18 நிழலின் காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shamina Sarah

Author
Author
Joined
Jun 19, 2019
Messages
771
Reaction score
1,756
Points
93
Location
chennai
சுகுணா அத்தை திடீரென ஒருவருடன் வந்து நின்றதும் அதிர்ச்சி அடைந்தான் பிரசாந்த்... தனது அதிர்ச்சியை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

"என்ன குணா? பாய் பிரெண்டு கூட வந்திருக்கிறே?" என பிரசாந்த் கேட்க

"டேய் பொடிப்பயலே... நல்லா பாரு... இது தாலி... இவன் என் புருஷன்"
அதிர்ந்து போய் நின்றனர் அனைவரும்...

"சுகுணா நீ என்ன பேசறே?" அதட்டியவாறு கேட்டார் பன்னீர்

"புரியலையா அண்ணா... இவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னேன்"

"இந்த வயசிலயா?"

"ஏன் அண்ணா எனக்கு முப்பத்தெட்டு வயசு தான் ஆகுது... இப்போ என்ன?"

"சுகுணா இதை வெளியே சொன்னா வெட்கக்கேடு... ப்ளீஸ்... நீ இப்படி எல்லாம் பண்ணாதே"

"எது வெட்கம் அண்ணா? நீ உன் பையனுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறே... எனக்கு ஏன் பண்ணலை"

"சுகுணா நீ தான் கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லைனு சொன்னே"

"பிரசாந்த்தும் அதை தான் சொன்னான்... அவனுக்கு கம்ப்பெல் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கலையா நீ?"

"அது..."

"அப்போ உன் பையன் கல்யாணம் வேணாம்னு சொன்னாலும் பண்ணி வைப்ப... நான் கல்யாணம் பண்ணா அது தப்பா?"

"இல்லை... அது ... வயசு..."

"என்ன வயசு? கரெக்டான வயசுல உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தாய்... இப்போ உன் மருமகளை எங்கே?"

"சுகுணா" என பன்னீர் கத்த,

"அப்பா... நீங்க ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க? அத்தை கல்யாணம் பண்ணதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? ஊர் ஆயிரம் பேசும்... என் கல்யாணம் நின்னது, இப்போ பாப்ஸ் என்னை விட்டு போனது எல்லாத்துக்கும் காரணம் நான் ஆம்பளையே இல்லைனு ஊர் சொல்லுது... அதுக்காக அது உண்மை ஆயிடுமா? அத்தை சந்தோஷம் தான் நமக்கு முக்கியம்... அதைப் புரிஞ்சுக்கோங்க... ஊரைப் பற்றிக் கவலைப்படாம அத்தை சந்தோஷத்தைப் பாருங்க..." பிரசாந்த் அமைதியாக பேசினான்...

"டேய் பொடிப்பயலே! அந்த மாலு பொண்ணு, அதான் உன்னோட பாப்ஸ், எங்கேயும் போகலை... உனக்குள்ள இருக்கிறா... அவ குணம் உன்கிட்ட வந்துட்டு... ஆனா லூசுப்பொண்ணு அவசரப் பட்டுட்டாளே" என சுகுணா கூற

"குணா ப்ளீஸ்... அவளைப் பற்றி பேசாதே"

"ஆனா அவளால தான் என் வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கிறது பிரசாந்த்"

"என்ன சொல்றே குணா?"

"ஆம்.. நானும் விஜயும் தெய்வீகக் காதல்... சில சூழ்நிலை, எங்களைப் பிரித்து விட்டது... ஆனால் அவன் ஞாபகத்தில நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துட்டேன்... அவனுக்கு கல்யாணம் முடிந்து குழந்தையும் இருந்தது... அதனால் அவனைப் பார்க்கக் கூட இல்லை...
அன்று என்னிடம் விஷயத்தைக் கேட்டுக்கொண்ட மாளவிகா, அவ வெளிநாடு போறதுக்கு முன்னே டே அன்ட் நைட் அலைந்து என் விஜயைக் கண்டு பிடித்து விட்டாள்..." சுகுணா முடிக்கவும் விஜய்,

"என்னைத் தேடி வந்த அந்தப் பெண், காதலைப் பற்றியும் காதலின் காத்திருப்பைப் பற்றியும் எடுத்துக் கூறினாள்... என் மனைவியும் குழந்தையும் ஒரு ஆக்ஸிடென்ட்டில் பத்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டதை அறிந்தவள், சுகுணாவின் நிலையை என்னிடம் கூறினாள்... இத்தனை வருடத்தில் கொஞ்சம் கூட குறையாமல் காதலிக்கும் சுகுணாவைப் பற்றிக் கூறியதும் அல்லாமல், எங்கள் திருமணத்தைப் பற்றியும் பேசினாள்" என அவர் கூற
அடுத்து உடனே சுகுணா,

"எங்கள் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களை, இனிதான் புது வாழ்க்கை ஆரம்பம் எனக்கூறி, எங்களை சேர்த்து வைத்தாள் அந்தப்பெண்" எனக் கூறினாள்...

"இப்படி எல்லார் வாழ்க்கையையும் பார்த்தவள், என் பையன் வாழ்க்கையை மட்டும் விட்டுட்டாளே... அவனைத் தனிமரம் ஆக்கிட்டாளே" வாயை மூடி அழுதார் இந்திராணி...

இப்போதும் அருள் எதுவுமே கூறாமல், வெற்றுச்சிரிப்பு சிந்தியபடியே எழுந்து சென்றான்...

நன்கு உறங்கிக் கொண்டு இருந்த சரவணனுக்கு மூன்று மணிக்கு சரியாக விழிப்பு வந்தது... உடனே பாப்பா சொல்லிப் பார்த்த அந்தப் பேய்ப்படம் நினைவுக்கு வந்தது... 'ஒருவேளை எமிலிரோஸ் பேய் வந்துட்டோ? பாப்பா... நீ ஜாலியாக US போயிட்டே... என்னை இப்படி மாட்டி விட்டுட்டியே' மனதுக்குள் புலம்பித் தள்ளினான் சரவணன்...

திடீரென போன் வர அரண்டு போய்ப் பார்த்தவன், பாப்பா எனத் தெரிந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்...

"சொல்லு பாப்பா... நல்லா இருக்கியா? ஹெல்த் எப்படி இருக்குது?"

"நான் நல்லா இருக்கேன்... நீங்க ஏன் இன்னும் தூங்கலை?"

"உனக்கு எப்படித் தெரியும்?"

"நான் வாட்ஸ்அப் ல பார்த்துட்டே தான் இருப்பேன் உங்க எல்லாரையும்"

"அப்போ பிரசாந்த்தையுமா?"

"அது... அண்ணா நீங்க என்ன பேசறீங்க? அருள் கிட்ட என் US நம்பரே இல்லை"

"உன்கிட்ட அவன் நம்பர் இருக்குதே"

"அண்ணா டேவிட் கூட எனக்குத் திருமணம் முடிந்து விட்டது"

"அருள் கூடவும் தான் உனக்கு கல்யாணம் முடிஞ்சது"

"அது பாஸ்ட்...இப்போ ப்ரெசன்ட்ல நான் மிசஸ்.டேவிட்"

"ஏன்மா அருளை விட்டு ஒதுங்கிட்டே? அவன் பாவம்... ஆளே நொந்துப் போயிட்டான்"

"சூழ்நிலை அண்ணா"

"நாம உருவாக்கிறது தான் சூழ்நிலை"

"அருள் எப்படி இருக்காரு அண்ணா?"

"அவன்கிட்ட ஒருநாள் கூட பேசத் தோணலையா உனக்கு?"

"நான் என்ன பேசனும்? என்ன பேசுவேன் அவர்கிட்ட"

"அவன் தாடி வைக்காத தேவதாஸ் போல இருக்கான்... சிரித்து பேசி பல மாசம் ஆகிவிட்டது... எதையோ தீவிரமாக யோசிக்கிறான்... எதையோ இழந்ததைப் போல இருக்கான்"

"நான் என்ன அண்ணா பண்ண முடியும்?"

"நீ ஒரே ஒரு வார்த்தை பேசலாம்... நான் தான் முன்ன யோசித்தேன், அவன் உன் வாழ்க்கையை சிக்கலாக்கிடுவானோனு... ஆனா இப்ப அவன் வாழ்க்கையை நீதான் சிக்கல் ஆக்கி இருக்கேனு புரியுது பாப்பா"

"எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை"

"நிறைய சொல்லலாம் பாப்பா... ஏன் USல இருக்கே? ஏன் அருளை விட்டுப் போனே? ஏன் அடுதத மேரேஜ்?"

"நீங்க எத்தனை ஏன் கேட்டாலும் என்கிட்ட பதில் இல்லை சரவணா அண்ணா"

"ஏன்னா உனக்கு உண்மையிலே திருமணம் ஆகலையே... பின்ன என்ன பதில் சொல்ல முடியும்?"

"என்ன சொல்றீங்க?"

"நான் கூட சந்தேகப்படுறேன் உன்னை... ஆனால் பிரசாந்த் வாயைத் திறக்கவே மாட்டிக்கான்... உன்னைப் பற்றி பேசினால் அவன் முகத்தில் ஒரு அமைதி பாக்கறேன்... அது என்கிட்ட தெளிவா சொல்லுது, அவன் நீ திரும்ப வருவாய்னு காத்துக்கிட்டு இருக்கான்னு... அவன்கூட சின்ன வயதில் இருந்தே நான் இருக்கேன்... எனக்குத் தெரியும் அவன் என்ன நினைக்கிறான் என்று"

"அவர் தவறாக நம்பினால் என்னால் ஒன்றும் கூற முடியாது... நானும் என் கணவரும் அடுத்த வாரம் இந்தியா வருகிறோம் என் டெலிவரிக்காக... வேண்டுமானால் வந்து பார்க்கச் சொல்லுங்கள்"

"நிச்சயமாக நாங்கள் அனைவரும் வருவோம் உன்னைப் பார்க்க"

"நல்லது... பின்னர் பேசலாம்... டேக் கேர் அண்ணா" என்றவாறு போனை கட் செய்தாள் பாப்பா...
 
Advertisements

Latest updates

Advertisements

Top