• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode NNN -11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,172
Reaction score
4,674
Location
Coimbatore
11

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்மணி - எந்தன் சின்னக் கண்மணி

அலைபேசி இசைத்ததும் ஆசையுடன் அதன் பச்சையத்தை அழுத்தினான் பூபதி.

“ சொல்லு கண்மணி “

இன்னும் சில மாதங்களில் அவன் படிப்பு முடியப் போகிறது.

பெங்கலூருவில் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் இவனுக்கு வேலை தயார்.

படிப்பு முடிந்ததும் போய் சேர்ந்து கொள்ள வேண்டியது தான்.

விஷயம் தெரிந்து, ஒரே மகனை தொலை தூரம் அனுப்ப ஸ்ரீ ஒத்துக்க கொள்ளாமல் அழ, “ ரெண்டு வருசத்தில் சென்னை இல்லை கோவை வந்திடுவேன். ஏன் செல்லம்ல? “ என்று கொஞ்சி சமாதானப்படுத்தி இருந்தான் பூபதி.

“ என்னைக் கேட்காம உன்னை யாரு அந்தக் கம்பனிக்கு அப்ளை பண்ண சொன்னது? “


“ ம்மா! காம்பஸ் இன்டர்வியு மா. அந்த கம்பனி எங்க காலேஜ் லா செலக்ட் பண்ணுவாங்கன்னே நினைக்கலை. அதில நான் செலக்ட் ஆவேணும் நினைக்கலை.

அதான் சொல்லலை. இப்பத்தான் காலேஜில சொன்னாங்க. “

அன்னையை மண்டி போட்டு உட்கார்ந்து சமாதானப்படுத்தினான்.


வீரா எதுவும் சொல்லவில்லை. அவனுக்கும் மகனைப் பிரிந்து இருக்க விருப்பமில்லை. ஆனாலும் மகனின் எதிர்காலம் முன்பு அவர்கள் பாசம் தன்னை மறைத்துக் கொள்வது நல்லது என்று நினைத்தான்.


இப்போது வேலையும் தயார். அந்த வேலைக்கு போக வேண்டும் என்று அவன் ஒற்றைக் காலில் நின்றதற்கு முக்கியா காரணம் ஆஷா தான்.

அவளை பெண் கேட்டுப் போக வேலையின்மை ஒரு தடையாக இருக்காக கூடாது அல்லவா?


ஏதோ இப்போது சில மாதங்களாகத்தான் அவனிடம் நன்றாக பேசுகிறாள்.

அதிலும் சுமதி மயங்கி விழுந்த நாளுக்குப் பின் இன்னும் அவள் அவனிடம் ஒருவித நெருக்கத்தோடு, ஏக்கத்தோடு பேசுகிறாள்.

அது ஏன் என்று தெரியாத போதும் தன்னால் முடிந்த அளவு அவளிடம் ஆறுதலாகவே பேசுவான்.

இதற்கு மேல் அவனால் ஆறுதலாக பேசவே முடியாது. ஒற்றை அணைப்பு அவன் உயிர் நேசத்தை அவளுக்கு சொல்லி விடும்.

ஆனால் அவள் எண்ண நினைக்கிறாள் என்று தெரியாமல் அவனால் எப்படி அவனிடம் நெருங்க முடியும்?

தவிர அவள் இன்னும் சின்னப்புள்ள பெண் வேறு.

இரண்டாம் வருட இளநிலை பட்டப்படிப்பு முடிய இன்னும் சில மாத்தங்கள் உள்ள நிலையில் இன்னும் ஒரு வருட படிப்பு வேறு உள்ளது.


அதற்குள் இவன் தன் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்து மெதுவாக வீட்டில் சொல்லி எல்லாம் கூடி வரும் போது இரண்டு வருட வேலை காலம் முடிந்து இருக்கும்.


பின்பு சென்னை அல்லது கோவைக்கு வந்து ஆவலுடன் செட்டில் ஆகிவிட வேண்டியது தான்.


இப்படித்தான் அவன் திட்டம் போட்டான்.

அதில் இப்போதெல்லாம் கொஞ்சம் மகிழ்சியில் தான் அலைகிறான்.

அலை பேசி திறன் பேசியாகிவிட்ட இந்த காலத்திலும் இன்னும் பேசியில் முகம் காட்ட மறுக்கிறாள். ஆனால் இதுவே அவனுக்கு இனிமையைத் தரும் போது அவனும் அவளை அதிகம் வற்புறுத்துவதில்லை.


இப்போதும் அவள் அழைத்ததில் அத்தனை ஆனந்தம் அவனுக்கு.

எதிர் முனையில் ஆஷா பேசவே தடுமாறினாள்.

“ பதி! பதி!”

“ சொல்லு கண்மணி. நான் உன் பதி தான்!”

அவன் சொன்னதான் அர்த்தமோ அந்த சொல்லின் அர்த்தமோ அவளைச் சென்று அடையவில்லை.

“ பதி! இன்னிக்கு அம்மா என்னை அவங்க பக்கத்திலேயே வரக் கூடாதுன்னு கத்துறாங்க! நான் என் ரூமுக்கு வந்துட்டேன்.என்னனு தெரியலை பதி. கொஞ்சம் வீட்டுக்கு வாயேன் “


பதட்டத்தோடு ஆஷா சொன்னதும் அடுத்த நொடி இருந்த இடத்தை விட்டு எழுந்து இருந்தான்.

அவன் இந்நேரம் வீட்டில் இருப்பான் என்று தெரிந்து தான் அழைத்து இருந்தாள் ஆஷா.

போப்பாத்தி ஆஷா வீட்டுக்குள் நுழையும் போது சுமதி அவனை முகம் சுழித்து பார்த்தது போல இருக்கவே துணுக்குற்றான் பூபதி.


இருப்பினும் காட்டிக் கொள்ளாமல் “ எப்படி இருக்கீங்க அத்தை? “ என முயன்று வரவழைத்த துள்ளல் குரலில் கேட்டான் பூபதி.


“ எனக்கென்ன? நான் நல்லாத்தான் இருக்கேன். நீ என்ன இன்னும் படிச்சிட்டு இருக்க போல இருக்கு. “


தன்னிடம் அன்பும் கனிவுமாய் பேசும் சுமதி அத்தையா இது? என்று இருந்தது பூபதிக்கு.

“ வேலை கிடைச்சிருச்சு அத்தை. படிப்பு முடிஞ்சதும் வேலை தான் “

முடிந்த அளவு தன்மையுடன் பதில் சொன்னான் பூபதி.
“ அப்புறம்? என்ன அடிக்கடி இந்த பக்கம்? “

இப்படி எல்லாம் சுமதியால் பேச முடியுமா என்று பூபதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“ இல்லத்தை… கண்மணி தான் கூப்பிட்டா.. ஏதோ பிரச்னைனு.. “

அவன் முடிப்பதற்குள் அலறினாள் சுமதி.

“ வயசு பிள்ளை, அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் பெத்தவ என்னைக் கூப்பிட வேண்டியது தானே? “ - என்று.


‘ பெத்தவங்க அப்படி நடக்காததுனால தானே அவ என்னைக் கூப்பிட்டா? மாமாவும் இப்பல்லாம் வீட்ல இருக்கறதில்லை. மியாவும் அதோட ஜோடி கூட பிசி. என் கண்ணு என்னதான் செய்வா ?’

நினைத்தை சொல்லவில்லை பூபதி.

“ இல்லைத்தை …பாடத்துல.. “


“ சரி. சரி. போய் சொல்லு. இனி பாடத்துல சந்தேகம் வந்தாலும் பரவாயில்லை. தெரிஞ்சவரை படிச்சா போதும்னு அவங்க அப்பா சொல்லி இருக்கார் “


அப்பா என்பதை அழுத்தி சொன்ன சுமதி வீட்டுக்குள் போய் விட்டாள்.

இதே அத்தை சில மாதங்கள் முன்பு தன்னை உச்சி குளிர வரவேற்று உபசரித்தது நினைவு வந்தது.

தனக்கே அவர் மாற்றம் உறுத்தும் போது கண்மணி பாவம் சின்னப் பெண், என்ன செய்வாள்?

இவர்கள் பேச்சு சத்தத்தில் வெளியே வந்த ஆஷா வருத்தம் மேலிட அமைதியாக நின்றாள்.

சுமதியும் அறைக்குள் போகும் முன்பு ஆஷாவை அழுத்தமாக பார்த்து விட்டே சென்று இருந்தாள்.

பூபதி மெதுவாக ஆஷா அருகில் சென்றான்.


“ நல்லாதானே இருக்காங்க? “ எனக்கு கேள்வியாக பார்த்தான்.


“ இப்போ நல்லாத்தான் இருக்காங்க. நீ வர முன்ன போன்ல அப்பாகிட்ட ஐஸ்கிரீம் வாங்கிட்டு வர சொன்னேன். அப்பா போனை அம்மாகிட்ட குடுக்க சொல்லி ‘ பிள்ளைக்கு சளி பிடிச்சிடும். நீ ஒழுங்கா ருசியா சமைச்சி போட்டா பிள்ளை எதுக்கு இதெல்லாம் கேக்கப் போறா?’ன்னு திட்டிட்டார்.


அதுல அம்மா ரொம்ப கோபமாகிட்டாங்க. ‘நீ எப்பவும் அவருக்கு தொந்தரவுதான் குடுப்பே. உன்னால குடும்பத்தில நிம்மதியே போச்சு. நீ ஏன் பக்கத்துலயே வராதே ‘ன்னு என்னை பயங்கரமா கத்தி திட்டிட்டாங்க.

நான் எப்படி பயந்து போனேன் தெரியுமா? “

ஆஷா தெவிங்கிக் கொண்டே மூக்கும் உதடும் துடிக்க இவனைப் பார்த்த போது அவளைத் தூக்கி மடியில் வைத்து சமாதானப்படுத்தத் தோன்றியது.

இருப்பினும் தனது மற்றும் அவள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவளை நோக்கி எழுந்த கரங்களைக் கொண்டு தன் தலை முடியைக் கொதிக் கொண்டான்.

“ இதென்ன புது ஸ்டையிலா? “ அவன் செய்கையில் மனம் மாற அதிசயித்தாள் ஆஷா.

“ம்? ஆமா. புதுசுதான். இனிமே அடிக்கடி செய்வேன் போல! சரி. அதான் இப்போ சமாதானமாகிட்டங்களே? எப்படி? “


“ வேறென்ன? ஆயிரம் சாரி சொல்லி கடைசில அழுதுட்டேன். அதில விட்டுட்டாங்க “

இது பெரிய விஷயம் இல்லைதான். என்றாவது ஒருநாள் நடந்தால்.

இங்கேயோ அடிக்கடி ஆஷாவை சுமதி வார்த்தைகளால் கொட்டுகிறார்.

பெற்ற தாய் இத்தனை துவேசமாக பேச முடியுமா என்பது போல அத்தனை அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த நிலை மாறும் என்றே இதை ராஜாவுக்கு ஆஷா சொல்லவில்லை. இவனையும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள் ஆஷா.

அதனால் தன் இணை படும் வேதனை தெரிந்தும் அமைதியாக இருந்தான்.


இது ஒரு பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் உயிரானவள் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் அவன் மனைவியாக வேண்டும். அதற்கு அவன் வேலையில் இருக்க வேண்டும். அதனாலயே அந்த பெங்கலூரு வேலையை ஒத்துக்க கொண்டான்.


“ சரி. விடு கண்மணி. எனக்கு வேலை கிடைச்சிருச்சு. கோர்ஸ் முடிஞ்சதும் ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க. உனக்கும் படிப்பு முடியாட்டும்னு பார்த்தேன். ஒன்னும் வேண்டாம். நான் வேலையில ஜாயின் பண்ணதும் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!”

வீட்டை விட்டு வெளியே அவசரமாக செல்லுகையில் ஓடிக் கொண்டு இருக்கும் மின்விசிறியை நிறுத்தம் செய்யும் சுவிட்சை போகிற போக்கில் தட்டிவிட்டு போவது போல அவன் சொல்ல இவள் விழித்தாள்.

“ பதி! நீ என்ன பேசுற? “ அதிர்ந்து போய் கேட்டாள் ஆஷா.

அவள் அதிர்ச்சி இவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இருந்தாலும் அவன் அதை முகத்தில் காட்டவில்லை. எதையுமே முகத்தில் காட்டவில்லை.

“ சரியாதாத்தான் பேசுறேன்.உனக்கு வேற யாரையாது கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்கா? “

“ சீ சீ. அதுக்கெல்லாம் இன்னும் நாள் இருக்கு “

அவள் முகம் சுளிக்க அவனுக்கு நிம்மதியானது. தெரிந்த செய்தித்தான். இருந்தாலும் அவள் வாயால் கேட்டதில் அத்தனை சுகம்.

“ அதான் நானும் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உன்னைக் கட்டிக்கிறேன்னு “

“ நிஜமாவா? “

“ நிஜமா!”


“ அதில்லை… அம்மா.. அப்பா…”

“ அவங்கல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்ன உனக்கு வயசு கம்மியா இருக்கு. அதான் யோசிக்கிறேன். அதுக்குதான் இந்த டிகிரியை முடிக்கட்டும்னு பார்த்தேன். கல்யாண விஷயத்தை கூட அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்.

நீதான் அத்தை அப்படி சொன்னாங்க இப்படி சொன்னாங்கன்னு அழுதுட்டே இருக்கியே? அதான் சொல்ல வேண்டியதா போச்சு. “

ஆறுதலாக அவன் சொல்ல அவளுக்கு அதுவும் உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது.

“ இருந்தாலும் அம்மா இப்போ முன்ன மாதிரி இல்லை.
. பாசமாத்தான் இருக்காங்க. ஆனாலும்.. முன்ன மாதிரி கிளோசா.. ஜாலியா இல்லியே? “ சொல்லும் போதே கவலை கொண்டாள் ஆஷா.

“ அதெல்லாம் நான் பார்த்துகிறேன்.”

உரிமையுடன் உறுதி கொடுத்தான் பூபதி.

“ என்ன பார்க்கப் போறே? “ கேட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் ராஜா.


என்னதான் உரிமை, உருத்து, இருந்த போதிலும் திடீரென்று கேட்ட இந்த கேள்வியில் கொஞ்சம் ஆடித்தான் போனான் பூபதி. இன்னும் வேலையில் சேரவில்லையே? - அந்த ஒரு பயம் தான் அவனுக்கு.


“ வாங்க மாமா “ வரவேற்பாக புன்னகைத்தான் பூபதி.

“ அடேய்! என் வீட்லயே என்னையே வாங்கங்கிறியா? “ சிறிதுக கொண்டே வந்தாலும் மகள் அவன் முன் நிற்பது கூட பிடிக்கவில்லை ராஜாவுக்கு.

“ ஆஷாமா! என்ன இங்கே நின்னுட்டு இருக்க? கிளம்பு. ஐஸ்கிரீம் கேட்டியே? வா போய் ஐஸ்கிரீம் பார்லர்ல சாப்பிட்டு வரலாம் “ என்ற ராஜா பேச்சுக்கு கூட பூபதியை கூட வரச் சொல்லி அழைக்கவில்லை.


வயது பெண்ணுடன் வெளியே செல்லும் பித்து இவன் எதற்கு குறுக்கே? என்றுதான் அவன் எண்ணம் ஓடியது.


இப்போதெல்லாம் தன் வருகையை தன் அத்தை மாமா விரும்புவதில்லை என்பது பூபதிக்கும் புரிந்தே இருந்ததில்

“ அப்போ நான் கிளம்பறேன் மாமா “ என விடைபெற்றுக் கொண்டான்.



‘ இவன் எப்படி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குவான்?’ என்ற யோசனையுடன் ஆஷா ஐஸ்கிரீம் சாப்பிவுடக் கிளம்பினாள்.

இதற்காவது சுமதி விடுவாளா?



























 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top