arrow_back
காக்கை சிறகினிலே அத்தியாயம் பதிமூன்று
காக்கை சிறகினிலே chevron_right பகுதி 13 / 20

அத்தியாயம் பதிமூன்று

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அதீத அதிர்ச்சியை தாண்டிய ஏதோ ஒரு உணர்வில் கௌதமை பார்த்தாள் மேகா… ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை! ஏனென்றால் அவள் இதை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை… எதிர்பார்க்கவும் அவசியம் இல்லையே!

“கௌதம் சார்… இது விளையாட்டு இல்ல… வாழ்க்கை…” குரல் நடுங்கியது

“அதே தான் மேகா நானும் சொல்றேன்… நீயும் விளையாடாதே… வாழ்க்கைய வாழ கத்துக்கோ…”

“என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு… ப்ராண்ட மாத்தற மாதிரி என் மனசை மாத்திக்க என்னால முடியாது கௌதம்… அதுக்கு பேரு வேற…”

“அப்படீன்னு நீ நினைச்சா அது அடி முட்டாள் தனம் மேகா… நீ விரும்பறவங்கள விட உன்னை விரும்பறவங்கள கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பங்கறது உனக்கு தெரியாதா?”

“நான் உங்களை அப்படி நினைக்கவே இல்ல…”

“இல்ல… நினைக்க வேணாம்… நீ என்னை லவ் பண்ண சொல்லி நான் கேக்கல… கட்டாயபடுத்தவே இல்ல…” தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களை தடுக்க அவர்களை ஒரு நிமிடம் குழப்பி விட்டால் போதும் என்ற கௌதமின் கணக்கு தப்பவில்லை.

“அப்புறம் ஏன் கௌதம் சார் இப்படி எல்லாம் பேசறீங்க… உங்க மேல எவ்வளவு மரியாதை வெச்சு இருக்கேன் தெரியுமா? ம்ப்ச்… ஒரே நிமிஷத்துல கெடுத்துட்டீங்களே…”

தான் எண்ணியது வெற்றிகரமாக வேலை செய்வதை எண்ணி கௌதம் உள்ளுக்குள் தனக்கு தானே ஷொட்டு குடுத்து கொண்டான்! அவளை சசி பற்றிய சோகத்தில் இருந்து, வேறு கவலைக்கு ட்ராக் மாற்றி கொண்டிருப்பது மேகாவுக்கு புரியவில்லை! ஆஹா இது தானே எனக்கு வேணும் என்று கௌதம் உள்ளுக்குள் சிரித்து கொண்டான்!

“உன் மரியாதை எல்லாம் எனக்கு வேண்டாம் மேகா… உன்னை லவ் பண்றேன்… அதுக்காக என்னை நீ லவ் பண்ணியே ஆகணும்னு நான் சொல்லல… என்னோட எண்ணத்த தான் சொன்னேன்…” என்று கூறி விட்டு…” இங்க பார்… பேய் முழி முழிச்சுட்டு பார்த்துட்டு இருக்காளே என் தங்கச்சி… அவ மேல ப்ராமிஸ் பண்ணி சொல்றேன்… நான் உன்னை லவ் பண்றேன்…” என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியே முகத்தை சீரியசாக வைத்து கொண்டு சொல்ல

அஞ்சலி அலறினாள் “டேய் அண்ணா… ஏன்டா பொய் சொல்ல என் பேர யூஸ் பண்ற…”

“ஏய் லூசு… நான் நிஜத்த தாண்டி சொல்றேன்… அதனால கவலை படாத… உனக்கு ஒன்னும் ஆகாது…”

“டேய் கௌஸ்… ஏன்டா இப்படி நடு ராத்திரில அலும்பு பண்ற… உனக்கு ப்ரோபோஸ் பண்ண நேரமே கிடைக்கலையா? நீயெல்லாம் ஒரு…”

“ம்ம்ம் கம் ஆன்… சொல்லி முடி…”

“அட ச்சே… வெக்கம் கெட்ட உன்னை என் அண்ணான்னு சொல்லிக்க மாட்டேன்… போடா கூஸ்…”

“என்னடி பண்றது… நான் மட்டும் என்ன நினைச்சேனா? எனக்கும் கேண்டில் லைட் டின்னர்ல சொல்லனும்னு ஆசை இல்லையா? ஆனா என்ன பண்றது, நமக்கு விதி நடு ராத்திரி, அதுவும் ஹாஸ்பிடல்… அதுவும் ஒரு பக்கிய பக்கத்துல வெச்சுகிட்டு ப்ரோபோஸ் பண்ண வேண்டி இருக்கு… ஆல் மை டைம்…” என்று சிரித்து கொண்டு நிலைமையை சீராக்க முயன்றான்!

“என்னது பக்கியா? அடப்பாவி… நீ லவ் பண்ணு என்ன வேணும்னாலும் பண்ணி தொலை… ஆனா என்னை பக்கின்னு சொன்ன… இப்பவே மஞ்சுக்கு போன் போட்டு சொல்லிடுவேன்…” என்று சிரித்து கொண்டே மிரட்ட

“ஹை… அப்படியா… என்னை வாழ வைத்த தெய்வமே… ஆத்தா மகமாயி… சாமுண்டி… எப்படா குட்டி பண்ண போற அந்த காரியத்த… எனக்கு ஒரு வேலைய குறைச்சுடு ஆத்தா…” என்று அவளை கையெடுத்து கும்பிட

“நீயெல்லாம் திருந்தாத கேஸ்… சரி ஒழுங்கா போய் படுத்து தொலை… என் தூக்கத்த கெடுத்த நான் பத்திரகாளியா ஆய்டுவேன்…”

“இப்போ மட்டும் எப்படி இருக்க… அப்படி தான்” என்று முணுமுணுத்து விட்டு மேகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு சோபாவை நோக்கி போனான்!

“அங்க என்ன முனுமுனுப்பு…”

“ஒன்னும் இல்ல இளவரசி… நீங்க உங்க மஞ்சத்துக்கு போங்க… உங்க துயில கன்டினியு பண்ணுங்க…”

“அது…” என்று சொல்லிவிட்டு மேகா பக்கம் திரும்பி… இருவரும் பேசி கொண்டிருந்ததை பெக்கே பெக்கே என்று பார்த்து கொண்டிருந்தவளை

“நீ என்ன இன்னும் கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்க… காலைல பேசிக்கலாம்… போய் படு…” என்று விரட்டினாள்!

ஒன்றும் பேசாமல் படுத்த மேகாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் குழம்பியது! என்னை பற்றி நன்றாக தெரிந்தும் ஏன் கௌதம் அப்படி சொல்ல வேண்டும்? நான் சசியை எவ்வளவு காதலித்தேன் என்பதை நேரில் கண்டவர்கள் அல்லவா? ச்சே… என்ன வாழ்க்கை இது… வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்… ஆனால் அவளுக்கு முன்னர் இருந்த மனநிலை மாறியதை அறியவில்லை… அங்கே கௌதம் பற்றிய குழப்பம் சூழ்ந்து இருப்பதை அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை… அண்ணன் தங்கைக்கு இடையில் இருந்தால் அப்படித்தானோ! இதுதானே இருவருக்கும் தேவையாக இருந்தது… அவளுக்கு ஆறுதலாக கூறாமல் தற்கொலை தவறு என உணர்த்த முயலாமல் செய்கையால் அவர்களது விளையாட்டுத்தனமான பேச்சினால் மட்டுமே மேகாவின் மனநிலையை மாற்றினர்… இதுவும் கூட பயனளிக்கும் மருத்துவ முறையே!

குழப்பத்திலேயே உறங்கியும் போனாள்!

***

அதிகாலையில் செல்பேசி சேவல் கூவியது… சோம்பலாக எழுந்தான் அர்ஜுன்… இரவே மேகாவின் பெற்றோர்கள் சென்னை கிளம்பி இருந்தனர்… மனம் வேதும்பியே! மகள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள் என்ற உணர்வு மட்டும்… சென்னை சென்றதும் எதற்கும் வாய்ப்பு தராமல் போலீஸ் அவரை கைது செய்தது! முற்பகல் செயின் பிற்பகல் விளையும் அல்லவா!

அர்ஜுன் எழும்போதே செல்பேசி அழைக்க எடுத்து பார்த்தவன் விசிலடித்தான்!

“அட நம்ம எலி… எலி நமக்கு கால் பன்னுதா? வெளிய மழை எதாச்சும் வருதா? இல்ல நான் தான் கனவு கான்றேணா? என்று எண்ணியவாறே அவனை கிள்ளி பார்க்க

“ஆஹா வலிக்குது… அப்போ உண்மைதான்…” என்று நினைத்து கொண்டே கால் அட்டென்ட் செய்தான்! என்னதான் இப்படி அலைந்தாலும் பேசும்போது கெத்தாக இருக்க வேண்டுமே… கனைத்து கொண்டு.

“ஹலோ… அர்ஜுன் ஹியர்…”

ஒரு நிமிடம் தயங்கிய அஞ்சலி அவனிடம் பேச பேச்சு வராமல் வார்த்தைகளுக்கு திண்டாடினாள்! ஐயோ நம்ம எலியா? ? ? என்ன செய்வது… இப்போதெல்லாம் அர்ஜுனிடம் பேசும்போது… வெறும் காற்று தானே வருகிறது… அய்யகோ!

தட்டுத்தடுமாறி.

“நான் தான் பேசறேன்…” திணறினாள்… அவளது திணறல் அர்ஜுனை என்னன்னவோ செய்ய.

“நான் தான்னா… யாருன்னு… சொல்லுங்க… நீங்க போன்ல தானே பேசறீங்க… வீடியோ கால் இல்லம்மா…”

இப்படி சொல்லவும் அஞ்சலிக்கு கோபம் ஜிவ்வென்று டேக் ஆப் ஆனது… உள்ளுக்குள் அர்ஜுனுக்கு சஹஸ்ரநாமம் அஷ்டோத்திரம் என்று அனைத்தும் நடத்தியவள் கடுப்பான குரலில்.

“நான் தான் அஞ்சலி…” உர்ரென்று கூறினாள்!

“அஞ்சலின்னா எந்த அஞ்சலி…” வேண்டுமென்றே அர்ஜுன் கேட்டு வம்பிழுக்கு(மவனே உனக்கு நேரம் சரி இல்ல… )

“ம்ம்ம்… உங்களுக்கு எத்தனை அஞ்சலிய தெரியும் சார்…” பவ்யமாக கேட்பது போன்ற பாவனையில் கடிக்க,

“எனக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய அஞ்சலி தெரியும்… அதுல நீங்க எந்த அஞ்சலி?” விடுவேனா என்று வம்பளத்து கொண்டிருந்தான்… அங்கே கடுகு போட்டால் பொரிந்து விடும் நிலையில் அம்மணி.

“ச்சே… உன்… உங்களை போய் மனுஷனா மதிச்சு சொல்ல வந்தேன் பாருங்க… எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்…” பொறுமை பறந்தது!

“ஹே… அபிதகுஜலாம்பா… இன்னும் என்ன வேணும் உனக்கு? ஐம் ஆல்வேஸ் அட் யுவர் சர்விஸ்…” சிரித்து கொண்டே சொல்ல…

“ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்… காலங்கார்த்தால கடுப்பை ஏத்திகிட்டு… ச்சே…”

“ஓகே ஓகே சீரியஸ்… சீரியஸ்… சீரியஸ்… சரி சொல்லு… என்ன விஷயம்” இதை முன்னமே கேட்டால் ஆகாதோ? மனதுக்குள் கடுப்பானாலும் உண்மையை அவளால் அவனிடம் கூறாமல் இருக்க முடியவில்லை.

“மேகா மறுபடியும் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினா!”

“வாட் என்ன சொல்ற அஞ்சலி?”

“ஆமா… எப்படியோ அண்ணன் சமாளிச்சுட்டான்… ஆனா பயமா இருக்கு அர்ஜுன்…” முதன் முறையாக அவனிடம் இவ்வாறு கூறியது அவனை இளக்கியது.

“ஹேய் அஞ்சலி, … கவலைப்படாத… குளிச்சுட்டு கிளம்பி வர்றேன்… ஓகே வா”

“இன்னொரு விஷயம் அர்ஜுன்…” கூற ஆரம்பித்தவள் தயங்கினாள்!

“என்னடா?” ஆதரவாக கேட்டான்.

“கௌதம்… மே… மேகாவ லவ் பண்றானாம்… அதை நேத்து நைட் நைட் மேகா கிட்ட சொன்னான்… எனக்கு பயங்கர ஷாக்கா இருக்கு அர்ஜுன்…”

“ஓ சொல்லிட்டானா?” எதிர்பார்த்தது போல கேட்க

“என்ன அர்ஜுன்… நான் எவ்வளவு ஷாக்ல சொல்றேன்…” கடுப்பாக அவள் கேட்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல்

“அவன் ப்ரொபோஸ் பண்ணினது உனக்கு எப்பிடி தெரியும்?” இயல்பாக கேட்க

“பக்கத்துல தானே நானும் இருந்தேன்…” அப்பாவியாக உண்மையை அவள் கூற

“அட கருமமே… உன்னை வெச்சுட்டா ப்ரொபோஸ் பண்ணான்… எலி டோன்ட் மிஸ்டேக் மீ… உன் அண்ணன் மாதிரி ஒரு உலக தத்திய பாக்கவே முடியாது… ஒரு பக்கிய பக்கத்துல வெச்சுட்டு… ச்சே அறிவே இல்ல… அந்த மடையனுக்கு…” விடாமல் பொரிந்து தள்ளினான்!

“ஹல்லோ… என்ன என்னை பக்கின்னு சொல்றீங்க… அண்ணனை தத்தின்னு திட்டறீங்க… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?” அவனை திட்டினாலும் கௌதமும் என்னை பக்கின்னு சொல்றான் இவனும் சொல்றான்… நிஜமாவே நாம பக்கிதானோ என்ற அரும்பெரும் சந்தேகம் தோன்றியது… பின்னர் அவளே ‘ச்சே ச்சே அப்படி எல்லாம் கிடையாது… நாம தான் புத்திசாலி ஆச்சே’ என்று சமாதானத்திற்கு வந்தாள்!

“ஓகே ஓகே அதுக்கு மேகா ரியாக்சன் என்ன?”

“அவ ஒன்னும் சொல்லல… போய் படுத்துட்டா… ஆனா முகத்துல டன் கணக்குல குழப்பம்…”

“வாவ்… அது நல்லது எலி… குழம்புன குட்டைல சீக்கிரம் மீன பிடிச்சுடலாம்…” சிரித்தான் அர்ஜுன்.

“பாருங்க அர்ஜுன்… மீன் அது இதுன்னு கடைசில எல்லாத்தையும் கோட்டை விட போறீங்க…”

“அதெல்லாம் சான்சே இல்ல… அர்ஜுன் ஒரு காரியத்துல இறங்கிட்டா அதுல தொல்வின்க்ரா பேச்சுக்கே இடமில்ல… தெரிஞ்சுக்கோ…” பெருமிதம் தொனித்தது அவனின் குரலில்… அதில் இருந்த உண்மையை அவள் அறிந்தவள் தான் ஆனாலும் ஒப்புகொள்ள ஈகோ தடுத்தது!

“ஆமா இந்த பெருமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” அவள் நொடித்து கொள்ள

“ஓகே… இந்த விஷயத்தை முடிச்சு வெச்சுட்டா… அதாவது கௌதம் மேகா கல்யாணத்தை முடிச்சு வெச்சுட்டா என்ன தர்ற… அதை சொல்லு…” அவளுக்கு கிடுக்கி பிடி போட்டான்.

“முதல்ல முடிச்சு காட்டுங்க, … அப்புறம் சொல்லுங்க… சும்மா ஜம்பம் அடிக்க கூடாது எம் டி சார்…” அவனுக்கு பழிப்பு காட்டி பேசினாலும் விடுவேனா என்று அது ஒன்றிலேயே தொங்கினான்!

“நீ என்ன தர்றன்னு முதல்ல சொல்லு… டானிக் வேணும்ல…” அஞ்சலிக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு

“ம்ம்ம்ம்… என்ன வேணும்ன்னு நீங்களே சொல்லிடுங்க…”

“ம்ம்ம்ம் ஒரே ஒரு உம்மா… லிப்ஸ்… என்ன ஓகே வா…” அவன் மயக்கமாக புருவத்தை உயர்த்தி கேட்பதை அவள் இந்த பக்கத்தில் உணர்ந்தாள்!

“வாட்ட்டட்ட்ட்…” அதிர்ச்சியில் வாயடைத்து போனாள்!

“எதுக்கு இவ்ளோ பெரிய வாட்… சரி விடு… நீ குடுக்க வேணாம்… நானே குடுத்துக்கறேன்…” பெருந்தன்மையாக அவன் பேசுவதை கேட்டவளுக்கு கொலை வெறி ஏறியது!

“அர்ஜுன்ன்ன்… வேணாம்…” அவனது குறும்பை தாங்க முடியாமல் கண்கள் அழுவதற்கு தயாராக.

“ஓகே ஓகே ரிலாக்ஸ்… சும்மா கலாய்ச்சேன் எலி… ஹாஸ்பிடல் வரேன்… அங்க பேசிக்கலாம் அழுமூஞ்சி…” அவள் ஒன்றும் பேசாமல் இருக்கவே

“ஹேய்… இங்க பாரு… இப்படி நீ ஒன்னும் பேசாம இருந்தா மேகாவ எப்படி வழிக்கு கொண்டு வர்றது? உனக்கு மேகாவ பிடிச்சு தானே இருக்கு? உனக்கு அண்ணியா வந்தா ஓகே தானே?”

“ம்ம்ம் ஓகே தான்… நல்ல பொண்ணு… ஆனா அவ சசிய ரொம்ப விரும்பிட்டா அர்ஜுன்… அதை என்னமோ மாத்த முடியும்ன்னு எனக்கு தோணலை… இப்பவே ஒவ்வொரு நிமிஷமும் அவளை பிடிச்சு வைக்கவே கஷ்டப்பட வேண்டி இருக்கு… அதுவும் இல்லாம ஒருத்தனை இந்த அளவு லவ் பண்ணிட்டு கண்டிப்பா மனசை மாத்திக்க முடியாது… அப்படி ஒரு பொண்ணை அண்ணா லவ் பண்ணனுமா? எனக்கு என்னமோ சரியா வரும்ன்னு தோணலை…” ஒரு மாதிரியான குரலில் உண்மையை எடுத்து கூறியவளின் வார்த்தைகளை அவன் ஒப்புக்கொண்டாலும் கௌதமின் நியாயத்தை அவளுக்கு புரிய வைக்க வேண்டுமே!

“அஞ்சலி… எல்லாத்தையும் ஆராய்ச்சி பண்ணிட்டு லவ் பண்ண முடியாதுடா… அது ஒரு அழகான பீலிங்… ஒருத்தர் மேல மட்டும் தான் வரும்… வாழ்நாள் முழுக்க இவங்க வந்தா நாம சந்தோஷமா இருப்போம்ன்னு நினைக்க தோணும்… அவங்க கைய பிடிச்சுகிட்டா உலகத்தையே வெற்றி பெற்ற மாதிரியான ஒரு பீலிங் வரும்… அந்த ரிலேஷன்ல அவங்களோட குறை நிறை எல்லாம் ஆராய்ச்சி பண்ண தோன்றாது… எனக்கு உன்னை பார்த்தப்போ வந்த மாதிரி… கௌதமுக்கு மேகாவ பார்க்கும் போது வந்திருக்கு… சசி இருக்கும்போது அவன் லவ் ப்ரொபோஸ் பண்ணியிருந்தா அது தப்புடா… ஆனா இப்போ அவ நிலைமைய ரொம்பவே யோசிச்சு பார்த்துதான் அவன் இந்த முடிவை எடுத்து இருக்கான்… இதுக்கு நாம ஹெல்ப் பண்ணனுமே தவிர முட்டுக்கட்டை போடா கூடாது…” ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து அவன் கூறி கொண்டு வர… அவளுக்கு தூக்கி வாரி போட்டது!

“ஸ்டாப் ஸ்டாப்… கௌதமை சொல்றீங்க சரி… அது என்ன உங்களையும் சேர்த்துக்கறீங்க எம் டி சார்?”

“ஏண்டி… உன்னை லவ் பண்ணாம தான் கிஸ் கேப்பேனா? உன்கிட்ட முன்னாடியே சொன்னதுதானே…” அஞ்சலிக்கு வியர்த்து விறுவிறுத்தது.

“அர்ஜுன்… அதுக்கு தான் நானும் பதில் சொல்லிட்டேனே…” சொல்வதற்குள் திணறினாள்!

அர்ஜுன் பொறுமையாக “அஞ்சும்மா… நீ என்னை லவ் பண்ற… அது எனக்கு நல்லா தெரியும்… எனக்கு உன் கண் போதும்… உன்னை காட்டி கொடுத்துடும்… சரி இப்போதைக்கு நம்ம மேட்டர விடு… மேகாவ பார்க்கலாம்… அப்புறமா நம்மளை பத்தி பேசிக்கலாம்… ஓகே வா…” பரந்த மனதோடு விட்டு கொடுப்பவனை போல அந்த பேச்சை முடித்தவனின் திறமையை அவளால் மெச்சாமல் இருக்க முடியவில்லை… ஆனாலும் ஏற்க முடியுமா? அவள் மறுபடியும் மௌனமாக

“இங்க பாரு அஞ்சலி… நீ ஒழுங்கா பேசுனா தான் மேகாவ வழிக்கு கொண்டு வர்றதுக்கு எதாச்சும் ப்ளான் பண்ண முடியும்… இப்படி தொட்டாசினுங்கியா இருந்தா ஒன்னும் பண்ண முடியாது… இப்போவே சொல்லிட்டேன்” என்றான் கறாராக…

“சரி பேசறேன்… ஆனா நீங்க உங்க தத்துபித்து தாட்ஸ விட்டுடனும்…” என்றாள் அவளும் கறாராக!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினான்கு

மேகாவை பரிசோதித்த மருத்துவர் குழு அவளை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதிக்க கௌதம் சம்மரி வாங்கி வருவதற்கும் பணத்தை கட்டி கணக்கு முடிக்கவும் போக அந்த நேரத்தில் வந்த அர்ஜுன் பொருட்களை அடுக்க அஞ்சலியுடன் வேலை செய்ய முனைய... அஞ்சலி அவனை முறைத்து…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்