச் சிணுங்கி கொண்டே கேட்டாள் சாத்வி.

“என்னது நீ கும்பகர்ணி இல்லையா?” என போலியா வியந்தான் ராம்.

“போதும் ஓவரா ஓட்டாதீங்க.” என பேசிவிட்டு தலையை திருப்பிக் கொண்டாள் அவள்.

அவளின் இந்த சிறுபிள்ளை கோபத்தில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

சிறிது நேர பயணத்தில் இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த அழகிய அமைதியான இடம் வந்தது.

மனம் கொள்ளை போகுமா…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top