arrow_back
காக்கை சிறகினிலே அத்தியாயம் பதினான்கு
காக்கை சிறகினிலே chevron_right பகுதி 14 / 20

அத்தியாயம் பதினான்கு

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மேகாவை பரிசோதித்த மருத்துவர் குழு அவளை டிஸ்சார்ஜ் செய்ய அனுமதிக்க கௌதம் சம்மரி வாங்கி வருவதற்கும் பணத்தை கட்டி கணக்கு முடிக்கவும் போக அந்த நேரத்தில் வந்த அர்ஜுன் பொருட்களை அடுக்க அஞ்சலியுடன் வேலை செய்ய முனைய… அஞ்சலி அவனை முறைத்து கொண்டு

“நீங்க போய் உட்காருங்க எம்டி சார்…” பவ்யமாக கூறுவது போல முறைத்தாள்

“எலி… உனக்கு ஹெல்ப் தானே பண்றேன்…”

“ஹா… உங்க ஹெல்ப் எனக்கு வேண்டவே வேண்டாம்… நீங்க சும்மா இருந்தாலே போதுமே… அதுவே பெரிய ஹெல்ப் தான்”

“ச்சே… என்ன வாழ்க்கைடா இது? ஒரு ஹெல்ப் செய்றது கூட தப்பா… நீயே சொல்லும்மா மேகா…” அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மேகாவை நடுவராக்கி தீர்ப்பு வழங்க முயன்றவனுக்கு அவளும் சிரித்து கொண்டே ஜால்ரா தட்டினாள்!

“கண்டிப்பா இல்லண்ணா தப்புன்னு யார் சொன்னது?”

“வேற யாரு? என்னோட ஆருயிர் காதலிதான் சொல்றா…” என்றவனை வெட்டவா குத்தவா என்று பார்த்து முறைத்தாள்.

“பொய் சொல்ல கூடாது காதலி

பொய் சொன்னாலும் நீயே என் காதலி”

என்று கைகளை அஞ்சலியை நோக்கி நீட்டி முழக்கி பாடவும் முகத்தை திருப்பி இடித்து கொண்டு பொருட்களை அவள் எடுத்து வைக்க

“காதலி… என்னை காதலி.

காதலி என்னை காதலி…” என்று கையை நீட்டி விஜய் போலவே பாடி கலாய்த்து கொண்டே இருக்க வெகுண்டு எழுந்த அஞ்சலி… அவள் கையில் கிடைத்த பிரஷ் டூத் பேஸ்ட் என்று ஒன்றை மாற்றி ஒன்ற அவன் மேல் விட்டெரிய அதை கேட்ச் பிடித்த அர்ஜுன்

“ஹோவ்சாட்…” கிரிக்கெட்டில் கத்துவது போல கத்தி வைக்க… மேகா தன் குழப்பத்தை எல்லாம் மறந்து மனம் விட்டு சிரித்தான்!

“ஐயோ…” பொறுமையை இழந்து அஞ்சலி பக்கத்தில் வந்து நிலத்தை உதைத்து அவனது கழுத்தை நெரிக்க வர

“அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே…” அதற்கும் ஒரு பாட்டை பாடி வைத்தான் நமது குறும்பு கண்ணன்!

“வேணாம் அர்ஜுன்… என் கோபத்தை கிளறாதே…” ஒரு விரலை நீட்டி கண்களால் உறுத்து விழிக்க முயன்று ஒருமையில் எச்சரித்தாள்… ஆனால் அவையெல்லாம் அவன் காதில் விழுமா என்ன?

“நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது

இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்… முள்ளாய் மாறியது…”

“ஐயோ… இவன் தொல்லை தாங்க முடியலையே… கடவுளே… என்னை காப்பாத்த யாருமே இல்லையா?” கடவுளை நோக்கி கையை உயர்த்தியபடி கேட்டவளை பார்த்து வயிற்றைபிடித்து கொண்டு சிரித்தாள் மேகா…

“நான் இருக்கிறேன் பக்தையே… உனக்கு என்ன வரம் வேணும் கேள்…” அர்ஜுன் கையை காட்டி அருள் புரிவது போல நடித்து வைக்க அவனது நடு மண்டையில் நச்சென்று அடித்தால் என்ன யோசித்தாள்!

“ம்ம்ம் உன் திருவாயை கொஞ்சம் மூடனும்… முதல்ல அதை செய்…”

“என்னால செய்ய முடியாத ஒன்னை செய்ய சொல்றியே செல்லம்…” கண்ணடித்தவாறே கூறிகொண்டிருக்க உள்ளே நுழைந்தான் கௌதம்…

“என்னடா பாட்டு கச்சேரி எல்லாம் களை கட்டுது…” எல்லோரையும் பொதுவாக பார்த்தபடி.

“என்ன பண்றது… என்னால பாட மட்டும் தானே முடியுது மிஸ்டர் கௌதம்… பாட மட்டும் தானே முடியுது…” சிவாஜி பாணியில் மீண்டும் ஆரம்பிக்க

“டேய் அடங்குடா…” என்றான் சிரித்து கொண்டே

“ஹஹஹா எதற்கு அடங்க வேண்டும்? ஏன் அடங்க வேண்டும்? யாருக்கு அடங்க வீவ்டும்…” கட்டபொம்மன் பாணியில் ஆரம்பித்தவனை பார்த்து கையெடுத்து வணங்கிய கௌதம் “ஐயோ மகராசா நிறுத்து…” என்று சொன்ன கௌதமின் கைகளை பிடித்து கொண்டு

“பொன் ஒன்றை கண்டேன்… பெண் அங்கு இல்லை… என்னென்று நான் சொல்லலாகுமா…

ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?” என்று பாட கௌதமும் சிரித்து கொண்டே

“பூவொன்றை கண்டேன்… முகம் பார்க்கவில்லை

என்னென்று நான் சொல்லலாகுமா

ஏனென்று நான் சோழ வேண்டுமா?” என்று பாட

இருவரையும் பார்த்து அஞ்சலி தலையில் கை கை வைத்து கொண்டாள்! மேகாவின் முகம் மாறியது… உணர்சிகளை துடைத்து கொண்டு பார்த்தாள்!

“அண்ணா… என்னன்னா… நீயாவது இந்த லூசை அடக்குவன்னு பார்த்தா… அதோட சேர்ந்து நீயும் இப்படி லூட்டி அடிக்கிறியே…” அவனையும் சேர்த்து முறைத்து கடிக்க ஆரம்பித்தாள்!

“நீயின்றி நானில்லை… நானின்றி நீயில்லையே…” இருவரும் பாட்டில் மும்முரமாக இருக்க

ஐயோ என்று தலையில் அடித்து கொண்டு “நீ வா மேகா… நாம கிளம்பலாம்… இதுங்க ரெண்டும் இங்கயே கிடக்கட்டும்…” என்று அழைக்க

“போகாதே… போகாதே… நீயிருந்தால் நான் இருப்பேன்…” அர்ஜுன் அஞ்சலியை நோக்கி பாட பொறுமை பறந்து போய் கையில் கிடைத்த அப்சர்வேஷன் பேடை எடுத்து அவனை நோக்கி வீச அது அவனது நெஞ்சில் பட்டு விழ அவன் தன் நெஞ்சை பிடித்து கொண்டு வேண்டுமென்றே பாட ஆரம்பித்தான்.

“போறாளே பொன்னுதாயி போகுற போக்குல மனசை உடைச்சு…” எல்லோரும் சிரிப்பு வெடி வெடித்தனர்! அவளாலும் சிரிப்பை அடக்கி கொள்ள முடியாமல் அடக்கி கோபத்தை காட்டினாள்.

“அர்ஜுன்ன்ன்…”

“என்ன அபிதகுஜலாம்பா…” அலட்டிகொள்ளாமல் அவளது பெயரை அழைத்து வைக்க…

“அண்ணா இவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்து…” வேடிக்கை பார்த்து கொண்டு சிரித்த கௌதமை சரணடைத்தாள்… அவனுக்குமே அவன் கொஞ்சம் அதிகமாகத்தான் கலாய்த்து விட்டானோ என்கிற சந்தேகம் வந்தது.

“டேய் சும்மாருடா… போதும் என் தங்கச்சிய கிண்டல் பண்ணினது” என்று தடா போட்டவனை ஒரு மார்கமாக பார்த்த அர்ஜுன்… குரலை தழைத்து கொண்டு

“டேய் கிராதகா… நானாச்சும் கிண்டல் தான் பண்றேன்… நீ நாடு ராத்திரில மேகா கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்க…” குரலில் குறும்பும் நக்கலும் சரிவிகிதத்தில் கலந்து வழிய… கௌதம் முகத்தில் வெட்கம்… கண்களில் காதல்… குரலில் ஏக்கம் வழிய.

“எப்படிடா தெரிஞ்சுது…” சிரித்து கொண்டே கிசுகிசுப்பாக கேட்க

“எலிதான்… போன் பண்ணுச்சு, , … காலைல…” என்று சிரித்தான்!

“ஓ… போன் தான் மேட்டரா? அதான் அய்யா காலைல இவ்ளோ மூட்ல பாட்டு கச்சேரி நடத்திட்டு இருக்கீங்களா?” பதிலுக்கு கலாய்க்க.

“பின்ன டீல் எல்லாம் போட்டு இருக்கம்ல…”

“என்னடா டீல்?

“சஸ்பென்ஸ்ஸ்ஸ்ஸ்…” கிசுகிசுப்பாக கூறிவிட்டு சிரிக்க

“சரி மேகா என்ன சொன்னாங்க?”

“ப்ச் இன்னும் ஒன்னும் சொல்லவே இல்லடா…” சோர்வாக கூறினான்!

“ஓகே கவலைய விடு மச்சி… அதுக்குள்ளே உனக்கு ரிப்ளை வந்துடுமா? இதென்ன கத்தரிக்கா வியாபாரமா? மேகாவ மாத்த வேண்டியது எங்க ரெண்டு பேரோட வேலை… ஓகே வா…” நண்பனுக்கு தைரியம் கூறினான்! பின் பெண்கள் இருவரையும் நோக்கி

“நீங்க ரெண்டு பேரும் வீட்ல இருங்கம்மா… நாங்க அப்பார்ட்மென்ட்ல ஸ்டே பண்ணிக்கறோம்… ரைட்டா?” அர்ஜுன் இயல்பாக பொதுவாக இருவரையும் பார்த்து கூறிவிட்டு திரும்ப… தீர்க்கமான பதில் வந்தது மேகாவிடம் இருந்து!

“இல்லண்ணா… நான் சென்னை போறேன்…”

மூவரும் அதிர்ந்தாலும் ஓரளவு பக்குவமாகி விட்ட மேகாவை நினைத்து நிம்மதி பெருமூச்சு சூழ்ந்தது!

“பரவால்ல மேகா… சீக்கிரம் தெளிவாகிட்ட… குட்…” அர்ஜுன் பாராட்ட… கௌதம் கூர்மையாக உற்று நோக்கினான்… இது என்னவோ நல்ல முடிவாக தெரியவில்லையே!

“ஆமாம் ண்ணா… நான் தெளிவா இருக்கேன்… என் அப்பா பண்ண பாவம் எல்லாம் என் தலைல… அதை கொஞ்சமாவது துடைக்கணும்… பாவ கணக்கை முடிக்கணும்… என் சசி என்கிட்டே கேட்டது அவரோட அக்காவ பார்த்துக்க சொல்லித்தான்… அதை நான் செய்யனும்… அதை தவிர இனி என் வாழ்க்கைல ஒண்ணுமில்லை… என் அப்பா முன்னாடியே பூ இல்லாம பொட்டு இல்லாம விதவையா வாழ போறேன்… என் சசியோட விதவையா… இதுதான் நான் என் அப்பாவுக்கு கொடுக்கற பனிஷ்மென்ட்…”

தீர்மானமாக கூறியவளை பார்த்து அதிர்ச்சியில் சமைந்தனர்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினைந்து

பதிலே பேசாமல் மௌனமாக வீடு வந்தவர்கள் அனைவரும் யோசனையிலேயே இருந்தனர்! மௌனத்தை கலைத்தது அர்ஜுன்.“கொஞ்சம் யோசிச்சு பேசு மேகா... நீ சொல்றது கண்டிப்பா சரியா வராதும்மா...” பொறுமையாக கூறினான்... என்ன இந்த பெண் இப்படி குண்டை தூக்கி போடுகிறாள் என்ற ஆற்றாமையோடு!“யோசிக்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்